Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -31

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம்- 31

தொடர்பு கிடைக்கும்போதே ஷாந்தினியிடம் பேசிவிடுவோம் என்று நினைத்தவள் அவளுக்கு அழைக்க .. "பத்திரமா இருக்கீங்களா சம்யு?"

" பத்திரமா இருக்கோம்க்கா. ரோடு சரியாக தான் தாமதமாகும் போல ..நீங்க அங்கேயே இருங்க "

" இல்லை சம்யு . எங்க மாமனாருக்கு உடம்பு முடியலை. பாஸ்கர் சார் ' நீங்க ரெண்டு பேருமே கிளம்பி வாங்க . ப்ரித்வி போன் பண்ணினான். அவனும் சம்யுவும் வந்துடுவாங்க ' அப்படின்னு சொன்னார். அதனால ராக்கி சாரும் நானும் கிளம்பிட்டோம். மதியம் ட்ரெயின், கோவைல இருந்து."

"ஓகேக்கா ..நாங்க வந்துடுவோம். வரும்போது உங்க திங்ஸ் எடுத்துட்டு வந்திர்றேன்."

"தேங்க்ஸ் சம்யு" என்று அவர் அழைப்பை துண்டிக்க ..'நம்மோடு தானே இருந்தான் .எப்போது சாரிடம் பேசினான்? பரவாயில்லை இவ்வளவு டென்ஷனிலும் பார்த்து பார்த்து எல்லாம் செய்கிறான். இத்தனை தொழிலாளர்களின் பொறுப்பு என்பது எவ்வளவு பெரிய விஷயம்? இதற்கு நடுவில் தன்னையும் கவனித்து ..அந்த சிறு பிள்ளையையும் பார்த்து.. நினைக்க நினைக்க அவன் மேலான அபிமானம் வெகுவாக பெருகியது.

இதற்குள் அவன் எல்லாம் பேசி முடித்து வர மறுபடி வீடு நோக்கி நடந்தனர்.

தொழிற்சாலை மலை மேல் இருக்க ..சற்று கீழே வேறுபுறத்தில் தொழிலாளர் குடியிருப்பும் இன்னொரு புறத்தில் இவர்களது பங்களாவும் இருக்க வீடு இருந்த திசை நோக்கி நடந்தனர்.

ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்திருப்பார்கள் ..விட்ட மழை திரும்பவும் தூறல் போட ஆரம்பித்தது.

"சீக்கிரம் நட சம்யு. மழை திரும்பவும் வருது "என்றவன் தன் பையில் இருந்து ஒரு மழைக்கோட்டை எடுத்து இவளிடம் தர .. "உனக்கு ? " என்றவளுக்கு பதிலாய் ஒரு அகல தொப்பியை மட்டும் எடுத்து அணிந்தவன் ...மழை கோட்டை எடுத்து இருவருக்குமாக சுற்றி கொண்டான் .
அவனோடு ஒண்டிக்கொண்டு நடக்க வேண்டிய நிலை சம்யுவிற்கு. இருந்தாலும் விலகி அவனை நனைய விட மனமின்றி ஒட்டியபடி நடந்தாள்.

அவனது கரங்கள் பாதுகாப்பு அரணாக அவளை வளைத்துக் கொள்ள " ஒழுங்கா நீ வீட்டிலேயே இருந்திருக்கலாம் இல்லையா ?" என்று வெளியில் கடிந்துகொண்டாலும் உள்ளுக்குள் அவனது மனம் ஆனந்த கூத்தாடியது .

"வீட்டில் தனியா இருக்க பயமா இருக்கு ப்ரித்வி. அதோட .." என்று இழுத்தாள்.
"அதோட ?"

"நீ வெளிய போயிட்டு திரும்பி வரும்வரை ரொம்ப டென்ஷனா இருக்கும்" என்று ஒருவாறு மனதில் நினைத்ததை சொல்லிவிட .. அவனுக்கோ வெளியே அடிக்கும் சாரலை விட மனதில் பெரும் சந்தோஷச்சாரால் அடித்துக் கொண்டிருந்தது.

