Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 30 2

Advertisement








Super sister
















































“இப்போ சொல் பேபிம்மா உனக்கும் எனக்கும் பொறுத்தம் இல்லையா…?”

தான் கேட்டும் சத்தம் வராமல் போக அவள் முகத்தை பார்த்த ஆஷிக் அப்போது தான் அவள் இவ்வுலகிலேயே இல்லை என்று தெரிந்துக் கொண்தும் அவளை அப்படியே தன் கையில் ஏந்தி அறைக்குள் நுழைந்து அவளை கட்டிலில் கிடத்தி விட்டு அவன் படர துவங்கும் வேலையில் பரினிதாவின் .

“அய்யோ “ என்ற அலரளில் பயந்து “என்ன பேபிம்மா என்ன ஆச்சி.” என்று பதட்டத்துடன் கேட்டதற்க்கு கூலாக “உங்களுக்கு என் மீது எந்த அளவுக்கு காதல் இருக்கிறது என்று தெரிய வேண்டி இருந்தது. அதனால் தான் நான் அலரினேன். ஆனால் பரவாயில்லை அத்தான். நான் வைத்த டெஸ்ட்டில் நீங்க தேறிட்டிங்க.” என்ற அவள் பேச்சில் கோபம் கொள்ளாமல்.

“அப்படியா ...உனக்கு என் காதல் தெரியவேண்டும் அவ்வளவு தானே...இதை இப்படி தெரிந்துக் கொள்வதை விட இப்படியும் தெரிந்துக் கொள்ளலாம்.” என்று சொல்லிக் கொண்டே தனக்கு பிடித்த வகையில் அவளுக்கு தன் காதலை உணர்த்தினான்.

வேலை பளு காரணமாக பத்து நாட்களுக்கு மட்டும் ஏற்காட்டில் ஹனிமூனுக்கு ப்ளான் செய்து இருந்த ஆஷிக் பத்து நாட்களுக்கு பிறகும் அங்கு இருந்து கிளம்ப மனம் இல்லாமல் தன் மனேஜர் ஸ்ரீதரிடம் நீ பார்த்துக் கொள் என்று சொல்லி விட்டு ஒரு மாதமும் அவன் பரினிதாவின் அருகில் அவள் மென்மையில் தன் கடினத்தை மறந்திருந்தான்.

கடந்த எட்டு வருடமாக தொழில் தொழில் என்று அதிலேயே ,மூழ்கி பணம் ஒன்றே பிரதானம் என்று நினைத்திருந்தவனை அதையும் தாண்டி வாழ்க்கை இருக்கிறது என்று ஒவ்வொறு நிமிடமும் அவனுக்கு அவள் புரிய வைத்தாள்.

தன் ஹனிமூன் முடிந்து சென்னை திரும்பிய ஆஷிக்கின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் மிக அழகாக சென்று கொண்டு இருந்தது. என்ன ஒன்று பரினிதாவை கல்லூரிக்கு அனுப்பவது தான் அவனுக்கு பெரும்பாடாக இருந்தது.

காலை எழுந்ததும் அவளே வலிய வந்து கன்னத்தில் இதழ் பதித்து “இன்று காலேஜ் போக வேண்டுமா அத்தான்.” என்று கேட்கும் போது அப்படியே அவளை வாரி அணைத்து தன் வேலையையும் மறந்து அவளிடம் மூழ்க மனம் ஆசை பட்டாலும், அவள் எதிர் காலத்தில் தன் காலில் நிக்க இந்த படிப்பு தேவை.

மனித வாழ்க்கை நிறந்தரம் கிடையாது நாளை நமக்கே ஏதாவது நிகழ்ந்தாலும், அவள் தொழிலோடு தன் தொழிலும் சேர்த்து பார்த்துக் கொள்ளும் திறமை அவளுக்கு வேண்டும். அதற்க்கு பிள்ளையார் சுழி தான் இந்த படிப்பு என்று நினைத்து அவனும் அவள் வழியிலேயே தன் ஜாலத்தில் அவளை தன் வசப்படுத்தி தினம் கல்லூரிக்கு அனுப்பி வைத்திருந்தான்.

