Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

uyir kaakkum uyir kolli- 1

Advertisement

Geethanjali Aathi

Active member
Member
உயிர் காக்கும் உயிர்கொல்லி -1

"மச்சான் ஏண்டா அந்த ஆளு கிட்ட போய் வாயை கொடுக்கிற" என்று தன் நண்பனை கடிந்து கொண்டான் ரகு

"அவர்தான் புரிஞ்சுக்கல நீயும் என்ன புரிஞ்சிக்க மாட்டியா டா? இது என்னோட டிரீம் ப்ராஜெக்ட் மச்சான்" ஆழ்ந்து ஒலித்தது நம் நாயகனின் குரல்.

அது நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வகுப்பறை.
வகுப்பறையின் தோற்றமே அங்கு படிக்கும் மாணவர்களின் செல்வச்செழிப்பை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.

ஆறுதலாக அவன் தோள்களை பற்றி கொண்ட ரகு "புரியுதுடா ஆனா அதுக்காக அவரு கிட்ட போய் இப்படியெல்லாம் பேசினா மார்க்ல கைவச்சிடா என்னடா பண்ணுவ?" எங்கே அந்த ஆசிரியரின் கோபத்திற்கு தன் நண்பன் ஆளாக நேரிடுமோ என்ற கவலையில் கூறினான் அவன்.

இதழ்களில் கேலிச் சிரிப்பை ஓட விட்டவன், "இதனால தாண்டா நம்ம நாடு இன்னும் இப்படியே இருக்கு... யாரும் நமக்காகவும் நம்ம அறிவை வளர்த்துக்கறதுக்காகவும் படிக்கிறது இல்லை படிக்கிறது எல்லாம் எக்ஸாம்ஸ் காகவும் மார்க்ஸ்க்காகவும் மட்டும்தான். எப்ப நம்மளோட இந்த ஆட்டிட்யூட் மாறுதோ அப்போ தான் நாம் நாடும் நல்லா மாறும்".

அவன் மனநிலையை மாற்றும் பொருட்டு "சரி விடு மச்சான் கேன்டீன் போகலாம் வா. பசி வந்துட்டா நீ நீயா இருக்க மாட்ட" என்று அவனை கல்லூரி உணவகத்திற்கு அழைத்து சென்றான் ரகு.

அவன் இளம்பரிதி. பார்ப்பவர்களை வசீகரிக்கும் தேஜஸான முகம் அவனுக்கு அவன் முகம் மட்டுமல்ல அகமுமே வசீகரிக்கும்
அவன் வசீகரத்திற்கு எது காரணம்?
பார்பவரை அசரவைக்கும் அழகிய தோற்றமா?
கல்லூரி முதல்வர் என்றாலும் தவறு என்றால் தைரியமாக தட்டிக்கேட்கும் தன்னம்பிக்கையா?
ஆசிரியர்களுக்கும் பாடம் கற்பிக்கும் அவனுடைய அறிவு திறமையா?
இன்றளவும் இந்த கேள்விகளுக்கு விடை கண்டறிய தான் யாராலும் முடியவில்லை.

அது சென்னையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான தொழில்நுட்பவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம். பலரும் அந்த கல்லூரியில் வேலையையும் கைநிறைய சம்பளத்தையும் எதிர்பார்த்து கற்க வந்திருக்கையில், இளம்பருதி... அவன் கனவுகளை மைய்யாக்க வந்திருந்தான் . அவன் கனவுகள் சுயநலம் அற்றது. நோய்கள் அற்ற உலகம் அதுவே அவனுடைய நீண்ட நாள் கனவு.

அவர்கள் உணவகத்தை அடைந்து அவர்களுக்கான உணவை வாங்கிக் கொண்டு அவர்கள் வழக்கமாக அமரும் உணவு மேஜையில் அமர்ந்தார்கள். அவர்கள் சாப்பிட ஆரம்பிக்கவும்,

"ஹாய் டா" என்றபடி அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான் அவர்கள் வகுப்பு தோழன் குமார் .