மெல்ல அவளது தோளை இறுக அணைத்தவனது கரம் மெல்ல இறங்கி அவளது இடையினில் படர .. மங்கைக்குள் கூச்சம் மிக எழுந்தாலும் இப்போது தூறல் கனமழையாக மாறிவிட .. பாதை வழுக்கலாகி இருக்கவே அவளும் அவனை இறுகப் பற்றவே வேண்டியிருந்தது.

'ஃபிராடு ' மனதோடு சொல்லிக் கொண்டாள் சம்யு.
ஒரு ரகசிய புன்னகை இதழோரம் மலர இருவருமே அக்கணங்களை உணர்ந்து அனுபவித்தார்கள்.

திடீரென்று இடையில் ஒரு இடத்தில பெரும் பள்ளம் ஒன்று இருந்தது. வரும்போது இதே பாதையில் தானே வந்தோம் அப்போது இல்லையே என்று யோசித்தாள் சம்யு.
இவர்கள் மேலேறும்போது அந்த பாதை ஓரமாக மழை நீர் சிறு ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது . இப்போது அதுவே ஒரு சிற்றாறாக ஓடிக்கொண்டிருக்க.. தண்ணீரின் வேகத்தில் மண்ணரித்துதான் இப்பெரும் பள்ளம் என்று புரிய ..இப்போது என்ன செய்ய என்ற பயம் லேசாக தோன்றியது சம்யுவுக்கு. இருந்தாலும் இப்போது ப்ரித்வியின் மீது ஒரு அபார நம்பிக்கை.

அதற்கேற்றாற்போல் அவனும் தன் தோள் பையில் இருந்து ஒரு கயிறை எடுக்க ..அது ட்ரெக்கிங்கின் போது அவன் உபயோகிக்கும் பை.

கொக்கியுடன் கூடிய அந்த கயிறை பொருத்திவிட்டு அதை பிடித்து அந்த பதினைந்தடி பள்ளத்தில் இறங்க தொடங்கினான் அவன் .

'நான் முதல்ல இறங்குறேன் சம்யு. அப்புறம் நீமெல்ல இறங்கு . கீழேருந்து நான் பிடிச்சிக்கிறேன். " என்று சொல்லி கீழே இறங்க தொடங்க .. சம்யுவுக்கோ இதயம் தொண்டைக்குள் வந்து நிற்பது போல் இருந்தது..

அவள் அமைதியாக நிற்பதை பார்த்தவன் மறுபடி மேலே வந்து "இறங்கு " எனவும் அவளது பார்வையே சொன்னது அவளது பயத்தை .

அந்த நேரத்திலும் கலாய்க்காவிட்டால் அவன் ப்ரித்வி அல்லவே "ஏய் ப்ரவுன் பெல்ட்டு ! இவ்வளவுதான் உன் தைரியமா ? அந்த வாய் பேசுவ ? இப்போ சவுண்டையே காணோமே "

சிலிர்த்து எழுவாள் என்று அவன் எதிர்பார்த்ததுக்கு மாறாக கெஞ்சுதலாக நோக்கி " ப்ளீஸ் ப்ரித்வி அத்தான் ..கொஞ்சம் கீழே இறக்கி விடுங்க " என்று சரண்டர் ஆனாள் சம்யு.

"உனக்கு கெஞ்ச கூட தெரியுமா ?" என்றவன் மனமோ.. 'கொஞ்சினா நல்லாருக்கும்' என்று சப்பு கொட்ட ..கெத்தாக அவளை நோக்கியவன் ..."சரி கீழே இறக்கி விடறேன். அத்தான் கேக்குறதெல்லாம் செய்யணும் சரியா ?" என்று கேட்டவன் சரியென்று அவள் தலை ஆடவும் அப்படியே அவளை உப்புமூட்டையாய் தூக்கிக் கொள்ள .. கண்களை இருக்க மூடிக் கொண்டாள் சம்யு.

மெல்ல மெல்ல கயிறை பிடித்தபடி கீழிறங்க அவன் தோளில் முகம் பதித்த அவளது சுவாசம் அவன் செவிமடலை தீண்ட ..அந்த கணத்தின் அருகாமையை ரசித்தபடி சமதரையை அடைந்தான்.

