அத்தியாயம்-14 நேத்ராவுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நந்தகுமாருக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சி. அந்த சந்தோஷத்தில் வந்தவனிடம், “என்ன அண்ணா ரொம்ப அமைதியா வர்ற, உனக்கு பிடிச்சிருக்கு தானே” என்றாள் நேத்ரா. “ம்ம் ஏன் பிடிக்கலைன்னா, உடனே பிரேக் அப் பண்ணிப்பியா என்ன?” என்ற நந்தனிடம் அமைதி காத்தவள், “அண்ணா நெஜமாவே உனக்கு பிடிக்கலையா” என்றாள் பயத்துடன். “ஹே குட்டி பிசாசு, அதெல்லாம் ரொம்ப நல்ல மாதிரியா தெரியுறாரு, உன் மேல ரொம்ப பாசமா இருக்காரு, விட்டா இப்போவே […]
Readmoreஅத்தியாயம்-13 வெளியில் இருந்து பார்க்க சிறிய ஹோட்டலாக இருந்தாலும், உள்ளே விசாலமான புல்வெளியில் ஆங்காங்கு டேபிள் மற்றும் சேர்கள் இடப்பட்டிருக்க, டேபிள் மேல் ஒளி விளக்குகள் அதன் மெல்லிய தங்க நிற ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது. நந்தன் மற்றும் நேத்ராவின் வருகைக்கு முன்பே அங்கே அவர்களுக்காக காத்திருந்தான் நளன். சந்தன நிற டீ ஷர்ட்டும் அதற்க்கு ஏற்றார் போல் பேண்ட்டும் அணிந்து, இடக்கை அவன் அலைபேசியை பிடித்து அவன் காதுக்குக் கொடுத்துக் கொண்டிருக்க, வலக்கையயை அவன் இடுப்பில் […]
Readmoreஅத்தியாயம்-10 நேத்ராவை கல்லூரி வளாகத்தினுள் இறக்கிவிட்டு நேராக கார்த்திகேயன் அறைக்கு சென்ற நளனை பிரின்சிபாலும், மற்ற ஆசிரியர்களும் வரவேற்றனர். பின் விருந்தினர்களுடன் விழா நடக்கும் அரங்கத்திற்கு சென்றவன், அவர்களுடன் அமர்ந்தான். வரவேற்பு நடனம் நேத்ரா என்றவுடன் நளனின் கண்கள் அசுவாரஸ்யமாக மேடையைத் தொட்டது. அங்கு பச்சை வண்ண பரதநாட்டிய உடையில் கால்களில் சலங்கையுடன் கைகளிலும் கால்களிலும் சிவப்பு வண்ண சாயம் பூசப்பட்டு, கண்களிலும் உடல் மொழியிலும் அபிநயம் பிடித்தவளைக் கண்ணிமைக்காது பார்த்தான் நளன். அதை இப்போது […]
Readmoreஅத்தியாயம்-8(1) நான்கு வருடங்களுக்கு முன்பு… இடம்: டொராண்டோ அந்த டிசம்பர் மாதக் குளிரில் வெள்ளை வண்ணப் பனிப் பாறைகள் எங்கு பார்த்தாலும் குவிந்து கிடக்க, கொட்டும் பனியில் இரு ஜெர்கின்கள் அணிந்தாலும், உடலை குளிர் தாக்கும் -40 டிகிரி குளிரில், கனடாவின் தேசிய விளையாட்டான ஐஸ் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தனர் நம் நளனும் வினோத்தும். அவர்கள் குழுவில் உள்ள வெளிநாட்டு நண்பர்களுடன் விளையாண்டு முடித்தவர்கள் அங்கிருந்த படிகளில் அமர்ந்து இளைப்பாறினர். தண்ணீரை வாய்க்குள் சரித்துக் கொண்டிருந்த […]
Readmoreஅத்தியாயம்-6 சோஃபாவில் கால்நீட்டி அமர்ந்து பொட்டேடொ சிப்ஸை கொரித்துக் கொண்டே டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்த நேத்ரா, ஒரு சீரியலின் பெயரைச் சொல்லி “அம்மா அம்மா ஓடி வா ***** சீரியல் போட்டுட்டான்”என்று கிச்சனில் இருந்த ரேணுகாவை அழைத்தாள். “இதோ வந்துட்டேன், அதுக்குள்ளே போட்டுட்டானா, ச்ச கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டான், இந்த தேங்கா சட்னியை தாளிக்க விடுறானா, படுபாவி” என்று சலித்தவர், “சரி இடைவேளை போடவும் வந்து தாளிப்போம்” என்று அடுப்பில் வைத்த தாளிப்பு […]
