Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 12

Advertisement

‘உன் மகனின் திருமணம் என்பது என் முடிவு...’ என்று சொல்லாது செய்து காட்டப் போகிறார் சிவகாமி..

அது யாருக்கு புரிந்தாலும் புரியாவிடினும் மணிராதாவிற்கு நன்கு புரிந்தது.. எதோ ஒருவகையில் சிவகாமியிடம் தான் தோற்றுப்போனதாய் நினைத்தார். அடி மேல் அடி... நாம் வீராப்பாய் காட்டிக்கொண்டாலும், நம் மனதிற்கு தெரியுமே. அவரை மீறி எல்லாம் நடந்துகொண்டு இருந்தது.

அனைத்தையும் தாண்டி இப்போது வந்தனா வந்து பேசிக்கொண்டு இருக்க, மணிராதாவிற்கு எங்கே சிவகாமி மகளை தன் வீட்டு மருமகளாய் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தன் மகளின் திருமணமும் நின்றுவிடுமோ என்ற ஆச்சம் காரணமே இல்லாது தோன்ற ஆரம்பித்து விட்டது..

வந்தனாவின் கைகளை இறுகப் பற்றிக்கொள்ள “என்னம்மா...” என்றாள் பதற்றமாய்..

“ம்ஹும்...” என்று மறுப்பாய் தலையை ஆட்டியவர், “நீ போ..” என,

“ம்மா அது...” என்றாள் தயங்கி..

“வனா மனசு எதுவோ அதுவே நடக்கும்...” என்றவர், அதற்குமேல் பேச இயலாதவராய் கண்களை இறுக மூடி படுத்துக்கொண்டார்..

“நான் உன் கூடவே படுத்துக்கிறேன்..” என்று வந்தனாவும் அருகேயே படுத்துக்கொள்ள, கோவர்த்தன் வந்து இப்போது கதவு தட்டினான் வனமாலியோடு பேசிவிட்டு..

வந்தனா வந்து கதவு திறக்க, மணிராதாவும் என்னவென்று பார்க்க “ம்மா நாளைக்கு மாமா வீட்ல வச்சு தன் பொண்ணு அழைப்பு நடத்தணுமாம்...” என்றான்..

‘இதென்ன புது கதை...’ என்று இருவரும் பார்க்க,

“அண்ணன் இப்போதான் சொன்னான்.. நாளைக்கு சங்கிலி தாத்தா இந்திரா அத்தைக்கிட்ட பேச வர்றாராம்.. ஆனா முறையும் அதானே...” என்றுசொல்ல,

“யாரோட ஏற்பாடு...” என்றார் மணிராதா..

இத்தனை நேரத்திற்கு இப்போது தான் வாய் திறந்திருக்கிறார்..

“ம்ம் கமலி...”

“ஓ..!!!” என்றவருக்கு ஒன்றுமட்டும் தோன்றியது, ‘கமலி தன்னைப் போல் பிடிவாதக்காரியோ..’ என்று..

தானாவிட்டாலும், தன் தசை ஆடும்.. அது இப்போது தான் மணிராதாவிற்கு ஆடியதோ என்னவோ.. எதோ ஒருவகையில் கமலியிடம் அவர் தன்னை காண்பதாய் ஓர் எண்ணம்... இதற்குமேல் அவர் என்ன செய்ய முடியும்.. எதுவுமே செய்ய முடியாத நிலையில் கமலி தன்னை நிறுத்திவிட்டாள் என்று தோன்றியது..

அன்று சிவகாமியை தான் நிறுத்தியது போல்.. இன்று என்னை அவளின் மகள் செய்துவிட்டாள் என்று தோன்றவும் “ம்ம் செய்யுங்க.. நான் கோவிலுக்கு மட்டும் தான் வருவேன்..” என்றுவிட்டு சென்று படுத்துக்கொண்டார்..

இரட்டைகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, கோவர்த்தன் ‘சரி பார்த்துப்போம்..’ என்றுசொல்லி சென்றுவிட்டான்..

நாளை திருமணம் வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட யாருக்கும் உறக்கமில்லை. விடிந்தால் என்ன நடக்குமோ என்ற எண்ணமே.. கமலியோ ‘என்ன கல்யாணம் பண்றது அவ்வளோ ஈசியா என்ன??’ என்று வனமாலியிடம் கேட்பது போல் தனக்கு தானே கேட்டுக்கொள்ள, வனமாலியோ, தன் அம்மாவிடம் பேசியதை எண்ணிக்கொண்டு இருந்தான்.

‘கமலி....’

இந்த பெயரை சமீப காலமாய் பலமுறை உச்சரிக்க நேர்ந்திருக்கிறது. சில நேரம் விருப்பமாய்.. சில நேரம் வெறுப்பாய்.. ஆனால் விருப்பிற்கும் வெறுப்பிற்கும் அப்பாற்பட்ட ஒன்றாகவே அவளோடான உறவு என்பது இப்போதுவரைகும்.. இனி அது மாறுமா தெரியாது??

