அமரா நடியிரவு அந்த வீட்டை விட்டு சென்று இரண்டு வாரம் கடந்து இருந்தது.. காவ்யா கணவனிடம் சாதரணமாக பேசவோ.. கேட்கவோ வந்தால்.
“ என் கிட்ட எதுக்கு சொல்லிட்டு கேட்டுக்கிட்டு.. எப்போதும் போல உன் விருப்பபடியே செய்.. “ என்று ஒரு விட்டெறியான மனநிலையில் தான் இளமாறன் இருந்தார்..
காவ்யா.. “ உங்களுக்கு தெரியும் தானே ஷாலினிக்கு நான் ஏன் முக்கியத்துவம் கொடுத்தேன் என்று.. அவள் தொடர்ந்து அழுதா கூட அவளுக்கு மூச்சு விட சிரமம் ஏற்படும் என்று உங்களுக்கு தெரியாதா..?” என்று காவ்யாவின் இந்த பேச்சுக்கு மட்டும் இளமாறன் கோபத்துடன் மனைவியை பார்த்தவன்..
“ அவளுக்கு எப்போது கடைசியாக அந்த பிரச்சனை வந்தது..?” என்று கேட்டதற்க்கு காவ்யா யோசித்து..” அவளின் பத்து வயதில்..?” என்று கூறியதற்க்கு கணவன்.. “ எதற்க்கு அவள் அன்னைக்கு அழுது அப்படி ஆச்சி..?” என்று கேட்டதற்க்கு மனைவியிடம் பதில் இல்லை.. ஏன் என்றால் காவ்யாவின் அந்த நிகழ்வு நியாபகத்தில் இல்லை..
“அவள் குறை பிரசவத்தில் பிறந்தவள்.. அவளுக்கு வீக் பாடி.. சின்னது என்றாலும் அவளுக்கு பெருசா ஏதாவது வந்து விடும்.. அவள் அழுக கூடாது.?” என்று கேட்ட இளமாறன் பின்.. “அதுக்கு வீட்டில் இருக்குவங்க எல்லோரும் அழுதா பரவாயில்லலே. .. ஒரு பிறந்த வீட்டை விட்டு ஒரு பெண் அந்த நேரத்தில், அதுவும் பிரசவத்திற்க்கு வந்தவ. நீங்க எனக்கு பார்க்க தேவையில்லை என்று போய் விட்டா.
பிள்ளை உண்டாகி இருந்தா பெத்த அம்மா இல்ல வேறு எந்த பெண் என்றாலுமே, அந்த பெண்ணிடம் அக்கறை காட்டுவா ஆனா.. வயித்துல இருக்க பிள்ளையையே இன்னொரு பெண்னுக்கு பேரம் பேசியவள்.. தானே நீ.. நிஜமா எனக்கு இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கல. ஆனா என்ன செய்ய கட்டிய பாவத்துக்கு இருந்து தொலைக்கும் படியாகுது..” என்றது தான் அவர் கடைசியாக மனைவியிடம் பேசியது.. அடுத்து பேசாது தான் நாட்கள் கடந்து கொண்டு இருக்கின்றன..
ஷாலினி நிலை சொல்லவே தேவையில்லை.. ஏற்கனவே டிப்ரெஷனில் இருந்தவள்.. யாரும் பேசாது தனிமையில் இருப்பது.. அதோடு தன் முன் காதல் கணவனுக்கு தெரிய வந்தால், அதுவும் தான் ப்ரேக்கப் செய்தது தெரிந்தால், ஷாலினியிடம் நான் சொல்லி விட்டேன் என்று பழிக்கு பழியாக வாழியாதன் ராகவிடம் சொல்லி விடுவானோ.
இப்போது அவளின் குழந்தை ஆசை போய் கணவனுக்கு உண்மை தெரிந்து விடுமோ.. தெரிந்தால் என்ன ஆகுமோ.. என்ற பயம் தான் மனது முழுவதும். இதனால் சரியாக தூங்காகது.. சாப்பிட்டாது கண்களின் கீழ் கருவளையம் வந்து பார்க்கவே என்னவோ போல் தான் இருந்தாள்.. மகளின் நிலையை பார்த்து காவ்யாவுக்கு என்னவோ போல் தான் இருந்தது.
