கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 7. சூழ்ச்சியின் சூட்சுமம் “காவிரிப் படப்பை உறந்தை அன்ன” என்னும் அகநாற்று பாடலுக்கு ஏற்ப உறந்தை என்ற உறையூர் சோழர் காலத்தில் செழித்து கொழித்து கோலோச்சி நின்றது. நேற்று சமைந்த எழிலரசி வெட்கத்தில் புன்னகைப்பது போல உறையூரின் கரைகளை கடக்கும் போது, ஆற்றின் வடிவில் இருக்கும் பொன்னி மகள் பூரித்து புன்னகைப்பாளாம்… அவ்வளவு காதல் காவிரிக்கு உறையூரின் கரைகள் மீது…. இரண்டாம் சாமம் கடந்து சில நாழிகைகள் ஆகியிருந்த மையிருட்டு மந்தார […]
Readmore