இந்த வெங்காயம் நறுக்கும் இயந்திரம் அவன் எதிர்பார்த்த அளவு லாபத்தை வழங்காதிருக்க, மீனாட்சியிடம் அதைப் பற்றி உரைத்திருந்தான். லாபம் இல்லாவிடினும் நஷ்டமாகாமல் இருந்ததே போதும் என்று நிம்மதி அடைந்து கொண்டான். அடுத்தப் புதிய பொருளுக்கான தயாரிப்புப் பற்றி மீனாட்சி, அகல்யா மற்றும் கல்யாணியிடம் ஆலோசித்தான். அதுவும் இதுப்போல் பெரிய இயந்திரமாய் இருக்க, “ஏங்க நீங்க தான் ஒரு தடவை பெரிய வியாபாரத்தை விட, சின்னச் சின்னதா சில்லறை வியாபாரம் நிறையச் செய்யும் போது கிடைக்கிற லாபம் அதிகம்னு […]
Readmore“என்னடா தங்கம்! என்னாச்சு?” என லட்சுமி அவளிடம் குடிக்க நீரளிக்க, “ஒன்னுமில்ல அத்தை” எனத் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த மகளை யோசனையுடன் பார்த்தார் ருத்ரன். “நான் டிரஸ் மாத்திட்டுக் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன் அத்தை” என்றவாறு தனது அறைக்குள் சென்றாள் மீனாட்சி. அவள் பின்னோடேயே அறைக்குள் நுழைந்தாள் அன்னம். “கொஞ்ச நாளைக்கு இந்தக் கல்யாண பேச்சை தள்ளி போடுவோமா?” என ஆரம்பித்த ருத்ரன், “இங்க நடந்த அசம்பாவிதத்துக்குப் பிறகு ரொம்ப நாள் கழிச்சி வீட்டுல ஒரு […]
Readmoreசுந்தரேஸ்வரன் வீட்டிற்குள் நுழைந்ததும், “அண்ணா எப்பவும் போல உன்னோட வீடியோ சூப்பர். எப்படித் தான் கேமரா முன்னாடி பயமே இல்லாம கலகலப்பா சிரிச்சிட்டே பேசுறீயோ!” வழமைப் போல் அவனைப் பாராட்டினாள் அவனின் தங்கை கல்யாணி. தங்கையின் பேச்சில் இதழ் விரிய சிரித்தவனாய், “தேங்க்ஸ்டா கல்லு” என்று தலையைப் பிடித்து ஆட்டியவனை, “இப்படிக் கூப்டாதனு எத்தனை தடவை சொல்றது” என அவன் கையில் கிள்ளினாள். அதற்கும் சிரித்தவனாய், “சாப்பிட்டியா?” எனக் கேட்டான். “அம்மாவோட கைமணத்துல சூப்பரான தோசையும் காரச் […]
Readmoreதனது படுக்கையறையில் இருந்த சாளரத்தின் வழியே நிலவை வேடிக்கை பார்த்தவாறு ஆழ்ந்த சிந்தனைக்குள் இருந்த மீனாட்சியின் கவனம், அந்தச் சாளர விதானத்தில் (sunshade) இருந்து கேட்ட பறவையின் குரலிலும் அதன் இறக்கையின் படபடப்பிலும் அதன் மீது திரும்பியது. அவளது வீட்டினைச் சுற்றி எப்பொழுதும் ஆங்காங்கே புறாக்கள் பறந்த வண்ணம் இருந்தாலும், இது வரை அந்த இடத்தில் அவை அமர்ந்து கண்டிராத காரணத்தினால், அந்த இறக்கையின் படபடப்பைக் கொண்டு அதற்கு ஏதேனும் அடிப்பட்டிருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது. இந்த […]
Readmore