Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனக்கொரு வரம் கொடு – 2 (2)

  உடனேயே, “ஓ கூட ஒரு பொண்ணிருந்தா தான் உங்க கேமரா வேலை செய்யுமோ?” என்று நக்கலாகக் கேட்டவன், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், சட்டென்று வேக எட்டுக்களில் சௌதாமினியை நெருங்கி தன் வலது கையால் அவளது வலது கரத்தைப் பற்றி ஒரு சுழற்று சுழற்றி தன்னருகே தன் கை வளைவில் நிற்க வைத்திருந்தான்.   அதில் அவள் திருதிருக்க, அவனுடைய அசிஸ்டண்ட்ஸ் பிரசாந்த், ஓவியா இருவரும் விழிகள் தெறிக்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.   “இங்கே […]

Readmore

எனக்கொரு வரம் கொடு – 2 (1)

  சௌதாமினி காலையில் எழுந்து பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். எந்நாளும் இல்லாத திருநாளாக அன்றையதினம், தன் தோற்றத்தில் வெகு அக்கறை எடுத்துக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.   ஆரஞ்சு வண்ண லெனன் புடவையும், அதை எடுத்துக்காட்டும் படியான அடர் நீல நிற டிசைனர் ப்ளௌஸும், ஒரு கையில் தங்க வளையலையும், மற்றொரு கையில் டைடன் வாட்சும் அணிந்து, மிதமான அலங்காரமும், வாசனைத் திரவியமுமாகத் தயாரானாள். அவளைப் பாந்தமாகத் தழுவிய புடவையின் முந்தானையைச் சரிய விட்டு உடுத்தியிருந்தவள், கழுத்தில் வழக்கமாக […]

Readmore

என் காதல் கனா 3

என் காதல் கனா 3 சதீஷ் சதீஷ் தன் கரிய நிற பல்சரை சைட் ஸ்டாண்ட் இட்டு அந்த காம்பவுண்டின் உள்ளே நிறுத்தினான். தலையில் இருந்து ஹெல்மெட்டை கழற்றியபடிக்கே, முதல் மாடி நோக்கி படிகளில் தாவி ஏறியவனை, அபார்ட்மெண்டின் நிலைவாசலின் முன்னால், காலையில் அன்னை போட்டிருந்த சிறிய அளவிலான காவி கோலம் வரவேற்றது. “காலையில போட்ட கோலம்… துளி கலையாம அப்படியே இருக்கு…இனி அடுத்த வார வெள்ளிக்கிழமை வரைக்கும் இதே கோலம் தான்….” என மனதிற்குள் முனுமுனுத்தவண்ணம் […]

Readmore

Aruna Kathirs என் காதல் கனா 2

என் காதல் கனா 2 “அண்ணா, நேக்கு இந்த சொத்து அவசியம் இல்லை. ஆனா என் பொண்ணோட படிப்புக்கு இந்த வீடு தேவை. இன்னைக்கு இந்த வீட்டை வித்தா குறைஞ்சது எழுபது லட்சமாவது பெரும்” என்று தன் அண்ணாவின் முகத்தில் இருந்து கண்களை அகற்றாமல் பேசிய லக்ஷ்மியிடம் இந்த முறை ராமனாதன் அசட்டை காட்டவில்லை. “அப்படியே விக்கறதுன்னாலும், அதுல சரிபாதி எங்களுக்கு மட்டும் இல்லையா என்ன…விக்கணும்னா நாங்களும் சம்மதிக்கனுமில்லையா” என அமைதியாக நின்று விட்ட கணவரை ஒரு […]

Readmore

Aruna Kathir’s என் காதல் கனா – 1

“கிருஷ்ணா நீ பேக்கனே…பரோ…..” என்று வியாசராயரின் கீர்த்தனையை முனுமுனுத்துக் கொண்டே அமைதியாக அன்றைய தினத்தின் சமையல் வேலையை செய்துகொண்டிருந்தாள் லக்ஷ்மி. கைகள் புடலங்காய் கூட்டிற்கு, காய் நறுக்கிக் கொண்டிருக்க, யமுனகல்யாணி ராகத்தில் அமைந்த பாடலை மெல்லமாக அசைப்பேட்டது உதடுகள். வெளியே பால்காரன் வந்துவிட்டதற்கு அறிகுறியாக, பைக்கின் ஹார்ன் ஒலி எழுப்ப, அடுக்களையில் இருந்து, சின்ன ரேழியைக் கடந்து கூடத்தின் நடுவில் போடப்பட்டிருந்த மரசோபாவினை சுற்றிக் கொண்டு வராண்டாவிற்கு பால் பாத்திரத்துடன் வரவும், பைக்கின் ஒலி மீண்டும் கேட்க, […]

Readmore

என் காதல் கனா _ teaser

வணக்கம் நல்ல உள்ளங்களே, பெரிய மன்னிப்பு மன்னிச்சுருங்க,..அதாவது பாருங்க கொரானா லாக்டவுன்ல WFH. இதுல, டிஃபன், காபி டீ பலகாரம், கபசுரகுடிநீர், மதிய சோறு, நைட் டிஃபன்னு ஒரு மினி சரவணபவன் ரேஞ்சுக்கு இறங்கி வேலை பார்க்கற இடைவெளியில அந்த “ஒன்றில் நில்லாயோ?” நிக்காம ஓடிப் போயிருச்சு.. அப்படியும் மீறி எடுத்து வச்சா ஒரே அழுவாச்சி கதையா வருது( ஒரு வேள நான் depression la இருக்கேனோ?). குடும்ப கதைன்னு ஆரம்பிச்சு ஒரு நாலு எபி வரைக்கும் […]

Readmore

மையலின் பிரதிபிம்பம்

பிம்பம் -1 “எம்.டி சார் வரும் நேரமாச்சு பேப்பர்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கா? இந்த காண்ட்ராக்ட் சைன் பண்ணதும் அவருக்கு ஃபாரின் டெலிகேட்ஸோட மீட்டிங் இருக்கு” என்று அங்கு மீட்டிங் ரூமில் இருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டு இருந்தான் அஜய். நம் நாயகன் சர்வாவின் பி.ஏ. சர்வஜித் ரகுநந்தன்- சென்னையில் உள்ள மிக முக்கிய பிஸ்னஸ்மேன்களில் சர்வாவும் ஒருவன். அவன் தனியாக தொழிலை கவனிக்க துவங்கி சில வருடங்கள் கடந்து விட்டன. அவர்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை […]

Readmore

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 04 – PART 02

*** இரவு நேரத்தில் குளிர்காற்று உடலைத் துளைக்க, தந்திருந்த போர்வைகள் எல்லாம் மதனிற்கு போதவேயில்லை. பொதுவாக இந்தளவு குளிரில் விரைவிலேயே உறக்கம் வந்துவிடும். மதன் மட்டும் சில நாட்களாக விதி விலக்காய் இருக்கிறான்.   அதீத குளிரினால்தான் வயிறு நிறைய உண்ணாதபோதிலும், மற்ற அனைவரும் நன்கு உறங்கி விடுகிறார்கள். என்னதான் அடிமை வாழ்க்கை வாழ்ந்தபோதிலும், உறக்க விஷயத்தில் இங்கிருந்தவர்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்களே! ஆனால், உறக்கம் மட்டும் போதுமா?   மதனின் சிந்தை முழுவதும் இங்கிருந்து தப்பிக்கும் […]

Readmore