Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 27

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---27

வீட்டுக்கு போகும் வழி முழுவதும் பரினிதா தான் அந்த அமைச்சரை பார்த்ததும் பயந்து விட்டதை ஏற்ற இறக்கத்துடன் ஆஷிக்கிடம் சொல்ல சொல்ல அவனின் முகம் கோபத்தால் சிவப்பதை பார்த்த சித்தார்த் “குட்டிம்மா நீ சும்மா இருக்க மாட்டே…” என்று ஒரு அதட்டல் போட்டான்.

பின் என்ன இவன் சும்மாவே உடுக்கை இல்லாமல் ஆடுகிறான். இவள் இப்படி சொல்லி வைத்தால் அவன் வசம் உள்ள அந்த அமைச்சரை இவன் ஏதாவது செய்து விட்டால் அந்த பயம் அவனுக்கு, என்ன தான் ஆஷிக் தன் மச்சானாக இருந்தாலும், அவனால் சட்டத்துக்கு புறம்பாக கண்டிப்பாக செயல் படமுடியாது.

அந்த அமைச்சர் ஆஷிக்கிடம் இருப்பதே….தவறு தான். சட்டபடி பார்த்தால் அந்த அமைச்சரை ஆள் கடத்திய குற்றத்துக்கு எப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தான் வைக்க வேண்டும். அப்படி செய்யாமல் அந்த அமைச்சரை ஆஷிக்கின் வசம் விட்டு வைத்து இருப்பதே...அவன் கொள்கைக்கு எதிரானது தான்.இருந்தும் அவன் இதற்க்கு சம்மதித்ததே….அவள் தங்கையின் பெயர் அடிபடக் கூடாது என்று கருதி தான்.

இவள் என்ன என்றால் ஆஷிக்கின் கோபம் ஏறும் வகையில் சினிமா படம் எடுப்பவனிடம் கதையாசிரியர் சொல்வது போல் இப்படி உணர்ச்சி ததும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறாளே….என்று அவளை ஒரு அதட்டல் போட்டான்.

அதற்க்கு பரினிதா ஆஷிக்கிடம் “பாருங்க மாமா...இந்த அண்ணன் கடத்திய அவனை விட்டு விட்டு என்னை திட்டுகிறார்.” என்று அவனிடம் சலுகையோடு கொஞ்ச அதை கேட்ட ஆஷிக்கின் மனம் அவனிடமே...இல்லை. இப்படியே வீடு வரை ஆஷிக்கை தரை இறங்க விடாமல் அவனை பறக்க விட்டுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

அவளை பார்த்ததும் கலையரசி,ஆருண்யா ஒடி வந்து “உனக்கு ஒன்றும் இல்லையே….”என்று கவலையுடன் விசாரிக்க பரினிதா அவர்களுக்கு பதில் சொல்லாமல் தன்னையே பார்த்திருந்த தன் பாட்டியுடமே அவள் கண்கள் சென்றது.

இப்போதும் பாட்டிம்மாவின் கண்கள் அவள் சிறு வயது முதலே பார்த்த கண்டிப்பு தான் தெரிந்ததே தவிர...அதில் கவலை ,பதட்டம் ,இல்லை தன்னை பார்த்தால் ஏற்பட்ட மகிழ்ச்சி என்று ஒன்றையும் காணது தன் அறைக்கு சென்றாள்.

வந்ததில் இருந்த பரினிதாவையே பார்த்திருந்த ஆஷிக் அவள் தன் பாட்டியை ஒரு எதிர் பார்ப்போடு பார்த்தது. பின் தான் எதிர் பார்த்த எதுவும் பாட்டிம்மாவிடம் காணாது தோய்ந்த முகத்தோடு தன் அறைக்கு செல்பவளை தடுக்காமல் பாட்டியைய் பார்த்தான்.

அவன் பார்வையை எதிர் பார்த்த மாதிரியே பாட்டியும் ஆஷிக்கை பார்த்து “ என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா…? ஆஷிக்.” என்ற கேள்விக்கு.