இருந்தும் அனைத்தும் சொல்பவள் வாழியாதனை பற்றி சொல்லவில்லையே.. அதுவும் அமராவிடம் சொன்னது.. அவளுக்கு வாழ்க்கையை பிச்சை போட்டேன் என்று சொன்னது.. அனைத்தையும் விட.. அந்த நிலையில் இரவு அமரா சென்றதில், தன்னையும் மீறி மனது ஒரு நிலையில் இல்லாது தவித்து போய் இருந்தது.
வாழியாதனை பற்றி சொல்லாதவள் .. அதுவும் வாழியாதனை ப்ரேக்கப் செய்த காரணம். கொஞ்சம் ஆசைப்படுவாள் தான். ஆனால் ஒருவனை காதலித்து இப்படியான ஒரு காரணத்திற்க்கு ஒருவனை கழட்டி விடும் அளவுக்கா மகள்.. அதை நினைக்கும் போது தான் ஷாலினியை பார்த்து பாவம் படும் மனம் அவள் செய்தது நினைத்து கல்லாகி போனது.. இப்படி அனைவரும் ஒவ்வொரு நிலையில் இருக்கும் போது தான் ராகவ் இந்தியாவுக்கு சொல்லாமல் கொள்ளாமல் நேராக இளமாறன் வீட்டிற்க்கு வந்து இறங்கியது.
ஷாலினி எப்போதும் போல வேலையாள் சாப்பிட அழைத்த போது வருகிறேன் என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு அரை மணி நேரம் கழித்தும் செல்லாது விட்டத்தை பார்த்து படுத்து இருந்தவளின் காதில் யாரோ தன் அறைக்கு வரும் ஒசையில் ..
ஒரு வித எதிர் பார்ப்போடு.. தன் அம்மாவா என்று நினைத்து தான் ஆவளோடு தலையை நிமிர்த்தி பார்த்தது. வந்தவன் தன் கணவன் ராகவ் என்றதில் ஆர்வம் படிந்த முகத்தில் பயம்.. அப்பட்டமாக பயம் தான் தெரிந்தது.. தெரிந்து விட்டதோ என்ற பயம்..
ராகவ் .அந்த அறைக்குள் நுழையும் சமயத்தில் இருந்தே மனைவியின் சோர்ந்த அந்த முகம்.. பின் தன் சத்தம் கேட்டு ஆர்வத்தோடு பார்த்தது. பின் அதில் தெரிந்த பயம் என்று மாறி மாறி மனைவியின் முகத்தில் வந்து போன பாவனைகளை கவனித்து கொண்டு தான் மனைவியின் அருகில் சென்றான்..
ஆனால் எதுவும் கவனியாதது போல். அவள் அருகில் அமர போகும் போது… “ நான் உங்களை உண்மையில் தாங்க லவ் பண்றேன்.. உங்களை மேரஜ் செய்ய உங்க ஐடி வேலை.. அமெரிக்கா என்று வேறு காரணம் இருக்கலாம்.. ஆனா இப்போ இப்போ நிஜமா.. நம்ம கல்யாணம் ஆன இத்தனை வருஷத்தில் உங்களுக்காகவே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்ங்க..
ப்ளீஸ் வாழி விசயம்.. நிஜமா அது என் தப்பு தான்.. ஆனா அந்த வயசுல சத்தியமா அப்போ அது எனக்கு தப்பா தெரியலேங்க.. “ என்று பேச பேச ராகவின் முகத்தில் குழப்பத்தின் சாயல் என்ன இது என்பது போல் தான் தன் மனைவியை பார்த்திருந்தான்..
நான்கு நாள் முன் அவன் அன்னை ராகவை அழைத்து. “ நீ அங்கு சம்பாதித்தது எல்லாம் போதும் ..மூட்டை முடிச்சி கட்டிட்டு நீ இந்தியா வர பார்.. நேத்து அண்ணன் வீட்டுக்கு போனேன்.. என்ன விசயம் என்று தெரியல. யாரின் முகமும் சரியில்ல..” என்ற அன்னையின் பேச்சுக்கு..
தன் அம்மா மற்றவர்களின் வீட்டு விசயம் என்றால் எப்போதும் அர்வத்துடன் கவனிப்பார். கேட்டு தெரிந்து கொள்வார்.. இல்லை என்றால் அவருக்கு மண்டை வெடித்து விடும்..
இன்னும் இந்த பழக்கத்தை இவர்கள் விட வில்லையா ..? என்று..
