வெளிநாட்டில் பெண்களிடம் ‘யூ லுக் சோ பியூடிபுள்’ என்றால் ‘ஓ ரியலி? தேங்க்ஸ் சோ மச்’ என்பார்கள். அதே இந்தியப் பெண்களிடம் ‘யூ லுக் சோ பியூடிபுள்’ என்றால் ‘செருப்பு பிஞ்சிடும்’ என்பார்கள் நம் பெண்கள். ‘அழகைப் பாராட்டுவது தவறா?’
அடர் பச்சை வண்ண பரதநாட்டிய உடையில், பழங்காலத்து நடிகைகள் போல் மையிட்டிருந்த கண்ணும், திரும்பியிருந்த நெற்றி சுட்டியை ஒதுக்கி விட்ட தாழம்பூ விரல்களும், அதில் வைத்திருந்த சிவப்பு வண்ண மெகந்தியும், அளவான மூக்கில் மாட்டியிருந்த மூக்குத்தியும், சிவப்பு சாயம் பூசிய உதடுகளும், நளனின் சிந்தனையை மறக்கடித்திருக்க,
நம் பெண்களைப் பற்றி தெரிந்திருந்தும் நளன், நேத்ரா முகத்தில் இருந்த ஷாலை விளக்கியவுடன் தன்னை அறியாமல் சத்தமாகவே “வாவ்! யு லுக் சோ பியூடிபுள்” என்றான்.
ஏதோ ஒரு வேகத்தில் வாய் வார்த்தையாக சத்தமாக பேசி விட்டவன் நேத்ராவின் முறைப்பில், “சாரி… தெரியாம சொல்லீட்டேன்” என்றான்.
அவன் சாரி என்றதும் மேலும் முறைத்தவள் “என்ன சாரியா… அப்போ நான் அழகா இல்லையா?” என்றவள் பாவமாக கண்களை சிமிட்டி கேட்டதும்,
வரிசைப்பற்கள் தெரிய வாய்விட்டே சிரித்தவனை “வனிதா சொன்ன மாதிரி ஹண்ட்சம்மா தான் இருக்காங்க” என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை நேத்ராவால்.
“ஐயோ இல்லைங்க நீங்க தப்பா எடுத்துகிட்டீங்களோன்னு தான் அப்படி சொன்னேன், நிஜமாவே யு லுக் சோ பியூடிபுள்” என்றான்.
அவன் சொன்னது தான் தாமதம் வேகமாக சாக்லேட்டை கையில் எடுத்தவள் “தேங்க் யூ” என்றுவிட்டு வேகமாக கவரைப் பிரித்தாள்.
“காலைல இருந்து எதுவுமே சாப்பிடல, ஒரே பசி…” என்றவள் சாக்லேட்டை ரசித்து உண்ணவும்,
“நான் சொன்ன உடனே வாங்கிக்கிட்டீங்க… அதுல எதாவது மயக்க மருந்து கலந்திருந்தா, என்ன பண்ணுவீங்க?” என்றான்.
வேகமாக சாப்பிட்டவள் உடனே நிறுத்தி அவனை ஏறிட்டு பார்க்கவும்,
இரு புருவங்களையும் உயர்த்தி ‘என்ன’ என்பது போல் வினவியவனிடம்,
“உங்களை பாத்தா அப்படி தெரியலை, கடத்துறவங்க ஃபாரின் சாக்லேட்டெல்லாம் கொடுத்து கடத்த மாட்டாங்க” என்றவள் மீண்டும் ரசித்து உண்ணத் தொடங்கினாள்.
“ம்ம் பரவாயில்லையே” என்று அவள் அறிவை மெச்சியவன் சிரிப்புடன் காரைச் செலுத்தினான்.
சில நொடிகளில் கல்லூரி வளாகம் வந்துவிட “சார் சார் நீங்க இங்கயே நிறுத்தீருங்க, நான் போயிக்கிறேன், உள்ள அல்லோவ் பண்ணமாட்டாங்க” என்ற நேத்ராவிடம்,
“இல்ல பரவாயில்லை”, என்றவன் அங்கிருந்த செக்யூரிடிக்கு ஒரு தலையசைப்புடன் கூடிய சிரிப்பை உதித்துவிட்டு, அந்த பென்ஸ் காரை வேகமாக காலேஜ் வளாகத்தினுள் செலுத்தினான்.