இதோ அவளுக்கு இன்றோடு அவளிம் ஆறாம் செமஸ்டர் முடிவடைகிறது. அவள் எழுதி முடிப்பதற்க்குள் இவன் ஒரு வழியாகி விட்டான்.பின் என்ன அவள் முன்னே வைத்திருந்த அரியஸையும் அல்லவா முடிக்க வேண்டும்.

ஆனால் ஆஷிக் கெட்டி காரதணமாக இந்த செமஸ்டரின் ஆறு,முந்தைய எட்டு என்று ஒன்றாக எழுதினால் அவள் முடிக்க மாட்டாள் என்று கருதி இந்த செமஸ்ட்டரோடு முதல் நான்கு அரியஸை மட்டும் க்ளியர் செய் என்று அந்த நான்கு சப்ஜெக்ட் மற்றும் இந்த ஆறு சப்ஜெக்ட் என்று அவளை படிக்க வைக்க இவன் வேலையை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்து விட்டு வெளிநாட்டுக்கும் போகாமல் இவனே இவள் கூட படிக்கும் பெண்களிடம் சென்று நோட்ஸ் எழுதிக் கொண்டு கூடவே இருந்து அவளை எழுத வைத்தான் என்றால் நம் ஆஷிக் பாவம் தானே…

அதுவும் ஆருவும், சித்தார்த்தும் சும்மா இல்லாமல் குழந்தையை படிக்க வைக்கும் வயதில் மனைவியை படிக்க வைக்கிறயா...என்று ஓட்டியே ஒரு வழி செய்து விட்டார்கள். பாட்டிம்மாவுக்கும் சரி கலையரசி அம்மாவுக்கும் சரி தன் குழந்தைகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்வதை பார்த்து பூரித்து போயிருந்தனர்.

அந்த மகிழ்ச்சியுடனே பாட்டிம்மா ஆஷிக்கிடம் “இனி அனைத்தும் பொறுப்பும் நீயே பார்த்துக் கொள்.நானும் உன் அம்மாவும் இனி காசி, ராமேஸ்வரம் என்று புன்னிய தளங்களுக்கு போக போகிறோம்.”

“ சந்தோஷம் பாட்டிம்மா...நானே உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன். நீங்களே போவது எனக்கு மகிழ்ச்சி தான்.” என்று சொல்பவனின் விலாஎலும்பில் குத்திய பரினிதா ஏதோ கண்ணாலேயே பேச முயற்ச்சி செய்தாள்.

பாவம் அவள் முயற்ச்சி தான் செய்தாள். ஆனால் ஒழுங்காக செய்ய முடியாத காரணத்தால் அதனை புரிந்துக் கொள்ளாத ஆஷிக் சத்தமாக “என்ன பேபிம்மா…” என்ற வினாவுக்கு பதில் அளிக்காமல் தன் தலையில் தானே குட்டு வைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

சரி நம் பேபிம்மாவை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கருதிய ஆஷிக் பாட்டிம்மாவிடம் “பாட்டிம்மா நம் பழைய குத்தகை காரரை மாற்றலாம் என்று நினைக்கிறேன். அதனால் அந்த அக்ரீமண்டை கேன்சல் செய்ய நீங்களும் நானும் நாளை பொள்ளாச்சி போகலாம்.” என்று சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு போகும் போது அவனை தடுத்த ஆஷிக்கின் அன்னை கலையரசி “என்ன பேச்சிடா இது அவர்களிடம் ஒன்றும் சொல்லாமல் நீயே குத்தகை காரரை மாற்றுவாயா….பிறகு அவர்களுக்கு என்ன மரியாதை..” என்று மேலும் ஏதோ சொல்ல இருந்தவரை தடுத்த பாட்டிம்மா…

“கலை மாப்பிள்ளை செய்வது சரி தான். நானே அந்த குத்தகை காரரை மாற்ற தான் எண்ணினேன். அவன் கொஞ்சம் அடாவடி பேர் வழி தான். சித்தார்த்தை அழைத்துக் கொண்டு பேசலாம் என்று நினைத்திருந்தேன் அதை ஆஷிக் செயல் படுத்தி விட்டான்.

இன்னும் ஒன்று கலையரை தொழிலில் மட்டும் ஒருவரிடம் நம்பி கொடுத்து விட்டால் முழு பொறுப்பும் அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். தேவை இல்லாமல் நாம் மூக்கை நுழைக்க கூடாது.