“ அம்மா ஏதாவது பர்சனல் பிரச்சனையா இருந்து இருக்கும். .. எல்லாம் உங்க கிட்ட சொல்வங்கலா.? நீங்க உங்க மருமகளை பார்த்தோமா.. வந்தோமா ..என்று இருக்கனும்.. “ என்ற பேச்சில் அவன் அன்னை.
“ முந்திரி கொட்டை போல நான் சொல்வதற்க்குள் பேசு.. மத்தவங்க முகத்தை விட உன் பெண்டாட்டி முகம் தான்டா சரியில்ல.. சாப்பிட்டு எத்தனை நாள் ஆகும் என்பது போல இருக்கா. அதோட அவளை
அங்கு சரியா கவனிப்பது போல காணும்..” என்ற அவன் அம்மாவின் இந்த பேச்சில் துணுக்குற்றான்..
“ சரியா கவனிப்பு இல்லையா..? “ இது நம்புவது போல் இல்லை.. அவன் என்ன அசல்ல்லையா பெண் எடுத்தான்.. சொந்த மாமன் பெண் தானே.. சிறு வயதில் இருந்தே சின்ன பெண் அமராவை விட இவளை தான் அப்படி கவனித்து கொள்வார்கள்.. ஏன் அமரா திருமணம் புடவை எடுக்கும் அன்று கூட ஷாலினிக்கு தான் அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது..
அதில். “ உங்க கற்பனையா இருக்கும்..” என்றதற்க்கு வந்து பார் தெரிந்து விடும் என்று விட்டார்.. ராகவ் உடனே மனைவிக்கு வீடியோ காலில் அழைக்க..
அதை கட் செய்து ஆடியோ காலுலில் வந்தவளிடம்.. “ ஏன் வீடியோ கால் கட் செய்த.?” என்று ராகவ் கேட்டதும்..ஒரு வித சலிப்போடு.
“ இன்னும் குளிக்கல..” என்ற பதில். என்ன இது நான் யாரோவா.. தினம் தினம் எப்படி எப்படியோ பார்த்தவனிடம் என்ன இது குளிக்கவில்லை என்கிறாள் என்ற சந்தேகத்துடன் தான் வீடியோ கால் வந்து ஆக வேண்டும் என்று சொன்னதுமே சிறிது நேரம் எடுத்து கொண்டு தான் ஷாலினி ராகவுக்கு வீடியோ காலில் அழைப்பு விடுத்தது..
ஏற்ற ராகவுக்கு ஷாலினியின் மேக்கப்பை பார்த்ததும் தெரிந்து விட்டது ஷாலினி ஏன் தன்னை அழைக்க இவ்வளவு நேரம் எடுத்தாள் என்று.. இருந்தும் எதுவும் காட்டி கொள்ளாது சாதரணமாக பேச ஷாலினியால் தான் சாதரணமாக கணவனிடம் பேச முடியவில்லை..
ராகவ் முடிவு செய்து விட்டான்.. அம்மா சொன்னது சரி தான் என்று.. எதுவும் சொல்லாது மனைவியிடம் பேசி முடித்தவன்.. உடனே தன் வேலையை ரிசைன் செய்ய முடியாததினால், ஒரு லாங்க் லீவ் மட்டும் எடுத்து கொண்டு யாருக்கும் சொல்லாது தான் இந்தியா வந்தான்.. வந்ததும் இதோ மனைவியை தேடி வந்து விட்டான்..
ஆனால் ராகவ் மனைவியை இப்படி ஒரு கோலத்தில் இருப்பாள் என்று நினைக்கவில்லை.. அன்று மேக்கப் போட்டதினால் தெரியாத அந்த கருவளையமும். டொக்கு விழுந்த கன்னமும் .. பார்த்தவனுக்கு பகிர் என்றது என்றால் மனைவி அடுத்து அடுத்து பேசிய விசயமான.. வாக்கு மூலம் போல் அனைத்தும் சொல்லி விட்டாள்….
ஏற்கனவே கணவனுக்கு தெரிந்தால்…? தெரிந்தால்..? என்று இது மட்டுமே இத்தனை நாட்களாக மனதில் உரு போட்டு கொண்டு இருந்தவள்.. கணவன் தன் முன் வந்து நின்றதும்..
விசயம் தெரிந்து தான் வந்து விட்டான் என்று தான் ஷாலினி நினைத்து கொண்டாள்..
