இடியோடு கூடிய மழை விட்டு ஒரு மணி நேரம் கடந்திருக்க, இரவு மணி பத்து. நள்ளிரவு நேரத்தை போல இருள் சூழ்ந்திருக்க, வெளியே பால்கனியில் நின்று மழை விட்ட ஒன்றிரண்டு தூறலோடு வரும் குளிர் காற்றை, உடல் குளிர அனுபவித்து கொண்டிருந்தாள் மதுமிதா.
இந்த மாதிரி ஏகந்த இரவு இவளை பித்தம் கொள்ள வைக்கும். பால்கனி கம்பியில் படர்ந்திருந்த மல்லிகை பந்தல் வசமும், மழை நின்ற பின் வரும் மண் வாசமும் உள்ளத்து உணர்ச்சியை தட்டி எழுப்ப, அங்கிருந்த மர ஊஞ்சலில் சாய்ந்து சுகமாய் கனவுகளில் மிதந்திருந்தாள் பெண்.
ஏதேதோ சுகமான கனவுகளும், கற்பனைகளும் மனதில் வலம் வர, மனம் உற்சாகத்தில் பொங்கியது.
கனிந்த முகம் தான் மதுமிதாவுக்கு. கண்களோடு முகமும் குழைந்து சிரிக்கும். பார்த்த உடன் ரசிக்க தோன்றும் முக அமைப்பு.
இரவு – தனிமை – குளிர் – இளைய ராஜா பாடல் என்று தன்னை மறந்து, என்னவென்று பிரித்தறிய சுகத்தில் திளைத்து இருந்தவளை களைத்தது ஒரு சத்தம். யாரோ மாடி ஏறி வரும் சத்தம் கேட்க. இனிய கனவு கலைந்து போன கடுப்போ டு வேகவேகமாக பால்கனி கதவை மூடியவள், அவசரமாக உள்ளே வந்து போர்வையை இழுத்து போர்த்தி படுத்து கொண்டாள்.
“மது” என்று ஒரு குரல் கதவை தட்ட,
அம்மா தான் என்று சலிப்பாக எண்ணியபடி கதவை திறந்தாள் மகள்.
கையில் பால் டம்ளரோடு நின்றவர், “ மழை திரும்ப வரும் போல, குளிர் காத்தும் சேராது. இந்த மாதிரி நேரத்தில போய் நனைஞ்சுட்டு நிக்காத ஜன்னி காணும். இந்தா பால் சூடா இருக்கு, குடிச்சுட்டு படுத்துக்க” என்று அதாட்டலோடு சொல்லியவர் கீழே செல்ல.
நல்ல பிள்ளை போல அமைதியாக தலையாட்டியவள், தாயின் தலை மறைந்ததும் நேரம் பார்க்க.
“ ஐயோ! ரொம்ப லேட் ஆச்சே!” என்று புலம்பிய படி. குளிர் சூழலையும் பொருட் படுத்தாது வேக வேகமாக ஒரு குளியல் போட்டு,ஈர துண்டை தலையில் சுற்றி கொண்டு பிரோவை திறந்தாள்.
பத்து நிமிச பட்டி மன்றத்தில் தன்னவனுக்கு பிடித்த காபி கொட்டை கலரில் சாப்ட் சில்க் சேரியும், குடை சிமிக்கியோடு கையில் கண்ணாடி வளையல் குடியேற, முதுகு வரை மட்டுமே இருக்கும் கட்டை கூந்தலை பிண்னி ஜாதி மல்லி பூவை சூடி தன் அலங்காரத்தை முடித்தவள். லிப்ஸ்டிக் மட்டும் போட வில்லை, அது தன்னவனுக்கு பிடிக்காது. முத்தம் கொடுக்கும் போது, அவன் முகம் முழுக்க சாயம் போல் ஒட்டுவதால் விரும்புவதில்லை.
நேர்த்தியாக தன்னை அலங்கரித்த பின். கொலுசு, வளையல் சத்தம் கேட்காதவாரு பூனை அடி வைத்து கீழே சென்றவள் ஹாலில் அமர்ந்து கொண்டாள்.
மெதுவாக கதவை தட்டும் சத்தம் கேட்க, பதறி போய் வேகமாக வந்து கதவை திறந்தாள். அவளுக்கு பயம், எங்கே உறங்கும் தாய், தந்தை விழித்து விடுவார்களோ என்று!
கதவை திறக்க உள்ளே வந்தவன் அவளை பார்த்து அதிர்ந்து நிக்க, சத்தம் கேட்டு உறங்கி கொண்டிருந்த மதுவின் அம்மா, அப்பாவும் எழுந்து வர பதறி போனாள் பதுமிதா.
வந்தவர்களும் மகளின் கோலம் கண்டு அதிர்ந்து நிற்க. அவளுக்கு தான் முகத்தை எங்கே கொண்டு வைப்பதென்று தெரியவில்லை.
அதிர்ந்து பார்த்தவன் கொஞ்சம் வெட்கமும், தயக்கமும் மேலிட மாமனார், மாமியாரை பார்க்க. தங்கள் அதிர்வை மறைத்து வீட்டின் மாப்பிள்ளையை வரவேற்றனர்.
அவன் கரிகால பாண்டியன். மதுமிதாவின் கரிமேட்டு கருவாயன். நலவிசாரிப்பு முடிந்து சத்தமில்லாமல் கணவன் மாடி செல்ல. மாட்டிக்கொண்டது என்னவோ மது தான். திருதிருவென விழித்த படி மது நிற்க,
ஒரு சின்ன சிரிப்போடு உள்ளே சென்றார் சுந்தரம். மது தயங்கியே தாய் முகம் காண, அங்கே எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“ என்னடி கூத்து இது? ராத்திரி பதினொன்று மணிக்கு மோகினி மாதிரி ரெடியாகி நீக்குற!” என்று கடுப்போடு தாய் மீனாட்சி கேட்க.
அவரை அசால்டாக பார்த்தவள், “ ரெண்டு புள்ளை பெத்துட்ட! உனக்கு தெரியாதா?” என்று எதிர் கேள்வி கேட்க.
“அடி செருப்பால! நாயே ! பேச்சை பாரு பேச்சை. டாக்டர் என்ன சொன்னாங்க. அப்ரேசன் பண்ணின உடம்பு பாத்து இருக்கணும்ன்னு சொன்னாங்க தானே. அதை மறந்துட்டு மூணு மாசத்துக்கு அப்புறம் புருசன் வாறன்னு” மேல சொல்ல முடியவில்லை மீனாட்சிக்கு. மகளே என்றாலும் எப்படி சொல்ல.
தற்போது தான் குழந்தை பெத்த உடம்பு, பார்த்து ஜாக்கிரதையாக தாங்க. இவள் என்னடா வென்றால்?
“இங்க பாரு மது! ஒரு ஆறு மாசமாது போகட்டும். முட்டு பிள்ளைன்னு உடனே நிக்கும். மூணு வருசமாச்சும் தள்ளி போனும் பார்த்துக்க. ஏற்கனவே டாக்டர் சொன்னது தானே, நியூ இந்த கூத்து எடுக்குற!” இதற்கு மேல் வெட்கம் கலைந்து மகளிடம் சொல்ல முடியவில்லை.
தாய் சொல் எல்லாம் அவளுக்கு ஏறவே இல்லை. மூன்று மாதத்திற்கு பின் பார்க்கும் கணவன் முகமே கண் முன் நின்றது.
மீனாட்சிக்கு ஆச்சர்யம் தான். இவனோடு வாழவே மாட்டேன் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணா இது.
பாலை சூடு செய்து தங்கள் அறைக்கு எடுத்து செல்ல, மகள் தமிழிசையை பார்த்தவன். பின் குளித்து உடை மாற்றி, சற்று முன் மது ரசித்த பால்கனியில் நின்று கொண்டான்.
விட்ட மழை சிறு தூறலாக குளிர் காற்றோடு வீச, வெட்கமும், தயக்குமாக மனைவி வருவதை பார்த்து அப்படி ஒரு சிரிப்பு கரிகாலனுக்கு.
அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து, கீழ் இருந்து மேல் வரை மனைவியை பார்த்தவன் அடக்கமாட்டாமல் சிரித்து விட.
வெட்கம் போய் கோபம் குடி கொள்ள, “ எதுக்கு இந்த சிரிப்பு?” என்று கையை ஆட்டி கடுப்பாக மது வினவ.
“எதுக்கு இந்த அலங்காரம்” எதிர் கேள்வி வர.
ம்ம்.. நாய் குலைக்கும் போது மழையில போய் நின்னு மறைஞ்சு போறனான்னு பார்க்க தான்” எகத்தாளமான பதில் வர
பாண்டியின் புன்னகை விரிந்தது . தன் கை கொண்டு மனைவியின் கையை சுண்டி இழுக்க, பூ போல அவன் மேலே விழுந்தாள்.
அவளை தன்னோடு சேர்த்து அணைத்து முகர்ந்து அவள் வாசம் பிடித்தவன்.
“ம்ம்… எவ்வளவு நாள் ஆச்சு!” என்று கிறங்கி போய் அவன் கூற.
“ம்ம்ம்ம்… எட்டு மாசம் பதிமூனு நாள்” என்று கணக்கை சரியாக கூற.
பாண்டியன் சத்தமாக சிரித்து விட,அவசரமாக அவன் வாயை பொத்தியவள்.
“ யோவ் வாயை மூடுயா! உன் சத்தம் கேட்டு, எங்கம்மா மேலேறி வந்து என்னை கூட்டிட்டு போனாலும் போய்ருவாங்க” என்று கணவனை அதாட்டியவள், அவனோடு உடல் அழுந்த ஒன்ற.
தவித்து போனான் பாண்டியன், “ மது பிரசவம் முடிஞ்சு மூணு மாசந்தான் ஆகிருக்கிகு. என்னை உசுப்பேத்தி விடாத!. அப்புறம் பஞ்சாயத்து உனக்கு தான்” என்று நயந்த குரலில் கணவன் சொல்ல.
அதை காதிலே வாங்காமல் கணவன் மார்பில் தஞ்சம் புகுந்தவள். தங்களின் ஏகாந்த பொழுதின் இனிமையை கூட்ட, கணவன் கற்று கொடுத்த இசையை கையில் எடுத்தாள்.
பாண்டியன் ஒரு தமிழ் வாத்தியார். இலக்கியங்கள் மேல் காதல் கொண்டவன் இசையில் உருகி நிற்பான். அதுவும், பழைய காதல் பாடல்களை விரும்பி ராசிப்பான், அவளையும் ரசிக்க வைத்தவன்.
கணவனை உருக்க, வீனையாக தான் காலையில் தேடி தேர்வு செய்த பாடலை மீட்ட தொடங்கினாள். தன் சேலை முந்தியை கொண்டு கண் தெரியுமளவு கணவனின் முகம் மறைத்வள்….,
என்ன மாதிரியான அழைப்பு இது. ஆறடி ஆண் மகன் தன்னையே வெட்கம் கொன்டு குறுக வைத்து விட்டாளே…, பாவி!. மனைவியின் காதல் உருக வைக்க தன்னைப்போல் பாடல் அவனில் இருந்தும் வெளி வந்தது.
“நம்மை போல் இன்பம்…!! அடைஞ்சதில்லை…
நா நூறு முத்தம் கொடுத்ததில்லை….!!
ஆனாலும் இன்னும்…
மிச்சமிருக்கு…!!
ஆயிரத்து நுத்தி எட்டு வகை இருக்கு…!!
போதும்.. போதும்.. எனக்கு
ஐயோ…! பொறுமையில்ல
எனக்கு…! நீ கட்டில் மேல வீடு கட்ட…! நானும் எங்கே ஈடு கட்ட…!! பூ போல உடம்பெனக்கு…!!