தந்தை தாய்.. “நம்ம குடும்பத்தில் இது வரை வீட்டிற்க்கு வந்த பெண்கள் அழுதோ கஷ்டப்பட்டோ அம்மா வீட்டிற்க்கு போனது கிடையாது.. ஊரு பாக்க தான் மகிழ்ச்சியா வைத்து இருப்போம்.. பிள்ளை உண்டாகிய சமயத்தில் யாரும் வேண்டாம். என்று சொல்லிட்டு போறா என்றா அவள் மனது எவ்வளவு வேதனை பட்டு இருக்கும்..” என்று அவர்கள் பேச்சு முழுவதும் அமரா சார்ந்தே இருந்தது.
ஒரு வழியாக வாழியாதன் தன் பெறோர்களிடம்பேறோர்களிடம் ராசியாகி விட. அடுத்து அப்பத்தா தன் பேச்சை அமராவிடம் ஆரம்பித்தார்..
“அமரா குழந்தை பெத்த உடம்பு.. உடலுக்கும் சரி.. மனசுக்கும் சரி ஒய்வு தேவை.. ஆனா இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் வீட்டில் இருந்து எல்லோரும் வர்றாங்க.. உன் அக்கா அத்தானும் சேர்த்து தான்..” என்று அப்பத்தா சொன்னதும்..
இவ்வளவு நேரமும் முதலில் கோபம் பின் சமாதானம் என்று பேசி கொண்டு இருந்த இடம் இப்போது அப்படியே அதற்க்கு எதிர் பதமாக அனைவரும் அமைதியாகி விட்டனர்..
அப்பத்தா தான் திரும்பவும்.. “ என்ன சொல்ற டா.. உனக்கு வேண்டாம் என்றால் என்றா சொல்.. திரும்ப ஒரு போனை போட்டு அப்படியே சென்னைக்கு திரும்ப சொல்லி விடுகிறேன்..” என்ற அப்பத்தாவின் இந்த பேச்சுக்கு அழகும் நீல கண்டனும் அவரை பார்த்து முறைத்து வைக்க..
சும்மாடா என்று வாய் அசைவில்அசைவி சொன்னவர் மீண்டும் அமராவிடம்.. “ என்னம்மா சொல்ற உன் அப்பாவுக்கு போனை போடட்டா.” என்று தன் கையில் இருக்கும் பேசியை எடுக்க..
உடனே அமராவிடம். .. “வேண்டாம் அப்பத்தா வேண்டாம்..” என்ற மறுப்பு வந்தது..
அமராவின் பேச்சுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. அவள் தான் மனது காயம் பட்டு இருக்கிறாள்.. அவள் தாய் வீடு. எது என்றாலும் அவள் தான் முடிவு எடுக்க வேண்டும்..
அந்த முடிவு அமராவின் அம்மா வீட்டவர்கள் வரும் முன் எடுத்தால் நன்றாக இருக்கும் என்பது தான் அப்பத்தாவின் எண்ணம்.
உறவு கோபத்தில் முற்றிலும் முறித்து கொள்ளும் உறவு கிடையாது..
அதை தான் அப்பத்தா அமராவிடம்.. “உறவு கோபத்தில் முற்றிலும் முறித்து கொள்ளும் உறவு கிடையாது.. அதை தான் அப்பத்தா அமராவிடம்..
“ கணவன் உறவு கூட பிடிக்கவில்லை என்றால், இப்போ டைவஸ் எல்லாம் இருக்கு இருவருக்கும் பிடிக்காது அப்படி சேர்ந்து இருக்க தேவை இல்லை என்று சட்டம் சொல்லுது..
ஆனா தாய் வீட்டுக்குவீடுக்கு அது போல சட்டம் எல்லாம் கிடையாது அமரா.. பிறந்தது முதல் நாம இறந்த போது நம்ம உடம்புல விழும் கோடி துணி கூட தாய் வீட்டவர்களுடையது..” என்று அப்பத்தா அமராவிடம் சொல்லி கொண்டு இருக்க..
அப்பத்தா கணவனை பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து கொடுக்கலாம் என்ற அந்த பேச்சில் வாழியாதன் தன் அப்பத்தாவை முறைத்து பார்த்து..
