அவர் படித்து கொண்டு இருந்த பேப்பரை பிடிங்கி எரிந்து விட்டு. “என்னால உங்க மவனுக்கு பெண் பார்க்க முடியாதுங்க. முடியவே முடியாது?” என்று திட்ட வட்டமாக சொல்ல.
நீல கண்டனும்.. “ சரி விட்டு விடு.. “ என்று விட்டார். இவர்கள் இருவரின் பேச்சையும் கேட்ட வாழியாதன்..
“எனக்கு கல்யாணம் செய்யாம . இன்னும் நீங்க இரண்டு பேரும் இந்த வீட்டில் லவ்வர்ஸா சுத்திட்டு இருக்க போறிங்கலா.?” என்று இருவரையும் பார்த்து பொதுவாக கேட்டவன். தன் அன்னையிடம்.
“அந்த ப்ரேக்கப்பை பிடிச்சி தொங்கிட்டு இருக்கேன் என்று நான் உங்க கிட்டே சொன்னேனா…?” என்று இடுப்பில் கை வைத்து முறைத்து பார்த்து நின்றவனின் தோரணையில் அந்த அன்னை அனைத்தும் மறந்து தன் மகனின் அந்த ஆளுமையான தோரணையில் பெருமை கொள்ள பார்த்தவர் அவன் முகத்தை திருஷ்ட்டி சுத்தி விட்டு.
“ அழகன்டா..” என்று பாராட்டிய அன்னையின் செயலில் மகனின் முகத்தில் சிரிப்பை அள்ளி கொடுக்க. சிரித்து கொண்டே அன்னையை கட்டி பிடித்து கொண்டு… அவன் அன்னை சொன்னது போல வாழியாதன் அழகன் தான்..
நிறம் சிகப்பு.. உயரம் ஆறு அடி என்று அதற்க்கு ஏற்ற உடல் வாகுடையவனாக மூக்கும் முழியும் கச்சிதமாக பார்த்த ராஜ தோரணையில் தான் அவன் இருப்பான்.
அவன் அழகன் என்பது அவனுக்குமே தெரியுமே.. அதனால் “அழகு அம்மாவுக்கு பிறந்தவன் அழகனாக தானே இருக்க முடியும்..?” என்ற இந்த பேச்சுக்கு இவ்வளவு நேரமும் பிடிங்கி எரிந்து இருந்த செய்தி தாளை மீண்டும் எடுத்து படித்து கொண்டு இருந்தவர் தலை நிமிர்ந்து.
“உன் அழகுக்கு நானும் தான் காரணம் டா மகனே..” என்றவரின் இடை பேச்சில் அன்னை மகன் இருவரும் சிரித்து விட்டனர்..
நீல கண்டன் சொன்னது போல அவரும் அழகன் தான். அதுவும் இந்த வயதிலேயே அவர் இவ்வளவு அழகாக இருக்கும் போது அவர் வயதில் அவர் இன்னும் எப்படி இருந்து இருப்பார்..
இந்த வார்த்தையை தான் அவர் மனைவி அடிக்கடி தன் மகன் வாழியாதனிடம் கூறுவார்..
வாழியாதன் அதை கேட்கும் ஒவ்வொரு முறையும்.. “ அதனால் தான் அப்பா உங்க கிட்ட லவ் சொன்னதுமே நீங்க ஒத்து கொண்டு விட்டிங்கலாம்மா..? இல்ல அப்பா சொந்த அத்தை மகன்.. காதல் கண்டிப்பா கை கூடும் என்ற நம்பிக்கையில் உடனே ஒகே சொல்லிட்டிங்கலா.?” என்ற கேள்வி எழுப்புவான் மகன்..ஆனால் அதற்க்கு உண்டான பதில் இது வரை அழகுடை நங்கையிடம் இருந்து தான் அவனால் வாங்க முடியவில்லை.
இந்த இவனின் கேள்வி நேற்று இன்று கேட்பது கிடையாது,. அவனுக்கு புத்தி தெரிந்த தினத்தில் இருந்து கேட்கும் கேள்வி… தினம் தினம் பெற்றோர்களின் காதல் கதையை கேட்டு தான் வாழியாதன் வளர்ந்தான்.
அவனின் அப்பத்தா செளந்தரியம்மா கூட.. “ அங்கு அங்கு பிள்ளைங்களுக்கு காக்கா.. நரி.. கதை சொல்வாங்க. இல்ல ராஜா.. ராணி கதை சொல்வாங்க. நீங்க தான் புதுசா காதல் கதை.. அதுவும் உங்களுடையது சொல்லிட்டு இருக்கிங்க..” என்று கூட சொல்லி இருக்கிறார்.
ஆனாலும் இருவரும் தன் மகனுக்கு தங்கள் காதல் கதை சொல்வதை விடவில்லை. இதோ அது இப்போதும் மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்க்கும் போதும் தொடர்கிறது..
இப்போதும் வாழியாதன். அதே கேள்வியை கேட்க. இப்போது நீல கண்டன். “ எங்க காதல் கதையை விடுப்பா… உன் காதல் கதை சொல்ல நீ எப்போ கல்யாணம் செய்துக்க போற.?” என்று கேட்டார்..