“என்ன இது, செக்யூரிடி யாரையும் உள்ள அல்லோவ் பண்ண மாட்டங்களே” என்று யோசித்துக் கொண்டிருந்தவளை,
“ஹலோ…” என்று அவள் முகம் முன் சொடுக்கிட்டவன் தலையை ஒரு புறம் சாய்த்து தோள்களைக் குலுக்கி சுற்றுப்புறத்தைக் காட்டினான்.
அவள் கல்லூரி வளாகத்தை உணர்ந்தவள், நளனுக்கு நன்றி உரைத்துவிட்டு காரிலிருந்து இறங்கிச் சென்றாள்.
அவள் செல்வதை உதட்டில் நிலைத்த சிரிப்புடன் பார்த்தவன், நேத்ரா அமர்ந்திருந்த இருக்கையில் அவள் விட்டுச் சென்ற ஷாலை கையில் எடுத்தான்,
ஹே… என்று அழைக்க நினைத்து பின் மீண்டும் அந்த ஷாலை அந்த இருக்கையிலேயே வைத்துக் கொண்டான் சிரிப்புடன்.
நளனிடம் இருந்து விடைபெற்றவள் பின் நேராக ஆடிட்டோரியம் பின் புறம் சென்றாள்.
அன்று அவள் படித்த கல்லூரியின் கான்வகேஷன் (பட்டமளிப்பு விழா) விழா, அதற்க்கு தான் வரவேற்பு நடனம் ஆடுவதற்கு நேத்ரா தயாராகி வந்திருக்கிறாள்.
சென்ற ஆண்டின் இறுதி வருடத்தில் படிப்பை முடித்தவள், இப்போது ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.
கான்வகேஷன் விழாவில் வரவேற்ப்பு நடனம் ஆடப்போவதாக அவள் நடன ஆசிரியை பிரியாவிடம் கேட்டுக்கொண்டு, இன்று அவள் வாங்க போகும் பட்டத்திற்கு அவளே வரவேற்பு நடனம் ஆடவிருக்கிறாள்.
அவள் உடன் பயின்ற மாணவ மாணவிகள் நண்பர்களைக் கண்ட மகிழ்ச்சியில் திளைத்திருக்க, அவர்களுடன் இணைந்து கொண்டாள் நேத்ரா.
அவள் தோழி சுதா “ஹேய் நீதானே வெல்கம் டான்ஸ் ஆடனும், ஏன் டி இவ்வளவு நேரம், ஆமா வனிதாவை எங்க?” என்றாள்.
“அதை ஏன் கேக்குற…” என்றவள் நடந்ததைக் கூறவும்
“நல்ல வேளை, இப்போவாவது வந்தியே, உன்னைய காணோம்ன்னு இவ்வளவு நேரம் பிரியா மேம் தேடிட்டு இருந்தாங்க, நீ வந்த உடனே உன்னை வந்து பாக்க சொன்னாங்க” என்ற சுதாவிடம்,
காலில் சலங்கையைக் கட்டிக் கொண்டிருந்தவள், “அப்படியா… சரி நான் போயி அவங்கள பாத்துட்டு வந்திடுறேன்” என்றவள் நேராக பிரியா மேமிடம் சென்றாள்.
அங்கு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த கல்லூரி நடன ஆசிரியை பிரியா நேத்ராவைக் கண்டவுடன் “வா நேத்ரா ஏன் இவ்வளவு நேரம், இன்னும் கொஞ்ச நேரத்துல ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆக போகுது” என்று கடிந்து கொண்டவர்,
நேத்ராவின் பதிலைக்கூட காதில் வாங்காமல் “சரி பர்ஸ்ட் உன்னோட ப்ரோக்ராம் தான், பீ ரெடி, நீ உன்னோட பெர்பாமென்ஸ் முடிச்சிட்டு, உன்னோட கிளாஸ் மெட்ஸோட சர்டிபிகேட் வாங்க ரெடி ஆய்டு” என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.
“ஓகே மேம்” என்றவள் பதட்டத்துடன் காத்திருக்க அவள் பதட்டத்தைக் குறைக்கும் வண்ணம் வனிதா வந்து சேர்ந்தாள்.
“வா டி ரொம்ப டென்ஷனா இருக்கு, நல்ல வேளை நீ வந்த” என்ற நேத்ராவிடம்,
“இதென்ன உனக்கு புதுசா, எத்தனை தடவை இதே ஸ்டேஜுல ஆடீருக்க, அதெல்லாம் சூப்பரா ஆடுவ, ஆல் தி பெஸ்ட்” என்றாள்.