“நான் கேட்பேன் என்று தெரிந்தவருக்கு,எதை கேட்பேன் என்று தெரிந்திருக்குமே…?” என்பவனை பார்த்தி சிரித்துக் கொண்டே

“ நீ மிக புத்திசாலி என்ற என் கனிப்பு தவவில்லை. என்று சொல்லி விட்டு. நான் ஏன் பரினிதாவிடம் அவ்வளவு கண்டிப்புடன் நடந்துக் கொள்கிறேன் என்று தானே கேட்க நினைத்தாய்.” என்று கேட்டவர்.

ஏதோ நினைத்தவறாக கலங்கிய தன் கண்ணை கண்ணாடி கழட்டி துடைத்து விட்டு திரும்பவும் அதை மாற்றிக் கொண்டு கரகரத்த தன் தொண்டையை சரி செய்துக் கொண்டே… “ பரினிதாவின் பெற்றோர் இறக்கும் போது அவளுக்கு வயது பன்னிரண்டு, சித்தார்த்துக்கு இருவது வயது” என்று ஆஷிக்குக்கு தெரிந்த விஷயத்தையே சொன்னவரை இதை ஏன் நம்மிடம் சொல்கிறார் கேள்வி குறியோடு பார்த்தான்.

“இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்று தானே பார்க்கிறாய்.” என்ற பாட்டியிடம் ஒன்றும் சொல்லாமல் மேலே அவர் சொல்வதை கவனமுடன் கேட்கும் முக பாவத்தை பார்த்து நேரிடையாக விஷயத்துக்கு வந்து விட்டார்.

“பரினிதா சின்ன வயது முதலே தன் அம்மாவின் முந்தானை பிடித்து தான் அலைவாள்.நான் என் மருமகளிடம் எவ்வளவோ சொல்லி விட்டேன். இப்படி அவளை உன் மடிமீது போட்டே வளர்க்காதே...பின் நீ இல்லை என்றால் அவள் கஷ்டப்படுவாள் என்று. நான் எந்த நேரத்தில் அப்படி சொன்னனோ அது பலித்து விட்டது.ஆனால் நான் அதை நினைத்து சொல்லவில்லை. ஒரு பெண்பிள்ளை திருமணமானால் பெற்றோர்களை பிரியதானே வேண்டும் நான் அந்த அர்த்தத்தில் தான் சொன்னேன்.ஆனால் என் பிள்ளைக்கும்,மருமகளுக்கும் அல்பாயுசு என்று அப்போது எனக்கு தெரியவில்லை.

அவர்கள் மறைந்த பின் என் கணவரின் ஆசையை நிறைவேற்ற சித்தார்த் படிக்க வேண்டி இருந்ததால் என் பிள்ளையும்,கணவரும் நடத்திய தொழிற்சாலையைய் நான் எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது.எனக்கு பிறகு சித்தார்த் இந்த தொழிலை கவனிக்க மாட்டான் என்று எனக்கு முன்பே தெரிந்து விட்டது.

எனக்கு பிறகு இந்த தொழிலை பரினிதா தான் பார்க்க வேண்டும் என்று நினைத்து குழந்தை தனத்துடன் இருக்கும் பரினிதாவை என் கண்டிப்பாவது மாற்றாதா...என்று அவளிடம் அன்பு காட்டாது கடுமையாகவே நடந்துக் கொண்டேன்.வீட்டில் இருந்து படிக்காது அவளை ஆஸ்ட்டலில் சேர்த்தேன்.

அனைவரிடமும் பழகினால் தான் அவளுக்கு வெளி உலகம் தெரியும் என்று அப்படி செய்தேன்.ஆனால் நான் எதிர் பார்த்த எந்த முன்னேற்றமும் பரினிதாவிடம் காணவில்லை. நான் எதில் தவறு செய்தேன் என்று எனக்கு இன்று வரை தெரியவில்லை ஆஷிக்.” என்ற அந்த பாட்டிம்மாவின் பேச்சி ஆஷிக்குக்கு வியப்பே ஏற்பட்டது.

