Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மகன்றில் ஒத்தாள் – 10

*10* நிச்சயப் புடவை எடுக்க இன்னும் ஐந்து நாட்களே இருக்கையில் யாழனின் முழு முதற்கவனமும் தங்கையின் ஒவ்வொரு அசைவிலும் உருப்பெருக்கியுடன் பதிந்தது. அவனின் கூறுபோடும் பார்வை அவளை எரிச்சல் படுத்த, அவனிடம் அவ்வப்போது மல்லுக்கு நின்றாள். இன்றும் அது போன்றதொரு நாள்தான். “கால் ஹிஸ்டரி, சோஷியல் மீடியா மெசேஜஸ் எல்லாம் பாத்தாச்சா? என் மேல நம்பிக்கையே இல்லையா உனக்கு?” என்று யாழன் கையிலிருந்த தன் அலைபேசியை பிடுங்கியவள் கோபத்தை வெளிப்படுத்த, அசராத அண்ணன், “ஆமா பாத்தேன். நான் […]

Readmore

மகன்றில் ஒத்தாள் – 9

*9* “யாரது? யாரோட பேசிட்டு இருந்த? வம்பு பண்ணானா? ஏன் உன் முகம் இப்படி இருக்கு? என்ன சொன்னான்? தப்பா பேசுனானா?” என்று கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக வர, திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் யாழினி. எதிரே யாழன் அவளை கூர்மையாய் பார்த்தபடி நின்றான். “இந்த நேரத்துல இங்க என்ன பண்ற? ஏன் இப்படி அமைதியா இருக்க?” அவனது கூர்பார்வையை சந்திக்க திராணியின்றி தலை கவிழ்த்தவள், “இல்லை ஒன்னுமில்லை.” என்றபடி யாழனை தாண்டி நடந்தாள். “இங்க எதுக்கு […]

Readmore

மகன்றில் ஒத்தாள் – 8

*8* எது நடந்துவிடக் கூடாது என்று தவித்தானோ அது நடந்துவிட, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் மணிகண்டனுக்கு. இதை யாரிடம் பகிர்ந்து தீர்வு காண்பது என்றும் புரியவில்லை அவனுக்கு. அவளைப் போலன்றி இவனுக்கு நண்பர்கள் சிலர் இருக்க அவர்களிடம் நடந்ததை விலக்கி இதை எப்படி சமாளிப்பது என்று யோசனை கேட்கலாமா என்றும் ஒருபுறம் சிந்தனை ஓட, அவளை பற்றி அவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற சஞ்சலம் வேறு. ‘அந்த துணை ஏன் என்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட […]

Readmore

மகன்றில் ஒத்தாள் – 7

*7* அன்று அலுவலகம் முடிந்தவுடன் வீட்டிற்குச் செல்லாமல் வண்டியை நேராக மணி வேலை செய்யும் கடைக்கு செலுத்தினாள். இவளைக் கண்டதும் அங்கு வேலை செய்யும் நபர் பத்து நிமிடத்தில் ஒவ்வொரு தட்டாய் எடுத்து வந்து அவள் மேசையில் அடுக்கினான்.  பாவையின் பார்வையோ மேசையை விடுத்து அக்கடை முழுதும் சுற்றி சுற்றி வந்தது. விழிமணிகள் மணியை ஆவலாய் தேட அவன் சிக்காமல் போக்கு காட்டினான். பொறுத்து பொறுத்து பார்த்தவள் அனைத்து உணவும் மேசைக்கு கொண்டு வந்து வைத்தவனை ஏறிட்டு, […]

Readmore

மகன்றில் ஒத்தாள் – 6.2

*6.2* “முடிஞ்சிடுச்சா? என்ன முடிஞ்சுச்சு? இப்படி மொட்டையா சொன்ன எனக்கு எப்படி புரியும்?” என்று மணி பதற,  ஆழியின் ஆழத்தை ஒத்த பெருத்த அமைதி அவளிடம். அவளின் அமைதி அவன் சமநிலையை அசைத்துப்பார்க்க, “என்னாச்சு?”  “இத்தனை வருஷமா எவ்ளோ அறியாமைல இருந்திருக்கேன்னு இந்த ஒரு வாரத்துல புரிஞ்சுது.” என்றாள் அடக்கப்பட்ட அகத்திலிருந்து. “என்ன ஏதேதோ சொல்றீங்க?” “ஒன்னும் இல்லை. மனசு சரியில்லை. வீட்டுக்கு போக பிடிக்கல. கொஞ்ச நேரம் இப்படியே இங்க உட்காந்துட்டு போகலாம்னு வந்தேன்.” சிரத்தையின்றி […]

