அந்திமாலைச் சூரியன் மேற்கில் தன் அஸ்தமனத்தைத் தொடங்கியிருந்த வேளை, “அம்மு விடுங்க நான் போயி குளிக்கணும், வார வாரம் இப்படியே பண்றீங்க எத்தனை தடவை கோவிலுக்கு போவோன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன், இன்னைக்காவது கோவிலுக்கு போகலாம்” என்று,
நளனின் கைவளைவுக்குள் சிக்குண்டவாறு அவனது மார்பின் முரட்டு ரோமங்களை கைகளாளும் முகத்தாலும் தடவிக்கொண்டு அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் நேத்ரா.
அவள் ஒருத்தி இங்கு பேசிக் கொண்டிருக்க, அமைதியாக அவன் உறக்கத்தைத் தொடந்து கொண்டிருந்தவனை, “நான் இங்க ஒருத்தி என்ன பேசிக்கிட்டு இருக்கேன் தூக்கத்தைப் பாரு, உங்களை…” என்றவள், மார்பின் ரோமங்களை வலிக்குமாறு லேசாக இழுத்தாள்.
அவள் இழுத்ததில் லேசாக ம்ம்ம்… என்று முனகியவன் நேத்ராவை மீண்டும் முன்பை விட இறுக்கமாக அணைத்தான்.
நளன் இன்னும் இறுக்கி அணைத்தவுடன், “இன்னைக்கும் கோவிலுக்கு கூட்டீட்டு போக மாட்டாங்க போலவே” என்றவள் அவனது மார்பில் அவளது பற்களை வைத்து வலிக்குமாறு கடித்தாள்.
அவள் கடிதத்தில் அவனது பிடியை சற்று விளங்கியவன் “ஹனி… இன்னும் கொஞ்ச நேரம்” என்றவனை அவன் அசந்த நேரம் பார்த்து விளக்கித் தள்ளியவள் அவனிடமிருந்து விடுபட்டு கட்டிலை விட்டு இறங்கினாள்.
அவள் விலகியவுடன் ஹனி… என்று சிணுங்கியவனை “அம்மு நான் குளிக்கப் போறேன், நான் வர்றதுக்குள்ளையாவது எழுந்திரிங்க ப்ளீஸ்” என்றவள் குளியல் அறைக்குள் புகுந்தாள்.
நேத்ரா குளித்து முடித்து விரித்துவிட்ட கூந்தல் தோளில் கிடக்க, ஈரம் சொட்டிய முடியைத் துவட்டிக்கொண்டே மார்பில் கட்டிய டவளோடு வெளியில் வந்தாள்.
நளன் இன்னமும் அதே நிலையில் இருக்கவும் இடுப்பில் கைகுற்றி “இன்னும் நீங்க எந்திரிக்கலையா? இருங்க உங்களை…” என்றவள்
அவள் ஈரமான கூந்தலை எடுத்து அவனது காதுக்குள் புகுத்தினாள். காதில் ஏற்பட்ட கூச்சத்தால் தலையை சிலுப்பியவன் “ஹனி…” என்று கண்களைத் திறந்தான்.
கண்களைத் திறந்தவன் நேத்ரா நின்றிருந்த கோலத்தைக் கண்டு உறக்கம் பறந்தோட வேகமாக அவள் கைபற்றி அருகில் இழுத்தான்,
நளன் இழுத்த இழுப்பில் அவன் மேல் விழுந்தவளை அவனுக்குக் கீழே கொண்டு வந்தவன், அவள் மேல் படர்ந்திருந்தான்.
அவனிடமிருந்து விடுபடப் போராடிக் கொண்டிருந்தவள் அவனது வன்மையான சீண்டல்களில், அவர்களுக்கு இடையில் இருந்த அவள் உடலைச் சுற்றியிருந்த டவல் அவளிடமிருந்து நழுவிக் கொள்ள,
மென்மையான தீண்டலுக்கு மாறியவன், வேண்டாம் வேண்டாம் என்று கத்திக் கொண்டிருந்தவளை, வார்த்தை வெளிவராமல் அம்மு… அம்மு… என்று புலம்ப வைத்துக் கொண்டிருந்தான்.
அவன் ஹனியின் நினைவில், தலையணையைக் கட்டிப் பிடித்துப் புலம்பிக் கொண்டிருந்தவன், சட்டென்று விழித்தான். ஆம் நளன் அப்பார்ட்மெண்ட்டில் அவர்களது கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தான்.
நேத்ராவுடன் வாழ்ந்த அந்த மூன்று மாதங்களை நினைத்து இந்த இரண்டு வருடங்களைக் கழித்தவன் எப்பொழுதும் தோன்றும் அவளது நினைவுகள் அப்பொழுதும் தோன்றி, அவனது நினைவுகள் அவன் ஹனியைச் சுற்றி வலம் வரவே, உறக்கத்திலிருந்து விழித்தவன் எழுந்து முகம் கழுவி வெளியில் வந்தான்.