ஆனால் அவள் தன் மனைவி என்ற எண்ணம் எப்போதோ வந்தது நிஜம். அது விருப்பத்தின் பேரிலா இல்லை வெறுப்பின் பேரிலா அவனேயறியான்.

ஆனால் அவன் மணிராதவிடம் சொன்னது மட்டுமே காரணமில்லை.. அதுவும் ஒன்றுதான் ஆனால் அதுமட்டுமேயில்லை.. அவரிடம் அப்படி பேசினால் மட்டுமே வேலை நடக்கும் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன??? அதனால் தான் அப்படி பேசியது..

‘ம்மா எனக்கு வேற வழி தெரியலை.. உன்னோட எமோசன்ல அடிக்க நினைக்கலை.. ஆனாலும் வேற வழியில்லை..’ என்று அவனும் அம்மாவிடம் சொல்வது போல் தனக்கு தானே சொல்லிக்கொண்டான்..

இரவு மெல்ல மெல்ல கவிழ்ந்து, பொழுது புலர்ந்திட, சங்கிலிநாதன் எப்போது அங்கே சென்றாரோ, இந்திராவிடம் என்ன பேசினாரோ யாருக்கும் தெரியாது, ஆனால் கோவர்த்தன் அங்கே செல்லும்போதே, அவர் அங்கேதான் இருந்தார்..

இந்திராவோ அரண்டு போன முகத்துடன் “எ.. என்ன செய்யணுமோ செஞ்சுக்கோங்க...” என்று சொல்லிவிட, கோவர்த்தனுக்கே ஆச்சர்யம் தான்.

பமீலா இன்னும் உறங்கி எழுந்து வரவில்லை என்பது தெரிய, கோவர்த்தன் அவளைத் தேடி போக, சங்கிலிநாதன், சிவகாமிக்கு அழைத்து “எல்லாம் வாங்கம்மா...” என்று அழைப்பு விடுத்தார்.

கோவர்த்தன் பமீலாவைப் பார்க்க, அவளோ நன்கு உறங்கிக்கொண்டு இருந்தாள், சரி இப்போதைக்கு இவளை எழுப்பவேண்டாம் வெளியே வந்தவன், வனமாலிக்கு அழைத்து சொல்ல, “அப்படியா சந்தோசம் டா..” என்றவன்,

“சரி நீ வா, இங்க வந்தனா, நீ, அப்புறம் இன்னும் ரெண்டு பேர் போய் தான் கமலிய அழைக்கணும்.. ” என்று தம்பியை அங்கே அழைத்துக்கொண்டான்..

நேரம் கொஞ்சம் கடந்திருந்தது... வீட்டினில் ஆட்கள் சத்தம் நிறைய கேட்க, பமீலா எழுந்தவள், குழப்பமாகவே வெளியே வந்து பார்க்க, அங்கேயே மணப்பெண் அலங்காரத்தில் கமலி இருக்க, அவளுக்கு முறைகள் செய்வது எல்லாம் சொந்த பந்தங்கள் செய்துகொண்டு இருக்க, மாப்பிள்ளை வீட்டு சார்பாய், மேல தாளம் ஒலிக்க, அவளை பெண் அழைத்துப் போக வந்துகொண்டு இருந்தனர்..

இக்காட்சியை கண்ட அடுத்த நொடி பமீலாவின் கண்கள் விரிய “அம்மா.... அம்மா...!!!” என்று கத்திக்கொண்டு இந்திராவை தேடிப் போனாள்..

கமலி பமீலாவையோ, இந்திராவையோ யாரையும் கண்டுகொண்டாள் இல்லை. சிவகாமியும் அப்படியே.. மகளின் திருமண நிகழ்வுகளை மனதிற்குள்ளே ரசித்துக்கொண்டு இருந்தார். அந்த வீட்டின் வரவேற்பறையில், ஆளுயரத்தில் மகுடேஸ்வரனின் புகைப்படம் மாட்டப்பட்டு இருக்க, சிவகாமியின் கண்கள் அதனைப் பார்த்து கலங்கிவிட,

“அக்கா.. என்னக்கா...” என்றார் ராணி ஆறுதலாய்..

அதன் பின் யார் நினைத்தாலும் யாராலும் எதுவும் நடக்காது இருக்கப் போவதில்லை என்பதற்கிணங்க, பெண் அழைப்பு செய்து, கமலியை கோவிலுக்கு அழைத்துக்கொண்டு சென்றனர்..

அங்கேயே மாப்பிள்ளை கோலத்தில் வனமாலி இருக்க, சற்று தள்ளி எனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதுபோல் வேண்டா வெறுப்பாய் நின்றிருந்தார் மணிராதா.. சிவகாமி அவரை நேருக்கு நேராய் பார்த்தவர், பின் என்ன நினைத்தாரோ அமைதியாய் போய் அவரின் அருகே நின்றுகொண்டார்..

ஆனால் அந்த பார்வையின் வீச்சு இம்முறை மணிராதாவால் தாங்கவே முடியவில்லை..

Nice Ep
 
Top