அதுவும் பழிக்கு வாழியாதன் தான் சொல்லி இருப்பான்.. என்ற நினைப்பு. அதோடு தன்னை பார்த்த ராகவ் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியான முகத்தை. ஷாலினியின் மனம் ஒரு நிலையில் இல்லாத காரணத்தினால், அதை கோபம் என்று புரிந்து கொண்டு..
ராகவ் தன்னிடம் பேசும் முன் அனைத்தும் ஒப்புதல் வாக்கு மூலம் போல் சொல்லி விட்டாள்….
முதலில் ஏதோ சொல்கிறாள் என்று தான் பாவம் ராகவ் நினைத்தது.. அமெரிக்காவில் மன அழுத்தம் சிக்கிச்சைக்கு மனைவியை அழைத்து சென்றதே ராகவ் தானே.. குழந்தை மீது ஷாலினிக்கு இருக்கும் அந்த ஆசை அவனுக்கு தெரியும்.. அதோடு அவன் அவளின் அந்த ஆசையை காதல் கொண்ட மணந்த கணவனாக தன்னால் நிறை வேற்ற முடியவில்லையே என்ற குற்றவுணர்ச்சியில் தான் அவன் இந்தியாவை விட்டு அமெரிக்காவுக்கு சென்று விட்டது.
அதோடு மனைவியின் குழந்தை ஆசை தெரிந்ததால் தான் மனைவி மீது அவ்வளவு காதல் இருந்தும், டைவஸ் செய்கிறேன் என்ற வார்த்தையை அவன் சொன்ன போது மனதளவில் அவன் எவ்வளவு வேதனைப்படான் என்பது.. ஒரு ஆண்மகனாக அவன் நிலையில் இருந்து யோசித்தால் மட்டுமே அவனின் நிலை புரியும்..
ஷாலினி.. அதற்க்கு ஒத்து கொள்ளாததோடு.. அவனை திட்டிய அந்த வார்த்தைகள் தான் ராகவுக்கு அவன் காயம் பட்ட மனதுக்கு மருந்தாக இருந்தது என்று சொன்னால், நீங்கள் நம்ப வில்லை என்றாலுமே, அது தான் உண்மை..
பின் பேசியின்…. மூலம் ஒரு முறை இந்தியா வந்து என்று குழந்தையை தத்து எடுத்து கொள்ளலாம்.. ஏன் ஆண்மகன் தயங்கும் தன் மனைவியின் கருவில் வேறு ஒருவனுடைய குழந்தை வளர்வதை விரும்ப மாட்டார்கள்.. ஆனால் ராகவ் ஷாலினி எந்த ஒரு விசயத்துக்காவும் வேதனை பட கூடாது என்று அந்த யோசனையுமே சொன்னவன்..
ஆனால் ஷாலினி அதையும் மறுத்து விட்டாள்.. ஆனால் முன் போல் சோகம் முகம் காட்டாது தெளிந்து பேசுவதில் ராகவ் அதற்க்கு மேல் மனைவியை வற்புறுத்தவில்லை.. ஆனால் ஒர் ஆண்டுகள் கழித்து ஒரு குழந்தையை தத்தாவது எடுத்து கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருந்தான்..
ஆனால் மனைவி இப்போது சம்மந்தமே இல்லாது வாழியாதன் பெயர் எடுக்கவும். முதலில் அவர்கள் வீட்டவர்கள் இவளுக்கு குழந்தை இல்லாததை சுட்டி காட்டி ஏதோ மனது புண் படும்படி பேசி இருக்கிறார்கள் என்று தான் நினைத்தது..
ஆனால் ஷாலினியின் பேச்சு, அவன் நினைத்த வழி செல்லாது வேறு ஒரு வழியில், அதுவும் அவன் கனவிலும் நினைத்து கூட பார்க்காது..
ஷாலினி வாய் வழி மூலமாகவே.. “ காலேஜீல் நல்லா படிப்பான்.. யார் கிட்டேயும் பேச மாட்டான்.. அதுல ஒரு க்ரேஸி. நான் லவ் சொன்ன போது ஒத்து கொண்டாலுமே வெளியில் அவ்வளவா போனது கிடையாது.. போனிலும் எப்போவாவது தான் பேசினது.
அத்தை வந்து உங்களுக்கு என்னை கேட்ட போது.” என்று மனைவி சொன்னதுமே பாவம் ராகவ் ஆர்வத்தோடு தான் தன் மனைவியின் முகம் பார்த்தது..
