ஷாலினியின் அந்த முக மாற்றம் காவ்யாவுக்கு மட்டும் அல்லாது இளமாறனுக்குமே ஒரு பதட்டத்தை கொடுத்தது..
“ஷாலு..” என்று அழைத்து அவள் தலை மீது கை வைத்த தந்தையின் கையை தட்டி விட்டவள்..
“ஏன் என் கிட்ட சொல்லலே.. இதை ஏன்பா என் கிட்ட சொல்லலே.. ஒ எனக்கு தான் குழந்தை இல்லலே. அதுவும் இனி எனக்கு பிறக்கவே பிறக்காது எனும் போது . என் போலவங்க கண் பட்டா குழந்தைக்கு எதுவும் ஆகி விடும். நான் பொறாமை படுவேன் .” என்றவளை மேல பேச விடாது..
பெற்றோர்கள்.. “ அய்யோ அப்படி இல்லேடா ஷாலு அப்படி இல்ல..” என்று இளமாறன் காவ்யா பதறி போய் அவள் பேச்சை மறுத்தனர்..
“ அப்போ எப்படி..? அப்போ ஏன் சொல்லலே.. சொல்லுங்க ஏன் சொல்லலே..?” என்று திரும்ப திரும்ப அதே அர்த்தம் கொண்ட வார்த்தையில் கேட்டவளுக்கு பதில் சொல்ல அந்த பெற்றோர்களால் முடியவில்லை..
“ அவள் கூட என் கிட்ட சொல்லலேம்மா. “ என்று வருத்ததுடன் சொன்னவள்..
“ அவள் அப்படி இல்லேம்மா. ஒரு வேள அவங்க மாமியார் என் கிட்ட சொல்ல கூடாது என்று சொல்லி இருப்பாங்கலோ… அதுக்கு தான் இங்கு அனுப்பாது அங்கேயே வைத்து இருக்காங்கலோ..
என் கண் பட்டு விடும் நான் மலடி.” அந்த வார்த்தை ஷாலினி சொல்ல கேட்டு ..
“நீ ஏன்டி மலடி.. உன் கிட்ட ஒரு குறையும் இல்ல. உன் புருஷன் ..” என்ற வார்த்தைக்கு மேல தன் தாயை கூட ஷாலினி பேச விடவில்லை..
“இது போல யார் முன்னும் உளறி இருக்காதிங்கம்மா.. அதுவும் அமரா வீட்டவர்கள் முன்.. அவ்வளவு தான்..” என்று எச்சரிக்கை செய்தவள் திரும்ப திரும்ப.
“ஏன் என் கிட்ட சொல்லலே சொல்லலே..” என்று அதே கேட்க காவ்யா சொல்லி விட்டாள்.. “ நான் தான் பாப்பா கிட்ட சொல்ல வேண்டாம் என்று சொன்னேன்.” என்பதை..
“ ஏன்மா..? “ என்று கேட்கும் போதே ஷாலினியின் முகத்தில் அவ்வளவு வேதனையின் சாயல்.
.
“ இல்ல நான் உன் கிட்ட சொல்ல வேண்டாம் என்றதுக்கு காரணம்.. உன் கண்ணோ நீ பொறாமை படுவீயோ என்று இல்ல ஷாலு புரிந்து கொள்.. அவள் மேரஜ் பிக்ஸ் ஆன அப்போவே நீ என் கிட்ட சொன்னது.,. எனக்கு முன் அவளுக்கு குழந்தை பிறந்துட்டா.. ரிலேஷன் என்னை தப்பா பேசும் என்று சொன்னியே.. ஏற்கனவே மாப்பிள்ளையின் அந்த ரிசல்ட்டில் நீ ரொம்ப டவுனா இருந்த. இதுல இது வேற.. எதுக்கு என்று தான் ஷாலு…
நீ நினைப்பது போல இல்லடா.. அம்மா உன்னை நான் அப்படி நினைப்பேனா..” என்று பேசி ஒரளவுக்கு பெரிய மகளை சமாதானம் செய்து விட்டார் காவ்யா
..
தனியே இளமாறன்.. “ பாப்பாவுக்கு ட்வீன்ஸ் என்று சொல்லிடு காவ்யா. சொல்லவில்லை என்றால், பின் அதுக்கும் அவள் மனதை போட்டு குழப்பி கொள்வாள்..” என்ற பேச்சை காவ்யா ஏற்கவில்லை..
