Warning: session_start(): open(/home/admin/tmp/sess_5101a9c3c86bbaa8c40ea32d12d3bff5, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64

Warning: session_start(): Failed to read session data: files (path: /home/admin/tmp) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64
Tamil Novels at TamilNovelWriterskarthika karthikeyan Archives - Tamil Novels at TamilNovelWriters

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 15.2 : இரவின் பனித்துளி!!!

அதற்கு மேல் அவளுடைய நெருக்கத்தை தாங்க முடியாமல் அவள் முகம் நோக்கி குனிந்தான் தீபக். அவனுடைய இதழ்கள் அவள் இதழ் மீது அழுந்தி பதிந்தது. அவனுடைய இதழ் தீண்டல் வெகு நேரம் நீடித்தது.   அவளை விட்டு பிரியும் எண்ணம் அவனுக்கு இருந்ததாகவே தெரியவில்லை. அவளும் அவனுடைய செய்கைக்கு உடன் பட்டு அசையாமல் இருந்தாள்.   அவனது முத்தமும், அவனுடைய இறுக்கமான அணைப்பும் அவளை மொத்தமாக சிதறச் செய்தது. ஒரு முத்தத்துக்காக அவளிடம் யாசகம் கேட்டவன் இன்று […]

Readmore

அத்தியாயம் 15.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 15 உந்தன் இனிமையான குரலில் செல்லக் குயிலின் இன்னிசையைக் கேட்டேன் நான்!!! தன்னுடைய போனை எடுத்த காயத்ரி “சொல்லுங்கம்மா”, என்றாள்.   “எப்ப வர காயு?”   “வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன் மா”   “எப்படி டி வர?”   “அது… அது வந்து…”   “மாப்பிள்ளை கூடயா வர?”   “ஆமா மா”   “சரி, நல்லதா போச்சு. தனியா எப்படி வருவியோன்னு உங்க அப்பா புலம்பிட்டு இருக்கார். நானும் அப்பாவும் பத்திரிக்கை […]

Readmore

அத்தியாயம் 14.2 : இரவின் பனித்துளி!!!

“ஆமா, போய் பேசிட்டு இருங்க மாப்பிள்ளை”, என்றார் முருகேசன்.   “இல்ல மாமா, நான் இங்கயே பேசுறேன்”, என்று தவிப்பாக சொன்னான். அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வதாம்?   “சங்கடப் படாதீங்க மாப்பிள்ளை. இதுவும் உங்க வீடு தான். சரி மாடிக்காவது போய் பேசிட்டு இருங்க. கூட்டிட்டு போ காயு”, என்றதும் “வா”, என்று சொல்லி மாடிக்கு அழைத்து சென்றாள்.   அவளுடனான தனிமையை தவிர்க்க தான் அவன் அப்படி யோசிக்கிறான் என்று அவளுக்கு […]

Readmore

அத்தியாயம் 14.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 14 உந்தன் காந்த கண்களும் சுந்தர புன்னகையும் தான் ஏழாவது அதிசயமா டி பெண்ணே!!!   சுற்றி இருந்த அனைவரும் அவர்கள் திருமண விஷயம் கேட்டு சந்தோஷமாக இருந்தார்கள். ஆனால் மணமக்களைத் தவிர. அவர்களுக்கும் சந்தோஷம் இல்லை என்று சொல்ல முடியாது. உள்ளுக்குள் குதூகலமாக இருந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாமல் தனித் தீவுகளாய் இருந்தார்கள்.   தீபக்க்கு அவளுடன் திருமணம் முடிவானதும் அவன் காதல் நிறைவேறிய சந்தோசத்தில் பறந்தான். ஆனால் அதை அவளிடம் அவன் காட்டவே […]

Readmore

அத்தியாயம் 13.2 : இரவின் பனித்துளி!!!