Readmoreஅத்தியாயம்-5 இடம்: சென்னை சென்னையின் வெப்பம் தார் சாலையைக் கூட இளக்கிக் கொண்டிருக்க, ஓரளவு நடுத்தர மக்கள் இருசக்கர வாகனங்களிலும், பஸ்ஸிலும் பயணிக்க, ஏசி காரில் செல்வோருக்கு ஏசி போதாமல் வெப்பம் தாக்கி…அஸ் புஸ் என்று புலம்பி கொண்டிருக்க, என் பிள்ளைகளின் வயிற்றுப் பசியை விட இந்த வெயில் ஒன்றும் எங்களுக்கு பெரிய விஷயம் இல்லை என்று அங்கே தெருக்களிலும், நடை வண்டியிலும் கடை வைத்திருப்பவர்கள் அவரவர் வேலையை கவனிக்க, இங்கே நேத்ராவும் அஸ் புஸ் என்று […]
Readmoreஅத்தியாயம்-4 இடம்: டொரோண்டோ நேரம் இரவு ஏழு மணியைத் தொட்டிருக்க… அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலுடன் பாரும் சேர்த்து அமைக்கப்பட்டிருந்ததால் பார்க்கிங்கில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. பார்க்கிங்கில் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக இருந்தாலும் அது அது அதற்கென்று ஒதுக்கப்பட்ட இரு மஞ்சள் நிற கோடுகளுக்குள் கனகச்சிதமாக பொருந்தியிருந்தது. வெள்ளிக்கிழமை என்றால் வீக்கெண்ட் மூடுக்கு சென்றுவிடும் அந்நாட்டவர்கள், அந்த வெள்ளிக்கிழமையிலும் ஆண், பெண் நண்பர் குழுக்களாகவும், இளம் மற்றும் வயது முதிர்ந்த காதல் ஜோடிகளாகவும், தனிமையில் சிலரும் […]
Readmore“நூத்தி ஏழு… நூத்தி எட்டு” அந்தச் சிறிய மருத்துவமனையின் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருந்தான் ஆதி… அதைச் சரியாகக் கணக்கு எடுத்துக்கொண்டிருதான் தமிழ்… “மச்சி நூத்தி எட்டு வேண்டுதல் ஓவர் இப்ப ஒக்காரு” அந்த அறையில் இருந்த சிறியத் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதிலும் தன்னை வெறுப்பேற்றும் விதமாக வேறு சேனலை மாற்றாமல் அந்த மினிஸ்டரின் இறப்பு செய்தியையே பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்… “இப்ப நீ அத மாத்தாம இருந்தன்னு வை, கத்திய எடுத்துக் கழுத்துலச் சொருகிடுவேன்” […]
Readmore‘மீன்வளத்துறை அமைச்சர் திரு. குமரன் நெடுஞ்செழியன் சென்னையில் உள்ள அவரின் காட்டன் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவின் காரணமாக அகால மரணமடைந்தார். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் நேரில் சென்று அவருடைய இறுதி சடங்கில்…’ “என்னங்க இவரை நம்ம வீட்டுல கூட ஒரு தடவ சந்திச்சிருக்கேன்ல?” நளினி, ஹரியின் தாயார் தொலைக்காட்சியில் வெளியாகிக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்தவர் தன் கணவனிடம் சந்தேகத்துடன் கேட்டார்… “ஆமா மா இவரு கூட கொஞ்சம் மனஸ்தாபம் இருக்கு, அரசியல்வாதின்னு நல்லா காமிப்பாரு […]
Readmoreவேர்க்க விறுவிறுக்க மருத்துவமனை வாயிலை அடைந்த ஆதவன் அங்கிருந்த ரிசப்ஷன் ஏரியாவில் ஆதியின் அறை எண்ணை கேட்டு ஓடினான்… அறையை நெருங்கி இருந்த நேரம் கண்ணில் பட்ட ஜெயனை பார்த்து அதிர்ந்து சிலையாய் உறைந்தான்… ஆதவனை பார்த்த ஜெயன், “மார்னிங் சார்” அந்த குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது… “உதய்?” “ம்ம்ம் இங்க தான் சார் இருக்காரு” தலையில் கை வைத்துச் சிறிது நேரம் யோசித்தவன் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம் என்ற அசட்டுத் தைரியத்துடன் முன்னேறினான்… ஐ.சி.யூ […]
Readmore