Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -29-part-3

 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -29-part-3 கீழே இரவு டிபன் ஓடிக் கொண்டிருந்தது. இருவருமாகக் கீழே இறங்கியவர்கள் கூட்டத்தில் ஐக்கியமானார்கள். மாயனும் சோலையும் இரவு உணவோடு கிளம்ப, நாளை வாசு குடும்பத்தை அனுப்பி வைக்கச் சொன்னார் ராஜன். சற்று நேரத்தில் ஹரீஷ் உள்ளே வந்தவன் முகமே சரியில்லை, ஆனால் தங்கத்தையும், தான்வியையும் பார்க்கவும் தலையசைத்து லேசாக நகைக்க, ” என்ன மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க” என விசாரித்த தங்கத்திடம் ” பைன் ” என்று விட்டு ஓரிரு […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -29-part-2

 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -29-part-2 புது வீட்டுக்குள் சிவா நுழையவுமே, “இந்தா வந்துட்டால்ல புதுப் பொண்ணு, உனக்கு என்ன கலர் சேலை வேணு முண்டு பார்த்து எடுத்துக்க” என்றார் சந்திரா. அசோதை, செல்வி, கௌசி என வடக்கம்பட்டி சென்று வந்ததை விசாரிக்கவும், கௌசியிடம் ” அப்பத்தா உங்களை விசாரிச்சமுண்டு , முடிஞ்சா வந்துட்டுப் போவீகலாம்” எனவும், தான்வி, ” அத்தை, கோல்ட் அவர் அம்மாச்சியைப் பார்க்கனும்னு சொல்லிண்டு இருந்தார். பசங்களையும் கூட்டிட்டுப் போய்ப் பார்த்திட்டு வருவோம்” […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -29-part-1

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -29-part-1 மானூத்து பாண்டியன் இல்லம். இன்று பாண்டிக் குடும்பத்தில் பேச்சியம்மாள் முதல் பூங்குயில் மகன் மகி வரை மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன் பேத்திகள் என அனைவரும் ஒன்று கூடியிருக்க, சத்தமும் சாப்பாடுமாக அந்தப் பெரிய வீடே அல்லோகலப் பட்டது. தங்கப் பாண்டியன், தான்வி தேஜஸ் ட்ரெயினைப் பிடித்து, அவர்களுக்கான ஆறுமணி நேரப் பயணத்தையும் அனுபவித்து வந்து சேர்ந்திருந்தனர். செல்லம் பட்டியிலிருந்து வந்த சோலையம்மா, மாயத்தேவனை வரவேற்ற வீட்டுப் பெண்கள், […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -28-part-3

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -28-part-3 சற்று பொறுத்து ரமேஷ் கதவைத் தட்டி விட்டு வரவும், அவர்கள் வேலையில் மூழ்க, அவனிடம் கண்ணைக் காட்டி விட்டு, சிவா கம்பெனியைச் சுற்றிப் பார்க்கச் செல்ல, வெளியே வந்தவளை, ஒரு பெண் வந்து அழைத்துக் கொண்டாள். வரிசையாக ஒவ்வொரு இடமாகக் கூட்டிக் கொண்டு அவள் விளக்க, அங்கிருந்த தொழிலாளர்களையும் விசாரித்து, அவர்கள் தேவையையும் அறிந்து கொண்டாள். அவளின் ஒவ்வொரு அசைவையும், அவன் சிசிடிவியில் பார்த்துக் கொண்டே தான் இருந்தான். இவள் […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -28-part-2

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -28-part-2 ” மதனி என்ஜாய்” என மீனாவும், ஐஸும் கண்ணடித்துவிட்டுப் போக, ” ஆமாண்டி மேலை சொரிஞ்சுக்கே என்ஜாய் பண்றேன்” என அவர்களை அனுப்பியவள், ” நீ தேய்ச்சு குளிச்சிட்டு வா. இங்க திறந்த வெளியா கிடக்கு” எனச் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் சங்கடத்தை உணர்ந்தவன், “நேத்து சாணி கரைச்சு ஊத்தினதில, இன்னுமே உனக்கு உடம்பு ஊறுதுல்ல அது தான். மருமகளுக்கு மருந்து சேர்த்துக் குடுத்திட்டு போறாரு. தோட்டத்துக்கு மத்தியிலே […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -28-part-1