மகனும் சீரியஸ் மூடுக்கு மாறியவனாக தந்தையின் எதிரில் அமர்ந்து தன் பக்கத்தில் அம்மாவையும் அமர்ந்தி கொண்டவன்..
“ அப்பா நானும் சீரியஸா தான் சொல்றேன்.. அம்மா அழகான பெண்களா தான் பார்க்கிறாங்கப்பா.. ஆனா அந்த அழகு.. எப்படி சொல்வேன்.. அவங்க அந்த போட்டோவுக்கு போஸ் கொடுப்பது… பார்ப்பது… சிரிப்பது எல்லாமே ஏதோ செயற்கையா இருக்குப்பா.. பார்த்த உடனே… பிடிப்பது போல இல்லேப்பா..” என்று தன் மனதில் இருப்பதை தெளிவு படுத்தியவன்..
“ எனக்கு மட்டும் என்ன தினம் தினம் உங்க காதல் காட்சி பார்க்க ஆசையா என்ன..? நானும் தான் ..” என்று சொல்ல வந்ததை சொல்லாது நிறுத்தியவனின் பேச்சில் இருந்து அந்த பெற்றோர்கள் சொல்லாததையும் புரிந்து கொண்டார்கள்..
உடனே அழகுடை நங்கை .. “அந்த பெண் எப்படி இருக்கும் ராசா .. (பெற்றோர்கள் அழைக்கும் செல்ல பெயர்) ஒரு வருஷமா லவ் பண்ணிங்க என்று சொன்ன.. ஒரு போட்டோ கூடவா உன் கிட்ட இல்ல.” என்று மகனின் முகம் மாற்றத்தை பார்க்காது அழகுடை நங்கை பேசி விட்டார்..
நீல கண்டன். “ நங்கை என்ன பேச்சு இது..? கொஞ்சம் பார்த்து புரிஞ்சி பேச மாட்டியா. ? வயது ஏற ஏற புத்தி குறைந்து போயிடுமா என்ன.?” என்று மனைவியை கண்டித்தார்..
கணவனின் இந்த கண்டிப்பில் அழகுடை நங்கையின் முகம் வாடி விட்டது.. அவர்கள் இருவரின் காதல் வாழ்க்கையில் காதல் பக்கங்கள் மட்டுமே நிறைக்கப்பட்டு இருக்கவில்லை..
அங்கே அங்கே இது போல சில திட்டுக்கள்.. கோபமான வார்த்தைகள்.. கண்டிப்புக்களும் இருக்க தான் செய்தன. ஆனால் அந்த பக்கங்கள் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த இவர்களின் மண வாழ்க்கையில் விரல் விட்டு எண்ண கூடிய அளவில் தான் இருந்தது..
அப்படி நீல கண்டன் திட்டும் போது இது போல் தான் மனைவியின் முகம் வாடி போகும்.. உடனே கணவனாக மனைவியிடம் காரணம் காரியங்கள் சொல்லி சமாதானம் படுத்தி விடுவார்.. ஆனால் இன்று எதுவும் செய்யாது அமைதியாக இருக்க…
அழகுடை நங்கையின் முகம் இன்னும் கூம்பி போய் விட்டது… அன்னையின் முக வாட்டத்தை பார்த்து பொறுக்க முடியாத மகன்..
“ அப்பா அவங்க ஏதோ நினைத்து.. ஏதோ கேட்டாங்க. இதுக்கு ஏன் நீங்க இவ்வளவு கோபப்படுறிங்க. நானே அமைதியா இருக்கும் போது.” என்ற வாழியாதனின் அந்த பேச்சில் நீல கண்டனின் கோபம் மனைவியிடம் இருந்து மகன் மீது தாவியது.
“என்ன பேச்சு இது ராசா..? இந்த பேச்சு உனக்கு மட்டும் சங்கடம் கிடையாது.. நாளை வரப்போகும் பெண்ணுக்கும் சங்கடத்தை கூட்டும்.. நாளைய பின்ன அந்த பெண் எப்படி இருந்தா கேட்டு தான் தன்னை தன் மாமியார் தேர்ந்தெடுத்தாங்க இவங்க என்று தெரிந்தால், அந்த பெண் மனது எப்படி சங்கடப்படும் சொல்..” என்ற அவரின் கேள்வியில் அழகுடை நங்கை உண்மையில் வருந்தி போனார்..
“தப்பு தாங்க. நான் இப்படி எல்லாம் யோசிக்கலங்க..” என்று அவர் முகம் இன்னும் வாடி போனவாரக பேச.
“ சரி சரி விடும்மா.” என்று விட்டார்.
மகனும்.. “ அப்பா நான் அந்த ஹாங்கில் எப்போதும் பெண் தேட மாட்டேன்.. ஆனா எனக்கு வர போகிறவளிடம் என் கடந்த காதலை சொல்லிய பின் தான் திருமணம் செய்து கொள்வேன்..” என்றும் உறுதியுடன் சொல்லி விட்டான்..