“அம்மூவை அவள் அம்மா வீட்டோடு கோர்த்து விடனும் என்றால் வேறு எந்த ஒரு உதாரணமும் உங்களுக்கு தெரியாத..” என்று கேட்டவனிடமும் சும்மா என்று சைகை செய்ய.
வாழியாதன் அப்போதும் தன் அப்பத்தாவை முறைத்து கொண்டு தான் பார்த்தான்..
அமரா அப்பத்தாவின் பேச்சில் யோசிப்பில் ஆழ்ந்து போனவள்.. பின். “ வரட்டும் அப்பத்தா. ஷாலினியும்ஷாலியும் அத்தானுமே வராங்கலா.” என்று கேட்டவள்.. . பின் ஒன்றும் பேசாது டையடா இருக்கு நான் ரெஸ்ட் எடுக்க போறோன் என்று விட்டாள்..
அவளின் அந்த சோர்வு உண்மையில் டையடா இருக்கா. இல்லை வேறு ஏதாவதா என்று யோசித்த வாழியாதன்..
“ நான் வேணா அவங்க வரும் போது கோயம்பத்தூர் போகட்டுமா..?” என்று மனைவியின் இந்த சோர்வுக்கு வேறு ஏதோ ஒரு காரணத்தை கற்பித்து கேட்டான்..
அமராவுக்கு ஏன் இப்படி கேட்கிறான் என்று புரியவில்லை.. புரிந்த பின்..
“நான் உங்களை சந்தேகப்படல. இப்போ இல்ல எப்பவும் பட மாட்டேன்.. என் கோபம்.. என் கிட்ட உண்மையை மறச்சதில் தான்.. அது கூட நீங்க உண்மை சொல்லி இருந்தா கண்டிப்பா உங்களை கல்யாணம் செய்து இருப்பேனா தெரியல.
ஏன்னா என் அம்மா கண்டிப்பா உங்களுக்கு என்னை கல்யாணம் செய்து கொடுத்து இருக்க மாட்டாங்க. அதோட இன்னொன்னு எனக்கு தெரியும் என் அக்காவோட அந்த எக்ஸ் லவ் கூட வரம்பு மீறாது தான் இருந்து இருக்கும்..
அப்படி நீங்க வரம்பு மீறி பழகி இருந்தா. என் அக்கா எந்த காரணத்திற்க்காக உங்களை ப்ரேக்கப் செய்ய காரணம் சொன்னாங்கலோ.. அது இல்லை என்று நீங்க உங்களை பத்தின உண்மையை சொல்லி கண்டிப்பா என் அக்காவை கல்யாணம் செய்து கொண்டு இருப்பிங்க..” என்று அழுத்தம் திருத்தமாக சொன்ன அமரா.
“இன்னொன்னும்.. அந்த கல்யாணத்தில் உங்க கிட்ட காதல் இருந்து இருக்காது அது சுத்தமா உங்க கிட்ட இருந்து காணாமல்காணமல் போய் இருக்கும்..’ என்ற மனைவியின் பேச்சில் சத்தியமாக வாழியாதன் மட்டும் அல்லாது அப்பத்தா அழகு.. நீல கண்டன்..
தன் மருமகள் தன் மகனை புரிந்து கொண்ட விதத்தில் அவர்களுக்கு அவ்வளவு பெறுமை.. வாழியாதன் யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்கவில்லை.. இழுத்து அணைத்து கொண்டு உச்சிதனில் ஒரு முத்தம் கொடுத்தான்..
அமராவின் இந்த பேச்சில் வாழியாதன் குடும்பம் மட்டும் வியக்கவில்லை.. அமராவின் குடும்பமும் தான் அவள் பேச்சில் அதிசயத்து வாசலியே அவள் பேச்சை கேட்டு அப்படியே நின்று விட்டனர்.
ஷாலினியும் தன் கணவன் ராகவிடம் அது தான் சொன்னாள்.. ஜஸ்ட் பேச்சு தான். அப்படி அப்பரி பழகி இருந்தால், நான் உங்களை திருமணம் செய்து இருக்க மாட்டேன் என்று.. ஆனால் ராகவுடைய எண்ணம் அது அல்ல அவள் செய்தது தவறு.. அது தான்..
