Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 💕16(2)

கலா கூறியது நூறு சதவிகிதம் உண்மையென கூற முடியாது. எனினும் அதனை மறுப்பதற்கும் இல்லை என்ற நினைவில் அவளுள் வேறு கேள்விகள் ஓடியது. ‘அப்பனுக்கு மட்டும் இந்த தெனாவட்டு எப்புடி?’ என்று யோசித்தவளுக்கு, செல்வத்தின் தேவைகள் அனைத்துமே அவள் அன்னையால் மட்டுமே பூர்த்தி ஆனது புரிந்தது. ரஞ்சிதமும் முன்பிருந்தே துணி தைப்பார். அவ்வூரின் முதல் தையல் தொழிலாளி அவர்தான். அவ்வப்போது சுற்று வட்டார ஊர்களுக்கு நடவு, அரப்பு வேலைக்கு செல்வது என்ற வகையிலும் ரஞ்சிதம் உழைத்தார். அதற்குள் […]

Readmore

அத்தியாயம் 💕16(1)

செல்வி, வானதிக்கு அழைப்பு விடுத்தபோதே பேச முடியாதபடி, தன்னை கவனிக்காது விட்டிருந்த கோபத்தில் அந்த போன் மூர்ச்சையாகி இருந்தது. அதற்கு முதலுதவி அளித்து மீண்டும் செல்வியை அழைக்க, அரை மணி நேரம் எடுத்தது. அதற்கே காத்திருந்த செல்வி, அலைபேசியுடன் பாட்டியை தேடி ஓடினாள். “ஆயா இந்தா பாரு வானு கூப்புடறா” என்றவாறு பாட்டியிடம் நீட்ட, அவரோ, “இங்க கொண்டா” என வாங்கி அழைப்பை ஏற்றவர், “எப்புடி இருக்க கண்ணு …” குரலடைக்க கேட்க, அவரது குரலை எதிர்பாராமல் […]

Readmore

அத்தியாயம் 💕15

இளவேனிலின் பார்வை வானதியிடம் இருக்க, அவளது பார்வையோ சத்யாவை விட்டு விலகவில்லை. ஒருவர் அமரும் சோபாவில் வானதி அமர்ந்திருக்க, அவளுக்கு பக்கவாட்டில் இருந்த நீள் விரிக்கையில் இளவேனில், சத்யா இருவரும் அமர்ந்திருந்தனர். “நான் கடன கட்டுறேன் கொஞ்ச டைம் கொடுங்கன்னு சொல்லியும் அவரு ஒத்து வர மாட்டேங்குறாரு… அதான் அந்த வீட்டை உங்க டிரஸ்ட்டுக்கு எழுதி கொடுத்திடறன். நீங்க அவர்கிட்டருந்து வீட்டை மீட்க எனக்கு உதவி பண்ணனும். கண்டிப்பா பேச்சு மாற மாட்டேன். இப்பவே வேணும்னாலும் எழுதி […]

Readmore

அத்தியாயம் 💕14

கடந்த இரண்டு நாட்களாக அதிகாலையில் கலைந்துவிடும் உறக்கம், இன்றோ வானதியை கட்டிக்கொண்டிருந்தது. “ஏ வானு… எழுந்திருடீ… ” தனது மொத்த உடலையும் ஒற்றை கோணி சாக்கின் பரப்பில் குறுக்கிக்கொண்டு சுருண்டு கிடந்தவளை உலுக்கிக் கொண்டிருந்தார், கலா. அதில் கண் விழித்த வானதி, சுற்றிலும் பார்த்தபடி எழுந்தமர்ந்தாள். “பெரிம்மா… ” என்றவளை எதுவும் பேசாது அணைத்துக் கொண்ட கலா, “எத்தன வாட்டி கூப்பிட்டிருப்பன்… அம்மா சொல்லிட்டானு வைராக்கியமா இருந்தவ… இப்டி வந்த கெடக்குறத பாத்து ஒரு நிமிசம் உசுரே […]

Readmore

அத்தியாயம் 💕13

வானதி இளாவை அழைத்து விட்டாள். அவனது நீண்ட நெடிய எதிர்பார்ப்பிது! அவன் காத்திருப்பின் வலி சுமந்து, கடந்து போக நினைக்கையில் இவள் தானாக வந்து வழிமறிப்பானேன்? அவளாக அழைத்திருக்கும் அந்த நிமிடத்தின் சுகந்தத்தை கூட நுகர முடியாது மூச்சடைக்க நின்றவன், பெருமூச்சுடன் தன்னை சமன் செய்துக் கொண்டான். “என்ன அம்மு இந்த நேரத்துல பண்ணிருக்க? ஏதும் பிரச்சனையா?” என்ன முயன்றும் மெலிதான படபடப்பு அந்த ஆண்குரலை ஆலிங்கனம் செய்திருந்தது. என்னவோ ஆண்டாண்டு காலம் இருவரும் அழைத்து, கொஞ்சி, […]

