ஒருபுறம் எழில் எவ்வித பதட்டமும் இன்றி சாவகாசமாக மிக்சரோடு அமர்ந்தான் என்றால் மறுபுறம் அங்கிருந்த அலர், பாலன் முகத்தில் பெரும் பதைபதைப்புடன் தாமரையிடம், “தாமரை சொன்னா கேளுடி அண்ணன் அப்படி எல்லாம் இல்லை இது ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங், தெரியாம நடந்திருக்கு” என்று அலரும்,
“ஆமா தாமரை கொஞ்சம் பொறுமையா இரு நான் அவன்கிட்ட பேசுறேன்” என்று பாலனும் அவளை சமாதனபடுத்த முயல, தாமரையோகுறையாத ஆவேசத்துடன், குறுக்கே வரும் அனைவரையும் ஜல்லிகட்டு காளையாக பெரும் சீற்றத்துடன் சிதறடித்து கொண்டிருந்தாள்.
மனைவியின் நிலையில் செய்வதறியாது திகைத்து நின்ற வெற்றியின் உடலில் குளிர் ஏகத்திற்கும் பரவியிருந்தது. சொல்லபோனால் தாமரையின் ருத்ர ரூபத்தில் யாருக்குமே அவளை நெருங்கும் தைரியம் இல்லாது போனது..
“தாமரை ப்ளீஸ் அது.. அது எப்பவோ காலேஜ்ல சும்மா விளையாட்டுக்கு பண்ணினதுடிநான் சத்தியமா யாரையும் லவ் பண்ணலை நம்பு” என்று விட்டால் அழுதுவிடும் குரலில் கூறியவன் அவள் கையை பிடிக்க முற்பட,
அவன் கரத்தைஉதறி விழிகளை உருட்டி கொண்டு ‘மூச்‘ என்று அவள் கர்ஜித்த விதத்திலேயே வெற்றியின் வாய் தன்னால் மூடிக்கொண்டது.
மறுநொடி ஓங்கி அவன் வாயில் அறைந்தவள், “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் கொன்னுடுவேன்” என்று இறுதி வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சுட்டுவிரல் நீட்டி அவனை எச்சரித்து தன் அறையை நோக்கி செல்லவெற்றியுடன் சேர்ந்து அலர், பாலன், கதிர் அனைவருமே தாமரையின் பின் ஓடினர்.
ஆனால் எழில்மட்டும் அதே நிலையில்மிகத்தீவிரமாக மிக்சரை மென்று கொண்டிருந்தான்.
“அண்ணி… அண்ணி உங்களுக்கு அண்ணா பத்தி தெரியாதா..??? அவசரபடாதீங்க கொஞ்சம் அமைதியா இருங்க” என்று கூறியவாறே கதிர் ஓட அப்போது தான் தங்கள் அருகே எழில் இல்லாததை கவனித்த பாலன் அவனை தேட, அவர் விழியில் அகப்பட்டவனின் நிலை கண்டு உச்சகட்ட மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ந்து போனார்.
ஆம் அங்கு நடக்கும் களேபரத்திற்கும் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை எனும் விதமாக சோஃபாவில் சாய்ந்தமர்ந்து கால்களை டீபாயில் நீட்டிக்கொண்டு ஆற அமர மிக்சர் சாப்பிடுபவனை கண்டு கொதித்து போனவர் தாமரையை தவிர்த்து உடனே அவனிடம் விரைந்தார்.