பின் கணவனின் துணையோடு வாழியாதனுக்கு பெண் தேடும் படலம் தீவிரம் அடைந்ததில் ஒரு பத்து இடத்தை தேர்ந்தெடுத்து மகன் அறையில் வைத்து விட்டார் அழகுடை நங்கை
அன்று இரவு தன் தொழில் சாலையில் இருந்து இரவு நேரம் கழித்து தான் வீடு வந்து சேர்ந்தான் வாழியாதன்..
எப்போதும் போல மகன் வரவுக்கு காத்து கொண்டு இருந்து உணவை பரி மாறிய பின்னே தான் அழகுடை நங்கை தங்கள் அறைக்கு படுக்க சென்றார்.
அவன் தனக்கு என்று சிமெண்ட் தொழிற் சாலை ஆரம்பித்ததில் இருந்து நேரம் கழித்து தான் வாழியாதன் வீடு வருவது..
அப்போது இருந்தே அன்னையிடம்.. “தனக்காக காத்து கொண்டு இருக்காதிங்க. டேபுல் மீது வைத்தால் நான் சாப்பிட்டு கொள்ள போகிறேன்..” என்று எத்தனையோ முறை சொல்லி விட்டான்..
. ஆனால் அவனின் அன்னை அதை எல்லாம் காதில் வாங்காது மறு நாளும் மகன் நடியிரவு வீடு வந்தாலும், விழித்திருந்து உணவை பரி மாறிய பின் தான் அவர் உறங்க செல்வார்.. பின் மகன் தான் சொல்வதை நிறுத்தி விட்டான்..
இன்று அவனின் அன்னை படுக்கும் போகும் முன்.. “ உன் ரூமில் போட்டோ வைத்து இருக்கிறேன் ராசா. பார்த்து சொல்.” என்று சொல்லி விட்டு தன் அறைக்கு போக. மாடி ஏறிக் கொண்டு இருந்த வாழியாதனுக்கு,
“ டையடா இருக்கு.. இப்போ இது வேறா..?” என்று முனு முனுத்து கொண்டு தான் அவன் அறைக்கு சென்றது.. சென்றவன் எப்போதும் போல குளித்து முடித்து இலகுவான உடைக்கு மாறிய பின் கட்டில் மீது அமர்ந்தவன் நடுநாயகமாக வைத்து இருந்த பெண்கள் போட்டோ எண்ணிகையை பார்த்து ஒரு வித சலிப்பு மனதில் உண்டாயிற்று.
மனதினில்..’ நாளைக்கு பார்த்து கொள்ளலாமா..?” என்று முதலில் தள்ளி போட தான் நினைத்தான்.
ஆனால் நாளை எழுந்த உடனே காத்து கொண்டு இருந்த வேலைகளை கணக்கில் கொண்டு. இப்போதே பார்த்து முடித்து விடலாம் என்று ஏதோ பெண்ணின் புகைப்படத்தை பார்ப்பதும் வேலையாக நினைத்து கொண்டு ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான்..
அவனுக்கு இப்போது இல்லை.. இரண்டு வருடங்களாகவே பெண் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவன் பெண்களை இது போல போட்டோவில் மட்டுமே இது வரை பார்வையிட்டு கொண்டு இருக்கிறான்..
முதலில் எல்லாம் இது போல கடமையே எல்லாம் பார்க்கவில்லை.. ஒரு வித ஆர்வத்தோடு தான் பார்த்தான்.. ஆனால் எந்த பெண்ணை பார்த்தாலுமே, அந்த முகத்தில் ஒரு வித செயற்கை தனமே அவன் கண்ணில் பட்டது..
என்னடா இது..? எந்த பெண்ணையும் நமக்கு பிடிக்கவில்லை.. எல்லா பெண்ணும் நல்லா தானே இருக்காங்க.. இந்த காலத்தில் எந்த பெண் மேக்கப் போடாது இருக்குறாங்க.. அதுவும் மாப்பிள்ளைக்கு கொடுக்க படும் போட்டோ என்றால் இன்னும் கொஞ்சம் தன்னை அழகு படுத்தி கொள்ள தானே தோன்றும்.. ஏன் பிடிக்கவில்லை..?
இது போல பெண்களின் போட்டோ முதலில் ஆர்வமுடன் பார்த்தவன் படி படியாக குறைந்து . இதோ இப்போது வேலை போல பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தவன் ஒவ்வொரு போட்டோவையும் தள்ளி கொண்டு சென்றவனின் மனது..
‘ஏம்மா நீ எங்கேம்மா இருக்கே…? கொஞ்சம் சீக்கிரம் என் கண்ணில் பட்டு விடும்மா..’ என்று மனதில் நினைத்தும் கொண்டே கடைசியாக இருந்த போட்டோவை எடுத்து பார்த்தவனுக்கு கடவுள் அவன் நினைத்ததை அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி வைப்பார் என்று வாழியாதனே எதிர் பார்த்திருக்கவில்லை…