Readmore

அத்தியாயம் 💕12

வானதியின் உறக்கம் கலையாத அதிகாலை நேரமது. இரவு, இடைவிடாத இடர்களின் எண்ணங்கள் மனதை அழுத்தி உறக்கத்தை தாமதமாக்கியிருக்க, அவ்வெண்ணங்களின் மிச்சங்களால் அரைகுறை உறக்கம் அலைகழிப்பில் கலைய, அயர்ச்சியுடனே கண் விழித்தவள், முறைவாசல் செய்ய நிலைக்கதவினை திறந்தாள். அவள் வீட்டு திண்ணையில் அவளையே உச்சி முதல் பாதம் வரை உற்று நோக்கி, பெண்ணுடல் கூச புன்னகைத்தவாறு எழுந்துக் கொண்டான், கிரிதரன். அவளது அயர்ச்சியை அடித்து விரட்டி இருந்தது இந்த அதிர்ச்சி! இந்நேரத்தில் கிரியை இங்கு கண்டது முதல் அதிர்ச்சி […]

Readmore

அத்தியாயம் 💕11

இளா, சத்யாவிடம் அனைத்தையும் கூறி விட்டான். எனினும் வானதி இருந்த இடத்தில் சத்யா என மண்டையில் இருத்திக்கொள்ள முயல்வது இளாவிற்கு அத்தனை எளிதாக இல்லை. முயன்றால் முடியாமல் போகுமா? போகாது! போகவும் கூடாது! அவனுக்கு அவனே கூறிக்கொண்டான். சத்யாவின் தயவில் காலை உணவை நால்வரும் ஒன்றாக அமர்ந்து உண்டிருக்க, “எங்கயாவது வெளில போகலாமா?” இளா, திடுமென கேட்க, அவனது முயற்சி புரிய சிரித்த சத்யா, “எங்க?” என்றாள். “எங்கயாவது… நீயே சொல்லு… பீச், படம், கடை… இப்படி” […]

Readmore

அத்தியாயம் 💕10(2)

🌷🌷🌷🌷🌷🌷 அண்ணனும் தம்பியும் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து, தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சம் என்பது போல் ஒரு ஒரு வார்த்தையாக தேடி தேடி பேசிக் கொண்டிருந்தனர். ஒருவகையில் இருவருக்குமே அதுவே நல்லது. “முகில், சாப்பாடு ஆர்டர் பண்ணுப்பா” என்றவாறு வந்தமர்ந்த நிலாவிடம், “என்னா அண்ணி… நீயுமா கடை சாப்பாடு சாப்பிட போற?ஒத்துக்குமா?” என்ற இளா கேள்வியுடன் முகிலனை பார்க்க, “என்னமோ தினமும் வீட்டு சாப்பாடு சாப்புட்ற மாதிரி தான். அவளால சமைக்க முடியாது… நான் எப்பவாது செய்வேன். மத்த […]

Readmore

அத்தியாயம் 💕10(1)

🌷🌷🌷🌷🌷🌷 சத்யா, திருமணத்தை பற்றி ராஜா இருக்கையில் கேட்டது, இளாவிற்கு பிடிக்கவில்லை. எங்கு வந்து கொண்டிருக்கிறோம் எனப் பார்த்தவன், உணவகத்தை எட்டி விட்ட நிம்மதியில், “பண்ணிக்கலாமே!” என்று மட்டும் கூற, அதற்குள் காரை நிறுத்தி இருந்தான், ராஜா. “வந்துட்டோமா?” என்ற கேள்வியுடன் சத்யா இறங்க போக, இளாவோ, ‘எப்ப, என்ன பேசணும்னு இல்லை’ சத்யாவை எண்ணி சலித்துக்கொண்டே இறங்கினான். இருவருமாக ராஜாவையும் தங்களுடன் இணைந்துக் கொள்ள கேட்டு, அரை மணி நேரத்தில் மூவருமாக உண்டு முடித்தனர். சத்யா, […]

Readmore

அத்தியாயம் 💕9

சத்யாவிற்கு கோடை விடுமுறை இன்னும் இரண்டு வாரம் போல் எஞ்சி இருந்தது. எனினும் இளாவுடன் சென்று நிலாவை பார்த்து வர, அவளுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தது. நான் இன்னுமே நான்கு நாட்கள் தங்கிவிட்டு வருகிறேன் என்று கூறி அவள் சென்னையில் இருக்கலாம். அதில் இளாவே ஒன்றும் கூற முடியாது என்றபோதும், அவனை வற்புறுத்தி அழைத்து செல்வதால் அவனுடனே திரும்பி விடுவது என்ற முடிவுடனே சத்யா கிளம்பினாள். காரில் ஏறியதிலிருந்து இளா பெரிதாக பேச்சு கொடுக்கவில்லை என்றாலும், […]

Readmore