'வந்துட்டாண்டா சாப்பாட்டில் பங்கு கேட்க' மனதுக்குள்ளே புலம்பினான் ரகு.

ஆனால் வெளியிலோ "வா மச்சான் வந்து சாப்பிடு எங்க கூட" என்றான்

"சரிடா நீ கேட்டு நான் சாப்பிடாமலா? கண்டிப்பா சாப்பிடுகிறேன்" என்றபடி அவர்களுடைய சாப்பாட்டை பகிர்ந்து உண்ண ஆரம்பித்தான்.

'டேய் ரகு வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா டா நீ பேசாமல் இருந்திருந்தால் அவனே போயிருப்பான் போல' என்று தன்னையே நொந்த படி சாப்பிட ஆரம்பித்தான் ரகு.

பின்னர் குமாரின் கவனம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இளம்பருதியிடம் சென்றது.
"என்னடா சார் கூட மறுபடியும் சண்டையா?" விசாரனையை தொடங்கினான் குமார்.

"சண்டை எல்லாம் இல்லை டா அவர் என்னோட ப்ராஜெக்ட் என்னனு கூட கேட்காம அத ரிஜக்ட் பண்றாரு அதுதான் பிரச்சனை", தட்டில் இருந்த உணவை அளந்தபடியே பதிலளித்தான் இளம்பரிதி.

"அவர் சொல்ரதை கேட்டுக்க வேண்டியது தானே டா?"

அதை கேட்ட இளம்பரிதியோ கேலியாக நகைத்துகொண்டே,
"யாரோ செஞ்ச பொம்மைக்கு டிரஸ் மாத்தி மேக்கப் போட்டு வைக்க சொல்றாரு என்ன பொருத்த வரைக்கும் அதுவும் ஒருவகையில் திருட்டுதான்டா. என்னால் அதெல்லாம் பண்ண முடியாது அதுமட்டுமில்லாமல் நான் இதுக்காக மூணு வருஷம் கஷ்டப்பட்டு இருக்கேன். இது வெறும் புராஜெக்ட் மட்டுமல்ல என்னோட ட்ரீம் ரிசர்ச்".

"அப்படி என்னதான் தான் உன்னோட ரிசர்ச்" ஆர்வமாக கேட்டான் குமார்.

குமார் நன்றாக படிக்கும் மாணவன். அவன் தனக்காக படிப்பானோ இல்லையோ ஆசிரியர்களிடம் நன்மதிப்பைப் பெறுவதற்காகவே படிப்பான். அவனுக்கு எப்பொழுதுமே இளம்பருதியிடம் ஒரு சிறு பொறாமை உண்டு. ஆனால் அதனை அவன் வெளியில் காட்டிக் கொள்வது இல்லை.
இளம்பரிதி அறிவாற்றல் மிக்க மாணவனாக இருந்தாலும் அவன் தவறு செய்வது ஆசிரியராகவே இருந்தாலும் சுட்டிக் காட்டுவதால், சில ஆசிரியர்களுக்கு அவனை பிடிப்பதில்லை. ஆனால் பல ஆசிரியர்கள் அவனிடமே சந்தேகங்கள் கேட்டு தீர்த்துக் கொள்வதும் உண்டு.

"ஆஹான் இதோ பாருடா..... இவ்ளோ நாளா கூடவே இருக்கிற நான் கேட்டே அவன் சொல்லல, இவர் வருவாராம்..... கேட்பாராம்..... உடனே அவனும் சொல்லிடுவானாம்.... செம காமெடி" என்றான் ரகு.

"ஏண்டா அவ்வளவு பெரிய சீக்ரெட்டா?" படபடத்தான் குமார்.

"இல்லடா சீக்ரெட்லாம் இல்லை
என்னோட ரீசர்ச் தீம் ஒன்லி அ லைப் கேன் கிவ் ஆர் டேக் அ லைப் ( only a life can give or take a life ) இப்போதைக்கு அவ்வளவு தான் டா என்னால் சொல்ல முடியும் " என்று முற்றுப்புள்ளி வைத்தான் இளம்பரிதி.