அது மட்டும் இல்லாமல் ஆஷிக் மேல் எனக்கு நம்பிக்கை இருகிறது. அவனால் தொழிலை பெருக்க வைக்க முடியுமே தவிர சரிக்க இல்லை.” என்று சொல்லி தான் மிக புத்திசாலியான முதலாளி என்று தன் பேச்சி மூலம் நிறுபித்தார் பாட்டிம்மா…

ஆஷிக் தன் அன்னையிடம் பார்த்தீர்களா என கண்ணாலேயே கேட்டு விட்டு தன் பேபிம்மாவை பார்க்க சென்றான். அங்கு அவன் பேபிம்மா ஒரு முழ நீளத்துக்கு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்துக் கொண்டு தன் ஸ்கட்டின் கீழ் பகுதியில் சிறிது தொங்கி கொண்டு இருந்த நூலை இன்னும் இழுத்து ஒரு நூல் கண்டு அளவுக்கு கீழே விட்டுக் கொண்டே இருந்தவளின் செயலை தடுத்து

“என் பேபிம்மாவுக்கு என்ன கோபம்” என்று அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி செல்லம் கொஞ்சிக் கொண்டு இருந்தவனின் கையை தட்டி விட்டு “யாரும் என்னிடம் பேச வேண்டாம்.”

“ஏன் பேபிம்மா…”

“ என் தோழிங்க எல்லாம் சொன்னாங்க.”

“என்ன சொன்னாங்க.”

“இந்த ஆம்பிள்ளைங்களை நம்பவே கூடாது. கல்யாணத்துக்கு முன்னே ஒரு பேச்சி பேசுவாங்க கல்யாணத்துக்கு பிறகு ஒரு பேச்சி பேசுவாங்கன்னு, அவங்க சொன்னது உண்மை தான் என்று எனக்கு இப்போ தான் புரியுது.”

“ அப்படி என்ன மாத்தி பேசினேன் பேபிம்மா…”

“ என்ன மாத்தி பேசலேன்னு கேளுங்க.ஏன்ன அது தான் சரியா இருக்கும்.”

அவள் பேச்சை ரசித்து கேட்ட ஆஷிக் “அய்யோ என் பேபிம்மா என்னம்மா பேசுறாங்க. அப்போ இனி நான் உன்னை பேபின்னு அழைக்க கூடாது போலவே…”

என்று திரும்பவும் தன் முகம் பற்ற வந்த ஆஷிக்கின் கையைய் தட்டி விட்டவள் “பேச்சை மாத்த கூடாது. முதலில் நீங்க என்ன சொன்னீங்க. என்னை கல்யாணம் செய்துக் கொண்டால் யாரையும் உன் அரியஸை பற்றி பேச விட மாட்டேன் என்று சொன்னீங்களா…? இல்லையா….”

“சொன்னேன். நான் இல்லை என்று சொல்ல வில்லையே...பேபிம்மா….”

“ அப்போ எதற்க்கு என்னை காலேஜ் அனுப்பிறீங்க. அப்புறம் அந்த அரியஸை முடி என்று கட்டாய படுத்திறீங்க.”

“பேபிம்மா நான் சொன்னதை நீ தான் சரியா புரிஞ்சிக்கலை. நான் என்ன சொன்னேன் மத்தவங்க உன் அரியஸை பத்தி பேச மாட்டேங்க என்று தானே சொன்னேன். நீ க்ளியர் செய்துட்டா யாரு பேச போறாங்க. அப்புறம் உன்னை காலேஜ் அனுப்ப மாட்டேன் என்று நான் எப்போவாவது சொன்னேனா...நீயே தப்பா புரிஞ்சிக்கிட்டா நான் என்ன செய்வேன் பேபிம்மா…” என்று சொல்லி விட்டு சிரிப்பவனை பார்த்து “ப்ராடு” என்று சொல்லி அவன் மார்பிலேயே சாய்ந்துக் கொண்டாள்.

