அத்தியாயம்?1 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும். ????? தமிழகத்தின் தென்கிழக்கு மாவட்டமொன்றுடன் சேரும் ஓர் சிற்றூரின் சிங்காரி அவள். அவ்வூரின் பெயரோ வேம்பூர். சிங்காரிக்கு வேறு அர்த்தம் ஏதுமிருந்தால் அதனை விடுத்து, இங்கு அவளது பெயர் என்று மட்டும் கொள்ளலாம். வேம்பூரில் நில புலன்கள் அதிகமிருக்கும் தனவான் ஒருவனது வீட்டின் கூடத்தில் நின்றிருந்தாள், […]
Readmore