எழிலிடம் சென்றவர், “என்னடா இது..??” என்று அதிர்ந்த குரலில் கேட்க
வாயருகே கொண்டு சென்ற மிக்சரையும் பாலனையும் சில கணங்களுக்கு மாறி மாறி பார்த்தவன் மிக்சர் தான் முக்கியமென்று அதை வாயில் போட்டு மென்று பின் நிதானமாகஇரு கரங்களையும் தட்டி கொண்டேஅவரை பார்த்தவன், “பார்த்தா தெரியலை மிக்சர் மாமா..!!” என்று உல்லாசகுரலில் கூற,
“மாப்பிள்ளை அது தெரியுது, ஆனா.. ஆனா.. ” என்று பதற்றத்தில் அவர் திணற,
அவரையே மேலிருந்து கீழ் சில கணங்களுக்கு பார்த்தவன், “என்ன மாமா தம்பி பாசம் பொங்கி வழியிற மாதிரி தெரியுது” என்று எள்ளலாக கேட்க,
“டேய் என்னடா பண்ற..??” என்று கேட்டவரின் முகத்தில் இன்னுமே அவன் செய்கையால் விளைந்த திகைப்பு நீங்காமல் இருக்க, “டேய் மாப்பிள்ளை இங்க என்ன நடக்குது நீ சாவதானமா உக்காந்து தின்னுகிட்டு இருக்க” என்றிட,
“வேற என்ன பண்ண சொல்றீங்க” என்று புருவம் உயர்த்தியவன், “ஏன் மாமாஅவனவன் கொழுப்பெடுத்து போய் அட்ரஸ் குடுத்துட்டு வந்ததுக்கு எல்லாம் நாம பிணையாக முடியுமா..?? சொல்லுங்க” என்று கேட்க,
“டேய் விளையாட்டு பையன்டா அவன்…!! பாவம்ஏதோ கெட்ட நேரம் தெரியாமபண்ணிட்டான் இப்போ அது பெரிய பிரச்சனை ஆகிடும் போல, தாமரை ரொம்ப கோவமா இருக்காடா ஆயிரம் இருந்தாலும் குழந்தைகளை பார்க்கணுமே வா சமாதனபடுத்தலாம்” என்று அழைக்க.,
“எது விளையாட்டு பையானா..?? என்று ஆவேசத்துடன் கேட்ட எழில் சோஃபா கைபிடியில் கையை ஊன்றி சாய்ந்தமர்ந்துதன்முன் நின்றிருந்த பாலனின் கையை பிடித்திழுத்து தன்னருகேஅமரவைத்து, ” ஏன் மாமா உங்க தம்பிக்கு வந்தா ரத்தம் எங்களுக்குன்னா தக்காளி தொக்கு அப்படிதானே..!!!” என்று கடுமையான குரலில் கேட்க,
“டேய் என்னடா சொல்ற ஒன்னும் புரியலை, எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம்.. வா ” என்று எழிலை அழைக்க…
அவனோ இரு கரங்களையும் மேலே தூக்கி நெட்டி முறித்தவன் அதை தலைக்கு பின் கோர்த்து கொண்டு,”ப்ச் புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு நடுவுல அவங்களா கூப்பிடாத வரை யாரும் போககூடாது மாமா…, அப்படி போனா நம்ம சட்டை தான் கிழியும் கடைசியில அவங்க ஒன்னாகிடுவாங்க…, இதுகூட தெரியாம உங்களை எல்லாம் வச்சிட்டு எங்க அக்கா எப்படி தான் குப்பை கொட்டுறாங்களோ..!!”என்று அலுத்துக்கொள்ள,
எழிலின் அலட்சிய போக்கில் அவனை வெறித்து நின்ற பாலன் பின் அவனருகே அமர்ந்து, ‘மாப்பிள்ளை அது எனக்கும் தெரியும்டா… ஆனா அங்க பாரு தாமரை ரொம்ப கோவமா இருக்கா வெற்றி பதில் பேச முடியாம திணறிட்டு இருக்கான், அவன் உன் ஃபிரெண்டுடா எப்படி இப்படி கொஞ்சமும் அவன் வாழ்க்கை பத்தின அக்கறையே இல்லாம உன்னால இருக்க முடியுது” என்று நிஜமான வருத்தத்துடன் அவனை கடிய,
“அட நீங்க வேற மாமா, எல்லா சர்க்கரையும் இருக்கிறதால தான் உட்காந்து வேடிக்கை பார்க்கிறேன்” என்று அலட்சியமாக கூறியவன் தாடையில் கரம் தாங்கி பார்வையை வெற்றியின் அறையினுள் செலுத்தினான்.
