Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Uyir Kaakum Uyir Kolli -2

Advertisement

Geethanjali Aathi

Active member
Member
உயிர் காக்கும் உயிர் கொல்லி -2

ஆதித்தன் தாமரை தம்பதியருக்கு ஒரே மகன் இளம்பரிதி நளினி ஆதித்தனின் தங்கை மீனாட்சியின் புதல்வி. ஆதித்தன் வளர்ந்து வரும் தொழில் அதிபர்.மீனாட்சியின் கணவனான சோமசுந்தரம் புதுவையில் சொந்தமாக ஒரு பத்திரிக்கை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இளம்பரிதி பிறந்தது முதலே தன் அன்னையை காட்டிலும் அத்தை உடனே அதிக ஒட்டுதல் உடன் இருந்தான். அத்தைக்கு திருமணமான பின்பும் அவர் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்றுஅடம்பிடித்து அவரை தங்களுடனே இருக்க வைத்தான். அப்பொழுது சோமசுந்தரம் சென்னையிலே ஒரு பத்திரிகை நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால் அவர்கள் உடனே தங்கிக் கொள்ள சம்மதித்தார். பரிதியின் நான்காம் வயதில் நளினி பிறந்தபோது அவளே அவனுடைய சகலமாகவும் மாறிப்போனாள். இருவரும் சேர்ந்து முதியவர்களையும் வீட்டையும் ஒரு வழி ஆக்கி விடுவார்கள்.

இவையனைத்தும் இளம் பரிதியின் பத்து வயது வரை மட்டுமே அதன் பிறகு அவனுடைய அத்தை மீனாட்சி தன் கணவரையும் குழந்தையையும் கூட்டிக் கொண்டு புதுவை சென்றுவிட்டார் ஏன் என்ற காரணம் பரிதிக்கு தெரியப் படுத்தப்படவில்லை. செல்லும் அவரை யாரும் தடுக்கவும் இல்லை, இளம்பரிதியை தவிர ஆனால் அவன் தடுத்தும் அதையும் தாண்டி அவர் சென்றுவிட்டார். அன்று தான் அவன் தன் அத்தையையும் நளினியும் கடைசியாக பார்த்தது அதன்பிறகு அவர்கள் வீட்டுக்கு வந்தால் இவன் அறையிலேயே முடங்கி விடுவான். இவனும் அவர்கள் வீட்டிற்கு செல்வது இல்லை.

அவனுடைய அன்பையும் கோபத்தையும் அளவுக்கு அதிகமாகவே பெற்றுவிட்டார் அவனுடைய அத்தை மீனாட்சி. பார்ப்பவர்களுக்கு அவனுடைய கோபம் சிறுபிள்ளைத்தனமாக தோன்றலாம் ஆனால் அன்றைய தினம் அந்த பிஞ்சு மனதின் ஏக்கமும் தவிப்பும் அளப்பரியதாகவே இருந்தது.


ஆதித்தன் இல்லத்தில் காலை உணவை அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உண்ணுவதே வழக்கமாயிருந்தது. மாடிப்படியில் இருந்து இறங்கி வந்த இளம்பருதியை நோக்கி தாமரை "வாப்பா வந்து உட்காரு சாப்பிடலாம்" என்றார். சாபாட்டு மேஜையில் ஏற்கனவே ஆதித்தனும் நளினியும் அமர்ந்திருந்தனர். இவன் வந்ததும் தாமரை அனைவருக்கும் சாப்பாட்டினை பரிமாறினார். "அம்மா இது என்னது மா?" என்றான் இளம்பரிதி தட்டில் இருந்த அதிரசத்தை சுட்டிக்காட்டி. "அதிரசம் பா உனக்கு ரொம்ப பிடிக்குமே" என்றார் தாமரை அவனுக்கு பதிலளிக்கும் விதமாய் வேறு ஏதும் கூறாமல்.

"என்ன அவங்க கொடுத்து அனுபினாங்களா? எனக்கு ஒன்னும் வேண்டாம்" என்றான் தட்டில் இருந்த அதிரசத்தை ஒதுக்கி வைத்தபடி.

"அத்தான் ஏன் இப்படி பண்றீங்க உங்களுக்காக எவ்வளவு ஆசையா செஞ்சு கொடுத்தாங்க தெரியுமா" தன் அன்னை ஆசையாய் செய்து கொடுத்ததை நிராகரிப்பதை பொருக்க முடியாமல் கேட்டாள் அவள்.