இவ்வளவு பரபரப்புலயும் உனக்கு கிளுகிளுப்பு தேவைப்படுதா டா ப்ரித்வி ? என்று அவன் மனசாட்சியே கழுவி ஊற்ற .. அவளது மலர் முகத்தையே உற்று நோக்கினான் ப்ரித்வி.

விழிகளை மூடியபடி ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்திருந்தவளை மெல்லிய புன்னகையோடு சில நொடிகள் பார்த்திருந்தவன் .. மெல்ல அவளை உலுக்க .. விழி மலர்ந்தாள் அந்த பதுமை.

அவன் விழிகள் காதலை அப்பட்டமாய் சொல்ல ..அவற்றை எதிர்நோக்க முடியாமல் முதல் முறையாக அவளது விழிகள் நிலம் நோக்கின.
மெல்லிய வெட்கம் முகத்தில் படர ..செம்மையுற்ற கன்னங்களும் , துடிக்கும் இதழ்களுமாக நிற்கும் தன்னவளின் பிம்பம் மனதினுள் உளியால் செதுக்கியது போல் பதிந்துவிட ..மெளனமாக அதை ரசித்தபடி நடக்க தொடங்கினான் ப்ரித்வி.

அந்த மௌனத்தை உடைக்க திராணியற்றவளாய் சம்யுவும் அமைதியாக நடக்க.. ஒரு வழியாக வீடு வந்தது.

உள்ளே சென்றதும் ப்ரித்வி மதிய உணவு தயாரிக்க தொடங்கியவன்.. வேலை முடித்து வெளியே எட்டி பார்க்க, பாவையவளோ மனதினுள் அலைப்புறுதலோடு மாடி ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள். அவளது மனமும் ஊசலாடிக் கொண்டிருந்தது.

என்ன இது ? ஏன் இவனை இவ்வளவு பிடிக்கிறது? இவனை பார்த்தாலே கோபமும் ஆத்திரமும் கொண்டு சண்டையிட்டதென்ன ? இப்போது அவன் முகம் நோக்கினால் மனம் குளிர்வதென்ன ?

அவனோடு கல்லூரியில் மல்லுக்கட்டியதெல்லாம் இப்போது பனியாய் மறைந்துவிட ..கட்டிலில் மல்லுக்கட்ட மனம் என் ஏங்குகிறது?
அவனோடு காதல் யுத்தம் செய்ய ஏன் இந்த உள்ளம் துடிக்கிறது. அவனோடு இருக்கும் நொடிகள் ஒவ்வொன்றும் பொக்கிஷமாய் தோன்றுவது என்ன விந்தை?

ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கிவிட மதிய உணவை கையில் எடுத்து வந்தவன் பார்த்தது நிச்சலனமாய் உறங்கும் பாவையைதான்.

"சம்யு " என்று மெல்லவும் பின் உரக்கவும் அழைக்க.. அவள் எழுவதாக காணோம்.

அவளது தோள் தொட்டவனுக்கு உடலின் அதிகப்படியான சூடு உரைக்க ..நெற்றியில் கை வைத்து பார்க்க .. நெருப்பாய் கொதித்தது.

முந்தைய தினம் மழையில் நனைந்தது.. பின் குளிர், பனி ..நிகழ்வுகளின் தாக்கம் என்று அனைத்தும் சுழற்றியடித்ததில் மங்கைக்குள் காதல் வந்ததோடு சேர்த்து காய்ச்சலும் வந்திருந்தது.

ப்ரித்விக்கோ கவலை மேலிட ..அவளை மெல்ல எழுப்பியவன் உணவை உண்ண சொல்ல ..அவளோ விழிகளை திறக்கவே வெகுவாக சிரமப்பட்டாள்.
"சம்யு..சம்யு செல்லம்.. கொஞ்சம் கண்ணை திறடா " என்று மென்மையாய் அழைத்தவன் ..மெல்ல உணவை புகட்ட ஓரிரு வாய்களுக்கு மேல் அவளால் உண்ண முடியவில்லை.
உமட்டிக் கொண்டு வர ..வேண்டாம் என்று மறுத்தவள் மறுபடி படுத்துவிட்டாள்.

