காதல் 9 விடாமல் அடித்துக் கொண்டிருந்த போனைக் காணக் காண முகுந்தனுக்கு எரிச்சலாக இருந்தது. வேறு யாரும் இப்படி அழைத்தால் இரண்டாம் அழைப்பில் எடுத்து கடித்துக் குதறி இருப்பான். அழைப்பது அன்னை என்பதால் பொறுமையாக நின்றிருந்தான். அன்று முக்கிய அமைச்சரவை கூட்டத்திற்காக அனைத்து அமைச்சர்களும் வருவதால் அவனுக்கு பந்தோபஸ்து பணி கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நீண்ட நெடிய ஓ.எம்.ஆர் சாலையில் சாதாரணமாக வாகனங்கள் இறக்கை கட்டி பறக்கும். சர்வீஸ் லேனை மட்டும் திறந்து விட்டு பத்து நிமிடமாக முக்கிய […]
Readmoreகாதல் 8 புனித் பற்றி ஐயாக்கண்ணுவிற்கு எதுவும் தெரியாது. அவனை ஏன் பார்க்க வந்தோம், அவனுடன் ஏன் முகுந்தன் பேசிக்கொண்டு இருக்கிறான் என்ற எந்த தகவலும் அவருக்குத் தெரியாது. ஆனால் அவன் எடுத்து வைத்த காகிதங்களில் இருந்த மனிதர்களின் பின்புலம் பற்றி அவர் நன்கறிவார். இந்த முப்பது வருட போலீஸ் அனுபவத்தில் அவர் பார்த்த மோசமான மனிதர்கள் பட்டியலில் கண்டிப்பாக அவர்களுக்கு இடமிருந்தது. அப்படி இருக்க அவர்கள் வீட்டுப் பெண்ணை அந்த ஒடிசல் மனிதன் காதலிப்பதா? அவன் […]
Readmoreகாதல் 7 ஓடும் மகளைப் பிடித்து தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டார் குணவதி. “சாரி டி கன்யா.” என்று உள்ளார்ந்து அவர் கூறிய விதத்தில், “விடும்மா நீ பயத்துல தானே அப்படி பேசின. போனா போகுதுன்னு உன்னை மன்னிச்சு விட்டுடுறேன்” என்று குறும்பு கொப்பளிக்க கூறியவளைக் கண்டு, “இப்படி நீ எப்பவும் சிரிச்சிட்டு சந்தோஷமா இருக்கணும்ன்னு தான் கன்யா அம்மா ஆசைப்படுறேன். எங்க உன்னை எதுவும் பண்ணிடப் போறாங்கன்னு தான் ரொம்பவே பயந்தேன்.” என்று அவளை அவர் […]
Readmoreகாதல் 6 கன்யா தன் முகத்தில் விசிறியடிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரைப் பார்த்து, “என்னம்மா இது?” என்று அன்னையிடம் வினவ, “என்னை ஏன் டி கேட்டுட்டு இருக்க? வீட்டுக்கு வந்த அந்தப் பொண்ணோட சொந்தக்காரன் இதை கொடுத்து வாசல்ல கட்டி வச்சு, என்னை உன்னோட சேர்ந்து தொழில் பண்ண சொன்னான். எனக்கு இந்த அவமானம் தேவையா டி?” என்று எண்ணெயில் போட்ட கடுகாய் குணவதி பொரிய, “அம்மா என்கிட்ட இன்னிக்கு இவ்ளோ பேசுற நீ, அன்னைக்கு தாத்தா கிட்ட […]
Readmoreகாதல் 5 ஐயாக்கண்ணு தன் அருகே நின்று நிதானமாக கடலைமிட்டாய் தின்று கொண்டிருக்கும் முகுந்தனைக் கண்டு இவன் என்ன ரகம் என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார். அவர் தன்னை வெறிப்பதை நன்கறிந்த முகுந்தன் கண்டுகொள்ளாமல் மிட்டாயை விழுங்கிக் கொண்டிருந்தான். அவர் கண்களை அவனிடம் வைத்துகொண்டு ஜீப்பின் பானட்டை துடைத்துக் கொண்டு இருந்தார். அதைக் கண்டு சிரிப்பு வர, “என்ன அண்ணா பண்றீங்க? உங்களுக்கு என்கிட்ட ஏதாவது கேட்கணும்னா கேட்டுடுங்க.” என்று அவர் புறமாக திரும்பி நின்றான். அவர் […]
Readmore