"சரி அதை விடுங்க நம்ம இப்போ சீனியர்ஸ் ஆகபோரோம் " பேச்சை திசைதிருப்பினான் ரகு.

"நம்ம சீனியர்ஸாகி ஆல்ரெடி ஒரு மாசம் ஆச்சி டா" என்றான் இளம்பரிதி.
அவர்கள் இறுதி ஆண்டில் அடியெடுத்து வைத்து ஒரு மாதம் முடிந்திருந்தது. ஆனால் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து மறுநாள் தான் அவர்கள் கல்லூரிக்கு
வரவிருக்கின்றனர்.

"ஆமா ஆனா நாளைக்கு தான் நம்மளுடைய ஜூனியர் வராங்க
அதான் நாளைக்கு தான் நம்ம முழுசா சீனியர்ஸா மாறப் போறோம்" குதூகலித்தான் ரகு.

"சரி அதுக்கு என்னடா நீ இவ்ளோ எக்சைட் ஆகற" என்றான் குமார்.

"நாளைக்கு வர்ற பொண்ணுங்கள்ள ஏதாவது ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி செட்டில் ஆக போறேன் டா "

"அதுக்கு அந்த பொண்ணு ஒத்துக்கணுமே" எனக் கூறி குமாரும் இளம்பரிதியும் சிரித்துக்கொண்டனர். இப்போது அனைவரும் உணவு உண்டு முடித்திருந்தனர்.

"மச்சான் இதையேதான் டா நாலு வருஷமா சொல்லிட்டு இருக்க" என்றான் இளம்பரிதி

"விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி இந்த வருஷம் பாருடா நான் சொன்னது அப்படியே நடக்குதா இல்லையான்னு" சபதம் போல் கூறினான் ரகு.

இவ்வாறு பேசிக்கொண்டே நண்பர்கள் உணவகத்தில் இருந்து தங்களது வகுப்பறையை நோக்கி நடந்து சென்றனர்.



வகுப்பு முடிந்து வீடு திரும்பினான் இளம்பரிதி. எப்பொழுதும் அவன் வீட்டிற்கு வந்தவுடன் அன்பாய் வரவேற்கும் அன்னை இன்று அவன் கண்முன் தோன்றவில்லை அவரது சத்தம் மட்டும் சமையலறையில் கேட்டுக்கொண்டிருந்தது உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பெண் சமையல் மேடையில் அமர்ந்து இருக்க அவன் அன்னையோ அவளுக்கு முறுகளாய் தோசை வார்த்து கொடுத்துக் கொண்டிருந்தார்.
"வாவ் சூப்பர் அத்தை சோ கிரிஸ்பி என்ன இருந்தாலும் அம்மாக்கு உங்க அளவுக்கு தோசை சுட வரதில்லை" எனக் கூறி அவர் சுட்டு கொடுத்த தோசையை ரசித்து உண்டாள். அதைக்கண்ட அவனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது.
"ஓகோ மகாராணி வந்திருக்காங்களா? அதான் மகன் கண்ணுக்கே தெரியல" என்றான் அவள் கண்களைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு.

"வாடா எப்ப வந்த" என்றார் அன்னை அடுத்த தோசையை வார்த்துக் கொண்டே.

"நான் எல்லாம் எப்பவோ வந்துட்டேன் மகாராணி எதுக்கு இப்போ வந்திருக்காங்க அது மட்டும் இல்லாம என்னோட இடத்துல உட்கார்ந்து இருக்காங்க எந்திரிக்க சொல்லுங்க உங்க மகாராணிய" அதைக் கேட்ட அவன் அன்னை தாமரைக்கோ வீட்டிற்கு வந்த சிறு பெண்ணின் முன்பு அவன் கடினமாக நடந்து கொள்வது ஒருபுறம் கோபத்தையும் சங்கடத்தையும் ஒருங்கே கொடுத்தது.