சமையலறைக்கு சென்றவன் .. சாதத்தை குழைவாய் பிசைந்து சற்று நீர்விட்டு எடுத்து வந்தான் . மெல்ல ஒரு ஸ்பூனில் எடுத்து அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் புகட்ட .. கொஞ்சம் கஞ்சி உள்ளே சென்றதும் விழிகள் லேசாக திறந்தன.

தான் அவனது நெஞ்சில் சாய்ந்திருப்பது பெரும் இதத்தையும் பாதுகாப்புணர்வையும் தர மேலும் அவனோடு ஒண்டிக் கொண்டவள் .. இன்னும் சில கவளம் உணவு உள்ளே சென்ற பின் தான் எழுந்து அமர்ந்தாள்.

அவள் உள்ளே சென்று டோலோ மாத்திரை எடுத்து வர .. பெண்ணவளின் முகமோ கசங்கியது." மாத்திரை வேண்டாம் ப்ரித்வி. இது ரொம்ப பெருசா இருக்கு" என்றவளை..

"பண்ற அலப்பறைக்கு ஒன்னும் குறைச்சலே இல்லை. ரெண்டு நாள் மழைல நனைஞ்சதுக்கே உனக்கு சேரலை. உங்கப்பா உன்னை கண்டிச்சது தப்பே இல்லை .... நான் தான் தப்பு பண்ணிட்டேன். ஆசைப்படறியேன்னு நனைய விட்டேன் பாரு.. இன்னிக்கும் ஒழுங்கா வீட்ல விட்டு போயிருக்கணும். கெஞ்சி கேட்டவுடனே கூட கூட்டிட்டு போனேன். இப்போ ஜுரத்தை இழுத்து விட்டுக்கிட்டு இருக்கே. மருந்தாவது கொடுக்கலாம்னு பார்த்தா பஞ்சதந்திரம் படத்துல வர்ற தேவயானி மாதிரி ' எவ்வளோ பெரிய மாத்திரைன்னு ' படுத்தியெடுக்குற . ஒழுங்கா சொல்பேச்சு கேட்டு சாப்பிட போறியா இல்லையா ? இல்லை நம்ம எஸ்டேட் டாக்டரை வர சொல்லி ஊசி போட சொல்லவா ? " சிறு பிள்ளையை பயமுறுத்துவதைப்போல சொன்னதும், மாத்திரையை விழுங்கி விட்டாள்.

"வேண்டாம் ப்ரித்வி. கையில தையல் போட்டப்பவே ஊசி போட்டாங்க .. ரொம்ப வலிச்சுது" என்று பாவமாய் சொல்ல ..

"இந்த ஜேம்ஸ் பாண்ட் வேலையெல்லாம் உனக்கு தேவையா? சின்ன ஊசிக்கு கூட பயந்துட்டு வெளியே பெரிய வீராங்கனை மாதிரி ஆக்ட் குடுக்கிற " என்றவனுக்கோ அவளை செல்லம் கொஞ்சும் ஆசையே வந்தது.

அவளது நிலை உணர்ந்து அமைதி காத்தவன் அவளை தூக்கி சென்று கட்டிலில் கிடத்த .. அவனது சட்டையை இறுக்கமாக பிடித்திருந்தவள் அரை தூக்கமும் மயக்கமுமாய் படுத்துக் கொள்ள ..முன்தினம் அவள் செய்த சேட்டைகளை நினைத்தபடி மெல்ல தன்னை விடுவித்துக் கொண்டவன் .. 'ப்ரித்வி இவ கூடஒரே பெட்ல மட்டும் படுத்திராத ! உன் கற்புக்கு ஆபத்தாயிடும்' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் , ஹாலில் இருந்த சோபாவில் சென்று படுத்துவிட்டான்

இப்படியே அன்றைய தினம் சென்றுவிட .. மறுநாள் காலை விழித்தெழுந்தவளுக்கு ஜுரம் விட்டிருக்க வழக்கமான தெம்பு மீண்டிருந்தது.
 
Top