Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சித்திரமே உன் தூரிகை நான் “இறுதி அத்தியாயம்- 30”

அத்தியாயம்- 30 இறுதி அத்தியாயம்… அவள் போகும் திசையை பார்த்துக் கொண்டு நின்றவனுக்கும் மனதின் ஓரம் சிறு வலி. அவள் ஆசைகளை அனைத்தையும் நிறைவேற்றி விட வேண்டுமென்று நினைப்பவன் தான் அவன். ஆனாலும் இருவரின் தாம்பத்தியம் ஆரம்பிக்கும் முன் பனிமலரின் மனதில் என்ன நினைவில் மட்டுமில்லாமல், உறக்கத்தில் எழுப்பும் போதும் ‘அம்மா’ என்ற சொல்லுக்கு பதில் ‘மாமா’ என்ற வார்த்தைகளால் நிறைந்து இருக்க வேண்டும் என்று முடிவோடு இருக்கிறான். தினம் தினம் காலையில் பனிமலரை எழுப்பி விடும் […]

Readmore

சித்திரமே உன் தூரிகை நான் “அத்தியாயம்- 29”

அத்தியாயம்- 29 தன் அன்னையை பார்த்தபடி உள்ளே வந்தவன் அவர் முன் நின்று புன்னகையோடு “இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்கம்மா” என்றான். விசாலாட்சியோ “என்னடா இது என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னிக்கு அழகா இருக்கேன்லாம் சொல்ற?” “இத்தனை நாள் சொல்லணும்னு நினைப்பேன். ஆனால் சொல்லாம விட்டுருவேன். ஆனால் இன்னிக்கு சொல்லியே ஆகணும்னு தோணுச்சும்மா” என்றவனின் கன்னத்தை வருடிக் கொடுத்த விசாலாட்சி, “ஏம்ப்பா இன்னிக்கும் ஜாகிங் போகணுமா என்ன? நேத்து தானே கல்யாணம் ஆச்சு. இன்னிக்கு ஒரு நாள் […]

Readmore

சித்திரமே உன் தூரிகை நான் “அத்தியாயம்- 28”

அத்தியாயம்- 28 மறுநாள் காலையில் எழுந்த பிறைசூடனோ தன் கைவளைவுக்குள் அடக்கமாக படுத்து உறங்கிக் கொண்டு இருந்த தன்னவளை பார்த்தவன் மென்மையாக புன்னகைத்து மெல்ல பெண்ணவளின் உச்சந்தலையில் முத்தம் ஒன்றை வைத்தான். அவள் தூக்கம் கலையாதபடி மெதுவாக எழுந்த சமயம் அவனின் கைப்பேசி அதிர்வை கொடுக்க யாரென்று எடுத்து பார்த்தான். அதிகாலையிலே கவினிடமிருந்து அழைப்பு வருவதை யோசனையோடு எடுத்தவன் ஹெலோ என்று கூட கூறவில்லை அதற்குள் எதிர்முனையிலிருந்த கவின் “சீக்கிரம் வா. அவசரம்” என்று மட்டும் கூறிவிட்டு […]

Readmore

சித்திரமே உன் தூரிகை நான் “அத்தியாயம்- 27”

அத்தியாயம்- 27 இரண்டு மாதங்கள் கழித்து சுப முகூர்த்த தினமான அன்றைய மாலை பொழுது நேரத்தில், கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த திருமாங்கல்யத்தை கையில் எடுத்து பார்த்தபடி வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டு இருந்தாள் பனிமலர். அன்றைய காலை பொழுது தான் பிறைசூடனுக்கும் பனிமலர் மற்றும் கவின் கீதாவின் ஜோடிகளுக்கும் திருமணம் நடந்து முடிந்து இருந்தது. திருமணமான கையோடு கவின் வீட்டார் சடங்கு செய்வதற்காக கீதாவை அழைத்துக் கொண்டுச் சென்று விட, பனிமலரோ பிறைசூடனின் கரத்தை உரிமையாக பற்றிக் […]

Readmore

சித்திரமே உன் தூரிகை நான் “அத்தியாயம்- 26”

அத்தியாயம்- 26 மெல்ல அவனிடமிருந்து விலகியவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான் பிறைசூடன். இப்பொழுது அவனுக்கு தான் பேச வார்த்தைகள் வரவில்லை. முதல் முதலாக ஒரு பெண்ணிடமிருந்து கிடைக்கும் இதழ் தீண்டல். அதுவும் பிடித்த பெண்ணிடமிருந்து தானாக கிடைக்கும் இதழின் சுவையே தனி தானே. அந்த சுவையை ருசித்தவனால் அத்தனை எளிதில் ருசியிலிருந்து வெளிப்பட இஷ்டம் இல்லாமல் அடிக்கடி தன் உதட்டை ஈரம் செய்துக் கொண்டு இருந்தான் பிறைசூடன். பனிமலருக்கோ வெட்கம், அவளே நினைத்து […]

