Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 28 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்---28

அன்று மாலை ஆஷிக் கண்ணாடி முன் நின்று மிக நிதானமா அனைத்தும் சரியாக இருக்கிறதா...என்று முன்னும் பின்னும் திரும்பி பார்த்துக் கொண்டான். தன் உருவத்தை எப்போதும் தன்னை இந்த அளவுக்கு கண்ணாடி முன் பார்த்தது கிடையாது.தன்னை கண்ணாடில் பார்த்துக் கொண்டே அவளுக்கு நான் பொருத்தமாக இருப்பேனா...இல்லை வயது கூடி தெரியுமா...என்ற கவலையிலேயே கண்ணாடி முன்னையே நின்றுக் கொண்டு தன்னை அளவு எடுத்துக் கொண்டு இருந்தவனை கலையரசியின் குரல் அவனின் கவனத்தை கலைத்தது.

“என்ன ஆஷிக் ரெடியாகிட்டியா…? என்று கேட்டுக் கொண்டே ஆஷிக்கின் அறை வாயிலில் வந்து நின்றார்.

அங்கு தன் மகன் கண்ணாடி முன் நிற்பதை பார்த்துக் கொண்டே அவன் அருகில் சென்று “என்ன ஆஷிக் இன்னுமா கிளம்ப வில்லை.” என்று கேட்டதற்க்கு.

“கிளம்பி விட்டேன் அம்மா.” என்று சொன்னவன் ஏதோ கேட்க வாய் திறந்து பின் மீண்டும் அமைதியாக இருக்கும் மகனை பார்த்து.

“ஆஷிக் என்னிடம் ஏதாவது கேட்கனும் என்றால் கேள்ப்பா...என்னிடம் என்ன தயக்கம் உனக்கு.”

“இல்லைம்மா எனக்கு வயது கூடி தெரியவில்லை தானே…?”

“ஏண்டா உனக்கு இந்த எண்ணம். என் மகனுக்கு என்ன அவன் ராஜா மாதிரி இருக்கான்.நீ எதற்க்கு கேட்கிறே என்று எனக்கு தெரியும்.பரினிதா சின்ன பெண் மாதிரி இருக்கிறா என்று தானே... அதற்க்கு காரனம் அவள் ரொம்ப ஒல்லியா இருப்பது தான் ராசா. அதனால் நீ கவலையே படதே அடுத்த மூகூர்த்தத்திலேயே கல்யாணத்தை முடித்து விட்டு அவளை இந்த வீட்டுக்கு கொண்டு வந்து அவளுக்கு பிடித்த மாதிரி சமைச்சி கொடுத்து ஒரு மாதத்திலேயே அவளை பத்து கிலோ ஏத்து காமிக்கிறேனா...இல்லையான்னு பாரு”

என்ற தன் அன்னையின் பேச்சில் சிரித்துக் கொண்டே “பாத்திங்களா...இப்பவே உங்க மாமியார் கொடுமையை காண்பிக்கிறீங்களே…” என்ற மகனின் பேச்சில் குழம்பி போய் “நான் எங்கடா மாமியார் கொடுமையை காட்டினேன். அவள் உடம்பை ஏத்துவதாக தானே...சொன்னேன்.”

“நான் அதை தான் சொல்கிறேன். இப்போ இருக்கும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை விட உடல் மெலிவு தான் முக்கியம். நீங்கள் இப்படி சொன்னால் அது கொடுமை தானே…” என்ற மகனின் பேச்சில்.

“நிஜமா தான் சொல்கிறயா...அப்போ நம்ம மருமகள் பெண் இதுக்கு தான் சாப்பிடமா அப்படி ஒல்லியா இருக்கிறளா…” என்று கேட்டதற்க்கு.

“சேச்சே மத்த பெண்கள் எப்படி என்று எனக்கு தெரியாது. ஆனால் என் பேபிம்மா அப்படி கிடையாது.சின்ன வயது முதலே ஆஸ்ட்டல் சாப்பாடு பிடிக்காமல் தான் இப்படி இருக்கிறாள்.” என்று சொன்னவனை பார்த்த கலையரசி.