இப்போவாவது.. “அத்தை கேட்டதுமே.. வாழியாதனை நான் லவ்வே பண்ணல. என்று புரிந்தது என்று சொல்வா என்று தான் பார்த்தான்.பாவம் வருடக்கணக்கில் தன் மாமன் மகள் மீது காதல் கொண்டு மணந்த அந்த கணவன்.. ஆம் ஆண்டு கணக்கு காதல் தான் ராகவுடையது..
ஆனால் பாவம் ஷலினி சொன்ன.. “ அப்போ வாழி வசதி எனக்கு தெரியாது. தெரியப்படுத்தல.. அப்போ நீங்கலா வாழியா எனும் போது உங்களை தான் என் மனசு தேர்வு செய்தது..” என்று அந்த வார்த்தை கணவனின் மனது எந்த அளவுக்கு காயப்படுத்தும் என்று தெரியாது தான் தன் பாட்டுக்கு ஷாலினி பேசி கொண்டு சென்றது.
இதே ஷாலினி ஒரு மன நிலையில் இருந்து இருந்தால், தனக்கு பாதிக்கப்படும் ஒரு விசயமும் அவள் மூச்சு விட்டு இருக்க மாட்டாள் தான்..
ஆனால் அவள் மனதின் அதிகப்படியான மன அழுத்தம் ஆனது.. உண்மை சொல்லி விட்டால் போதும் என்ற நிலைக்கு தள்ளி விட்டது.. அவளின் இத்தனை நாளின் தனிமை.. அனைத்தும் சொல்லி விட்டாள்.
கடைசியாக… “ ஆனா இப்போ எனக்கு நீங்க மட்டும் தாங்க வேண்டும் வேறு எதுவும் வேண்டாம்ங்க.. வேண்டாம்..” என்று சொன்னவள் ஒரு எதிர் பார்ப்போடு கணவன் முகத்தை பார்த்த ஷாலினி.
“ என்னை விட்டு விட மாட்டுங்க தானே. ப்ளீஸ் நான் செய்தது தப்பு தான்.. ஆனா இப்போ உங்க மீது இருக்கும் என் காதல் நிஜம்.ப்ளீஸ்..” என்று தன் கை பிடித்து கேட்ட ஷாலினியின் முகத்தை பார்த்த ராகவுக்கு அவள் இத்தனை சொல்லியும், அவளை விட்டு விடும் எண்ணம் இல்லை தான்..
இருந்தும்.. மனைவி சொன்ன உண்மையை ஜீரணித்து கொள்ள அவனுக்கு சிறிது நாள் தேவைப்பட்டது.. அதையே தான் மனைவியிடமும் சொன்னான்.
“ எனக்கு இந்த பிரச்சனை என்று தெரிந்து என்னை நீ விட்டு விட்டு போக நினைக்கல தானே.. அதுவும் அதுவா இதுவா என்று சாய்ஸ் பார்த்து என்னை கல்யாணம் செய்து கொண்ட நீயே விட்டு போகாத போது.
தன் மனதை தொட்டு.. “ காதலுக்கு அர்த்தம் தெரிவதற்க்கு முன்னவே காதலிக்க ஆரம்பித்து உன்னை கல்யாணம் செய்து கொண்ட நான் உன்னை விட்டு எப்படி போவேன்..” என்ற கேட்டவன்..
“ உடம்பை பார்த்து கொள்..” என்று விட்டு மீண்டும் தன் லக்கேஜை எடுத்து கொண்டவன் .. மீண்டும் மனைவி பக்கம் பார்வையை செலுத்தி.
“ எனக்கும் டைம் வேணும்.. அதுக்குள்ள நீ ஏதாவது செய்து கொள்ளாதே.” என்று வார்த்தையோடு வெளியேறி இருந்தான்..
ஷாலினியின் வாழ்க்கையில் ராகவ் இப்படி ஒரு முடிவு சொல்லி விட
இங்கு பொள்ளாச்சியில் சொந்த அக்கா அம்மா என்று சூழ்ச்சிக்கு ஆளாகிய அமராவின் நிலையோ.. இயற்க்கை மற்றும் கள்ளன் இருவரின் சூழ்ச்சிக்கு ஆளாகியதோடு.. இதனால் தன் உயிருக்கு மட்யும் அல்லாது தன் இரு உயிரின் உயிருக்கும் ஆபத்து வந்து சேரும் என்று நினைத்து இருந்தால், அமரா கண்டிப்பாக பொள்ளாச்சிக்கு சென்று இருக்க மாட்டாளோ என்னவோ.