Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஏலே! நீ ஒரு ஆர்டிஸ்ட்லே!

  அத்தியாயம் – 1 பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தா! “ஹாஹா… என்னடா இது வீடியோ ஆரம்பிச்ச உடனே நம்ம தொப்பை பிள்ளையார் ஸ்லோகம்னு நினைக்கிறீங்களா…  இன்னைக்கு அவர் பிறந்த நாள் இல்லையா! அதான் இன்னைக்கு கணேஷா ஸ்பெஷல்… வணக்கம் அன்பு சொந்தங்களே! நான் உங்க சுட்டி கண்ணம்மா… நீங்கள் இப்ப கேட்க போறீங்க சுவாரஸ்யமான சுட்டியான கியூட்டி கதைகள்! இன்றைய […]

Readmore

அழகிய தீயே அன்புள்ள திமிரே

திமிர் 4 :  அந்த மருத்துவ வளாகத்தின் உள்ளே கர்ப்பிணிகள் நடை பயிலும் இடத்தில் தன் வயிற்றை பிடித்து நடந்துக் கொண்டிருந்தாள் அக்ஷிதா.  மருத்துவர் கூறிய நாளிற்கு இரண்டு வாரத்திற்கு முன்பே அக்ஷிதாவின் அழுத்தம் காரணமாக வலி வந்து விட இதோ இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.  அதிகாலை 3 மணியிலிருந்து வலி விட்டு விட்டு வர தேவகி அனலிற்கு தகவலை சொல்லிவிட்டு உடனே மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து விட்டார். அனலும் உடனே விடுமுறை […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 14

அத்தியாயம்-14 நேத்ராவுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நந்தகுமாருக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி. அந்த சந்தோஷத்தில் வந்தவனிடம், “என்ன அண்ணா ரொம்ப அமைதியா வர்ற, உனக்கு பிடிச்சிருக்கு தானே” என்றாள் நேத்ரா. “ம்ம் ஏன் பிடிக்கலைன்னா, உடனே பிரேக் அப் பண்ணிப்பியா என்ன?” என்ற நந்தனிடம் அமைதி காத்தவள், “அண்ணா நெஜமாவே உனக்கு பிடிக்கலையா” என்றாள் பயத்துடன். “ஹே குட்டி பிசாசு, அதெல்லாம் ரொம்ப நல்ல மாதிரியா தெரியுறாரு, உன் மேல ரொம்ப பாசமா இருக்காரு, விட்டா இப்போவே […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 13

அத்தியாயம்-13 வெளியில் இருந்து பார்க்க சிறிய ஹோட்டலாக இருந்தாலும், உள்ளே விசாலமான புல்வெளியில் ஆங்காங்கு டேபிள் மற்றும் சேர்கள் இடப்பட்டிருக்க, டேபிள் மேல் ஒளி விளக்குகள் அதன் மெல்லிய தங்க நிற ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது. நந்தன் மற்றும் நேத்ராவின் வருகைக்கு முன்பே அங்கே அவர்களுக்காக காத்திருந்தான் நளன். சந்தன நிற டீ ஷர்ட்டும் அதற்க்கு ஏற்றார் போல் பேண்ட்டும் அணிந்து, இடக்கை அவன் அலைபேசியை பிடித்து அவன் காதுக்குக் கொடுத்துக் கொண்டிருக்க, வலக்கையயை அவன் இடுப்பில் […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 12

அத்தியாயம்-12 பால் வண்ண சுடிதாரில் இருந்தவளின் எளிமையான அழகில், தன் கோபம் தானாக குறைவதை உணர்ந்தவன் கோபத்தை இழுத்துப் பிடிக்கும் பொருட்டு அவள் புறமிருந்து பார்வையைத் திருப்பி வேறுபுறம் நோக்கினான். நேத்ரா கார் அருகே வந்தவுடன் ஆட்டோ லாக்கை விடுவித்தவன், அவள் முன்னே ஏறியதும் காரை வேகமாக செலுத்தினான். காரில் ஏறி அமர்ந்தது முதல் நளன் நேத்ராவிடம் எதுவும் பேசாமல் இருக்கவும், ஏன் அவள் புறம் திரும்பாமல் கூட இருக்கவும், அங்கிருந்த சாக்லேட்டைப் பிரித்து உண்டு கொண்டே […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 11