“பாட்டிம்மா நான் புத்திசாலி தான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் உங்களை விட அல்ல. இதை நீங்கள் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள வேண்டும்.” என்பவனை பார்த்து சிரித்து விட்டு.

“இதை ஏன் இப்போது சொல்கிறாய்.”

“நீங்கள் செய்தது அனைத்தும் சரி தான் பாட்டிம்மா...ஆனால் ஒரு பழம் தானாக தான் பழுக்க வேண்டுமே...தவிர தடிக் கொண்டு அல்ல. அது உங்களுக்கே நன்கு தெரியும். நீங்கள் சொன்ன மாதிரி பரினிதா தன் பன்னிரண்டு வயது வரை தன் அன்னையின் மடியிலேயே வளர்ந்தவள்.

அப்படி பட்டவளை நாம் மெல்ல மெல்ல தான் உங்களின் அரவணைப்பில் இனி நீ தான் எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று புரிய வைத்திருக்க வேண்டும்.சொன்னால் புரிந்துக் கொள்பவள் தான் அவள்.ஆனால் நீங்கள் ஆஸ்ட்டலில் சேர்த்தது தான் பிரச்சினையாகி போய் விட்டது.

நீங்கள் எந்த மாதிரி ஆஸ்ட்டலில் சேர்த்திர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அங்கு அவள் கூட தங்கும் பெண்கள் அவ்வளவு நல்லவர்கள் இல்லை என்று நான் பரினிதாவின் பேச்சில் இருந்து நான் தெரிந்துக் கொண்டேன்.அவர்கள் எப்போதும் ஆண்களை பற்றி பேசியது பிடிக்காது போய் தான் பக்கத்தில் உள்ள பார்க்குக்கு சென்று இருக்கிறாள்.

அப்போது அவள் வளர்ந்தும் வளராத இரண்டு கெட்டான் பருவம் தானே...அந்த வயதில் அவளுக்கு அந்த குழந்தைகளுடன் இருப்பது பிடித்து போக அதையே இன்று வரை தொடர்கிறாள்.

ஒரு வகையில் இதுவே நல்லது தான் எனக்கு தோன்றுகிறது. நம் வீட்டு பெண் அந்த பிள்ளைகளிடம் பழகி தவறான வழி செல்லவில்லை அல்லவா….அதற்க்கு காரணம் அவள் தாய் சின்ன வயதில் வளர்த்த வளர்ப்பாக கூட இருக்கலாம்.

ஏன் என்றால் அவள் தாய் சொன்னதை அப்படியே நியாபகத்தில் வைத்துக் கொண்டு இருப்பதோடு அதை செய்யவும் செய்கிறாள். என்று சொன்னவன் சிரித்துக் கொண்டே என்னிடம் அவள் அண்ணனுக்கு சம்மந்தம் பேச வரும் போது பெரியமனிஷி போல் புடவை எல்லாம் வாங்கி வந்தாள். அது அவள் அன்னை சொன்ன பழக்கம் என்று கூட சொன்னாள். இதுவும் நல்லதுக்கு தான் பாட்டிம்மா ...என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பரினிதாவை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள்.

நான் உங்கள் கணவர் ஏற்படுத்திய இந்த தொழிலை மேலும் வளர்பேனே தவிர கண்டிப்பாக அழிய விட மாட்டேன். பரி அவள் குழந்தை தனத்துடன் அப்படியே இருக்கட்டும் பாட்டிம்மா அவள் அப்படி இருப்பது தான் எனக்கு பிடித்து இருக்கிறது.” என்று சொல்பவனின் கைய் பற்றி