தீபக் அவள் வரவுக்காக ஆவலாக காத்திருந்தான். என்ன தான் போனாப் போறா என்று சொல்லி விட்டாலும் அவன் மனது துவண்டது அவனுக்கு தான் தெரியும். அடுத்த நாள் புன்னகையுடன் வேலைக்கு வந்தவளைக் கண்டு அவனுக்கு தான் வயிறு எரிந்தது.   “அடப்பாவி, பிக்ஸ் ஆகிருச்சா? இவ்வளவு சந்தோஷமா இருக்கா?”, என்று எண்ணியவனின் பார்வை அவளையே தொடர்ந்தது.   அவன் பார்வையையும் அவன் கோபத்தையும் தவிப்பையும் காயத்ரி உணர்ந்தே இருந்தாள். அவளுக்கும் அவனிடம் பேச ஆசை தான். ஆனால் […]

Readmore

அத்தியாயம் 13.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 13 தேன் சிந்தும் தமிழ் எடுத்து கவிதை புனைய வந்தேன் உந்தன் அழகைப் பாடி!!!   “என்ன டா பேசாம இருக்க? அவளை சமாதானப் படுத்து டா. இன்னும் பேசாம இருக்குறது தப்பு”, என்றான் மதன்.   “என்னை என்ன சொல்லச் சொல்ற மதன்? நான் ஏற்கனவே என்னோட காதலை அவளுக்கு புரிய வச்சிட்டேன். அதுக்கு அவ தான் பதில் சொல்லணும். இனி நான் ஒண்ணும் செய்ய முடியாது. என்னை உண்மைலே அவ விரும்பிருந்தா அவளே […]

Readmore

அத்தியாயம் 12.2 : இரவின் பனித்துளி!!!

வீட்டுக்கு சென்றதும் தான் இருவருமே தங்களின் கிஃப்டை பிரித்துப் பார்த்தார்கள். அவனுக்கு இரண்டு டீஷார்ட் வாங்கிக் கொடுத்திருந்தாள் அவள். அவனோ அவளுக்கு பிடித்த கலரில் கேண்ட் பேக் ஒன்றை வாங்கித் தந்திருந்தான்.   அதன் பின் நாட்கள் அழகாக சென்றது. செமஷ்டர் எக்ஸாம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதம் இருக்கும் போது கல்சுரல் வந்தது. அன்று பெண்கள் அனைவரும் சேலை கட்ட முடிவு எடுத்திருந்தார்கள்.   அழகான பிங்க் வண்ண டிசைனர் புடவை அணிந்து, தலைக்கு மல்லிகைப் […]

Readmore

அத்தியாயம் 12.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 12 உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் எந்தன் நினைவுகள் உன்னையே வட்டம் அடிக்கும்!!!   அவர்கள் கிளாசில் இருந்த சுசீலா என்ற பெண்ணின் தந்தை டிராவல்ஸ் வைத்திருந்ததால் அவர்களின் பஸ் புக் செய்யப் பட்டது. இந்த ஆண்டு ஊட்டி செல்ல ஏற்பாடானது. வர மாட்டேன் என்று பிகு செய்தவர்களை அவர்களின் நண்பர்கள் வரச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.   காயத்ரியும் நான் வரலை என்று பிடிவாதம் பிடிக்க நந்தினி தான் கெஞ்சிக் கொண்டிருந்தாள். கடைசி வரை […]

Readmore

அத்தியாயம் 11.2 : இரவின் பனித்துளி!!!

“நீங்க சாரு அக்கா கிட்ட பேசினாலே உங்க கிட்ட சண்டை போடுவா. இப்ப நீங்க சாரு அக்காவை வீட்டுக்கே கூப்பிட்டா சும்மா இருப்பாளா?”   “ஹா ஹா, அது தான் கோபமா? சாருவும் இவளும் ஒண்ணா?”   “எனக்கும் அந்த சந்தேகம் கொஞ்சம் இருக்கு”   “என்ன சந்தேகம்?”   “சரி நேரடியா கேக்குறேன். நீங்க என் அக்காவை லவ் பண்ணுறீங்களா?”   “ஏன், என்னை உன்னோட மாமாவா ஏத்துக்க மாட்டியா?”, என்று உல்லாசமாக கேட்டான்.   […]

Readmore

அத்தியாயம் 11.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 11 தெம்மாங்கு பாட்டைத் தான் தூது விட்டேன் என்னவளின் நிலை அறிய!!!   ஒரு நாள் இங்கிலீஷ் செமினார் கிளாசில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களின் புரபஸர் சயின்ஸ் என்பது வரமா சாபமா என்ற டாபிக்கை போர்டில் எழுதினார்.   “இந்த டாபிக்ல நாம இன்னைக்கு குருப் டிஸ்கஷன் பண்ணப் போறோம். எல்லா குருப்பும் சேந்து அவங்க அவங்க குருப் குள்ள என்ன பேசலாம்னு டிஸ்கஸ் பண்ணுங்க. உங்களுக்கு பிஃப்டீன் மினிட்ஸ் டைம் தரேன். இப்ப […]

Readmore