என்ன தான் தைரியம் கூறினாலும் மனதில் தோன்றும் சிறு படபடப்பு அவள் ஆடத்துவங்கும் வரை ஓயாது
மேடை காலியாக காட்சியளிக்க, சீப் கெஸ்ட் அனைவரும் மேடைக்கு கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர், வரவேற்பு நடனத்திற்க்காக…
“அக்கல்லூரியின் அப்போதைய இறுதியாண்டு மாணவி அன்று நடக்கவிருக்கும் விழாவைப் பற்றி கூறிக்கொண்டிருக்க, வரவேற்ப்பு நடனம் ‘நேத்ரா’ என்று அப்பெண் கூறியவுடன்,
அரங்கம் முழுவதும் கரகோஷம் எழ நேத்ரா காலில் சலங்கைகள் ஒலியெழுப்ப, அவள் பாரத நாட்டிய நடையுடன் மேடைக்கு வந்தாள்.
அரங்கத்தில் இருந்த அந்த நவீன ஒலிப்பெருக்கிகள் அவள் பயின்ற பாடலை ஒலிபரப்ப, அந்த பாடலுக்குகேற்ப மயில் போல் நடனமாடினாள் நேத்ரா.
பாடல் முடிந்தவுடன் கரகோஷம் எழவும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து மேடையின் பின்புறம் சென்றவளை “சூப்பர் டி கலக்கீட்ட…” என்று கட்டியணைத்து பாராட்டினாள் வனிதா.
பின் பட்டமளிப்பு விழாவின் உடையை அவள் அணிந்திருந்த உடையின் மேலே அணிந்தவள் வனிதாவுடன், சென்று அரங்கத்தினுள் அமர்ந்தாள்.
மேடை, நாற்காலி மற்றும் பூங்கொத்துகளால் வேகமாக நிரம்பிக்கொண்டிருக்க, கீழே அமர்ந்திருந்த சீப் கெஸ்டுகள் மேடைக்கு இடம் மாறினர்.
அக்கல்லூரியின் அப்போதைய இறுதியாண்டு மாணவி மைக்கின் முன், “அனைவரையும் என்.கே (நளன் கார்த்திகேயன்) இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்நாலஜி கல்லூரியின் 10 வது பட்டமளிப்பு விழாவிற்கு வரவேற்கிறேன், என்று அனைத்து விருந்தினரையும் வரவேற்றாள்.
அரங்கினுள் சென்று அமர்ந்த வனிதா மற்றும் நேத்ராவின் கண்களிலும் நளன் படவும் “ஹேய் என்னடி இவரு இங்க உக்காத்திருக்காரு?” என்று வனிதாவின் காதில் கிசுகிசுத்த நேத்ராவிடம்,
“இப்போ தான் நீ பாக்குறியா, ஸ்டேஜ்ல டான்ஸ் ஆடும்போதே நீ பாக்கலையா, நான் அப்போவே பாத்துட்டேன், அவருதான் நம்ம கரெஸ்பாண்டெண்ட் சாரோட பையனாம் டி, அதாவது இந்த காலெஜ்ஜோட ஓனர், இன்னைக்கு கார்த்திகேயன் சாருக்கு பதிலா அவரு வந்திருக்காரு” என்று அவள் சேகரித்த தகவல்களை வழங்கினாள் வனிதா.
“ஓஒ…. அதான் அவரு காலேஜ் உள்ள வரும்போது செக்யூரிட்டி ஒண்ணுமே சொல்லலை போல” அப்போது முளைத்த கேள்விக்கு இப்போது விடை கண்டுபிடித்தாள்h நேத்ரா.
பின் அனைவருக்கும் அங்கு அமர்ந்திருந்த வெவ்வேறு சீப் கெஸ்டுகளின் கைகளில் பட்டம் வழங்கப்பட, நேத்ரா நளனின் கைகளில் இருந்து அவள் சான்றிதழை வாங்கினாள்.
விழாவை முடித்துக் கொண்டு நளன் அவன் காரில் அவன் அலுவலம் சென்று கொண்டிருந்தவனின் முகம் சந்தோஷத்தில் மிளிர, உதடுகளோ புன்னகையை வெளியே சிந்தியது.
மேடையில் நேத்ராவின் நடனம் கண் முன்னே விரிய அவன் சிந்தனை அந்த நிகழ்விற்குச் சென்றது.
Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக,
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.