“ வேண்டாம். எனக்கு எப்போ எது சொல்லனும் என்று தெரியும்.. இப்போ அந்த விசயம் அவளுக்கு சொல்ல வேண்டாம் ..” என்று திட்ட வட்டமாக சொல்லி விட்டதில் இளமாறனும் சொல்லாது விட்டு விட்டார்..
தன் வீட்டிற்க்கு கணவனோடு வந்து இறங்கிய அமராவுக்கு தாய் வீட்டில் ஏகப்பட்ட வரவேற்ப்பு…
அதுவும் ஷாலினி முகம் கொள்ள புன்னகையில்.. “ வா அமரா வா.. என் கிட்ட யாரும் சொல்லலே தெரியுமா.?” என்று வருத்தத்துடன் சொல்லி கொண்டே.
“ அம்மா ஆலம் ரெடி செய்துட்டு சுத்தமா இருக்கிங்க. சுத்துங்க “ என்று அன்னையை அவசரப்படுத்த..ஆரம் கரைத்த தட்டை ஷாலினி கையில் கொடுத்த காவ்யா..
“ நீயே உன் தங்கைக்கு சுத்தேன்..” என்றதும் ஷாலினி சட்டென்று அந்த தட்டை வாங்க தான் போனாள்.. பின் என்ன நினைத்தாலோ..
“ ஷாலு..” என்று அதட்ட.. இளமாறன் தான்..” யாராவது ஒருத்தர் சுத்துங்க.. எவ்வளவு நேரம் அவங்க வெளியில் நிற்பாங்க..” இது என்ன கூத்து என்பது போல் பார்த்து கொண்டு இருந்த மாப்பிள்ளையின் பார்வையில் மாமனார் அதட்டினார். அவரின் அதட்டல் நன்றாகவே வேலை செய்தது..
ஷாலினி ஆலம் தட்டை வாங்குவது போல் இல்லை என்றதில் காவ்யா தான் மகள் மாப்பிள்ளை பேரனோ பேத்தியோ வயிற்று பிள்ளையோடு நால்வரையும் ஆலம் சுற்றி வர வேற்றார் ..
அமரா வீட்டின் உள் நுழைந்ததுமே. தங்கை பக்கத்தில் ஷாலினி அமர்ந்து கொண்டதால், வாழியாதன் எதிர் ஷோபாவில் அமர்ந்து விட்டான்..
ஏதாவது குடிக்க எடுத்து வர காவ்யா சமையல் அறைக்குள் போக. ஷாலினி.. “ பாப்பா கிட்ட என்ன வேணும் என்று கேட்டுட்டு போங்கம்மா. அவள் காபி டீ குடிப்பா என்று எடுத்து வந்து கொடுத்துடாதிங்க. இது போல நேரத்தில் என்ன குடிக்கனும் என்று டாக்டர் சொல்லி இருப்பாங்க.” என்று அன்னையிடம் சொல்லி விட்டு.
தங்கையின் பக்கம் பார்வையை திருப்பி.. “ டாக்டர் என்ன குடிக்க சொல்லி இருக்காங்க..?” என்று கேட்க அமரா.
“ எது என்றாலும் பரவாயில்லை..” என்ற அவளின் பதிலை ஷாலினி ஏற்பதாக இல்லை..
இப்போது வாழியாதனிடம்.. “ வாழி உங்க வீட்டில் அம்மா இவளுக்கு என்ன கொடுப்பாங்க.? .” என்ற கேள்விக்கு அவன் பதில் சொல்லாது ஷாலினியையே பார்க்க. வாழியாதன் மட்டும் அல்லாது அவள் பெற்றோரும் அதிர்வுடன் தான் தன் பெரிய மகளை பார்த்தது.
அமரா தான்.. “ அக்கா சாரி அவரை வாழி என்று கூப்பிட்டா பிடிக்காது சாரி.. அதனால தான் பதில் சொல்லலே.. எனக்கு அத்தை இந்த சமயம் ஆப்பிள் ஜூஸ் கொடுப்பாங்க.”கணவன் அமைதிக்கு காரணம் சொல்லி விட்டு, தனக்கு அத்தை கொடுக்கும் பானத்தையும் சொல்லி விட்டாள்.. பின் சிறிது நேரத்தில் நிலமை சீராகியது..