"ஏன்டா குழந்தைகிட்ட போய் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க?" அவர் மகனை கடிந்து கொள்ள...... கோபமாய் ஒரு குரல் "நான் ஒன்னும் குழந்தை இல்லை..... எனக்கு காலேஜ் போற வயசு வந்துருச்சு இன்னும் குழந்தை சொல்லாதீங்க எனக்கு கெட்ட கோவம் வரும்" படபடத்தான் நம் நாயகி நளினி.

"கோவத்துல ஏதுமா கெட்ட கோவம் நல்ல கோவம் கோவம்னாளே கேட்டதுதான்"என்றான் சந்தானம் பாணியில் "அப்புறம்...... என்ன சொன்ன? குழந்தைன்னு சொன்னா உனக்கு பிடிக்கலையா அப்போ இனிமே நான் உன்னை குழந்தைன்னு தான் கூப்பிட போறேன்" அவளை சீண்டிக்கொண்டே சமையல் மேடையில் ஏறிஅவளருகில் இடித்துக்கொண்டு அமர்ந்தான் இளம்பருதி.

"வேண்டாம் அத்தான் இப்படி பண்ணாதீங்க" என்று சினுங்கினாள்
"அப்படித்தான் பண்ணுவேன் டி குழந்தாய்" என்று கூறி அவள் அடியை தாராளமாய் பெற்றுக்கொண்டான்.
"ஆஆஆ வலிக்குது டி மட்டி" என்றபடி அவன் அம்மாவிடம் திரும்பி "அம்மா இவ எதுக்கு இங்க வந்து இருக்கானு கேட்டேன் அதுக்கு பதில் சொல்லாமல் என்ன பண்ணிட்டு இருக்கீங்க".

" ம்ம்ம் பாத்தா தெரியலையா டா? தோசை சுட்டுட்டு இருக்கேன்". இவர்கள் சண்டையின் தன்மை அறிந்து ஒதுங்கி கொண்டார் அவர்.

" நான் இங்க இருக்கறது புடிக்கலையா அத்தான்?" என்று அப்பாவியாய் கேட்டாள்.
"அம்மா போதும் அவளுக்கு தோசை சுட்டது 12 தோசையை சாப்பிட்டு கும்பகரனி மாதிரி உட்கார்ந்து இருக்கா பாரு.... போதும்ன்னு ஒரு வார்த்தை வருதா வாயிலிருந்து?" என்று தன் அம்மாவிடம் கூறியவாறே
"ஆமாண்டி புடிக்கல எதுக்கு இங்க வந்த?" என்றான்

"நான் உங்க காலேஜ்ல தான் அத்தான் சேர்ந்து இருக்கேன் உங்க டிபார்ட்மென்ட் தான் பயோ டெக்னாலஜி...... ஆக்சுவலி ஹாஸ்டல்ல தான் தங்குறதா இருந்தேன் ஆனா இப்போ என்னுடைய முடிவை மாத்திக்கிட்டேன்...... நான் இங்க தான் தங்க போகிறேன்" என்றபடி கைபேசி எடுத்து அவள் தந்தைக்கு அழைத்தாள். மறுபுறம் பேசி எடுக்கப்பட்ட உடன் "அப்பா நான் அத்த வீட்டிலேயே தங்கிக்கிறேன் ஹாஸ்டலுக்கு பீஸ் கட்டாதீர்கள் கேன்சல் பண்ணிடுங்க" என்றாள்.

"என்னடா காலைல நீதான் ஹாஸ்டல்ல தங்கிறேன் அத்தைக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு சொன்ன இப்ப என்ன ஆச்சு? உன் அத்தை எதுவும் சொக்குப்பொடி போட்டுட்டாங்களா? ஆமாப்பா அத்தை சுட்டு கொடுத்த தோசை என்னை கட்டி போட்டுடிச்சு" என்று அவள் தன் அத்தானை பார்த்து கண்ணடித்தபடி கூறினாள். அதை பார்த்து பரிதி திகைத்து நிற்க..... அதை கேட்டு தாமரை சிரித்துக்கொண்டாள்.
"சரிமா ரொம்ப சந்தோஷம் ஹாஸ்டல்ல உன்னை எப்படி தனியா விடன்னு யோசிச்சிட்டே இருந்தேன் இப்பதான் நிம்மதியா இருக்கு...."