அமரா பேச்சு விட்டு தன் அறைக்கு போக பார்த்த போது தான் நீல கண்டன் அமராவின் குடும்பத்தை பார்த்தது..
“வாங்க வாங்க ஏன் அங்கேயே நிற்கிறிங்க.?” என்று வர வேற்றார்.. கூட அழகு அப்பத்தாவும் வாங்க என்று அழைத்தாலுமே ஒரு வித தயக்கம் அமராவின் பெற்றோருக்கும் ஷாலினிக்கு இருந்தது. இதில் தயக்கம் இல்லாது அவர்கள் அழைத்ததுமே வீட்டுக்குள் நுழைந்தது ராகவ் மட்டுமே.
வந்ததோடு வாழியாதன் கை பற்றி.. “ வாழ்த்துக்கள் ஒரு பாலில் சிக்ஸ் எடுத்து அந்த பால் நோ பால் ஆனால் எப்படி.. அது போல ஜாக்பார்ட் தான்..” என்று சொல்லி கிண்டலும் செய்தான்..
ராகவ் வாழ்த்தை மனதார ஏற்றுக் கொண்ட வாழியாதன்.. அவனின் கிண்டலுக்கு ஒரு விதமாக கூச்சத்துடன் சிரித்தாலுமே, ராகவுக்கு விசயம் தெரியுமா..? என்ற சந்தேகம் வாழியாதனுக்கு..
மனைவியின் முன் காதல் தெரிந்தவன் எப்படி மனைவியின் எக்ஸ் லவ்வரிடம் இப்படி பேச முடியும் என்று யோசிக்கும் வேளயில் அமராவின் கை பற்றி வாழ்த்தியதோடு லேசாக அவளை அணைத்தும் விடுவித்தான்..
இருவருக்குமே பன்னிரெண்டு வயது வித்தியாசம்.. அதனால் ராகவவ் எப்பொதும் அமராவிடம் ஒரு தங்கையிடம் பழகுவது போல் தான் பழகுவான்..அதனால் ராகவுக்கு
அதோடு சின்ன வயதிலேயே ராகவுக்கு ஷாலினியை பிடிக்கும் என்பதால் அமராவிடம் பேசுவது எதுவாகி போனது..
ஆனால் அதை பார்த்த வாழியாதனுக்கு தான் கண்ணில் புகை வராத குறையாக பார்த்திருந்தான்.. ராகவுக்கு வாழியாதனின் அந்த பார்வை முதலில் புரியவில்லை.. புரிந்த பின்..
“முதல்ல எனக்கு இவள் தாய் மாமன் பெண்.. அடுத்து மச்சினிச்சி.. இரண்டு போஸ்ட் வைத்து கொண்டு இருக்கேன்..” என்று அமராவின் தோள் மீது கை போட்டு கொண்டு சொல்ல..
அப்பத்தாவும்.. “ ஆமா ஆமா இப்போ கூட எங்க ஊருல அத்தை மகன் மாமன் மகன் இருந்தா.. அவங்க சம்மந்தம் சொன்ன பின் தான் வெளியில் பெண் எடுக்கனும்.. இல்லேன்னா கல்யாண வீட்டில் வந்து பிரச்சனை செய்வாங்க..”
அப்பத்தாவுக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லாது சீராக போக வேண்டும்.. பேத்தியின் முகமே இப்போது தான் தெளிந்து இருக்கிறய்ஹு.. பேரன் குரல் இப்போது தான் முன் போல் இருக்கு.. மீண்டும் ஒரு பிரச்சனை வேண்டாம் என்பது அவர் எண்ணம்..
அதோடு அப்பத்தா ஷாலினி ராகவோடு வருகிறாள் என்றதும், மீண்டும் ஒரு பஞ்சாயத்தா..என்பது தான்..
இப்போது ராகவ் இப்படி பேசவும்.. அப்பத்தாவும் இந்த பேச்சு வார்த்தையை நல்ல மாதிரியே கொண்டு செல்ல விரும்பினார்..ஆனால் பேசும் போது ராகவுக்கு விசயம் தெரியுமா..? இப்போது தெரியாது பின் தெரிந்து மீண்டும் பிரச்சனை வருமா என்று மனதில் பலதும் யோசித்து கொண்டு தான் பேசியது..