வாழியாதன் மனைவியை இரண்டு நாள் மாமியார் வீட்டில் விட்டு விட்டு, தான் சென்னையில் தியேட்டரில் ஒரு சில வேலைகள் இருக்கிறது.. அதே போல் சென்னையில் இருக்கும் வீட்டின் கார்டன் தூய்மை செய்யாது இருப்பதால் பாம்பு வந்து செல்கிறது என்று பக்கத்து வீட்டவர்கள் பேசியில் சொன்னதால்,
தியேட்டரில் வேலை செய்பவர்களை வைத்து அதை தூய்மை செய்து விட வேண்டும். மாமியார் வீட்டில் தங்க தேவையில்லை.. என்று இப்படி பல கணக்கீடலில் தான் வாழியாதன் மனைவியை சென்னைக்கு அழைத்து வந்தது..
ஒரு காபி அதோடு கிளம்ப தான் நினைத்தான்.. ஆனால் ஷாலினியின் இந்த ஒவர் பாசத்தில் மனைவியை இங்கு விட்டு செல்லலாமா..? என்ற யோசனையில் அப்படியே அமர்ந்து விட்டான்..
இது உண்மை அன்பா என்று.. ஆனால் ஷாலினி அடுத்து கேட்ட.
“ அம்மா இவளுக்கு ஏன்மா இப்படி வயிறு பெருசா இருக்கு.. இது ஐந்து மாதம் தானா..?” என்று தன் சந்தேகத்தை கேட்டவள்..அமராவிடம்..
“ கணக்கு எல்லாம் சரியா சொன்னியா..? முன் எல்லாம் நானோ அம்மாவோ தானே உனக்கு அதை நியாபகம் படுத்துவோம்..”
அங்கு தந்தை மட்டும் இல்லாது வாழியாதனும் இருக்கிறான் என்று கூட கவனியாது அவள் பாட்டுக்கு பேசி கொண்டு போனவள்..
பின் ஏதோ ஒரு யோசனையில்.. “ நான் ஒரு முட்டாள் எனக்கு இது பத்தி எல்லாம் என்ன தெரியும்..?”
அவள் இதை சாதரணமாக தான் சொன்னாள்.. ஆனால் அதை கேட்டவர்களுக்கு தான் என்னவோ போல் ஆனது..
வாழியாதனோ இப்போது ஷாலினியை ஊன்றி கவனித்தான்.. நிறைய மாற்றம் அவளிடம் தெரிந்தது.. ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது வரம் தான்.. அது கிடைக்க
கால தாமதம் ஆனால். கஷ்டம் தான்..மனிதர்களுக்கு வரும் பிரச்சனை தான் அவர்களை மாற்றுவது போல என்று நினைத்து.
“ சரி மாமா நான் வர்றேன் ஒரு இரண்டு நாள் கழித்து நான் அமராவை அழைத்து கொண்டு போகிறேன்..” என்று விட்டான்.
அமராவுக்கு சென்னையில் அவனுக்கு இருக்கும் வேலையை குறித்து இங்கு வரும் போதே சொல்லி விட்டான்..
அதனால் பெண்ணவள் சரி என்று விடை கொடுக்கும் பாவனையில் தான் இருந்தாள்..ஆனால் ஷாலினி தான்.. “ ஏன் மிஸ்டர் வாழியாதன்.. இங்கு தங்க மாட்டேங்குறிங்க..?”
முன் பெயர் சுருக்கத்தை இப்போது சரிப்படுத்தி கொண்டு பேசினாள்;.. ஆனல் வாழியாதன் என்ன இது என்பது போல் தான் தன் மனைவியின் முகம் பார்த்தான்..
அமரா தான்.. “ அக்கா இங்கு நிறைய வேலை வைத்து இருக்காரு.. அவர் போகட்டும்.. பரவாயில்லை..” என்று விட்டாள் தான்..
ஆனால் ஷாலினி.. “ நான் இங்கு இருப்பது சங்கடமா இருக்கா.. அதனால் தான் இங்கு தங்கவில்லையா.. என் அத்தை வீட்டும் சென்னை தான்.. நான் அங்கு போய் விடுவேன்.. அவளுக்கு நீங்க கூட இருந்தா தான் நல்லது..
