Linkமகரந்தம் தாங்கும் மலரவள்(முழுநாவல்)
Link
நாணலே நங்கையானால்?(முழுநாவல்)
Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக
வனிதா சென்றவுடன் மலர்ந்த முகத்துடன், அவள் கொடுத்த பைலைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் செல்பேசி ஒலியெழுப்பவும், அதில் ஒளிர்ந்த கார்த்திகேயனின் பெயரைக் கண்டவன்,
அழைப்பை ஏற்று காதுக்குக் கொடுத்தவன், “அங்கிள், சொல்லுங்க அங்கிள்” என்றான்.
“என்னப்பா வினோத் ஆபீஸ்ல வேலையா இருக்கியா?” என்றவரிடம்,
“ம்ம் ஆமா அங்கிள், நீங்க சொல்லுங்க” என்றான்.
“அது… என்றவர் பின் நளன்… நளனை எங்கப்பா?” என்றார்.
“என்ன அங்கிள் அவன் வீட்டுக்கு வரலையா? அப்போவே கிளம்பீட்டானே…” என்ற வினோத்திடம்,
“அப்போவே கிளம்பீட்டானா? என்னப்பா சொல்ற?” என்றார் மகனின் வரவுக்காகக் காத்திருந்த கார்த்திகேயன்.
“ஆமாம் அங்கிள், இன்னைக்கு இன்டர்வியூல…” என்று ஆரம்பித்து நேத்ராவைக் கண்டத்தைக் கூறியவனிடம்,
வினோத் கூறியதில் மகிழ்ச்சியுற்றவர், “அப்படியா நேத்ராவை பாத்து பேசினானா? என்றவர் பெருமூச்சை வெளியேற்றி விட்டு, எப்படியோ நல்லது நடந்தா சரி” என்றார்.
“ஆமா அங்கிள், நீங்க ஒன்னும் கவலை படாதீங்க அம்மா கிட்ட சொல்லுங்க, அவன் எங்க இருப்பான்னு எனக்குத் தெரியும், நான் அவனை பாத்துட்டு உங்களுக்கு கால் பண்றேன்” என்றவன் கார்த்திகேயனின் அழைப்பைத் துண்டித்து விட்டு நளனுக்கு அழைத்தான்.
நளனின் அலைபேசி சுவிச்சுடு ஆப் என்று வரவும், பைலை மூடி வைத்துவிட்டு கார் சாவியை எடுத்தவன் நளனின் அப்பார்ட்மெண்டிற்கு செலுத்தினான்.
அவனது வீட்டை அடைந்தவன், காலிங் பெல்லை அடித்துவிட்டுக் காத்திருந்தான். சில நொடிகளில் கதவு திறக்கப்படவும்,
ஸ்லீவ்லெஸ் பனியனும் கால் சட்டையும் அணிந்து கதவைத் திறந்த நளனின் பின்னே பார்த்தவன், அங்கே மது பாட்டில்களைக் கண்டான்.
தலையை இருபுறமும் குலுக்கிவிட்டு வீட்டினுள் வந்த வினோத், அவன் ஊற்றி வைத்திருந்த மது க்ளாஸைக் கையில் எடுத்தவன், ஒரு மடக்கு அருந்திவிட்டு,
“டேய் நளா, ஏன் டா இப்படி பண்ற இந்நேரத்துக்கே ஆரம்பிச்சுட்டியா?” என்ற வினோத் சோஃபாவில் அமர்ந்து மீண்டும் அருந்தப்போக,
வினோத் கையிலிருந்த க்ளாஸைப் பிடுங்கியவன், “உனக்கும் வேணும்னா வேற கிளாஸை எடுத்துக் குடி” என்ற நளன் வினோத் அருகில் அமர்ந்தான்.
நளனின் செயலில் லேசாக புன்னகைத்தவன் “டேய் நளா, உன்னோட போனை எங்க? அப்பா உனக்கு கால் பண்ணீருப்பாங்க போல, போன சுவிச் ஆப் பண்ணி வச்சுட்டு என்ன பண்ற “என்றான்.
பதிலேதும் பேசாமல் க்ளாஸில் உள்ள மதுவை உறிஞ்சியவனிடம், “உன்னைத் திருத்தவே முடியாது” என்றவன் அவனே அவன் செல்பேசியில் இருந்து கார்த்திகேயனுக்கு அழைத்து நளன் இங்கிருப்பதைக் கூறிவிட்டு தானும் அவனுடன் தங்கப் போவதாகக் கூறினான்.
