Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

unnodu kaikorkka 1

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 1:

சென்னை:

இருபது ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் சுற்றி வண்ண வண்ண மலர்கள் கொண்ட தோட்டத்தின் நடுவே குடிக் கொண்டுள்ளது அந்த வீடு.வீடு இல்லை மாளிகை.ஆம், அந்த வீட்டின் இளவரசிக்காக அந்த வீட்டின் ஆண்மகன்கள் பார்த்துப் பார்த்துக் கட்டிய மாளிகை அது.

இரண்டு தலம், கீழே வலது பக்கம் இரண்டு படுக்கை அறைகள்.இடது பக்கம் சமையல் அறை மற்றும் பூஜை அறைகள் உள்ளது.முதல் தலத்தில் அதே போல் இரண்டு சொகுசான படுக்கை அறைகள்.இரண்டாம் தலத்தில் தான் நம் இளவரசியின் உலகம் அமைந்துள்ளது.

ஐந்து தலை முறைக்கு பிறகு பிறந்த ஒரே பெண் குழந்தை என்ற காரணத்தினால் இளவரசியைப் போல் பார்த்துப் பாதுகாப்புடன் வளர்க்கின்றனர்.ஆனால் இளவரசிக்குத் தான் அது தன்டணையாக தோன்றியது.அவளின் சுதந்திரம் பறிபோனது போல் நினைத்தால்.அவள் வாழ்க்கையில் எந்த முடிவுகளும் எடுக்கும் உரிமை அவளுக்கு இல்லை.அவளின் பெரியப்பாவிற்குத் தான் உண்டு.

ஆம், அந்த வீட்டின் மூத்த தலைவர், கட்டுமான தொழிலின் தந்தை என்று அனைவராலும் போற்றப்படும் ஆதிசேஷன்.மிகவும் கண்டிப்பானவர்.இவரின் மனைவி அமராவதி.கருனையே வடிவமானவர்.இவர்களின் ஒரே மகன் ஆஷிக்.ஆஷிகின் மனைவி அணு.இவர்களுக்கு ஒரே மகன் நிதின் இரண்டு வயது மழலை.

அந்த வீட்டின் அடுத்த தலைவர் அமரேந்திரன்.மிகவும் அன்பானவர்.இவர் மனைவி அம்பிகா.மிகவும் பொறுமைசாலி.இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.மூத்தவன் பிரகாஷ்.இவன் மனைவி பிரனவி.இவர்கள் காதலித்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.ஒரு மாதம் தான் ஆகிரது.அதனால் வீட்டில் அனைவருக்கும் இவர்கள் மீது கோபம்.இளையவள் தான் நம் இளவரசி.இளவரசி என்கிற சம்யுக்தா.

சம்யுக்தா பார்ப்பவர் கண்களைப் பறிக்கும் அழகு.அளவான உடல்வாகு,நீண்ட கூந்தல்,வட்ட முகம்,பேசும் கண்கள்,கூர்மையான நாசி,அழகான உதடுகள்,சந்தன நிறம்.மொத்தத்தில் அந்த கண்ணணுக்கு ஏற்ற ராதை போலவே இருப்பாள்.
 
Last edited:
உங்களுடைய "உன்னோடு
கைகோர்க்க"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
திவ்யா சதிஷ் டியர்
 
Last edited:
Top