அப்போது தான் நேத்ரா அங்கே பால்கனியில் பறவைகளுக்கு பெயர் வைத்து அழைத்து பேசிக் கொண்டிருந்தாள்.
“இவள் எப்படி இங்க வந்தா?” என்று யோசித்தவன், நடந்து சென்று நேத்ராவுக்குப் பின் புறம் நின்றான்.
நின்றவன் விரித்துவிட்ட அவள் கூந்தல் காற்றில் ஆட, லேசாக உதட்டுச்சாயம் பூசப்பட்டிருந்த உதடுகள் விரிந்து கிடக்க, மையிட்டிருந்த அவள் கண்களின் நடனம் அவள் பறவைகளிடம் பேசும் அழகில் நர்த்தனம் ஆட, எப்பொழுதும் நேத்ராவிடம் தொலைந்து போகும் நளனின் மனம் இப்போதும் அவளிடம் தொலைந்து போனது.
கைகளை வெற்று மார்பின் குறுக்கே கட்டி கால் சட்டையுடன் நின்று அவளை ரசித்துக் கொண்டிருந்தான் நளன்.
பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீருக்கென்று வைக்கப்பட்டிருந்த குடுவைகளைப் பார்த்தவள் அதில் தீர்ந்து போயிருந்த குடுவையைக் மீண்டும் நிரப்புவதற்காகத் திரும்பினாள்.
திரும்பியவள் நளனின் நளன் அவன் வேற்று மார்பில் கட்டியிருந்த கைகளில் மோதி, அவனது கைகளில் மாலையானாள்.
நேத்ரா விழப்போவது உணர்ந்து அவளை அவனது வலிமையான கரங்களில் தாங்கியவன், மையிட்டிருந்த அவள் கண்கள் அதன் எல்லை வரை விரிந்து கண்களை பெரிதாக்கிக் காட்ட, ஆரஞ்சு சுளை உதடுகள் அவன் சித்தம் குலைக்க, முத்தமிடத் துடித்த உதடுகளை அடக்கியவன் முகத்தைக் கடினமாக்கிக் கொண்டு, நேத்ராவின் தோள் பிடித்து அவளைத் தள்ளி நிறுத்தினான்.
வேகமாக எழுந்ததில் தடுமாறி நளனின் வலிமையான தசைகளைப் பிடித்தவள், நெடு நாட்களுக்குப் பின் அவளது அம்முவை இவ்வளவு நெருக்கத்தில் கண்டவள், முன்பை விட உடற்பயிற்சி செய்து கடினமுற்ற உடலையும், இறுகிய முகத்தையும் கண்டு அதிர்ச்சியுற்றாள்.
அவளைத் தள்ளி நிற்க வைத்தவன் மீண்டும் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு நேத்ராவை கூர்மையான பார்வையில் துளைத்தெடுத்தான்.
முதலில் பேசிய நேத்ரா, “நீங்க எப்படி இங்க?” என்றாள் கைகளைப் பிசைந்து கொண்டு.
நேத்ராவை முறைத்தவன் “அதை நான் தான் கேக்கணும், நீ இங்க என்ன பண்ற” என்றான் கடினமான முகத்துடன்.
“நான்…நான்…” என்றவள் “வேண்டாம் நேத்ரா எதாவது சொல்லி அவரோட கோபத்தை மேலும் கிளறாத” என்ற மனசாட்சியின் பேச்சைக் கேட்டவள்,
பால்கனியில் இருந்து வீட்டினுள் செல்லும் வழியை மறைத்து நின்றிருந்த நளனை, அவள் வலக்கையயை அவன் மார்பில் வைத்து அவனைப் பின்னே தள்ளியவள், நளனை விலக்கிக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.
அவள் வீட்டினுள் சென்றதும் கோபமுற்றவன், “ஹே நில்லு டி, நான் கேட்டுட்டே இருக்கேன் பதில் பேசாம போற?” என்றவனைக் கண்டுகொள்ளாமல் அடுப்படி சென்றவள், அங்கிருந்த பிரிஜ்ஜை திறந்து அவள் வாங்கி வைத்திருந்த பாலை எடுத்துக் காஃபி போட ஆரம்பித்தாள்.
நேத்ராவின் செயலை கைகளைக் கட்டிக்கொண்டு எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் நளன்.
நளனின் முரட்டு ரோமங்கள் பட்ட அவளது மென்மையான உள்ளங்கை குறுகுறுக்க அதை மறைத்து, பால் காய்ந்து கொண்டிருந்த வேளையில் பறவைகளுக்கு உணவு வைத்தவள், காஃபி போட்டு இரு கப்புகளில் எடுத்தவள் ஒன்றை அவள் எடுத்துக் கொண்டு மற்றொன்றை நளனிடம் நீட்டினாள்.
கப்பையும் நேத்ராவையும் மாறி மாறிப் பார்த்தவன், “இப்படியெல்லாம் செய்யச் சொல்லி உங்க அம்மா சொன்னாங்களா?” என்றவன் அவள் கொடுத்த கப்பை ஒரே தட்டில் தட்டிவிட்டு உடைத்தான்.