வினோத் கார்திகேயனிடம் பேசியதில் இருந்து அவனும் தன்னுடன் இறுக்கப் போவதை உணர்ந்தவன், “வினோ நீ வீட்டுக்குக் கிளம்பு” என்றான்.
நளன் பேசுவதை கவனிக்காதது போல் இருந்த வினோத் எழுந்து அவனறையை ஒட்டிய மற்றொரு அறையினுள் புகுந்தான். பிரெஷ் ஆகி மற்றொரு க்ளாஸுடன் வந்தவன், அவனுக்கும் மதுவை எடுத்துக் கொண்டு நளன் அருகில் அமர்ந்தான்.
ஒரு சிப் அருந்திக் கொண்டே நளன் அருகில் அமர்ந்தவன் “டேய் நளா, உனக்கு வனிதாவை தெரியுமா?” என்றான்.
நளன் புருவம் சுருக்கி முறைக்கவும் “டேய் எதுக்கு எடுத்தாலும் மொறைக்காத டா, உனக்கு வனிதாவை தெரியுமான்னு தானே கேட்டேன்” என்றான்.
“யாரு, யாரை கேக்குற ஹ… என்றவன் பின் நிறுத்தி நேத்ரா பிரெண்டு வனிதாவா?” எனவும்,
“ம்ம் ஆமான்டா, வனிதாவும் நம்ம கம்பெனில தான் வேலை பாக்குறா, இன்னைக்கு அப்பா வனிதாவை கூப்பிட்டு எனக்கு இண்ட்ரோ குடுத்தாங்க” என்றவன்
வலக்கையை அவன் பின்னந்தலைக்குக் கொடுத்து சோஃபாவில் சாய்ந்தவாறு விட்டத்தைப் பார்த்து, “ஷி இஸ் சோ சுவீட்….” என்று கண்களால் சிரித்தவன்,
பின் நிமிர்ந்து “டேய் எப்படி டா உன்னோட கல்யாணத்துல நிச்சயத்துல இப்படி நான் ஒரு தடவை கூட வனிதாவை பாத்ததே இல்லை, அவளும் என்னைய பாத்ததே இல்லையாம்” என்றான்,
வினோத் கல்யாணம் நிச்சயம் என்றதும் நளன் அவன் வைத்திருந்த கிளாசில் உள்ள மதுவை ஒரே மடக்கில் அருந்தியவன் வினோத்தை முறைதான்.
நளன் முறைத்தவுடன் “டேய் என்ன டா, நீ தானே சொன்ன சிஸ்டர் இல்லாம உன்னால வாழ முடியாதுன்னு, சீக்கிரமா சிஸ்டர வீட்டுக்கு கூட்டீட்டு வர வழியப் பாரு சும்மா என்னையவே மொறைச்சுக் கிட்டு” என்றான் வினோத்.
“அவ இல்லாம வாழ முடியாதுன்னு தான் சொன்னேன், அவள் கூட வாழ போறேன்னு சொன்னேனா?” என்றான் நளன்.
அவனது பதிலில் குழம்பிய வினோத் “டேய் நளா ரெண்டும் ஒன்னு தானே டா” என்றான்.
“ரெண்டும் ஒன்னு இல்லை வேற வேற என்றவன் பேச்சை மற்றும் பொருட்டு, சரி… இன்னைக்கு இன்டர்வியூல செலக்ட் ஆனவங்களுக்கு ஆபர் லெட்டர் அனுப்பியாச்சா?” என்றான் க்ளாஸை உருட்டிக் கொண்டே.
நளனை ஒரு மார்கமாகப் பார்த்தவன், “அனுப்பியாச்சு… நாளைக்கே எல்லாரையும் ஜாயின் பண்ண சொல்லியிருக்கு, அதுல மிஸ்ஸஸ் நேத்ரா நளனும் இருக்காங்க தெரியுமா?” என்ற வினோத்தை டீலில் விட்ட நளன் அவனறைக்குள் புகுந்து கொண்டான்.