அத்தியாயம்-11 நளன் அவன் மடிக்கணிணியுடன் அவன் பால்கணியில் அமர்ந்து நேத்ராவைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தான் சமூக வலைத்தளங்களில்… “ஹே… வனிதா போன எடுக்க இவ்வளவு நேரமா, என்ன டி பண்ற” என்ற நேத்ராவிற்கு, “பேசுவ ம்மா பேசுவ… உனக்கென்ன, உங்க அம்மா நீ சாப்பிட்ட பிளேட்டை கூட உன்னைய கழுவ விட மாட்டாங்க, எனக்கு என்ன அப்படியா அம்மா கூட இருந்து அடுப்படிய ஒதுங்க வைக்க வேண்டாமா” என்ற வனிதாவிடம், “ஓஒ சரி சரி, சும்மா தான் […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 8(2)

அத்தியாயம்-8(2) மேக்கப் முடிந்தவுடன் “ஹ்ம் அழகா தான் இருக்க, சரி ஒழுங்கா ஆடுவியா” என்ற வனிதாவிடம் “என்ன டி இப்படி கேக்குற, நான் தான் முறையா பரதநாட்டியம் கத்துக்கிட்டேனே” என்றாள் நேத்ரா. “கத்துகிட்ட… இருந்தாலும்…. சரி ஆல் தி பெஸ்ட், நான் போயி பைக்கை எடுக்குறேன், நீ… என்று சுற்றிலும் தேடியவள், ஆஹ் இந்தா இந்த ஷாலை தலை மேல போட்டுக்கோ அப்புறம் பைக்ல போகும்போது மேக்கப் கலைஞ்சிரும்” என்ற வனிதா பைக்கை எடுக்கச் சென்றாள்.   […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 8(1)

அத்தியாயம்-8(1) நான்கு வருடங்களுக்கு முன்பு…    இடம்: டொராண்டோ அந்த டிசம்பர் மாதக் குளிரில் வெள்ளை வண்ணப் பனிப் பாறைகள் எங்கு பார்த்தாலும் குவிந்து கிடக்க, கொட்டும் பனியில் இரு ஜெர்கின்கள் அணிந்தாலும், உடலை குளிர் தாக்கும் -40 டிகிரி குளிரில், கனடாவின் தேசிய விளையாட்டான ஐஸ் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தனர் நம் நளனும் வினோத்தும். அவர்கள் குழுவில் உள்ள வெளிநாட்டு நண்பர்களுடன் விளையாண்டு முடித்தவர்கள் அங்கிருந்த படிகளில் அமர்ந்து இளைப்பாறினர். தண்ணீரை வாய்க்குள் சரித்துக் கொண்டிருந்த […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 7(2)

அத்தியாயம்-7(2) உள்ளே நான்கைந்து பேர் அழைக்கப்பட அடுத்த ஆளாக “நேத்ரா ஈஸ்வரமூர்த்தி” என்ற பெயர் அழைக்கப்பட்டது. நிதானமாக எழுந்தவள் ஆழ மூச்செடுத்து விட்டு, கிரே நிற பெயர் பலகையில் கருப்பு நிற வண்ண எழுத்துக்கள் மின்ன வினோத் சக்கரவர்த்தி என்ற பெயர் பலகையைத் தாங்கிய அறைக் கதவை திறந்தாள். அந்த கனமான கதவை தள்ளியவள் எதிரே கண்டது, அமர்ந்திருந்த இருவரை அதில் ஒருவன் வினோத், மற்றொருவன் நளன். இந்தியா கிளம்புவதற்கு முன்பே நளனுக்கு உதவுவதற்காக வினோத்தின் கம்பெனி […]

Readmore

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 7(1)

அத்தியாயம்-7(1) முகிலினங்கள் வான் மேகத்திற்குள் தங்களை மறைத்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்க, சுற்றிலும் டூலிப் மலர்கள் தங்கள் வண்ண வண்ண இதழ்களால் நிலத்தை வண்ணமயமாக்க, அந்த டூலிப் மலர்களுக்கு நடுவே அவள் உடுத்தியிருந்த ஸ்லீவ் லஸ் மேக்ஸி உடையை காற்று அதன் போக்கில் இழுக்க, சில்லென்ற காற்று உடலுக்குள் ஊடுருவி மேனியில் நடுக்கத்தை விளைவிக்க, கைகளை விரித்து, சிப்பி இமைகளை மூடி, கன்னக்குழியுடன் விரித்துவிட்ட கூந்தல் காற்றில் தவழ நின்றிருந்தவள் குளிர் காற்றினால், கைகளை மடக்கி மார்பின் […]

Readmore