"என்ன வேண்டான்னு விட்டுட்டு போனவங்க செஞ்சு கொடுக்கிற எதுவும் எனக்குத் தேவையில்லை". விடாமல் பதில் அளித்தான் அவன்.

அதனை கண்ட ஆதித்தனுக்கு மனதில் சிறு வருத்தம் மூண்டாலும் மகனை என்றுமே கடிந்து ஒரு வார்த்தை கூறாதவர் இன்றும் அதே போல் அமைதி காத்தார். ஆதித்தன் இளம்பரிதியை எப்போதுமே கொண்டாடும் தந்தையாகவே இருந்தார்.அவருக்கு அவர் மகனை கண்டு என்றுமே பெருமை தான். தாமரைக்கும் அவ்விதமே. அவர்கள் இருவரையும் காட்டிலும் அவனை கண்டு அதிகமாய் பெருமை கொள்வது மீனாட்சி தான். முதன் முதலில் தன் கையில் தவழ்ந்த குழந்தையை யாரால் மறக்க முடியும்?
இளம்பரிதி என்று வந்து விட்டால் அவருக்கு நளினி கூட இரண்டாம் பட்சம் ஆகிவிடுவாள்.


அதிரசத்தை தவிர்த்து மற்ற உணவுகளை மட்டும் உண்டான், இளம்பரிதி. உண்டு முடித்து கல்லூரிக்கு செல்ல தயாரான அவனை, தாமரையின் குரல் தடுத்தது "இன்னைக்கு தான் நளினி முதல் நாள் காலேஜுக்கு போற ஒருநாள் அவளை நீ கூட்டிட்டு போடா " அவளுக்காய் கூறியவர் "நாளையிலிருந்து அவ ஸ்கூட்டியில போயிடுவா" என ஒரு கூடுதல் தகவலையும் கூறினார்.
"சரிமா வர சொல்லுங்க" என்றான் வாதாடாமல்.

"உடனே ஒத்துகிட்ட நான் கூட நிறைய சென்டிமென்ட் டயலாக் எல்லாம் பிராக்டிஸ் பண்ணி வச்சிருந்தேன் அதெல்லாம் வேஸ்ட் தான் போல" சிரித்தார் தாமரை. "கூப்பிடுங்க மா அவளை லேட் ஆகுது".


அவள் அவனுடைய ராயல் என்பீல்டில் ஏறி அமர்ந்ததும் வாகனம் கல்லூரியை நோக்கி பயணித்தது.
'என்ன எதுவுமே பேசாம அமைதியா வாரா...... கோவமா இருக்காலோ?இருக்கட்டும் இருக்கட்டும் இவ கோவமா இருக்குறது தான் நமக்கு நல்லது' என்று எங்ணியபடியே வாகனத்தை செலுத்தினான். கல்லூரி அருகில் உள்ள பூங்காவில் அவளை இறக்கி விட்ட போதும் அவள் அவனிடம் எதுவுமே கூறாமல் கல்லூரியை நோக்கி சென்று விட்டாள். அவனும் அவனுடைய வாகனத்தை மீண்டும் உயிர்ப்பித்து கல்லூரியை நோக்கி சென்றான்.

அவன் வாகனம் கல்லூரியை அடைந்ததும் அவனுக்காகவே காத்திருந்த ரகுவும் அவன் அருகில் வந்தான் "என்னடா இன்னைக்கு போய் லேட்டா வர்ற எத்தனை பேர மிஸ் பண்ணிடோம் தெரியுமா உனக்கு" என்று கூறி அவனை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு சென்றான்..... அவர்கள் காலையில் வழக்கமாய் அமரும் இடத்தை நோக்கி ." மச்சான் இன்னைக்கு ஒரு பிளான் ஓட தான் இருக்க போல" என்றான் நக்கல் தொனிக்க.
"ஹாஹா இந்த வருஷம் என்னை யாராலும் தடுக்க முடியாது"
"சும்மா இருடா சிரிப்பு காட்டிகிட்டு" என்றபடி அந்த சிறு கல்மேடையில் அமர்ந்தான்.