தொடரும் அவனது அலட்சியத்தில் எரிச்சலுற்ற பாலன், “டேய்வில்லங்கம் பிடிச்சவனே, சொல்றதை புரியிற மாதிரி சொல்லி தொலை” என்றிட,
சட்டென அவர் புறம் திரும்பியவன், “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு கேள்விபட்டது இல்லையா..?? நானே எதிர்பார்க்காத அளவு உங்க தம்பிக்கு விளைச்சல் அமோகமா இருக்கு அறுவடை பண்ண உதவுவீங்களா அதை விட்டுட்டு சர்க்கரையாம் சமாதானமாம்” என்று சலித்து கொள்ள,
அங்கே தாமரையின் ஆக்ரோஷம் எங்கே இருவரின் உறவையும்பிரித்து விடும் நிலைக்கு இட்டு சென்றிடுமோ என்று பதைபதைத்து போயிருந்தவருக்கு எழிலின் நிதானத்தில் பொறுமை முற்றிலுமாக அற்று போக, “சம்பந்தமே இல்லாம இப்போ எதுக்குடா இந்த பழமொழி..??” என்று சீறியவருக்கு அப்போதுதான் அதன் அர்த்தம் லேசாக பிடிபட சந்தேகத்துடனே,
“டேய் அப்.. அப்போ நீ..??? நீ தானாடா..?? என்றவருக்கு இன்னுமே எழில் தான் அவர்களுக்கிடையிலான பிரச்சனைக்கு காரணம் என்பதை நம்ப இயலவில்லை..
“டேய் அப்போ அந்த பொண்ணு..??” என்று கேள்வியை நிறுத்தியவர் எழிலின் முகத்தில் தெரிந்த எள்ளலில் சில கணங்களுக்கு உறைந்து போனார் என்றால் மிகையல்ல..!!
என்ன மாமா ஃப்ரீஸ் ஆகிட்டீங்க என்று எழில் உலுக்கவும் தன்னிலை மீண்டவர், “அடப்பாவி அப்போஇது உன்னோட வேலையா..??”
வெற்றியின் மீதான பார்வையை அகற்றாமல் இருந்தவனின் முகத்தில் மெல்ல மெல்ல கடுமை குடியேற உடல்மொழியில் பெரும் மாற்றத்துடன் பாலன் புறம் திரும்பியவன், “உங்க தம்பிக்கும் எனக்கும் பழைய கணக்கு ஒன்னு பாக்கி இருக்கு மாமா அதை எப்படி தீர்க்கிறதுன்னு இத்தனை நாளா யோசிச்சிட்டு இருந்தேன்” என்றவனை இடையிட்டவர்,
“என்னடா கணக்கு..??” என்று அவர் கேட்ட மறுநொடியே அன்று அலருக்கும் தனக்கும் இடையில் நுழைந்து பிரச்னையை ஊதி பெருசாக்கி தன் மனைவி கையில் உலக்கையை கொடுத்து தன்னை கதறவிட்ட நாள் எழிலின் நினைவில் எழ, தலையை குலுக்கி கொண்டவன் அவர் கேள்விகான பதிலை அளிக்காமல் வெற்றியை பார்த்தவரே தொடர்ந்து பேச தொடங்கினான்.
