Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Yaarai Vittathu Kadhal 19.1

Advertisement

AshrafHameedaT

Administrator
அத்தியாயம்----19(1)

தாமரையைய் சாப்பிட அழைக்க சென்ற வசந்தி அங்கு சன்னலில் முகம் புதைத்து ஏதோ யோசனையில் இருந்தவளை பார்த்து “என்ன தாமரை பலமா ஏதோ யோசிச்சிட்டு இருக்கே….” என்று கேட்டதுக்கு எந்த பதிலும் அளிக்காது வசந்தியை ஒரு வெற்று பார்வை பார்த்தவள்.

திரும்பவும் முன் இருந்த மாதிரியே தன் பார்வையை செலுத்தியவளின் தோள் மீது கைய் வைத்த வசந்தி “எது இருந்தாலும் என்னிடம் சொல்லி விடு தாமரை மனசிலே வைச்சி புழுங்கிக்காதே….”என்றவளிடம்.

“என்ன சொல்ல சொல்லுரே வசந்தி. இப்போ எல்லா என் வாழ்கையைய் நினைச்சா எனக்கே சிரிப்பா இருக்கு. எல்லாருக்கும் கல்யாணம் நடந்து சீமந்தம் நடக்கும்.

ஆனா உங்க அய்யா எனக்கு முதலில் சீமந்தம் செய்துட்டு அப்புறம் கல்யாணம் செய்யனுமுன்னு நினைச்சாரு போல. அது தான் முதலில் நான் கேட்ட தாலியை கொடுக்காதவர் இப்போது அனைவரின் முந்நிலையிலும் நான் சொன்னா அவர் கட்சி ஆபிஸ் எதிர்க்க பந்தல் போட்டு கூட கல்யாணம் செய்ய தயாரா இருக்காரு….ஆனா எனக்கு தான் எதுவும் ஒப்பல வசந்தி.” என்று தாமரை சொன்னதுக்கு…..

“அதுக்கு நீ ஒத்து கிட்ட தானே….? என்று பரபரப்பாக கேட்க.

அவள் பேச்சில் தாமரை தான் விக்கித்து நின்று விட்டாள். “என்ன வசந்தி என்ன சொல்ற ...அந்த ஆளு தாலி கட்டுறேன்னு சொன்னவுடனே நான் என் கழுத்தை நீட்டிடனுமா…

நீயுமா அவன் செய்ததை மறந்துட்ட….நீ தானே சொன்ன வசந்தி நமக்கு அவனை பழிவாங்க நேரம் வரும் என்று.”

தன் வயிற்றின் மீது கைய் வைத்து “இப்போ அதுக்கு உண்டான நேரம் வந்துடுச்சி வசந்தி. என்னை அசிங்க படுத்தின மாதிரி அவன் குழந்தையை இந்த சமுகத்தில் முன் நான் அசிங்க படுத்தனும்.”

என்று சொல்பவளை ஒன்றும் சொல்லாது மெளனமாக பார்த்திருந்தாள். தான் இவ்வளவு பேசியும் ஒன்னும் பேசாது இருக்கும் வசந்தியை பார்த்து “ என்ன வசந்தி ஏதாவது சொல்லு.”

“நான் சொல்லுவேன் ஆனால் நீ கேட்பியா….என்று தான் எனக்கு சந்தேகமா இருக்கு.”

“என்ன வசந்தி உன் பேச்சை ஏன் நான் கேட்காம இருக்க போறேன்.இவ்வளவு கஷ்டத்திலும் நான் உயிருடன் இருக்கேன் என்றால் அது உன்னால் தான் வசந்தி உன் பேச்சை நான் கேட்காமல் இருப்பேனா….?” என்று ஒரு நெகுழ்வுடன் சொல்ல.

“பழி வாங்க போறேன். பழி வாங்க போறேன் என்று சொல்றியே ...யாரை பழிவாங்க போற தாமரை.”

“ அந்த ஆதித்யாவை தான். இதில் என்ன சந்தேகம் உனக்கு.”

“இப்போ நீ செய்துக் கொண்டு இருப்பது ஆதித்யாவை பழிவாங்குவது இல்லை தாமரை உன் குழந்தையைய் பழிவாங்குற….”

“என் குழந்தையா ….?”

“ஆமாம் தாமரை உன் குழந்தை தான். நீ ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் இது உன் குழந்தை தான். நீ கல்யாணத்தை மறுப்பதால் அந்த குழந்தைக்கு தான் அநியாயம் செய்கிறாய்.