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -28-part-1 முற்பகல் வேளை, முத்து இதோடு இரண்டு முறை வீட்டைச் சுற்றி வந்துவிட்டான். ஒவ்வொரு அறையாக எட்டியும் பார்த்தும் வந்து விட்டான். வீடும் மிகவும் அமைதியாகவே இருந்தது. பெண்கள் அனைவரும், தீபாவளி பலகாரம் சுடுவது போல் வருடப்பிறப்புக்கு இனிப்பு, முறுக்கு எனச் செய்து கொண்டிருந்தனர். பிள்ளைகள் இங்கிருந்தால், வேலை செய்யவிடமாட்டார்கள் எனச் சிவப்ரியா தலைமையில் தோட்டத்துக்கு அனுப்பியிருந்தனர். வீரன் அழைத்துச் சென்றிருந்தார். துரை மருத்துவ விடுப்பை முடித்து வேலையில் சேர்ந்திருந்தார். சிவபாண்டியன் […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே-27 -part-3

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே-27 -part-3 சிவப்ரியாவுக்கு , கம்பெனி, ஷேர் எதுவுமே மனதில் பதியவில்லை, கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் போது, பூங்குயில் எல்லாருக்குமாகக் காபி கொண்டு வந்தாள், அதை வாங்கும் போது ரமேஷின் முழுக் கைச் சட்டையில் பட்டுவிட்டது. ” அய்யோ, தம்பி தெரியாம பட்டுருச்சு, வாடா , சட்டையை அலசிடு, டீக்கரை சட்டுனு போகாது ” எனப் பூவு அழைக்கவும்,  ” பராவாயில்லைக்கா” எனப் பதறியவன் முழுக்கைச் சட்டை பட்டனை மட்டும் கழட்டி, அதை […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே-27 -part-2

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே-27 -part-2 இரண்டு நாட்களுக்குப் பிறகு முத்துவின் கம்பெனி கணக்கு வழக்கைப் பார்க்கவென ஶ்ரீவத்சன் க்ரூபிலிருந்து இருவர் முத்துவைப் பார்க்க வந்தனர். அதனால் ரமேஷையும் வரச் சொல்லி, புதுவீட்டின் ஹாலையே அலுவலறையாக மாற்றி வேலை நடந்து கொண்டிருந்தது. அந்த நேரம், கணவனின் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டே, சிவப்ரியா பிள்ளை குட்டிகளோடு அங்கேயே தான் சுற்றித் திரிந்தாள். போர்டிக்கோவில் கட்சிக்காரர்கள் வசதிக்காக, எப்போதுமே ப்ளாஸ்டிக் சேர்கள் கிடக்கும், ஐஸு, மீனா, ஹரிணி, […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே-27 -part-1

 மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே-27 -part-1 இரண்டு நாட்களாகச் சிவப்ரியா கணவனை முறைத்துக் கொண்டே தான் அலைகிறாள். அன்று இரவு அவன்,அவளது அலைப்பேசியைப் பிடுங்கி அத்துமீறிச் செய்த காரியங்களில் மிகவும் கடுப்பாகியிருந்தாள். ஆனால் அவளின் கடுகடுத்த முகமே முத்துவுக்கு ஆர்வத்தைத் தூண்ட அவளை மேலும் சீண்டவும் வைத்தது. முத்துவின் அணைப்பும், அதற்கடுத்த நொடி விலகலுமே அவளிடம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியிருந்தது. அவனின் தொடுகையில் அதிர்ந்து , நெகிழ்ந்தவள், அடுத்த அவன் விலகலில் தன் நிலை புரிந்தவளாக, அலைப் […]

Readmore

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே- 26-part-4

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே- 26-part-4 பரிமளா, செல்வியிடம், ஹரீஷ், ஐஸ்வர்யாவை தங்கள் வீட்டுக்கு அழைக்கவும், செல்வி, தினேஷோடு பரிமளாவை அவர்கள் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு பாலும் பழமும் சாப்பிட்டே வந்தனர். ” ஐஸு, இனிமே இது உனக்கு மாமா வீடு மட்டுமில்ல, உன் வீடும் தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீயும் ஹரீஷுமா வந்துட்டு போங்க” என்றவர். செல்வியிடம், ” பார்வதி அக்காளும், உன் நடு அண்ணனும், ஐஸை நல்லபடியா வச்சு பார்த்துக்க, எப்ப […]

Readmore