“நானும் எப்படிடா உங்க தம்பிக்கு அவன் தப்பை புரிய வைக்கிறதுன்னு ரொம்ப யோசிச்சேன் ஆனா பாருங்க ஆண்டவனே என் பக்கம், நான் கேட்காமலேஎனக்காக நேத்து தமயந்தியை அனுப்பி வச்சாரு” என்றவன் பாலனின் திகைத்த முகத்தினால் எழுந்த சிரிப்பை மீசைக்கடியில் பதுக்கியவன் தொடர்ந்து,
“பெருசா ஒண்ணுமில்லை மாமா..?? நேத்துதான் பஜார்ல தமயந்தியை பார்த்தேன் ஆராய்ச்சி மட்டுமில்லாம அப்பப்போ ஷார்ட் பிலிம்ல நடிக்கிறேன்னு சொன்னாங்க, அது போதாதா எனக்கு” என்று வெற்றி களிப்புடன் அவரை பார்த்து கண் சிமிட்டிடபாலனுக்கு புரிந்து போனது.. திகைப்புடன் அவனையே பார்க்க தொடர்ந்த எழில்,
“உன்னை மகாநடிகைன்னு ஏத்துக்கணும்னா உன் நடிப்பு திறமையை நேர்ல காட்டினாதான் ஒத்துப்பேன்னு சொன்னேன்.., ஆனா நானே எதிர்பார்க்கலை மாமா அவன் எப்பவோ கொடுத்த கிரீட்டிங் கார்டை எல்லாம் தேடி எடுத்து ஆதாரத்தோட சும்மா காட்டு காட்டுன்னு காட்டிட்டு போய்ட்டாங்க” என்றவனுக்கு என்ன முயன்றும் சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் வாய்விட்டு சிரிக்க தொடங்கினான்.
அதேநேரம் அறையினுள்அண்ணனுக்கு வக்காலத்து வாங்கி கொண்டிருந்த அலரின் பேச்சில் தாமரையின்சீற்றம் மட்டுபடாமல் மேலும் அதிகரிக்க செய்ய அதன் விளைவாய் ஒருகட்டத்தில் தாமரையின் கரம் அலரின் வலக்கன்னத்தை பதம் பார்த்தது.
“அமுலு” என்று பதறிக்கொண்டு வெற்றி அலரை நெருங்க முற்பட்டு பாதி வழியிலேயே தேங்கி நின்றுவிட்டான் தாமரையின் அனல் பார்வையில்..!!!
எதிர்பாராத அறையில் அலர் கன்னத்தை பிடித்துகொண்டு அதிர்ந்து விழித்து நிற்க, அவள் முன் சொடக்கிட்டவள், “ஏய் இன்..னொ..ரு வார்த்தை பேசின பிச்சிடுவேன்” என்றவளின் விழிகளில் குறையாத ஆவேசம்.
“எது இவனுக்கு என்மேல இருக்கிறதுக்கு பேர் லவ்வா..?? சொல்லுடி லவ்வா..???” என்று கர்ஜித்தவள் அவளை இழுத்து திருப்பி எழிலை சுட்டி காட்டி, “அவனை சொல்லு ஏத்துப்பேன், ஏன்னா கட்டின பொண்டாட்டியை அம்மாவா, கடவுளா பார்த்தவன் கொஞ்சம் விட்டிருந்தா எதை பத்தியும் யாரை பத்தியும் யோசிக்காம உனக்காக கோவிலே கட்டிஉட்கார வச்சு பூஜை பண்ணியிருப்பான்” என்று ஆவேசத்துடன் கூறியவள்,
“உனக்காக உன்னைவிட அதிகமா கஷ்டப்பட்டு தன்னோட ஆசையை எல்லாம் தூக்கி எறிஞ்சானே அதுக்கு பேரு தான்டி லவ்..!! ஆனா இவன்…” என்று ஆக்ரோஷத்துடன் வெற்றியை பார்த்தவள் “இவனுக்கு மூணு பிள்ளை பெத்த அப்புறமும் எப்படிடி இன்னொருத்தி கிட்ட இப்போதான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதான்னு கேட்பான் …” என்றவளுக்குதுக்கம் தொண்டையை அடைத்து கொண்டு வர அதில் எழுந்த கசப்பை கடினப்பட்டு விழுங்கியவள்,
“இன்னொரு வாட்டி இவனை மாதிரி” என்று இதழ் மீற துடித்த வார்த்தைகளை கடினப்பட்டு கட்டுபடுத்தியவள், இவனுக்காக வரிஞ்சி கட்டிட்டு வந்த இன்னொரு கன்னமும் பழுத்திரும்” என்று அலரை எச்சரித்தவள்,
“ஏய் எங்க இருக்கிற வெறியில இவனை கொன்னுட்டா என் மூணு பசங்களும் ஆனாதை ஆகிடுமேன்னு தான் கிளம்புறேன்.. நான் கிளம்புற வரை ரெண்டு பெரும் வாயை திறக்ககூடாது அப்படி திறந்தீங்க பசங்களை பத்திகூட யோசிக்க மாட்டேன் ஜாக்கிரதை” என்றிட,
வெற்றியின் முகத்தில் அப்பட்டமாய் மரண பயம் !!