பின் அவன் சட்டையில் உள்ள பட்டனை திருகி கொண்டே “நீங்க ஏன் மாமா பாட்டிம்மா கூட பொள்ளாச்சி போறீங்க.நீங்க இல்லாமே இரண்டு நாள் எனக்கு போர் அடிக்கதா….இந்த பாட்டிம்மா சுத்த மோசம் .

அவங்க தான் என்னை பாத்துக்காம தொழில் தொழில் என்று சொல்லிட்டு என்னை தனியா விட்டுட்டாங்கன்னா...பாத்துக்குற உங்களையும் என் கூட இருக்க விடமே...செய்றாங்களே…” என்று சொல்லி விட்டு மூக்கை உறிஞ்சும் அவளை அணைத்துக் கொண்ட ஆஷிக்.

“என்னை ப்ராடுன்னு சொல்லிட்டு நீ ப்ராடு வேலை செய்றியா….அப்போ கோச்சிட்டு போற மாதிரி போய் நாங்க பேசுனதை எல்லாம் கேட்டுட்டு இருந்தியா…”

ரோஷமாக “நான் ஒன்னும் ஒட்டு கேக்கலை.”

“அய்யோ பேபிம்மா நான் அப்படி சொல்லலையே….நீயே சொல்வதை பாத்தா...அப்போ ஒட்டு தான் கேட்டு இருக்கே….” என்று சொன்னவன் தன் விலையாட்டு பேச்சை கைய் விட்டவனகா….

“பேபிம்மா பாட்டிக்கு வயதாயிடுச்சி அவங்க இவ்வளவு காலம் உழைத்ததே ...அதிகம் தான். உனக்கு அவர்களிடம் கோபம் இருக்கலாம். அது நியாயமும் கூட ஆனால் நாம் அவர்களின் நிலையில் இருந்தும் யோசிக்க வேண்டும் பேபிம்மா….யாருக்காக அவர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டார்கள் உனக்கும், சித்தார்த்துக்கும் தானே...அதனால் இனி உன் கோபத்தை பாட்டிம்மாவிடம் காமிக்க கூடாது சரியா…?”

அவன் பேசுவதைல் உள்ள நியாத்தை புரிந்துக் கொண்ட பரினிதா சரி என்ற வகையில் தலை அசைத்ததை பார்த்து சிரித்துக் கொண்டே “எனக்கு தெரியும் என் பேபிம்மா புத்திசாலி நான் சொன்னால் புரிந்துக் கொள்வாள் என்று. சரி நான் கீழே போகிறேன் அம்மாவை வீட்டில் விட்டு விட்டு நான் வருகிறேன் பேபிம்மா நாளை நானும் பாட்டிம்மாவும் இங்கே இருந்தே செல்கிறோம்.” என்று சொல்லி விட்டு அவள் நெத்தியில் இதழ் பத்தித்து கீழே சென்றான்.

பாட்டிம்மா சாப்பிட்டு விட்டு தான் போக வேண்டும் என்று வற்புறுத்தியதால் கலையரசி சாப்பிட அமர அப்போது தான் வெளியில் சென்று விட்டு வந்த சித்தார்த்தும், ஆருவும் தங்களை சுத்தப்படுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தனர் அனைவரும் இருப்பதை பார்த்த ஆஷிக் பரினிதாவையும் அழைக்கலாம் என்று நினைக்கும் வேலையில் அவளும் வந்து விட அனைவரும் சேர்ந்து சாப்பிட தொடங்கினர்.

பரினிதா சும்மா இல்லாமல் தன் அண்ணனிடம் “அண்ணா உங்களை மூன்று நாளா...பார்க்கவே முடியவில்லை.” என்று கேட்டதற்க்கு.

“ஏன் குட்டிம்மா கேட்க மாட்ட உன் புருஷன் தயவில் எனக்கு ட்ரன்ஸ்வர் கிடைத்து இருக்கே...அதற்க்கு ஷாப்பிங் செய்ய வேண்டாமா..அது தான் அலைஞ்சிட்டு இருக்கேன்.” என்று சொல்லும் அண்ணனுக்கு பதில் சொல்வதற்க்காக தன் வாயில் அடைத்த அப்பத்தை முழுங்க தான் நினைத்தாள்.