“ பரினிதாவை எங்களோடு நன்கு பார்த்துக் கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ஆஷிக்.ஏன் என்றால் இவ்வளவு வருடம் வளர்த்த நாங்கள் அவளை புரிந்துக் கொண்டதை விட நீ அவளை நன்கு புரிந்து வைத்திருப்பதிலேயே எனக்கு தெரிந்து விட்டது. உன்னை விட நல்ல மாப்பிள்ளை அவளுக்கு கிடைக்க மாட்டான்.ஆனால் பரினிதா உங்களை திருமணம் செய்ய ஒத்துக் கொள்ள வேண்டும் என்று” அவன் எதிர் பார்த்த மாதிரியே சொல்லும் பாட்டியின் கையைய் தன் மற்றொறு கரத்தால் பற்றி “கண்டிப்பாக பரினிதா சம்மதத்தோடு தான் இந்த திருமணம் நடக்கும்.அது போல் உங்கள் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் பாட்டிம்மா…” என்று சொன்னவன்.

தயங்கி பின் பாட்டிம்மா “இந்த விஷயத்தை இன்று நடக்கும் பங்ஷனிலேயே அறிவிச்சிடலாமா…?” என்று கேட்பவனிடம் பாட்டிம்மா பதில் சொல்வதற்க்கு முன்னவே இவ்வளவு நேரம் அமைதியாக இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்த சித்தார்த்.

“அவள் படிப்பு முடிந்த பின் தான் திருமணம்” என்று சொல்பவனின் அருகில் சென்று அவன் காதில் “கண்டிப்பாக நீ சொன்ன மாதிரி அவள் படிப்பு முடிந்தே வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று அவளுக்கு படிப்பு ஆரு தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்.” என்ன என்பவனிடம் மேலே எதுவும் பேசாமல் பாட்டியிடம் .

“பாட்டிம்மா ஆஷிக் சொன்ன மாதிரி இன்றே அறிவித்து விடலாம்.” என்று சொல்லி விட்டு தன் மனைவியை கையோடு தன் அறைக்கு அழைத்து சென்றான்.

பின் என்ன அவனே எட்டு வருடம் காத்திருந்து இப்போது தான் விரும்பிய பெண்ணை மணந்து இருக்கிறான்.பரினிதாவுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரு அவள் அறைக்கு சென்றால் கண்டிப்பாக விடிந்த பின் தான் ஆரு தன் அறைக்கு வரமுடியும்.

அதுவும் இவன் புன்னியத்தில் அடுத்த மாதம் இவன் டெல்லியில் பதவி ஏற்க வேண்டும். அப்படி இருக்கும் போது பரினிதாவுக்கு பாடம் சொல்லி கொடுக்க ஆரு தன் கூட வராமல் இருந்து விடிந்த பின் பார்க்கும் தன் மனைவியின் தரிசனமும் கிடைக்காமல் போய் விட்டாள். அதனால் தான் புத்திசாலி தனமாக பரினிதாவை இப்போதே ஆஷிக்குக்கு திருமணம் செய்ய சம்மதித்து விட்டான்.

சித்தார்த் சொல்லி சென்றதை கேட்ட பாட்டிம்மா ஆஷிக்கை பார்த்து “நீ என்னவோ அவனின் வீக் பாயிண்டை அவனிடம் சொல்லி இருக்கிறாய்.இல்லை என்றால் படிப்பு படிப்பு என்று பேசும் சித்து இப்படி திருமணத்துக்கு சம்மதித்து இருக்க மாட்டான்.” என்ற பாட்டியைய் பார்த்து.

“பாட்டிம்மா ஆனாலும் நீங்க இவ்வளவு புத்திசாலியாக இருக்க கூடாது.” என்று சொல்லி விட்டு “சரி பாட்டிம்மா நானும் அம்மாவும் கிளம்புகிறோம்.மாலை நிறைய வேலை இருக்கிறது .” என்று சொல்லி விட்டு தன் அன்னையை பார்த்தான்.

அவ்வளவு நேரமும் அனைத்தையும் அமைதியாக பார்த்திருந்த கலையரசி தன் மகன் தன்னை பார்ப்பதை பார்த்து “இப்போது தான் நான் உன் கண்ணுக்கே தெரிகிறானே ஆஷிக்.” என்ற அவர் பேச்சில் ஆஷிக் தன் தவறு உணர்ந்தவனாய் தன் அன்னையின் அருகில் விரைந்து சென்று.