"மச்சான் நான் முடிவு பண்ணிட்டேன் டா. அந்த பொண்ணுதான்."
"யாருடா நிறைய பேர் வர்றாங்க" அங்கு கூட்டமாக பெண்கள் வந்து கொண்டிருத்ததாள்.
"அந்த பொண்ணு டா குட்டையா ஒயிட் டிரஸ் போட்டு வரால அவதான்"
அவன் காட்டியது நளினியை தான். ஏனோ அவன் கூறியது இளம்பருதிக்கு ரசிக்கவில்லை. எவ்வளவு கோபம் இருந்தாலும் அவள் தன்னவள் அல்லவா"
"அவளா அவ குழந்தை மாதிரி இருக்காடா வேண்டாம்"
"லூசாடா நீ குழந்தைய யாராவது காலேஜ் அனுப்புவாங்களா? கூப்பிடு டா அவள "
"கூப்பிட்டு......" கடுப்புடன் கேட்டான் அவன்.
"நீ அவள ராக் பண்ற மாதிரி பேசு..... நான் உள்ள புகுந்து காப்பாத்துறேன்.... அப்புறம் அவ இம்பிரெஸ் ஆகி என்ன லவ் பண்ண ஆரம்பிச்சிடுவா"
'யாரு அவளா ....... அவளை எல்லாம் ராக் பண்ணணும்னு நினைச்சாலே நம்மளை ராங் பண்ணிடுவா ராங்கிகாரி இது புரியாம இவன் வேற' என்று நினைத்தவன்....
"முடியாதுடா" என்றான்
'சமயம் பார்த்து பழிவாங்குகிறான் நண்பனா இவன் து.....ரோ.....கி'
"டேய் உன் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது டா" என்றான் பரிதி.

" ப்ளீஸ்டா அவர் போறா டா " என்று ரகு கெஞ்சியும் அவன் அமைதியாக நின்றதால்......அவர்களை கடந்து செல்ல இருந்த நளினியை ரகுவே அழைத்தான் நளினியும் இளம்பரிதி தான் தன்னிடம் ஏதோ பேச நினைக்கிறான் என்று எண்ணி அவன் அருகில் சென்றாள். "சொல்லுங்க அண்ணா கூப்பிட்டீங்களா? என்று ரகுவை பார்த்து கேட்க ரகுவிற்கோ... அந்த நிமிடம் உலகே இருண்டுவிட்டது போல் ஒரு உணர்வு ( அதாவது Black and white effect ?)

"என்ன பாத்தா உனக்கு அண்ணா மாதிரியா தெரியுது?"

"ஓஓஓ. ... இல்லையா நீங்களும் ஃபர்ஸ்ட் இயரா?.... சாரி சாரி"

"நான் ஃபைனல் இயர் தான் உனக்கு அண்ணாவே தான் நீ போமா தங்கச்சி" அவளும் அவனை வினோதமாய் பார்த்து விட்டு பரிதியையும் முறைத்து விட்டு அவளுடைய முதல் வகுப்பிற்கு ஆர்வமாய் சென்றாள்.


வகுப்பு முடிந்து மாலையில் வீடு திரும்பிய நளினியிடம் "எப்படிமா வந்த..... கொண்டு வந்து விட்டுட்டு போறானா?" என்றார் தாமரை தேநீரை அவளிடம் கொடுத்தா வாறே. மாலையில் வகுப்புகள் முடிந்ததும் சிறிது நேரம் இளம்பரிதி ஆய்வுக்கூடத்தில் செலவிடுவது வழக்கம். அதனால் நளினியை வீட்டில் விட்டுவிட்டு அவன் ஆய்வுக்கூடத்திற்கு கிளம்பினான்.
"ஆமா அத்தை" என்றால் சுரத்தே இன்றி
"பாத்தியா டி காலைல உன்ன கூட்டிட்டு போக உடனே சம்மதம் சொல்லிட்டான் இப்போ பொறுப்பா கொண்டு வந்து விட்டுட்டு போறானா....... நீ வேணா பாரு கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கவும் சம்மதிப்பான்"
"உங்க பையன் சம்மதிச்சாலும் நான் சந்தித்திக்கமாட்டேன், எங்க அம்மா சுட்டுக் கொடுத்த அதிரசம் வேண்டாம்னு சொன்ன உங்க பையன் எனக்கு வேண்டாம்" ( ஒரு அதிரசத்தைக்காக லவ்வே வேண்டாம்னு சொல்லதா ஓவரா இல்ல )

"அச்சோ இது தான் உன் பிரச்சனையா. உங்க அம்மா சுட்டுக் கொடுத்த அத்தன அதிரசத்தையும் அவன் தான் சாப்பிட போறான்..... நீ வேணா பாரு நாளைக்கு காலைல தான் இந்த பாக்ஸ்ல ஒன்னும் இருக்காது"
"நிஜமாவா அத்தை?"