ஆனால் அது முடியாமல் உள்ளிருந்த உணவும் சேர்ந்து வாந்தியாக வெளியில் வந்தது. அதை அடக்கி வாஷ் பேஷன் நோக்கி செல்பவளை பார்த்து ஆஷிக்கும் அவள் பின் சென்றான்.

குடலே வெளியில் வந்து விழும் அளவுக்கு வயித்தில் உள்ள அணைத்தும் வாந்தியாக வெளியே தள்ளியது.ஆஷிக் அவள் தலைய் பிடித்துக் கொண்டே “பேபிம்மா என்ன செய்யுது.வாய் கொப்பளித்து விட்டு வா நாம் ஆஸ்பிட்டல் செல்லலாம்.” என்று சொல்பவனுக்கு பதில் சொல்லும் நிலையில் கூட பரினிதா இல்லை.

அவளை கைய் தாங்களாக பிடித்து ஹோபாவில் அமர வைத்து “என்ன பேபிம்மா செய்யுது.” என்று அவன் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே சித்தார்த் டாக்டரை அழைக்க தன் போனை எடுத்தான்.

ஆனால் அவனை பேச விடாமல் அவன் வாயில் ஸ்வீட் எடுத்து அடைத்த பாட்டிம்மா “போன் செய் உன்னை வேண்டாம் என்று சொல்லலை. ஆனால் லேடி டாக்டருக்கு செய்.அதற்க்கு முன் அனைவரும் ஸ்வீட் எடுத்துக்குங்க.” என்ற பாட்டியின் சொல்லிலேயே விஷயம் அனைவருக்கும் புரிந்தது நம் பேபிம்மாவை தவிர.

அனைவரும் ஸ்வீட் சாப்பிடுவதை பார்த்த பரினிதா “நான் வாந்தி எடுத்து கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். நீங்க என்னன்னா...ஸ்வீட் சாப்பிடுறீங்களா…?”

என்ற சொல்லுக்கு அனைவரும் கோரஸாக “அதற்க்கு தான் ஸ்வீட் சாப்பிடுகிறோம்.” என்று சொன்னவர்களை இன்னும் புரியாமல் பார்த்த பரினிதாவின் அருகில் சென்ற ஆஷிக் “பேபிம்மா...என் பேபிக்கு ஒரு பேபி வர போகிறது.” என்று சொன்னது தான் தாமதம்.

இருக்கையை விட்டு எழுந்து ஒரே குதியாக குத்தித்து “அய்” என்று சொன்னவளை அனைவரும் ஒரு சேர அதட்டினர்.

ஆஷிக் அவள் அருகில் வந்து”பேபிம்மா இனி இப்படி குதிக்க கூடாது.” என்று சொன்னவன் பாட்டிம்மாவிடம் “பாட்டிம்மா நாம் பொள்ளாச்சிக்கு அடுத்த வாரம் போகலாம்” என்று சொல்லி விட்டு கைய் தாங்களாக பரினிதாவை தங்கள் அறைக்கு அழைத்து சென்றான்.

அங்கு சென்றவுடன் “அத்தான் குழந்தைக்காக தானே...பொள்ளாச்சிக்கு போக வில்லை.

“ஆமாம் குழந்தைக்காக தான் நான் பொள்ளாச்சி போக வில்லை. அவள் வயித்து பகுதியில் கைய் வைத்து இந்த குழந்தைக்காக கிடையாது. இந்த குழந்தைக்காக .” என்று அவளை சேர்த்து அணைத்துக் கொண்டான்.

பணமே பெரிது என்று நினைத்திருந்தவனை அதற்க்கும் தாண்டி உலகம் இருக்கு என்று புரிய வைத்த பரினிதாவை அவள் குழந்தை தனம் மாறாமல் தன் வாழ் நாள் முழுவதும் அவள் அருகிலேயே அவன் எப்போதும் இருப்பான். என்றென்றும் ஆஷிக்கின் இதயம் பரினிதாவின் அருகிலேயே தான் இருக்கும். அவர்கள் என்றும் சந்தோஷத்துடன் இருக்கட்டும் என்று வாழ்த்தி நாம் விடை பெறுவோம்.

நிறைவு.

Super sister
 
Semma enna design babyma ni Chance illa poo mudiyalapa sirichi super siththu Fantastic aru lv great story is very nice
 
Top