அலர்விழியுமே பெரும் திகைப்புடன் அவளை பார்க்க தாமரையோ இருவரையும் கண்டுகொள்ளாமல் பெட்டியில் துணிகளை அடைத்து கொண்டிருந்தாள்.
ஹாலில் இருந்த பாலன் தாமரை அலரை அறைந்ததை கண்டு திகைத்து போனவர் எழிலிடம் “டேய் மாப்பிள்ளை தாமரை அலரை அடிக்கிறா இப்பவும் எப்படிடா உன்னாலமிக்சர் சாப்பிட முடியுது” என்று எழில் கரத்தை தடுத்து பிடித்தவாறுகேட்க,
எழிலுமே தாமரையின் அடியை எதிர்பாராதவன் ஒருநொடி திகைத்தாலும் மறுநொடியே தன்னை சமாளித்து மீண்டும் மிக்ஸரை கொறித்திருந்தவன் பாலன் கையை பிடிக்கவும், “ப்ச் நிம்மதியா மிக்சர் சாப்பிட விடறீங்களா நீங்க..??” என்று முறைத்தவன் “நான் மிக்சர் சாப்பிடுறதுல என்ன பிரச்சனை உங்களுக்கு..??” என்றவாறே அவர் புறம் நன்கு திரும்பியமர்ந்து,
“மாமா நான் முன்னஎன்ன சொன்னேன் பிரெண்ட்ஸ்குள்ள ஆயிரம் கொடுக்கல் வாங்கல் இருக்கும் அதுக்குள்ள நாம போககூடாது”, என்றவன் அவர் முகத்தில் இருந்த அதிர்வை கண்டு “ஆமாவா இல்லியா..??” என்று அவரிடமே கேட்க
அவரதுதலையும் தானாக ‘ஆம்‘ என்று அசைய இதழ்களை மடக்கி சிரிப்பை விழுங்கியவன் மேலும் தீவிரமான குரலில், “ஹான் அதுவே தப்பு..!! ஆனா இங்க உங்க தங்கச்சி புருஷன் பொண்டாட்டி பிரச்சனைகுள்ள தலையை விட்டுருக்கா மாமா, அது என்ன சாதாரண விஷயமா..?? எனக்கு தெரிஞ்சு அவளுக்கு கிடைச்ச அடியே கம்மின்னு சொல்லுவேன்” என்றிட
“அடப்பாவி” என்பதாக பாலன் அவனை பார்க்க,
“அட ஆமா மாமா, ஏன்னா தாமரை இப்போயிருக்க ஆக்ரோஷத்துக்கு உங்க தங்கச்சி கன்னம் மட்டுமில்லை தலை தப்புறதும் சந்தேகம் தான்…, குறுக்க போனா என் சட்டையும் கிழியறது உறுதி அதுமட்டுமில்லை உங்க தங்கச்சிக்கு அண்ணன் மேல ரொம்பஆஅ பாசம் அவனுக்காக இந்த அடியைகூட தாங்கமாட்டாளா என்ன..??
