இந்த வெங்காயம் நறுக்கும் இயந்திரம் அவன் எதிர்பார்த்த அளவு லாபத்தை வழங்காதிருக்க, மீனாட்சியிடம் அதைப் பற்றி உரைத்திருந்தான். லாபம் இல்லாவிடினும் நஷ்டமாகாமல் இருந்ததே போதும் என்று நிம்மதி அடைந்து கொண்டான். அடுத்தப் புதிய பொருளுக்கான தயாரிப்புப் பற்றி மீனாட்சி, அகல்யா மற்றும் கல்யாணியிடம் ஆலோசித்தான். அதுவும் இதுப்போல் பெரிய இயந்திரமாய் இருக்க, “ஏங்க நீங்க தான் ஒரு தடவை பெரிய வியாபாரத்தை விட, சின்னச் சின்னதா சில்லறை வியாபாரம் நிறையச் செய்யும் போது கிடைக்கிற லாபம் அதிகம்னு […]
Readmoreசுந்தரேஸ்வரன் வீட்டிற்குள் நுழைந்ததும், “அண்ணா எப்பவும் போல உன்னோட வீடியோ சூப்பர். எப்படித் தான் கேமரா முன்னாடி பயமே இல்லாம கலகலப்பா சிரிச்சிட்டே பேசுறீயோ!” வழமைப் போல் அவனைப் பாராட்டினாள் அவனின் தங்கை கல்யாணி. தங்கையின் பேச்சில் இதழ் விரிய சிரித்தவனாய், “தேங்க்ஸ்டா கல்லு” என்று தலையைப் பிடித்து ஆட்டியவனை, “இப்படிக் கூப்டாதனு எத்தனை தடவை சொல்றது” என அவன் கையில் கிள்ளினாள். அதற்கும் சிரித்தவனாய், “சாப்பிட்டியா?” எனக் கேட்டான். “அம்மாவோட கைமணத்துல சூப்பரான தோசையும் காரச் […]
Readmore