“உனக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிச்சிடிச்சி என்று உன் பேச்சிலேயே தெறிகிறது. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆஷிக்.நீ எப்பவும் இறுக்கமாகவே இருந்துடுவியோன்னு நான் பயந்து போயிட்டேன். பரவாயில்லை என் மருமகள் பொண்ணு சமார்த்திய சாலிதான் திருமணத்துக்கு முன்னவே உன்னை மாத்திட்டாலே…”

தன் அம்மாவின் வாயில் இருந்து பரினிதாவை மருமகள் என்று சொன்னது அவனுக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது. அந்த சந்தோஷத்துடனே தன் அன்னையுடன் பங்ஷன் நடைபெறும் ஒட்டலுக்கு சென்றடைந்தான்.

அந்த ஒட்டல் கார் பார்க்கிங்கில் ஆஷிக்கின் கார் டிரைவர் கார் நிறுத்தியதும் தங்களுக்கு முன்னவே சித்தார்த்தின் கார் இருப்பதை பார்த்து விட்டு கார் டிரைவர் வந்து கார் கதவை திறக்கும் வரை கூட பொறுமை காக்காமல் தானே திறந்துக் கொண்டு தன் அன்னைக்கும் திறந்து விட்டு அவரை அழைத்துக் கொண்டு இரண்டடி நடந்தவன் பின் கார் டிரைவரிடம் டிக்கியில் உள்ள பொருட்களை எடுத்து வருமாறு சொல்லி விட்டு பரினிதா குடும்பத்திற்க்கு என்று அவன் முன்பே புக் செய்து வைத்திருந்த அறை நோக்கி சென்றான்.

ஆஷிக் அந்த அறை வாசலில் நின்று கதவை தட்ட கைய் கொண்டு போகும் போது பரினிதாவே கதவை திறந்தாள்.எப்போதும் அவனை பார்த்தவுடன் சகஜமாக பேசும் பரினிதாவுக்கு ஏனோ அன்று அவனை பார்த்து பேசமுடியாது போனது.

அதற்க்கு காரணம் தான் அவனை திருமணம் செய்ய சம்மதித்தது ஒரு காரணம் என்றால் மற்றொறு காரணம் அவன் பார்வையாக கூட இருக்கலாம்.ஆம் அன்று பரினிதா ஆஷிக் வாங்கி கொடுத்த சாரியை தான் கட்டிக் கொண்டு இருந்தாள். அதனை அவன் வாங்கும் போது அவளுக்கு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து வாங்கியதை விட நேரில் இன்னும் அழகாகவும், அவளுக்கு பொருத்தமாகவும் இருந்தது.

அதுவும் ஆருண்யா அவளுக்கு பார்த்து பார்த்து மேக்கப் செய்ததில் இன்னும் அழகாக தெரிந்தாள். அவள் இது வரை உதட்டுக்கு லிப்ஸ்ட்டிக் கூட வைத்தது கிடையாது. இப்போது அவள் அண்ணி தீட்டிய ஐய்லைய்னரிலும்,ரூஜ்ஜீலும், இன்னும் மினு மினுப்பாக காட்சி தந்தாள்.

அவள் எந்த வித அலங்காரம் செய்யாத போதே...மயங்கியவன். இப்போது சொல்லவும் வேண்டுமோ…பேச்சற்று அவளை உச்ச தலையில் இருந்து உள்ளங்கால் வரையில் அளவிட்டுக் கொண்டு இருந்தான். அவனின் அந்த பார்வை பரினிதாவுக்கு புது வித மயக்கத்தை கொடுத்தது.

அவனின் அந்த பார்வை தன்னை பெண்ணாக உணர செய்தது. அவளாள் அங்கு நிற்கவும் முடியவில்லை, அதே போல் அந்த இடத்தை விட்டு போகவும் மனது இல்லை. அவள் இரு வேறு நிலையில் இருந்த போது அறையின் உள்ளிருந்து பாட்டிம்மாவின் “என்ன இன்னுமா..போக வில்லை. சீக்கிரம் போய் கீழே சித்தார்த் பூ கொண்டு வந்திருப்பான் வாங்கி வா ..” என்ற குரலுக்கு

“இதோ போகிறேன் பாட்டிம்மா” என்று அப்போது தான் கனவில் இருந்து முழித்தவளாக கூறியதை கேட்ட ஆஷிக்.