நான் சொன்னேன் தான் அந்த ஆதித்யாவை பழி வாங்க வேண்டும் காத்திரு நான் தான் சொன்னேன். இது ஆதித்யாவை பழிவாங்குவது இல்லை தாமரை உன் குழந்தையை பழிவாங்குவது.” தன்னை கேள்வியுடன் பார்த்திருக்கும் தாமரையை பார்த்த வசந்தி…

“நான் ஒத்துக் கொள்கிறேன் இந்த குழந்தை அசிங்கப்பட்டால் அது ஆதித்யாவை பாதிக்கும் தான்.

என் கேள்வி ஆதித்யாவை மட்டுமா பாதிக்கும் என்பது தான். சொல் தாமரை உன் செயல் ஆதித்யாவை மட்டும் தான் பாதிக்கும் என்றால் உன் செயலுக்கு நானும் உன் கூடவே இருப்பேன்.

ஆனால் உன் செயலால் ஆதித்யாவை விட உன் குழந்தை தான் அதிக அளவில் பாதிக்கும். பின் நீயும் தான்..” அதற்க்கு தாமரை ஏதோ சொல்ல வருவதை தடுத்து.

“என்ன சொல்ல போற இப்போ அசிங்கபடததா அப்போ பட போறேன்னு தானே சொல்ல வர..ஆமாம் நீ சொல்வது சரிதான்.

இப்போ நீ யோசிக்க வேண்டியது உன்னை பத்தியோ ஆதித்யாவை பத்தியோ இல்லை. உன் குழந்தை பற்றி. ஒரு குழந்தைக்கு அப்பா இறந்து விட்டால் கூட இந்த சமூகம் அக்குழந்தையை இரக்கத்துடன் தான் பார்க்கும்.

இல்லை விவாகரத்தால் அக்குழந்தையின் அப்பா அருகில் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால ஒரு குழந்தை தன் தந்தை யார் என்று அறிமுகப்படுத்த வில்லை என்றால் அக்குழந்தையை அனைவரும் கேலியுடன் தான் பார்ப்பார்கள்.. இந்த நிலை உன் குழந்தைக்கு தேவையா ….?சொல்.

இக்குழந்தையை முதலில் எதற்க்கு கலைத்து விடலாம் என்று சொன்னாய் சொல். இப்போ நீ சொல்ல மாட்ட நான் சொல்லட்டுமா….அப்பா யார் என்று சொல்ல முடியாத குழந்தையை பெத்து அதுவும் ஏன் கஷ்ட படவேண்டும் என்று தானே …

முதலில் கலைத்து விட நினைத்தாய். பின் ஆதித்யாவின் கண்ணில் இக்குழந்தைக்கு உண்டான பரிதவிப்பை பார்த்து உன் திட்டத்தை மாற்றி விட்டாய். அப்படி தானே….?” என்று தன் மனதில் இருப்பதை புட்டு புட்டு வைத்த வசந்தியை அந்த நிலமையிலும் தாமரையால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.

“நீ சொல்வது அனைத்துமே சரி தான் வசந்தி. நான் எடுக்கும் இந்த முடிவால் குழந்தை தான் அதிக அளவு பாதிப்புக்கு ஆளாகும் அது மறுப்பதற்க்கு இல்லை.

அதற்க்காக அவன் செய்த அனைத்தையும் மறந்து விட்டு அவனை திருமணம் செய்ய சொல்கிறாயா…..?என்னால் அது எப்படி முடியும் வசந்தி.”

“உன்னை திருமணம் தான் செய்ய சொன்னேன். அவன் செய்ததை மறக்க சொல்லவில்ல.அவன் கூட இருந்தே பெண் என்பது உனக்கு கிள்ளு கீரை இல்லையடா என்பதை புரியவை.

தாலி பெண்களுக்கு வேலி மட்டும் இல்லை. ஒரு ஆணை வீழ்த்தும் ஐபவர். மின்சாரத்தை எப்படி போதிய பாதுகாப்பு இல்லாது தொடுவது ஆபத்தோ அதே மாதிரி ஒரு தாலி இல்லாது பெண்ணை தொடுவது ஆபத்து என்று அவனுக்கு புரியவை.”

என்று தன்னால் முடிந்த மட்டும் தாமரைக்கு இருக்கும் நிலையை விலக்கிய வசந்தி இனி மேல் தாமரை தான் முடிவு செய்ய வேண்டும் என்று நினைத்தவளாய் …

“நான் சொல்ல வேண்டியதை அனைத்தும் உனக்கு சொல்லி விட்டேன் தாமரை. முடிவு நீ தான் எடுக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நீ எந்த முடிவு எடுத்தாலும் முதலில் சொன்னது போல் உன் கூடவே தான் நான் இருப்பேன்.”

என்று சொல்லி விட்டு இனி அவள் தனியாக யோசிக்கட்டும் என்று நினைத்து “நான் சமையல் செய்ய வேண்டும்.” என்று சொல்லி விட்டு கீழே சென்று தாமரைக்கு இந்த சமயத்தில் என்ன என்ன பிடிக்கும் என்று யோசித்து யோசித்து அவளுக்காக சமைத்தவள்.