Readmore

மகன்றில் ஒத்தாள் – 6.1

*6.1* காலையில் சுலோவின் குரலையும் மீறி ஹாலில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கினான் மணிகண்டன். ரவி வேலைக்கு கிளம்பும் பரபரப்பில் ஹாலில் சட்டை பொத்தானை போட, ரவியின் தலை தென்படவும்  சிற்றுண்டி செய்யும் மும்முரத்தில் இருந்த சுலோச்சனா வெளியே வந்து பெரியவனிடம், “நிஜமாவே இவன் வேலைக்கு போறானான்னு சந்தேகமா இருக்குடா. காலையில பத்து மணி வரைக்கும் தூங்குறான். அப்புறம் கிளம்பி போனா ராத்திரி தான் வரான். காலையில சாப்பிடுறதோட சரி மதியமும் நைட்டும் என்ன பண்றான்னே தெரியல. […]

Readmore

மகன்றில் ஒத்தாள் – 5

*5* அமர இடம் இல்லாத அளவு கூடிய கூட்டம் அனைத்தும் குறைந்து கடை அடைக்கும் நேரம் நெருங்குகையில் இன்னுமே ஏதாவது ஒன்றை மாற்றி மாற்றி ஆர்டர் செய்து உண்ணாமல் அமர்ந்திருந்தாள் யாழினி.  “ஒரு வாரமா சாப்பிடாமா இருந்திருக்கும் போல அந்த பொண்ணு… மெனுல இருக்குற எல்லாத்தையும் ஆர்டர் பண்ணிடுச்சு.” “ஆனா சாப்பிடல பாஸ்… எல்லாத்தையும் டேஸ்ட் மட்டும் பாத்து வச்சிருக்காங்க. பில் பே பண்ணா சரிதான்.”  அவளைப் பற்றி அங்கு வேலை செய்யும் மற்றொருவனும் கடை முதலாளியும் […]

Readmore

மகன்றில் ஒத்தாள் – 4

*4* “அவதான் புரியாம பேசுனான்னா நீயும் அவளுக்கு சேர்த்து ஒத்து ஊதுற? உனக்கு தெரியாதது இல்லையேமா… அவளுக்கு சொல்லி புரிய வைக்கலாம்ல. என்னை வில்லன் மாதிரி பாக்குறா அவ… முகம் கொடுத்து ஒழுங்கா பேசக்கூட மாட்டேங்குறா.” என்று மைனாவிடம் குறைப்படித்தான் யாழன். அன்று நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டி வேலை முடித்து வந்ததும் தனிமை கிடைத்த வேளையில் யாழன் மீண்டும் துவங்கினான். “என்ன புரியாம பேசுறா? வீடு வாங்கணும்னு ஆசைப்படுறது ஒன்னும் தப்பில்லையே? நீ வாங்கணும்னு ஆசைப்பட்டா இப்படியான […]

Readmore

மகன்றில் ஒத்தாள் – 3.2

முன் இருந்த வீட்டில் வாசலுக்கு வந்தாலே யார் என்ன என்று நோட்டமிடும் சிலபல கண்களுக்கு பயந்தே தேவையில்லாமல் வெளியே வரமாட்டாள். இங்கோ அந்த பயம் பின்சென்றிருக்க மனம் மங்கும் போதெல்லாம் வாசலே வடிகாலாய் இருந்தது. ஒரு அமைதியை தந்தது. இந்த வாசலை விட்டால் வெயிலில் காய்ந்து கிடக்கும் மொட்டை மாடிக்குத்தான் செல்ல வேண்டும். தனிமைக்கு இதமாய் பால்கனி எல்லாம் கிடையாது. ஆனால் இங்கும் ஒரு சிக்கல் முளைத்திருப்பது அவனைப் பார்த்ததும் புரிந்தது. முதல் சந்திப்பில் மன்னிப்பு வேண்டிய […]

Readmore

மகன்றில் ஒத்தாள் – 3.1

*3* வாரவிடுமுறை நாளான அன்று வீட்டில் அனைத்தும்  மெத்தனமாய் நடக்க, சோம்பலை விரட்டி பளிச்சென பேப்பர் பேனாவுடன் வந்தமர்ந்தாள் யாழினி.  “நீ எவ்ளோ சேர்த்து வச்சிருக்க யாழன்?” என்ற கேள்வியுடன் தன்னை அழைப்பதை உணர்ந்த அவளது அண்ணன் அலைபேசியிலிருந்து பார்வையை பிரித்து தங்கை மீது பதித்தான். “என்ன காலையிலேயே பேப்பர் பேனாவோட உக்காந்து இருக்க?”  “ம்ச் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம இதென்ன எதிர் கேள்வி கேக்குற? கெட்ட பழக்கம் இதெல்லாம்.” பேனாவாலே யாழன் கரத்தில் […]

Readmore