“அதுக்காக அப்படியே விட்டுடுவியா..??”
“ப்ச் என்ன மாமா இது..?? நான் வேண்டாம் போகதன்னு சொன்னாலும் கேட்காதவ இப்போ வாடி சொன்னா வந்துடவா போறா..??” என்றிட,
“டேய் என்னடா இது என்னைக்கும் இல்லாம உன் பேச்சுல இன்னைக்கு வில்லத்தனம் தெரியுது அப்போஉன்னை பத்தி சரியா தெரியாம என் தங்கச்சி உன்கிட்ட மாட்டிட்டு கஷ்டபடுறாளா.?? இது உன் மாமனாருக்கு தெரியுமாதெரிஞ்சா அந்த மனுஷன் துடிச்சு போயிடுவாறேடா” என்று மிரட்சியும் தயக்கமும் போட்டி போட்டவாறே மென்று விழுங்க..,
‘சேம் டைலாக்‘ என்று வாய் விட்டு கூறியவன் இப்போது அழுத்தமான குரலில், “என்ன மாமா உங்களுக்கும் தங்கச்சி பாசம் பொங்குதா..??” என்று ஒற்றை புருவம் ஏற்றி இறக்க,
“எனக்கும்.., ஏன், ஏன், ஏன்டா அமுலு மேல எனக்கு பாசம் இருக்ககூடாதா..??”
“இருக்கலாம், இருக்கலாம் கண்டிப்பா இருக்க வேண்டியது தான்..!! ஆனா பாருங்க உங்களை மாதிரியேஒருத்தனுக்கு தங்கச்சி மேல பாசம் பொங்கி வழிஞ்சு ஓடினதோட விளைவு.. இப்போ அந்த பாச ஆத்துல மூழ்கி கரையேற முடியாம தத்தளிச்சிட்டு இருக்கான்” என்றவன் இப்போது அவர்புறம் நன்றாக திரும்பியமர்ந்து,
“உங்க தங்கச்சிமேல உங்களுக்கு இருக்கிற பாசத்தைவிட எனக்கு என் அக்கா மேலயும் பசங்க மேலயும் அதிகமாவே இருக்கு அதனால நீங்க என்ன பண்றீங்க” என்றவன் அவர் கரத்தை பிடித்து மிக்சர் தட்டை வைத்து,
“இந்தாங்க, அமைதியா சாப்டுட்டு வேடிக்கைமட்டும் பாருங்க அவங்களா கூப்ட்டா என்னன்னு கேட்போம்” என்றவன் எதற்கும் இருக்கட்டும் என்று தானே கையில் அள்ளி அவர் வாயிலும் மிக்சரை அடைத்துவிட்டு மீண்டும் சாப்பிட தொடங்க…,
பாலனோ இன்னும் அதிர்ச்சி நீங்காமல் அவனையே பார்த்திருந்தார்.
மீசை துடிக்க புன்னகையை இதழ்களுக்குள் பதுக்க எழில் அரும்பாடுபடதன் வாயில் அடைத்திருந்த மிக்சரை வேப்பங்காயென விழுங்கிய பாலன் “டேய் யார்டா நீ..??” என்று எச்சிலை விழுங்கியவாறே கேட்க,
“என்ன மாமா இது இன்னும் சின்னபுள்ளையாட்டம் அர்த்தம் இல்லாம கேட்டுகிட்டு” என்றவனின் புன்னகை இப்போது கண்களை எட்டி இருந்தது.
“இல்லடா இவ்ளோ நேரம் நீ உள்ள பிரெண்ட்ஷிப் பத்தி பேசினதை வச்சி வச்சி.., வச்சி..”