எனக்கு இது தெரியாது..” அமரா வயிற்றின் மீது கை வைத்து சொன்னவள்.
“ எனக்காக மாற்ற வேண்டாம்.. நீங்க வாங்க நான் மாமியார் வீட்டுக்கு போகிறேன்..” என்ற பேச்சில் வாழியாதன் ..
“ அய்யோ என்ன இது. இந்த பெண் சண்டை போட்டா கூட பரவாயில்லை போலடா.” என்று நிலையில் தான் பாவம் அவன்.
பின் ஒருவாரக. “ வெளி வேலை முடித்து விட்டு நையிட் வர்றேன்..” என்று சொன்னதோடு அவர்கள் கொடுத்த உணவையும் உண்டு விட்டு தான் சென்றது..
ஆனால் போகும் போது அவ்வளவு பத்திரத்தை மனைவியிடம் சொல்லி விட்டு தான் வாழியாதன் சென்றது..
வாழியாதன் சென்ற பின்.. காவ்யா கேட்க வேண்டிய கேள்விகள் அனைத்துமே ஷாலினி கேட்டாள்..
“ இப்போ வாந்தி வருதா. எத்தனை மாதம் வரை வாந்தி எடுத்த.. வெயிட் ஏறுது தானே.. அதுக்கு என்று ரொம்பவும் ஏற கூடாது டெலிவரி பிரச்சனை ஆகும்..” என்று கேட்டு அவளே பதிலும் சொல்லி..
இத்தனை நாள் ஏதோ ஒரு யோசனை.. ஒரே அறையில், வாழ்க்கையே இனியே இல்லை என்று இருந்தவளின் இந்த மாற்றம் பெற்றோர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது..
இது தெரிந்து இருந்தால் முன்னவே.. அமரா விசயம் சொல்லி அவளையும் வர வழைத்து அவளுக்கு செய்ய வேண்டியதை செய்து இருக்கலாமே. பாப்பாவும் சந்தோஷமா இருந்து இருப்பா என்று காவ்யா நினைத்தாள்..
இளமாறன்.. “ மாப்பிள்ளையின் நாக்கை பிடுங்கும் கேள்வியில் இருந்து தப்பித்து இருக்கலாமே..” என்று நினைத்தனர்.
இளமாறன் மனைவியிடம்.. “ அமராவுக்கு பிறக்க போவது ட்வீன்ஸ் என்று இப்போவாவது சொல் காவ்யா.” என்று சொன்ன போது கூட ஏனோ காவ்யா என்று மறுத்து விட்டார்..
அமராவிடமும்.. “ ட்வீன்ஸ். என்று சொல்லாதே..” என்று விட்டார்..
அமரா.. “ ஏன் மா.. ?” என்று கேட்டதற்க்கு கூட காவ்யா எப்போதும் போல..
“ பெரியவங்க சொன்னா கேட்கனும் பாப்பா..” என்ற அதட்டலுக்கு அமரா எப்போதும் போல கேட்டு கொண்டாள்..
ஷாலினி எப்போதும் இல்லாத அதிசயமாக சமையல் அறையில் தங்கைக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கேட்டு சமைத்து கொடுப்பது ஆகட்டும்.. என்ன மாத்திரை போடனும் என்று கேட்டு அதை நியாபகம் படுத்துவது ஆகட்டு,..
தங்கையிடம் பேசிக் கொண்டு இருந்த போது வாழியாதனிடம் இருந்து அமராவுக்கு அழைப்பு வந்த போது நாகரிகமாக வெளியில் சென்றது ஆகட்டும்.. அனைத்தும் நல்ல முறையில் நடந்தது..
காவ்யாவும் முன் பார்த்து கொள்ளாததை ஈடுக்கட்டும் வகையில் பெண்ணுக்கு பார்த்து பார்த்து செய்தார்.. அவளின் அப்பா சொல்லவே தேவையில்லை..
“என்ன பாப்பா.” என்று அந்த வாஞ்சையான அழைப்பிலேயே பெண்ணவளின் மனது நிறைந்து போய் விடும்..
இத்தனை மாதம் தாங்கள் பார்த்து பார்த்து கவனித்து கொண்ட போதும் வராத பொலிவு மனைவியின் முகத்தில் வந்ததை இரவு வந்த வாழியாதன் கவனித்தான் தான்.