“நீ வேண்டாம் நான் போய் வாங்கி வருகிறேன்.” என்று சத்தமாக கூறியவன்.

அவள் காதருகில் “ இன்று மிக அழகாய் இருக்கே.” என்று சொன்னதோடு அவன் பார்வை அவளை என்னவோ செய்தது.அவன் பேச்சிக்கு எதுவும் பேசாமல் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.

“என்ன பேபிம்மா ஒன்றும் சொல்லமாட்டேங்கிறே...என்ன பேச்சி மறந்து போச்சா…” என்று அவளை சீண்டலுக்கு நல்ல பலன் இருந்தது.

“யாருக்கு பேச்சி மறந்து போச்சி” என்று சிலுத்தெழுந்து விட்டாள்.

“இப்படி தான் என்னிடம் பேசனும். நீ பேசாமல் இருந்தால் யாரோ மாதிரி எனக்கு தெறிகிறது.” என்றது தான் தாமதம்.

“என்னை பார்த்து உங்களுக்கு யாரோ மாதிரி தெரிகிறதா...தெரியும் ,தெரியும். இனி யாரை பார்த்தாலும் என்னை மாதிரி தான் தெரியனும் சொல்லிட்டேன்.” என்று சொல்லி விட்டு போனவளை வியப்புடன் பார்த்தான்.

என் பேபிம்மாவுக்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா...பரவாயில்லை நான் ரொம்ப கஷ்டபட தேவை இல்லை என்று நினைத்துக் கொண்டே சித்தார்த்திடம் இருந்து பூ வாங்க கீழே சென்றான்.

பின் ஒருவர் பின் ஒருவராக வர பங்ஷன் கலைகட்டியது.பரினிதா தன் அண்ணியை விட்டு அங்கு இங்கு நகரவில்லை. அவள் பக்கத்திலேயே இருந்து வந்தவர்கள் கொடுக்கும் பரிசு பொருட்களை வாங்கி பொறுப்பாக பக்கத்தில் வைத்துக் கொண்டு இருந்தாள். ஆஷிக் மேடையில் ஒரு காலும் கீழே ஒரு காலுமாக மாறி ,மாறி அவன் ஏறி இறங்கியதை பார்த்த ஆஷிக்கின் மனேஜர் ஸ்ரீதர்

“ சார் வந்தவர்களை நான் வரவேற்று மேடைக்கு அனுப்பி வைக்கிறேன்.நீங்கள் மேடம் அருகில் போய் நில்லுங்கள்.” என்று சொல்லி விட்டு ஒரு நமுட்டு சிரிப்புடன் வாசலை நோக்கி சென்றான்.

அவன் தன்னை கிண்டல் செய்கிறான் என்று அறிந்தும் அவனை ஒன்று சொல்லாமல் அவன் கிண்டலையும் ரசித்தான். பேபிம்மா என்னை என்ன மாதிரியாக்கிட்டே பார்த்தியா...இந்த மனேஜர் எங்கிட்டே பேசவே அப்படி யோசிப்பான் இப்போ என்ன வென்றால் என்னையே கிண்டல் செய்கிறான்.

பரவாயில்லை பேபிம்மா இதுவும் நன்றாக தான் இருக்கிறது.என்று நினைத்துக் கொண்டே மேடையேறி சித்தார்த்தின் பக்கத்தில் நின்றுக் கொண்டான்.தன்னை பார்த்து சிரிப்பவர்களிடம் தலையாட்டிக் கொண்டே இருந்தாலும் நிமிடத்துக்கு ஒரு தடவை பரினிதாவையும் பார்ப்பதை மறக்க வில்லை.

பங்ஷன் முடியும் தருவாயில் ஆஷிக் மைக்கை பெற்றுக் கொண்டு தன் குடும்ப உறுப்பினர் அனைவரையும் மேடை ஏற்றி “இன்று என் சகோதரியின் ரிசப்ஷன் மட்டும் அல்ல. என் திருமணத்தின் நிச்சயமும் இன்றே…” என்று சொல்லி விட்டு பரினிதாவை பார்த்தான்.
 
Top