பின் மேல் வேலை அனைத்தையும் பார்த்து முடிக்க மூன்று மணி நேரம் பிடித்தது. சரி தாமரையைய் சாப்பிட அழைக்கலாம் என்று நினைத்து மேலே போய் பார்த்த போது அவள் அசந்து உறங்குவதை பார்த்து விட்டு அவளை தொந்தரவு செய்யாது கீழே வந்து விட்டாள்.

கீழே வந்த பிறகும் வசந்திக்கு தாமரை நியாபகமே….அவள் என்ன முடிவு எடுப்பாளோ….என்று தான். ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தாள் அது அவள் எந்த முடிவுக்கும் தான் அவள் கூடாவே இருப்பது என்று.

அவள் சிந்தனையை கலைக்கும் பொருட்டு வீட்டின் அழைப்பு மணி ஒளிக்க யார் என்று லென்ஸ் வழியாக பார்த்த வசந்தி வந்து இருப்பது ஆதித்யா என்றதும் கதவை திறந்தவள்.

அவனுக்கு வழிவிட்டு கதவை அடைத்தவள் திரும்பி பார்க்கும் போது ஆதித்யா மேல செல்லாது ஹாலிலேயே அமர்ந்து இருப்பதை பார்த்து யோசனையுடன் அவன் அருகில் சென்றவள்.

“ஏதாவது சாப்பிட எடுத்து வரட்டுமா…. அய்யா…?” என்ற உபசரிப்பை மறுத்து.

“வேண்டாம் .” என்று சொன்னவன்.

பின் “தாமரை சாப்பிட்டாளா…..?” என்று கேட்டதுக்கு.

“இல்லை அய்யா….போய் பார்த்தேன் தூங்கிட்டு இருந்தா…..அதனால் வந்து விட்டேன்.” என்று சொல்லி விட்டு அவன் முகம் பார்க்க.

“நீ தான் தாமரையைய் நல்லா பார்த்துக்கனும் வசந்தி.” என்று சொன்னவனை பார்த்து.

“நான் தாமரையை அழைச்சிட்டு வரட்டுமா….?” என்று கேட்டதுக்கு

“தூங்கிக் கொண்டு இருந்தால் வேண்டாம்.இல்லை என்றால் கூப்பிடு.” என்று சொல்லி கண்ணை மூடிக் கொள்ள.

தாமரையைய் அழைக்க படி ஏறிக் கொண்டு இருந்த வசந்தி எப்போது வந்தாலும் நேராக தாமரை அறைக்கு தானே செல்வார். இன்று என்ன வழக்கத்துக்கு மாறா ஹாலில் அமர்ந்து நம்மை கூட்டி வர சொல்கிறார் என்று நினைத்தவள்.

கூடவே எப்போதும் வால் பிடித்துக் கொண்டு வரும் அந்த சத்யாவையும் இன்று காணுமே என்று நினைத்துக் கொண்டே தாமரை அறைக்கு செல்ல அப்போது தான் விழித்திருந்த தாமரை வசந்தியைய் பார்த்தது.

“படுத்தது தான் தெரியும் எப்போது தூங்கினேன்னே தெரியலே……” என்றதற்க்கு.

“இந்த சமயத்தில் அப்படி தான் இருக்கும் தாமரை.அதே போல் எது சாப்பிட்டாலும் வந்தி வரும். அதற்க்காக சாப்பிடாமல் எல்லாம் இருக்க கூடாது.

உனக்கு எப்படி சாப்பிட்டால் நல்லா இருக்குன்னு சொல்லு தாமரை நான் அது மாதிரியே சமைச்சி கொடுக்கிறேன்.”

“சரி பாட்டி.” என்று அவளை கிண்டல் செய்த தாமரை பின் “நீயும் என் வயது தான் என்னவோ நூத்து கிழவி மாதிரி பேசுறே….? என்று சொல்லி சிரிக்க.

வசந்தி அவள் சிரிப்பதை மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தாள். தாமரைக்கு தூங்கி எழுந்தவுடன் ஏதோ புத்துணர்ச்சி வந்தது போல் இருந்தது. அதுவும் இல்லாமல் தான் அழுது வடிந்தால் மட்டும் அனைத்தும் சரியாகுமா என்ன….?
 
:love::love::love:

தாமரை freshசா புது ஐடியாவோட இருக்கிறாளா.......
முடிவை அமுல் படுத்த காத்துக்கிட்டிருக்கான் ஆதித்யா........
சீக்கிரம் வாமா......

வசந்தி சத்யா மாதிரி இல்லாமல் நல்லவிதமா ஐடியா குடுக்குறா.......
 
Last edited:
Top