அதை கண்டு கொள்ளாது.. “ இன்று எப்படி போச்சி…? என்ன குழந்தைகள் உன்னை ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்டாங்கலா.?” என்று இரவில் தனிமையில் கேட்ட போது கணவனின் மார்பில் ஒன்றிக் கொண்ட பெண்ணவள்..
“ உள்ளே குழந்தை இருக்கு என்ற பீல் நான் கூட பண்ணல ரொம்ப லேசா இருந்தது..” என்ற மனைவியின் பேச்சில் அவன் கை தன்னால் மனைவியின் வயிற்று மீது படிந்தது..
“ கவலை படாதிங்க.. உங்க குழந்தைகள் ரொம்ப நல்லாவே இருக்காங்க.. இங்கு அம்மா அக்கா அப்பா என்று ஒருவர் மாற்றி மாற்றி ஒருவர் பார்த்து பேசி.. என்றதில் எனக்கு டையாடா ஆகலேங்க..” என்ற மனைவியின் பேச்சில் வீட்டில் எப்போதும் சோர்ந்து சோர்ந்து படுத்துக் கொள்பவளின் நினைவு வந்து போயின.
அம்மா சொன்னது சரி தான்.. அம்மா கூட இருந்தால் எந்த கஷ்டமும் தெரியாது என்றது..
“ அப்போ என் பொண்டாட்டி இன்னைக்கு சோர்வா இல்ல. அப்படி தானே..?” என்ற கணவனின் கேள்விக்கு உண்டான அர்த்தம் புரியாது.
“ இல்ல ..” என்று வேகமாக தலையாட்டியவளிடம்..
“ அப்போ நீ ரொம்ப நாள் மறந்த பாடத்தை உனக்கு நியாபகம் படுத்தலாமா..?” என்ற கேள்விக்கு பெண்ணவள் அர்த்தம் கண்டு பிடிப்பத்தற்க்குள் கணவன்.. அதன் அர்த்தத்தை தன் செயல்கள் மூலம் மனைவிக்கு விளக்கினான்..
சென்ற முறை மருத்துவ பரிசோதனையின் போதே. மருத்துவர் இருவரிடமும்.. “ தாம்பத்தியம் வைத்து கொள்ளலாம் ..” என்று விட்டார்.
இருந்தும் தன் வீட்டில் மனைவியின் சோர்வில் கணவன் பெண்ணை நாடவில்லை.. இன்று மனைவியின் பொலிவான முகம்.. அதோடு இந்த அறையில் தானே மனைவியை முதன் முதலாக நான் அறிந்து கொண்டது.. என்ற அந்த நினைவின் தாக்கம்..
இன்று அமரா தனக்கு மனைவியாக வேண்டும் என்று அவன் தேகம் கேட்க.. கேட்ட தன் தேகத்திற்க்கு பெண்ணவளின் தேகத்தை கொடுத்து விட்டான்..
கூடல் முடிந்த சோர்வு இருந்தாலுமே பெண் தூங்காகது கணவனின் மார்பில் முகத்தை புதைத்து கொண்டவள்..
“ அக்காக்கு சீக்கிரம் குழந்தை பிறந்தா நல்லா இருக்கும்.. காலையில் இருந்து அக்கா தான் எனக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்தா. அவ என் வயிற்றை ஆசையோடு பார்க்கும் போது எல்லாம் அவளுக்கும் ஒன்று இது போல வரனும் என்று கடவுளிடம் வேண்டிக்கிட்டேன்..” என்ற மனைவியின் பேச்சு அனைத்திற்க்கும்.
வாழியாதன். “ ம். ம்” என்று தான் கொட்டி கொண்டு இருந்தான்..
அவனுமே இதை யோசித்தான் தான்.. ஷாலினியின் நிலையில் இருந்து.. தங்கைக்கு இரண்டு கொடுத்த கடவுள் அக்காவுக்கு இதில் ஒன்று கொடுத்து இருக்கலாம் என்று. பாவம் அப்போது நினைத்தவனுக்கு தெரியவில்லை. உண்மையில் ஷாலினி அந்த இரண்டில் ஒன்று தான் கேட்டு நிற்க போகிறாள்.. அதனால் தன் குடும்ப வாழ்வே கடலில் மிதக்கும் கப்பல் போல ஆட போகிறது என்பதை..