"என்னப்பா.... அத்தான் கிட்ட பேசணுமா ஒரு நிமிஷம் பா அத்தான் இங்கதான் இருக்காங்க குடுக்குறேன்"
நம்ம எப்போ சொனோம் ஒரு வேலை சொன்னோமோ என்று அவர் சிந்தனையில் இருக்க..... "இங்கே அத்தான் அப்பா உங்க கிட்ட பேசணுமாம்" என்றாள் நளினி.

இவ்வளவு நேரம் இருந்த துடுக்குத்தனம் மறைய பேசியை கையில் வாங்கியவன் "சொல்லுங்க மாமா" என்றான். "எப்படி இருக்கீங்க மாப்பிள நான் நல்லா என் மாமா நீங்க எப்படி இருக்கீங்க?"

"நான் ரொம்ப நல்லா இருக்கேன் மாப்பிள்ளை..... அப்புறம்...... பொண்ண உங்க காலேஜில தான் சேர்த்து இருக்கேன் கொஞ்சம் பார்த்துக்கோங்க மாப்பிள்ளை.... பசங்க யாரும் வம்பு பண்ணிட போறாங்க" உங்க பொண்ணு தான் உலகத்தையே வித்துருவளே... அவளை நான் பார்த்துகணுமாகும் பசங்கல தான் அவகிட்ட இருந்து நான் காப்பாத்தணும்..... என்று மனதில் நினைத்தவாறே "சரிங்க மாமா" என்றான்.

இவ்வாறு அவர்கள் தொலைபேசி உரையாடல் முடிந்திருக்க அவனுடைய சரிங்க மாமாவில் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள் நம் நாயகி.
அவனும் அவளை முறைத்துவிட்டு சாப்பிடாமல் தன் அறைக்கு சென்றான்
"டேய் உனக்கு தான்டா தோசை சுட்டுட்டு இருக்கேன்" என்ற தாமரையின் குரலும் காற்றில் கரைந்தது.

அவன் சென்றதும் நளினியிடம் திரும்பிய தாமரை "ஆமா சொக்குப் போடி போட்டது அத்தையா இல்ல அத்தானா " என்றபடி அவள் காதை திருகினார். "ஐயோ மெல்ல பேசுங்க அத்தை நீங்க பேசறது மட்டும் அத்தானுக்கு கேட்டுச்சு நம்ம ரெண்டு பேரும் வெளியே போக வேண்டியதுதான்" என்றவள் நினைவு வந்தவளாக "ஆமா உங்களுக்கு எப்படி அப்பா பேசுனது கேட்டுச்சு?" என்று தன் அதி முக்கியமான சந்தேகத்தை எடுத்து வைத்தாள். "ஸ்பீக்கர்ல போட்டு பேசினால் கேட்காம....." என்று இளம்பரிதிக்காக சுட்ட தோசைகளை தட்டில் அடுக்கிய வாரே சாவகாசமாய் பதிலளித்தார் தாமரை. "என்ன ஸ்பீக்கர்ல போட்டு பேசினேனா??" அதிர்ச்சியில் படபடத்தான் நளினி. "ஆமா அண்ணா கூப்பிடாமல் நீயே அத்தான் கிட்ட பேசணுமான்னு கேட்டு கொடுத்ததும் கேட்டுச்சு" என்று சிரித்தபடியே அவள் தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு மகனுடைய அறைக்கு சாப்பாட்டை எடுத்து சென்றார்.
'ஐயையோ போச்சா.... நீ மட்டும் இன்னைக்கு அத்தான் கையில மாட்டுன........ அதழக்காய் பஜ்ஜி தான்........ எஸ்கேப் ஆகிடு டா கைபுள்ள' என்றபடி ஓடி மறைந்தாள் நம் நாயகி.
 
Last edited:
உங்களுடைய "உயிர் காக்கும்
உயிர் கொல்லி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அஞ்சனா டியர்
 
Top