மாலை ஐந்து மணி போலும் வீட்டுக்கு போகும் அவசரத்தில் இருந்த தங்க பொண்ணு கொஞ்சம் பதட்டமாக இருந்தாள்.தங்க பொண்ணு காப்பகத்தில் துப்புறவு வேலை செய்யும் பணி பெண்.நாளை அவளது மகளுக்கு வளைகாப்பு அதற்காக சம்பளம் முன் பணம் வாங்க காத்து கொண்டிருந்தாள்.
சம்பளத்தை சரி பார்த்து கையெழுத்திட்டுக் குடுக்க வேண்டிய சரண்யா தனது எதிரில் அமர்ந்திருக்கும் தம்பதிகளைச் சரமாரியாக வெளுத்து கொண்டிருந்தாள், “உங்களுக்கெல்லாம் அறிவில்லை படிக்க வைக்கக் காசு இல்லனு குடுத்தா.நீங்க நகை வாங்கிச் சேர்ப்பீங்களா.நகை சேமிக்கிற அளவுக்குக் காசிருக்கும் போது எதுக்கு உதவி கேட்கனும்?”
“நான் தப்பா அந்தக் காசை பயன்படுத்துல மேடம். எங்களுக்கும் கஷ்டம் தான்” என்றாள் அந்தப் பெண்.
“என் நண்பன் இங்க உதவு பண்ணுவாங்கனு சொல்ல போயி தான் வந்தேன் மேடம்.படிப்புச் செலவு கிடைச்சா ஒரு பக்கம் சேமிக்கலாம். இது தான் எங்க எண்ணம் வேற எதுவுமில்லை. நாங்களும் தப்பான எண்ணத்துல வாங்கல” கொஞ்சம் பயந்து கொண்டே சொன்னான் அந்தப் பெண்ணின் கணவன்.
சாதாரண மனிதனின் இயல்பு இது தான். இப்படி தான் யோசிப்பார்கள் என்றாலும் பெரும் ஆதங்கம் தாக்க, அதனை அடக்கி கொண்ட சரண்யா,”இங்க பாருங்க நான் உங்களைத் தப்பு சொல்லல,ஆனா உங்களால படிக்க வைக்க முடியும் போது அதைச் செஞ்சிருக்கலாம் தானே.உண்மையா கஷ்ட படுற குழந்தைக்கு அந்த உதவி சேர்ந்திருக்கும்.இன்னுமே சாப்பாட்டுக்கு கூடக் கஷ்டப்படுற ஆட்கள் எல்லா இருக்காங்கம்மா.
இந்த வருஷம் இருபது பேருக்கு மேல எங்களால உதவ முடியல.ஸ்பான்சர் யாருமே இல்லாம எங்களால உதவ முடியல தெரியுமா,ஆனா உங்களுக்கு உதவி கிடைச்சிருக்கு அதை எப்படி நீங்க பயன்படுத்தனும் சொல்லுங்க? நீங்க எதார்த்தமா என்கிட்ட மாட்டிக்கிட்டிங்க,ஆனா பல பேர் இப்படி தான் இருக்காங்க.எங்களால ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் போயி பார்க்க முடியாது.மேலோட்டமா விசாரிக்க மட்டுமே முடியும் எங்க நிலை புரியுதா உங்களுக்கு?”
“சாரிங்க”என்ன பேசுவது என்றே தெரியாமல் கெஞ்சி நின்றவர்களிடம் அதற்கு மேல் கோபம் காட்ட முடியாமல் தன்னை சமாளித்து கொண்டு.
“பரவாயில்லை இந்த வருஷம் விடுங்க அடுத்த வருஷம் எங்களால உங்களுக்கு உதவ முடியாது” சரண்யா கொஞ்சம் கண்டிப்பாகச் சொல்ல.
“சாரிங்க மேடம் இந்த ஒருமுறை உதவி பண்ணுங்க அடுத்த முறை நாங்க பார்த்துக்குறோம்”
“ஹ்ம்ம்! முன்னாடி விமலான்னு ஒரு பொண்ணு இருப்பாங்க அவங்க கிட்ட என் நம்பர் வாங்கிக்கோங்க.ஸ்கூல் தகவல் அவங்க வங்கி கணக்கு எல்லாம் அனுப்புங்க.இரண்டு நாளுல நான் கட்டிவிட்டுச் சொல்றேன்.நீங்க கட்டுன பணத்தை எப்படியோ வாங்கிக்கோங்க நாங்க பணம் கையில தர மாட்டோம்” என்றதும் எழுந்து கொண்ட இருவரும்.
“ரொம்ப நன்றி மேடம் மன்னிச்சுக்கோங்க” என்றான் அந்த ஆண்.
“மன்னிக்கிறதுக்கு இங்க ஒன்னுமில்லை. உண்மையான திறமை இருந்தும் சிலரால் படிக்க முடியாம போயிடுது அந்த ஆதங்கம் தான்”
“நீங்க சொல்ற கோணத்துல நாங்க யோசிக்கல. நாங்க, எங்க குடும்பம் இந்த வட்டத்துல தான் எங்க யோசனை” என்றான் அந்த ஆண் அவனது பேச்சில் உண்மையான வருத்தம் தெரிய.
“மனுஷன் இயல்பு அது தான் சார்.அது இயற்கை தப்பு சொல்ல முடியாது”
“சரியா சொன்னீங்க இனி இந்த தப்பு நடக்காது. ரொம்ப நன்றி நாங்க வரோம் மேடம்”என்றாள் அந்தப் பெண். அவர்களுக்குச் சிறு புன்னகை குடுத்து வழியனுப்பி விட்டுக் கொஞ்சம் தளர்வாக அமர.