“சாரிம்மா என்னை மன்னித்து விடுங்கள்.உங்களை மதிக்கவில்லை என்று தவறாக நினைக்க வேண்டாம்மா…” என்ற மகனை “சீ நான் சும்மா தான் சொன்னேன் ஆஷிக். எனக்கு வேண்டியது என்ன என் பிள்ளைகள் குழந்தை குட்டிகளுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும்.” என்றும் சொல்லும் அன்னையை அணைத்துக் கொண்டு “தாங்ஸ்ம்மா” என்று கூறிவிட்டு

“போவோம்மா வேலை நிறைய இருக்கு “ என்று சொல்பவனிடம் கொஞ்சம் இருடா “நான் என் மருமகளிடம் சொல்லி விட்டு வருகிறேன்.” என்று அவர் சொல்வதற்க்கும் பரினிதா அங்கு வருவதற்க்கும் சரியாக இருந்தது.

அவளை பார்த்த ஆஷிக் அய்யோ இவளிடம் இன்னும் எதுவும் சரியாக பேசவில்லையே அம்மா ஏதாவது கேட்க இவள் ஏதாவது உளரி விட்டால் என்று அவன் நினைக்கும் போதே அவன் நினைத்த மாதிரியே கலையரசி பரினிதாவிடம் “கல்யாணத்திற்க்குள் சாப்பிட்டு கொஞ்சம் சதை போடுடா…பாரு மெலிஞ்சி போய் இருக்கே...நாளைக்கு குழந்தை பிறக்கவாவது உடம்பில் தெம்பு வேண்டும் இல்லையா…? ஆரு நல்லா சமைப்பா. அதனால் உனக்கு பிடித்ததை கேட்டு சாப்பிடு.” என்று சொல்லும் கலையரசியின் வெள்ளை பேச்சில் பரினிதா விழுந்து தான் போனாள்.

அவன் அன்னையும் எப்போதும் அவள் உடலை பற்றி தான் கவலை பட்டு பேசுவார்கள்.அதே போல் அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு தான் சமையலையே செய்வார்கள்.அவர் எப்போது இறந்தாரோ அன்றில் இருந்து சமைப்பதை விரும்பிய வரை சாப்பிட்டு எழுந்து விடுவாள். பாட்டிம்மாவுக்கு இது எல்லாம் கவனிக்க நேரம் இருந்தது இல்லை. நீண்ட வருடத்திற்க்கு பிறகு தன் தாய் போல் பேசும் கலையரசியின் பேச்சி பிடித்து போக தானாகவே அவர் என்ன சொன்னார் என்று கூட புரிந்துக் கொள்ளாமல் “சரிங்கத்தை நீங்க சொன்ன மாதிரி நான் நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்துகிறேன்.” என்று சொல்பவளை அதிசயத்துடன் பார்த்தார் பாட்டிம்மா.

நாம் இந்த கல்யாணத்திற்க்கு விருப்பமா என்று கேட்க தேவையே இல்லை போலவே என்று நினைத்துக் கொண்டே பரினிதாவிடம் “யம்மாடி நாங்கள் சொல்வதை தான் கேட்பது இல்லை. உன் மாமியார் சொல்வதையாவது கேட்கிறாயே அது வரை சந்தோஷம் தான்.” என்ற வார்த்தை தான் பரினிதாவை யோசிக்க வைத்தது.

இப்போ பாட்டிம்மா என்ன சொன்னார்கள் மாமியாரா என்று அதிர்ச்சியுடன் யாரையும் பார்க்காது ஆஷிக்கை பார்த்தாள். முதலில் இருந்தே தன் அன்னை பேசியதில் இருந்து அவளையே கவனித்துக் கொண்டு இருந்த ஆஷிக் தன் பாட்டிம்மா பேச்சிக்கு முகம் மாறியவளாக யோசிப்பதை பார்த்து விட்டு ஒ அம்மணிக்கு இப்போது தான் விளங்கியது போல் என்று நினைத்துக் கொண்டான்.