“போடா போ உன்னைய எப்படி வழிக்கு கொண்டு வரணுன்னு எனக்கு நல்லாவேத் தெரியும்” என்றவன் கால்கள் இரண்டையும் தூக்கி சோஃபாவில் வைத்துக் கொண்டு செல்லும் நளனின் முதுகை வெறித்தான்.
வீட்டிற்க்கு வந்த வனிதா அவளது வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு நேத்ராவிற்கு அழைத்தாள்.
அழைப்பை ஏற்றவள் சோர்வாக “ம்ம் சொல்லு வனிதா இப்போ தான் வந்தியா?” எனவும்,
“ஹேய் ஏன் நேத்ரா ரொம்ப டல்லா பேசுற, வீட்ல அம்மா எதாவது சொன்னாங்களா?” என்ற வனிதாவுக்கு,
“ச்ச ச்ச அதெல்லாம் ஒன்னும் இல்ல டி, அது வந்து… இன்னைக்கு உன்கூட பேசீட்டு எப்பவும் போல அப்பார்ட்மெண்டுக்கு போனேனா?” என்று நிறுத்தியவளை,
“எங்க… உங்க அப்பார்ட்மெண்ட்டுக்கா?” என்று கேள்வி கேட்டவளை,
“ஆமா நீதான் உங்க அப்பார்ட்மெண்ட்டுன்னு சொல்ற, ஆனா…” என்றவளை,
“ஹே நேத்ரா ரொம்ப பில்டப் கொடுக்காம சீக்கிரமா சொல்லித் தோலை” என்றாள் வனிதா கடுப்புடன்.
“அது வந்து நான் அங்க போர்ட்ஸ்க்கு சாப்பாடு கொடுக்க போயிருந்தேன், அங்க என்னோட அம்மு இருந்தாங்க”, என்று ஆரம்பித்தவள் அங்கு நடந்தது அனைத்தையும் கூறி முடிதவள் அழுகையில் கரைய,
“ஹே நேத்ரா மொதல்ல அழுகையை நிறுத்து, வார்த்தைக்கு வார்த்தை என்னோட அம்மு என்னோட அம்முன்னு மட்டும் சொல்லத் தெரியுது, ஆனா அவங்கள எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலை, என்ன தான் லவ் பண்ணியோ” என்று சளித்துக் கொண்டாள் வனிதா.
“இல்ல வனிதா நான் தைரியமா தான் இருந்தேன், ஆனா அவங்க ‘இப்படியெல்லாம் செய்யச் சொல்லி உங்க அம்மா சொன்னாங்களா?’ அப்டின்னு கேட்கவும் எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு அப்படியே கட்டிப் புடிச்சுக்கலாமான்னு கூட தோணுச்சு,
ஆனா அதுக்கும் ‘இப்படியெல்லாம் செய்யச் சொல்லி உங்க அம்மா சொன்னாங்களா?’ அப்டின்னு கேட்டுட்டா…?
அதுவுமில்லாம காஃபி கப் கீழ விழுந்து உடைஞ்ச உடனே, எனக்கு அன்னைக்கு அவங்க கண்ணாடி டீப்பாயை உடைச்ச ஞாபகம் வந்துருச்சு, அன்னைக்கு என்னோட அம்மு கையெல்லாம் ஒரே ரெத்தம் தெரியுமா என்னைய தொடக்கூட விடலை ” என்றவள் மீண்டும் அழவும்,
நேத்ராவின் மனநிலையைப் புரிந்து கொண்ட வனிதா “ஹே அழாத டி, கொஞ்சம் கொஞ்சமா அண்ணா மாறீடுவாங்க, முன்ன மாதிரியே உன்கிட்ட நடந்துப்பாங்க, நீ வேணா பாரேன் அண்ணாவை சீக்கிரமா மாத்தீடலாம் ” என்று நேத்ராவை சமாளிக்க முயன்றாள்.
“எங்க? நான் அங்க போனதுக்கே என்னைய வெளிய துரத்திட்டாங்க, அப்போ இன்னைக்கு நடந்த இன்டர்வியூலயும் என்னை கண்டிப்பா செலக்ட் பண்ணீருக்க மாட்டாங்க, இதுல நான் எங்க இருந்து அவங்கள மாத்துறது” என்று பெரு மூச்சு விட்டவளை,
“ஹே நீ இன்னும் உன்னோட மெயில் பாக்கலையா? நான் தான் உனக்கு ஆபர் லெட்டர் அனுப்புனேன் எச்.ஆர் மூலமா, நாளைக்கே நீ ஜாயின் பண்ணனும்” என்றாள் வனிதா.