Readmore

சித்திரமே உன் தூரிகை நான் “அத்தியாயம்- 25”

அத்தியாயம்- 25 வந்தவர்கள் மறுநாள் கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டு இருக்க, அஸ்வினோ காலையில் எழுந்ததிலிருந்து விடாமல் “நான் வரல. மாமாவுடன் இங்கேயே இருக்க போறேன்” என்று அனைவரிடமும் மாற்றி மாற்றி கொஞ்சிக் கொண்டு இருந்தான். விசாலாட்சியோ “பாவம் சின்ன பையன். இதுவரை பிறைசூடனுடனே வளர்ந்துட்டான்ல. அதான் அவனை பிரிந்து இருக்க முடியல போல. அவன் வேணா இங்கே ஒரு வாரம் இருந்துட்டு வரட்டுமே. நம்ம மட்டும் கிளம்பலாம் கீதா” என்று பேரனுக்காக பேச, “அம்மா சும்மா இருங்க. […]

Readmore

சித்திரமே உன் தூரிகை நான் “அத்தியாயம்- 24”

அத்தியாயம்- 24 காலை உணவை அனைவரும் சேர்ந்து ஒன்றாக முடித்து விட்டு காபியை குடித்தார்கள். பின் அன்றைய பொழுது அங்கேயே கழிய, அனைவருமே சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர். பனிமலருக்கு தான் அங்கே இருப்பவர்களிடம் ஒட்டவே முடியவில்லை. சாதாரணமாக அவளால் அவர்களுக்கு மத்தியில் இருக்க முடியாமல் திணறி தான் போனாள். அவர்கள் சிரித்தால் இவள் பேருக்கென்று சிறிய புன்னகையை வீசுவாள். அவளிடம் ஏதாவது கேள்வி கேட்டால் ஓரிரு வார்த்தையில் பதில் கூறிவிட்டு மீண்டும் அமைதியாகி விடுவாள். அன்றைய […]

Readmore

சித்திரமே உன் தூரிகை நான் “அத்தியாயம்- 23”

அத்தியாயம்- 23 மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பனிமலர் இன்னுமும் உறக்கத்தில் தான் இருந்தாள். நேற்று இரவு முழுவதும் பழைய நினைவுகலில் சரியாக உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தவளுக்கு விடியற்காலையில் தான் தூக்கமே வந்தது. ஆனால் பிறைசூடன் வழக்கம் போல் காலையிலே எழுந்து உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று உடற்பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து இருந்தான். வீட்டினுள் நுழைந்ததும் நேராக குளியலறைக்குச் சென்று தன்னை சுத்தம் செய்து வந்தவன் தேனீர் தயாரித்து எடுத்துக் கொண்டு […]

Readmore

சித்திரமே உன் தூரிகை நான் “அத்தியாயம்- 22”

  அத்தியாயம்- 22 கிட்டத்தட்ட அரைமணி நேரம் அதே இடத்தில் அமர்ந்து பிறைசூடனை மனதிற்குள் திட்டிக் கொண்டு இருந்தவள் செவிகளில் பிறைசூடனின் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு வதங்கி இருந்த தன் வதனத்தை சட்டென்று மாற்றிக் கொண்டு அங்கே இருந்த சிறிய தலையணையை எடுத்து தன் மடியின் மீது வைத்துக் கொண்டாள் குட்டையான டவுசரின் அசௌகரியத்தால். அறையினுள் இருந்து நேர்த்தியாக தயாராகி வந்த பிறைசூடனை ஒரு கணம் தன்னையும் மறந்து பார்த்தாள் பனிமலர். ஆளை மயக்கம் […]

Readmore

சித்திரம் உன் தூரிகை நான் “அத்தியாயம்- 21”

அத்தியாயம்- 21 அணைப்பில் இருந்த பனிமலரை விலக்கி விட்டவன் விழிகளை நிமிர்ந்து பார்த்தாள், அவனின் கலங்கிய பார்வை எத்தனை வலிகளை சுமந்துக் கொண்டு இருக்கிறது என்று அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் விறுவிறுவென மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தவள் முன் சண்முகத்தின் ஆட்டோ வந்து நிற்க ஆச்சர்யமாக அவரை பார்த்தாள் பனிமலர். சண்முகமோ அங்கே பாக்கெட்டில் கைகளை விட்டபடி அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்த பிறைசூடனை பார்த்தார். சட்டென்று திரும்பி […]

Readmore