“ஹான் வச்சி..”, என்று தீவிரமான பார்வையுடன் எழில்…
“இல்லடா அதை வச்சி”, என்று தயக்கத்துடன் அவர் நிறுத்த,
“அதான் மாமா நானும் கேட்குறேன் அதை வச்சு என்ன பண்ண போறீங்க..??” என்று இதழ்களை மடித்து சிரிப்பை விழுங்க..,
“அப்படியா..??” என்று ஆச்சர்யத்துடன்அவர் முகத்தில் தென்பட்ட அப்பாவிதனத்தை பார்த்தவாறுகேட்டவனுக்கு இப்போது கட்டுபடுத்த முடியாமல் போகஅட்டகாசமாய் சிரிக்க தொடங்கினான்.
‘டேய்சிரிக்காத‘ என்று பல்லை கடித்தவர் “பாவம்டா வெற்றி ஏன்டா அவனை இப்படி பண்ற.., உன்னை ரொம்ப நல்லவன்னு நெனச்சேனேடா”
“உங்க நினைப்புக்கெல்லாம்நான் பொறுபேற்க முடியுமா…???” என்றவனிடம் இப்போது சத்தமில்லாத புன்னகை அதுவும் இதழ் கொள்ளா அளவில்..!!
“டேய்வாயை மூடுடா” என்று அதட்டியவருக்கு தலையே சுற்றி போனது.
மெல்ல பெருமூச்சை வெளியிட்டவாறே அவனை ஏறெடுத்து பார்த்தவர், “எனக்கு ஒரேஒரு உண்மை சொல்லுடா மாப்பிள்ளை”
‘என்ன உண்மை மாமா..??’
“நீ நல்லவனா கெட்டவனா..???”
“இருபது வயசுல இருந்து என்னை பார்த்துட்டு இருக்கீங்க இன்னும் என் கேரக்டரையே புரிஞ்சிக்கலையே மாமா..!!” என்று எழில் ஒற்றை கண் சிமிட்ட…, அதேநேரம் அவனது சரிபாதியானவள் அவனெதிரே வந்து நின்றிருந்தாள்.
ஆம் இத்தனை நேரமாக பேசியும் அவளது ஆவேசம் குறையாத நிலையில் இனி தாமரையிடம் பேசி உபயோகமில்லை என்பதால் அலரும் வேறு மார்க்கம் அற்றவளாக கணவனை தான் தேடி வந்திருந்தாள்.., ஒருவேளை அவன் வார்த்தைக்கு அவளிடம் மதிப்பு இருக்குமோ என்ற நப்பாசையில்!!
எழில் முன் வந்து மிகவும் பதட்டமான குரலில் ப்ளீஸ் மாமா நீங்க சொல்லுங்க என்று எப்படியாவது தாமரைக்கு புரிய வைத்து அவளை வீட்டை விட்டு போக விடாமல் தடுக்க வேண்டி அவள் பேசிக்கொண்டு செல்ல,
ஆனால் மறுபுறம் இருந்தஎழிலோ அதற்கு நேர்மாறாகமனைவியின் வரவில் மேலும் வசதியாக சோபாவில் சாய்ந்தமர்ந்துஅருகே இருந்த பாலனின் தோளை சுற்றி தன் கரத்தை படரவிட்டு என்றுமில்லாத வண்ணம் இன்று தன்னவளை ரசிக்க தொடங்கியிருந்தான்.
அதிலும் அவள் பேசும்போது அதற்கேற்றவாறு அவளுடன் சேர்ந்து அசைந்தாடும் ஜிமிக்கியும் பலநூறு கதைகளை கூறும் படபடத்த அவள் விழிகளும் பலவித உணர்வுகளை தேக்கிய வதனமும் அனைத்திற்கும் மேலாக அண்ணனுக்காக பதட்டத்துடன் அவள் பேசம் அழகிலும் லயித்து கிடந்தவனுக்கு உலகமே மறந்து தான் போனது.