“வனிதா நீ நெஜமாவா சொல்ற, இரு” என்றவள் வனிதாவின் அழைப்பைத் துண்டிக்காமல் அவள் மொபைலில் மெயில் செக் செய்தாள். அதில் இருந்த ஆபர் லெட்டரைக் கண்டு கண்கள் கண்ணீரால் குளம் கட்ட புன்னகையில் மிளிர்ந்தவள்,
“தேங்க்ஸ் டி” என்று வனிதாவிடம் கூறவும்,
“ஹே எனக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்ற? உண்மையிலேயே இன்னைக்கு இன்டர்வியூல கேண்டிடேட் செலக்ட் பண்ணது நளன் அண்ணா தான் தெரியுமா உனக்கு? நீன்னு தெரிஞ்சு தான் உன்னை செலக்ட் பண்ணீருக்காங்க, அதுனால தேவையில்லாம மனச போட்டுக் குழப்பிக்காம, அண்ணாவை எப்படி கரெக்ட் பண்றதுன்னு யோசி” என்றாள் வனிதா.
வனிதாவிடம் பேசியவளுக்கு மனம் சற்று தெளிவு பெற்றிருக்க “ம்ம் சரி டி நந்தன் அண்ணாவும் அதைத்தான் சொன்னாங்க” என்றவளிடம்,
“சரி இப்போ தேவையில்லாம எதையும் யோசிக்காம, தூங்கு நாளைக்கு சீக்கிரமா எழுந்து ரெடியா இரு நான் வந்து உன்னைய பிக் அப் பண்ணிக்கிறேன், நமக்கு கேப் அரேஞ் பண்ணீருக்காங்க வினோத் சார்” என்ற வனிதா அழைப்பைத் துண்டிக்கவும்,
நாளை தன்னவனைக் காணப் போகும் நொடிக்காக இப்போதிருந்தே காத்திருக்கத் துவங்கினாள் நேத்ரா.
காலை வேகமாக எழுந்தவள் குளித்து முடித்து நளன் தனக்கு வாங்கிக் கொடுத்த புடவைகளுள் ஒன்றான அவனுக்கு மிகவும் பிடித்தமான இளம்பச்சை வண்ண எளிமையான பருத்திப் புடவையை ஆசையாக உடுத்தினாள்.
தலைக்கு குளித்த கூந்தலை இரு புறமும் எடுத்து அழகாக கிளிப்பிட்டவள், மீதம் உள்ள கூந்தலை சுருள் செய்தாள், எளிமையான அலங்காரத்துடன், உதட்டிற்கு பீச் வண்ண உதட்டுச் சாயம் பூசியவள், அவலறையில் இருந்து வெளிவந்தாள்.
வீட்டில் இருந்த அனைவருக்கும் நேத்ராவைக் கண்டு முகம் சந்தோஷத்தில் மிளிர்ந்தது. நளனைப் பிரிந்த நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு நேத்ரா இன்று தான் சேலை அணிகிறாள், தெளிந்திருந்த நேத்ராவின் முகத்தைக் கண்ட வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி.
ரேணுகாவோ “என் தங்கம் எவ்வளவு அழகா இருக்க தெரியுமா?” என்று திருஷ்டி கழித்தவரை, எதுவும் பேசாது பார்த்தவள் “நான் வரேன் மா, அண்ணா, அப்பா நான் போயிட்டு வரேன்” என்றுவிட்டு வெளியே அவளுக்காக காத்திருந்த கேப்பிள் ஏறினாள்.
உள்ளே கேப்பில் அமர்ந்திருந்த வனிதா “அடிப்பாவி கொஞ்சம் கொஞ்சமா தானே அண்ணாவை மாத்திறலான்னு சொன்னேன், உன்னைய இப்படி பாத்தா அண்ணா இன்னைக்கே மாறீடுவாங்க போலவே” என்றாள் வனிதா.
“போ வனிதா நீ வேற, எனக்கே உள்ளுக்குள்ள உதறுது” என்றவள் வனிதாவுடன் அமர்ந்து கொண்டாள்.
Linkமகரந்தம் தாங்கும் மலரவள்(முழுநாவல்)
Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக