Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.14

4.13 வராண்டாவில் முதலுதவி 4.14- அமெரிக்க சட்டத்துல என்ன தண்டனை தெரியுமா? கூப்பர் குடும்பமும் ஸ்மித்தும் உள்ளே நுழைந்ததும் கயலும் கால்டனும் உள்ளுக்குள் நடுங்கித்தான் போயினர். அதிலும் ஸ்மித் கேட்ட கேள்வியில் கயல் இன்னும் பீதியானாள். “எப்படி அந்த ட்ரில் போட்ட கயல்?” என்று ஸ்மித் கேட்டதும் கயலின் பார்வை செலீனா பக்கம் திரும்பியது. அவருக்கு புத்திர சோகத்தைப் பரிசளித்துவிட்டோமா என்று கண்கள் கலங்க குற்ற உணர்வுடன் பார்த்தாள் கயல். “என்னாச்சு Prof! அவரு பிழைச்சுட்டாரா?” “ம்.. […]

Readmore

காற்றெல்லாம் காதல் 4.13

4.12. மீண்டும் ஒரு கலவரம் 4.13- வராண்டாவில் முதலுதவி கெல்லி கூப்பரைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது பிராட் கூப்பரின் அறிக்கைகள் கயலிடம் சமர்பிக்கப்பட்டன. அதைப் பார்த்த கயலின் பார்வைகள் விரிந்தன. “உங்களுக்கு உடனடியா ஒரு சின்ன சர்ஜரி தேவைப்படுது. 1 நொடி கூட தாமதிக்கக் கூடாது” என்று அவசரமாய்ச் சொல்லிவிட்டு செவிலிகளுக்கும் படிக்கும் மருத்துவர்களுக்கும் படபடவென பல உத்தரவுகள் போட்டாள் கயல். கூப்பர் குடும்பத்தினருக்கு ஒன்றுமே புரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அன்றும் இரவு நேர எமர்ஜென்ஸி டூட்டி சர்ஜன் […]

Readmore

காற்றெல்லாம் காதல் 4.12

4.11 மீண்டும் ஒரு தேவதை 4.12- மீண்டுமொரு கலவரம் முத்தமளித்த காரணமாகக் கயல் செலீனாவைக் கை காட்டுவாளென்று கால்டன் சற்றும் எதிர்பார்த்தாரில்லை! ஆச்சரியமாய்க் கேட்டவர், கயல் விளக்கியதும் நம்ப முடியா மனநிலைக்குப் போனார். “ஆமா! உங்க அம்மா தான் காரணம்!” “சுத்தமா புரியல்ல!” “எவாஞ்சலினைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்கறதுக்கு நீங்க சொன்ன காரணத்தைச் சொன்னாங்க! அதைக் கேட்டதும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்” “என்ன சொன்னாங்க?” “நீங்க சொல்லுங்க என்ன சொன்னிங்கன்னு!” “ஐ ஃபவுண்ட் த உமன் ஆஃப் மை […]

Readmore

காற்றெல்லாம் காதல் 4.11

4.10 சொல்லட்டுமா.. 4.11- மீண்டும் ஒரு தேவதை “உன்னைப் பைத்தியக்காரத்தனமா காதலிக்கிறேன்” என்று சட்டென்று சொல்லிவிட்ட கால்டனின் அணைப்பும் குரலும் பார்வையும் கயலை வேரோடு சாய்த்துவிட்டன. இதனை வெளிப்படுத்த கயல் தந்த ஒற்றை முத்தம் கால்டனுக்குப் போதிய தைரியத்தை அளித்துவிட்டது. அதுகாறும் மறுக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் உள்ளம் திறக்காதிருந்தவர், அன்று, தைரியமாய் நம்பிக்கையோடு தன்னுள் வளர்ந்துவிட்ட காதலை வார்த்தைப்படுத்தினார். இடைவெளியற்ற நிலையில் இருவரின் பார்வைகளைப் போல் இருவரின் உடல்களும் தழுவலில் இருக்க, காற்றெல்லாம் காதல் மணக்க, இரும்பும் […]

Readmore

காற்றெல்லாம் காதல் 4.10

4.9 தடுமாறிய கால்டன் 4.10- சொல்லட்டுமா? முத்தமிட்டுச் சத்தமில்லாமல் கயல் இடத்தைக் காலி செய்துவிட, கால்டனோ தலைகுப்புற கவிழ்ந்துவிட்டார். உடம்பெல்லாம் என்னவோ செய்வது போல் உணர்ந்தார். தலை சுற்றியது. மூச்சு வாங்கியது. அமர்ந்து தண்ணீர் அருந்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டார். மேலே பறந்துகொண்டிருந்தவர் ஒரு வழியாக 10 நிமிடங்களில் சுயநினைவுக்கு வந்தார். கனவில்லை, பிரமையில்லை, நிஜமாகவே கயல் தான்! முத்தம் தான் கொடுத்தாள்! காதல் பார்வை தான் பார்த்தாள்! என்று தெளிவாக்கிக் கொண்டார். பிறகென்ன.. ஓட்டம் தான்.. கயலைத் தேடினார். […]

Readmore

காற்றெல்லாம் காதல் 4.9

4.8 இன்னைக்கு இங்க தங்க முடியுமா? 4.9- தடுமாறிய கால்டன் கயல் உள்ளே வந்ததும், செலீனாவின் BP அளவினைச் செக் செய்தாள். அதிகமாகத்தான் இருந்தது. பிறகு இருவரும் பேச ஆரம்பித்தனர். விடிய விடிய பேசினர். செலீனா கயலைப் பற்றி அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். இந்தியாவில் அவள் வளர்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் ஆச்சரியமாய்க் கண்கள் விரிய வாய் பிளக்க கேட்டுக்கொண்டிருந்தார். தான் வளர்ந்த விதத்தையும் பணக்கார வாழ்க்கை முறையையும், கயல் சொல்லச் சொல்ல மனதுக்குள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தார். […]

Readmore

காற்றெல்லாம் காதல் 4.8

4.7 செலீனாவும் கயலும் 4.8- இன்னிக்கி இங்க தங்க முடியுமா?! ஓ.பி.டியில் இருந்து ஒரு இடைவேளையில் செலீனாவைப் பார்க்க வந்தாள் கயல். ஹன்னா இல்லை. பதிலுக்கு நிக்கின் மனைவியும் மகனும் இருந்தனர். கயலைப் பார்த்ததும் செலீனா பாஸிட்டிவாக உணர்ந்தார். ஏனென்று அவருக்கே புரியவில்லை. புன்னகை அரசியாய் உள்ளே வந்த கயல், கோப்புகளை ஆராய்ந்தாள். கெல்லி கூப்பரின் நிலையை விளக்கினாள். நம்பிக்கையூட்டினாள். உற்சாகப்படுத்தினாள். அங்கிருந்த நிக் கூப்பரின் 10 வயது மகனுடன் பேசினாள். அவன் சிரித்த முகமாய் இருந்தான். […]

Readmore

காற்றெல்லாம் காதல் 4.7

4.6 பொறாமைப்படுகிறேன் 4.7- செலீனாவும் கயலும் “அழனுமா?” என்று கயல் கேட்பாளென்று எதிர்பார்க்கவே இல்லை செலீனா. மனம் குமுறிக்கொண்டிருக்கும் போது, உயிரில் ஒருவித பயம் குடிகொண்டிருக்கும் போது, ஆறுதலாய்த் தோள் தொட்டு அழவேண்டுமா என்று ஒருவர் நம்மைக் கேட்பது எப்படி இருக்குமென்பதை, அந்த பெரும் பணக்காரிக்கு, செல்வாக்கான அந்த பெண்மணிக்கு, நொடிப்பொழுதில் உணர்த்திவிட்டாள் கயல் என்னும் எளிய, வயதில் சிறிய தமிழ்ப் பெண். “உன்னையும் என்னையும் போல உறுதியான பெண்கள் அழுதா அவமானம்” “என்னை உறுதியான பொண்ணுன்னு […]

Readmore

காற்றெல்லாம் காதல் 4.6

4.5 ஒரு ஸோஃபாவில் இரு தூக்கம் 4.6- பொறாமைப் படுகிறேன்! இருவரும் ஒரே சோஃபாவில் ஒருவர் அணைப்புக்குள் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது கயலின் அலைபேசி குறுஞ்செய்தி பெற்றதால் சிணுங்கவே, சட்டென்று உறக்கம் கலைத்தாள். கால்டனின் அணைப்பில் தான் உறங்குவதை உணர்ந்து நினைவுகளை நோண்டிப்பார்த்து நடந்தவைகளை நியாபகப்படுத்திக்கொண்டாள். தன் மேல் கிடந்த கால்டனின் கையினை மெதுவாக அப்பறப்படுத்தி அவர் உறக்கத்தைக் கலைக்காமல் எழுந்தாள். மணியைப் பார்த்தாள். அதிகாலை 5. தன் அறையிலேயே குளித்து அங்கே முன்பு வைத்திருந்த உடைகளில் […]

Readmore

காற்றெல்லாம் காதல் 4.5

4.4 கயலின் அறையில் 4.5- ஒரு சோஃபாவில் இரு தூக்கம் “என்ன இருக்கு நமக்குள்ள?” என்று கேட்ட அழுத்தக்காரிக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் விழித்தார் கால்டன். “சரி. இந்த வாக்குவாதம் இப்ப வேண்டாம். சாப்பிடலாம் வாங்க.” என்று அழைத்தாள் கயல். கால்டன் கடுப்பில் அசையவே இல்லை. கிட்டே சென்று கையைப் பிடித்து, “வாங்க..” என்று இழுத்தாள். மறுகணம் அவளது அதே கையினைப் பிடித்திழுத்து அணைத்துக்கொண்டார் கால்டன். கயலுக்குப் படபடவென இதயம் அடித்துக்கொண்டது. “உன்னைப் பார்த்த நிமிஷத்துலேருந்து […]

Readmore