அவள் பேச்சுஅளித்த சுவாரசியத்தில் இமைக்கவும் மறந்தவனாக விழியவள் மீது விழிகளை நிலைக்க விட்டவனுக்கு அவள் மீதிருந்துபார்வையை அகற்ற முடியாமல் போக ஆற்றாமையில் துடிக்கும் அவள்செவ்விதழ்களில் மூழ்க துடித்தவனின்எண்ணங்களோ கடிவாளமற்ற குதிரையாய் தறிகெட்டு ஓட அதற்கு கடிவாளமிட முடியாமல் அவனும் அதனுடன் சேர்ந்து ஓட தொடங்கி இருந்தான்.
இதை கண்ட பாலன் “டேய் என்ன பண்ற..?? அமுலுக்கு பதில் சொல்லு” என்று உலுக்கவும் தான் நினைவுலகிற்கு திரும்பியவன் இதழ்களை குவித்து காற்றை வெளியேற்றி தன்னவள் மீதிருந்து பார்வையை அகற்றாதுதலையை அழுந்த கோதியவன் பாலனை முறைக்கவும் தவறவில்லை.
“என்ன மாமா இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்கேன் ஒன்னும் சொல்லாம பார்த்துட்டு இருக்கீங்க, என்ன சொன்னாலும் தாமரை கேட்கமாட்டேங்கிறா நீங்களே வந்து சொல்லுங்க எங்க அண்ணன் அப்படி எல்லாம் இல்லை.., பாவம் அவரு ப்ளீஸ் மாமா வாங்க” என்றழைக்க,
அன்று தாய் மாமனில் தொடங்கி அப்பா, அண்ணன், தம்பி என்று அனைவருக்காகவும் உலக்கையோடு தன்னை துரத்தியவள் இன்று அண்ணனுக்கு வக்காலத்து வாங்குவதைகண்டவனுக்கு உள்ளுக்குள் பற்றி கொண்டு வந்தது ஆனால் ஒற்றை தலைகுலுக்களில் அதை சாமர்த்தியமாக மறைத்தவன் குரலை செருமிகொண்டு அலரை பார்க்கவும் சடுதியில் அவன் முகத்தில் வந்து சென்ற மாற்றங்களை கண்ட பாலன் வாயடைத்து போனார்.
“பதில் சொல்லுங்க மாமா” என்ற அலரின் கரம் பற்றி தன்னருகே அமரவைத்தவன், “இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கடி பட்டு” என்று புதிதாக அவளை பார்ப்பவன் போலவும் அதை அவளிடம் கூறுவது தான் முக்கிய செய்தி போலவும் “வீட்டுக்கு போனதும் திருஷ்டி சுத்தி போடணும்” என்று அவள் காதோர முடியை பின்னால் எடுத்து விட்டவாறே ரகசிய குரலில் கூற,
அதில் அவள் முகம் மலர்ந்தாலும் நேரம் காலம் தெரியாமல் பேசுபவனை முறைத்தவள் “மாமா இப்போ இதுவா முக்கியம்..!!” என்றிட அவள் முக வடிவை அளந்து கொண்டிருந்தவன் “ஏய் என்னடி இது..!!” என்று திடீரென அதிரஅவன் உரத்த குரலில் அலரோடு சேர்ந்து பாலனுக்கும் தூக்கிவாரி போட்டது.
“ஏன்டா என்னாச்ச்சு..??” என்று பாலன் பதற,
அவள் கன்னத்தை பிடித்து அவரிடம் காட்டியவன் ” இங்க பாருங்க மாமா நான் அழகா இருக்கேன்னு சொன்னதுக்கே என் பொண்டாட்டி கன்னம் எப்படி செவந்திருக்குன்னு..!” என்று கூறவும் அரண்டு போன பாலன் அவனிடம் இருந்து இரண்டடி தள்ளி அமர்ந்தார்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.