"ஆமா எத்தனை வருஷமா பாத்துட்டு இருக்கேன் எனக்கு தெரியாதா?"
' இதுக்கு தான் இவ்ளோ சீன் போட்டியா இன்னைக்கு மட்டும் நீ கிச்சன் பக்கம் வா உன்னக்கு இருக்கு கருவிகொண்டாள் அவள்'.


இவர்கள் வாழ்க்கை குரும்புகளோடும் மகிழ்ச்சியோடும் சென்று கொண்டிருந்த அதே நேரத்தில்......... அங்கு.....

ஒரு மனிதன் எப்பொழுது தான் மட்டுமே உயர வேண்டும் என்று நினைக்கிறானோ.......

அப்பொழுது அவனுடைய குடும்பமே அவனுக்கு எதிரியாகி விடுகிறது.
எப்பொழுது அவன் குடும்பம் மட்டுமே உயர வேண்டும் என்று நினைக்கிறானோ......
அப்பொழுது அவனுடைய சுற்றம் அவனுக்கு எதிரியாகி விடுகிறது.
எப்பொழுது அவனுடைய ஊர் மட்டுமே உயர வேண்டும் என்று நினைக்கிறானோ.......

அப்பொழுது அவனுடைய நாடு அவனுக்கு எதிரி ஆகிவிடுகிறது. எப்பொழுது அவனுடைய நாடு மட்டுமே உயர வேண்டும் என்று நினைக்கிறானோ....... அப்பொழுது அவனுக்கு இந்த உலகமே எதிரி ஆகிவிடுகிறது.
அதனை வெல்ல அவன் செய்யும் முயற்சியில் அவனுடைய நாடும் அந்த உலகில் தான் இருக்கிறது என்பதனை அவன் மறந்து விடுவதுதான் பரிதாபத்திற்குரியது.

இதுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது...... காலச்சக்கரத்தில் நம்மைவிட இரண்டு மணிநேரம் முன் நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு நாட்டில்.
"என்ன மிஸ்டர் சேட்டர்ஜி இந்த ரீசார்ஜ் வாக் அவுட் ஆகுமா?"என்று தன் முன்பு இருந்த கோப்புகளை ஆராய்ந்தவாறு கேட்டார் அந்த நாட்டின் முக்கிய புள்ளி, ஜின்வான்
"கண்டிப்பா சார் ஐ' அம் ஸ்செண்ட் பர்சன்ட் ஷுர்".
அந்த சேட்டர்ஜியின் முன் அமர்திருந்தவர் முகத்திலோ அப்படி ஒரு குரூரம்.
"நாம எதுல குறைஞ்சு போயிடோம் சொல்லுங்க எல்லாத்திலேயும் நம்ம தான் தீ பெஸ்ட ஆனா இப்ப கூட இன் அதர்ஸ் விக்ஷன் நாம செகண்டரி தான் இந்த நிலை மாறனும்". என்றவர் வார்த்தையிலும் வன்மம் நிறைந்திருந்தது.
ஆல்ரெடி நம்ம ஸ்பெசைமன்ல இன்றைக்கு வைரஸ் இன்ஜெக்ட் பண்ணியாச்சு சார் இன்னும் 2, 3 டேஸ்ல நாம ரிசல்ட் தெரிஞ்சுக்கலாம்.
இவர்கள் ஸ்பெசைமன் என்று கூறுவது விலங்குகளையோ இறந்த மனிதர்களையோ அல்ல உயிருள்ள மனிதர்களை...... மனிதர்களை வைத்து ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களுடைய இந்த ஆராய்ச்சி அவர்களையே அழிக்கும் சக்தி வாய்ந்தது என்று அறியும் நேரத்தில் இது யாரும் எதுவும் செய்ய முடியாத நிலையை அடைந்து இருக்கும்.
___________________
This is purely a work of fiction. It completely comes under my imagination. Except for the facts about some virus and bacteria.
 
Last edited:
Top