கடவுளே நான் இன்று ரிசப்ஷன் வேலை பார்த்த மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டே பரினிதாவின் அருகில் சென்று அவள் காதில் “நான் என்ன சொல்லி இருக்கிறேன் உன் படிப்பு பற்றி பேசாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அதற்க்கு நீ நான் எது கேட்டாலும் ஆமாம் என்று சொல்ல வேண்டும் என்று சொன்னேன் தானே…?” என்ற அவன் பேச்சிக்கு பரினிதாவின் தலை தன்னால் ஆமாம் என்று தலையாட்டியது.

“குட் இதையே தான் மெயின்டன் செய்ய வேண்டும்.” என்று சொல்லி விட்டு பாட்டியிடம் “பாட்டிம்மா பரினிதாவிடம் ஏதோ கேட்க வேண்டும் என்று சொன்னீர்களே...இப்போதே கேட்டு விடுங்கள். நான் மாலை எங்கள் திருமணத்தை பற்றி கூற இருக்கிறேன்.”

என்ற அவன் பேச்சில் யாருக்கு திருமணம் என்று முழித்து இருந்தவளை பார்த்து பாட்டி “இவளிடம் என்ன கேட்பது அது தான் தெள்ள தெளிவாக விளங்குகிறதே…எங்கள் பேச்சை கேட்காதவள் உங்கள் அம்மாவின் பேச்சை கேட்பதிலேயே எனக்கு அவளின் விருப்பம் எனக்கு தெரிந்து விட்டதே என்று சொன்னவர்.

பரினிதாவிடம் “உனக்கு ஏத்த மாதிரியே அவள் இப்படியே இருக்கட்டும் என்று சொல்லி விட்டார். என்ன கல்யாணத்தை அடுத்த முகூர்த்தத்திலேயே முடிச்சிடலாமா…? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் ஆஷிக்கை பார்த்தாள்.

அதை பார்த்த பாட்டிம்மா பரவாயில்லையடி இப்பவே மாப்பிள்ளை மனசு ஏத்த மாதிரி தான் நடந்துக் கொள்கிறாய்.” என்ற பாட்டியின் வார்த்தை காதில் விழாதவளாக அப்போதும் ஆஷிக்கை தான் பார்த்திருந்தாள்.

ஆஷிக்கும் எதுவும் பேசாமல் பரினிதாவையே தான் பார்த்திருந்தான். அவனுக்கு தெரியும் தான் தலையாட்ட சொன்னால் அதை செய்வாள் என்று. அதற்க்காக தானே முன்பே அவளிடம் நான் என்ன சொன்னாலும் தலையாட்ட வேண்டும் என்று பேரம் பேசியது.

ஆனால் அதனை செய்யாது அவளாகவே அவள் சம்மதிக்க வேண்டும் என்று ஒரு எதிர் பார்ப்போடு அவளையே பார்த்திருந்தான்.அவன் கண்களில் அவள் எதைகண்டாளோ...தன் பாட்டியிடம் வாய் திறந்தே “எனக்கு சம்மதம் பாட்டிம்மா.” என்று சொல்லி விட்டு ஆஷிக்கை பார்த்து சிரித்து விட்டு சிட்டாக தன் அறை நோக்கி பறந்தாள்.

அவள் பின் செல்ல நினைத்த காலை கஷ்டப்பட்டு கட்டுபடுத்திக் கொண்டு ஒரு மனநிறைவுடன் தன் அன்னையுன் தன் இல்லம் சென்றடைந்தான் .
 
???

எப்படியோ பர்ணிதாவை yes சொல்லவச்சுட்டான்......
பிள்ளைக்கு எல்லாம் சட்டுனு புரியுது......
இவளை போய் பேபி ஒன்னும் தெரியாதுன்னு ஓரமா உக்காரவச்சிருந்தாங்களே.....
ஆஷிக் வந்ததும் தான் அவளோட maturity வெளியே தெரியுது......
 
Last edited:
Top