அவர்கள் சென்ற அடுத்த நொடி வேகமாக உள்ளே நுழைந்தாள் தங்க பொண்ணு “சரண்யா மேடம்” கொஞ்சம் அலறல் போல் அவள் அழைத்து வைக்க.தீடீரென அவளது குரலில் பதறி நிமிர்ந்து அமர்ந்தாள் சரண்யா.
“என்னக்கா என்ன ஆச்சு?” படப் படத்தவளை பார்த்து அதை விடப் படப் படப்பாக.
“சம்பளம் முன் பணம்” கையை அவளது முகத்திற்கு நேராக நீட்டி கேட்டு வைத்தாள தங்கபொண்ணு. அவளது செயலில் சிறு முறைப்புடன்.
“அதுக்கு எதுக்கு அலறிக்கிட்டு வந்தீங்க?”
“இன்னா மாதிரி கேட்டுகின போ. வூட்டுல அத்தினி வேலை கிடக்கு.எனக்குக் கை புடிங்கி செய்ய ஆரு வூட்டுல நீ வேற” இருக்கும் தலை வலியில் அவளது புராணம் கேட்க முடியாமல்.
“சரி! சரி! இருங்க” என்றவள் கட கடவென வவுச்சர் எழுதி தங்க பொண்ணுடம் கையெழுத்து வாங்கிப் பணத்தைக் குடுக்கப் பிடுங்காத குறையாக வாங்கி கொண்டு ஓடினாள் தங்க பொண்ணு.
அவளது செயலில் சலித்துக் கொண்ட சரண்யா இடமும் வலமுமாகத் தலையை ஆட்டிவிட்டு மீண்டும் அமர்ந்து கொண்டாள். இன்று காலையில் இருந்தே பல சொதப்பல்கள்.அவள் ஓகே செய்த இரு மாணவர்களின் பெற்றோர்களும் ஒரு அளவுக்குப் படிப்பு செலவை சமாளிக்கக் கூடியவர்கள் என்றதுமே அவளுக்கு ஒருமாதிரி ஆகி போனது.
ஏனென்றால் பொதுத் தேர்வில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனுக்குத் தற்போது மருத்துவக் கல்லூரிக்குக் கட்டணம் கட்ட முடியவில்லை.இங்கும் கட்டணம் உதவி அனைத்தும் முடிந்த நிலையில். ஒரு ஐம்பதாயிரம் அந்த மாணவனுக்கு கொடுக்க முடியாமல் போனது.
இவர்களுக்குக் கொடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக அந்தப் பணத்தை அந்த மாணவனுக்குக் கொடுத்திருக்கலாம்.அவனது கட்டணத்தில் சிறிதளவு காசு குறைந்திருக்கும், அந்த ஆதங்கம் தான். அதனை எண்ணி தோய்ந்து அமர்ந்திருந்தாள்.
சரண்யாவின் அறை கதவு மீண்டும் தட்ட பட.பெரும் எரிச்சலில் இருந்த சரண்யா திட்ட தொடங்கும் முன் முரளி, அவன் பின்னிலே ஆதியும் வர எரிச்சலை விழுங்கி கொண்டு எழுந்து நின்றாள்.
“எங்க சரண்யா வேதா?”
“மேல வடிவு கூட இருக்கா சார்”
“ஹ்ம்ம்! நான் மேல என் ரூம்ல இருக்கேன் உடனே அங்க வர சொல்லு”என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் முரளியை அழைத்துக் கொண்டு மேல செல்ல.
ஓட்டமும் நடையுமாக வடிவு அறைக்குள் நுழைந்த சரண்யா,”வேதா!” வடிவுடன் பேசி கொண்டிருக்கும் வேதாவை அழைத்தவள்.
“ஆதி சார் அவர் ரூம்ல இருக்கார் உடனே உன்னைக் கூப்பிடுறார் வா”
“இதோ” என்றவள் வடிவை அழைத்துக் கொண்டு கீழே சென்றாள்.ஆதி முரளியுடன் வந்திருப்பது வேதாவிற்குத் தெரியாது. அதனை தெரிந்த சரண்யாவும் முரளியின் வருகையைச் சொல்ல வில்லை.
வடிவு கொஞ்சம் முரண்டு கொண்டே தான் வந்தவள், “அக்கா பார்த்த உடனே கத்தி வைப்பார் நான் வரல”
“ப்ச்! அதெல்லாம் இல்ல தப்பு பண்ண திட்டு வாங்கியாச்சு இனி அந்தத் தப்பை பண்ண கூடாது அவளோதான் விஷயம்.அதுக்காக ஆதியை பார்க்காம பேசாம இருக்க முடியுமா? லூசா நீ? அவனைக் கண்டாலே ஓடி ஒளிஞ்சு கிட்டு இருக்க”
“வேணாம் அக்கா பயமா இருக்கு”
“வாடி!” என்றவள் ஆதியின் அறை கதவை தட்ட.
“வா வேதா!” என்றவன் அழைக்க. அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர் இரு பெண்களும்.வடிவை அழுத்தமாக அவன் பார்த்து வைக்க.அவனது பார்வையை உணர்ந்து எச்சில் விழுங்கியவள் வேதாவிடம் சிக்கியிருந்த கைகளைப் பிடிங்கு கொண்டு திரும்பி பார்க்காமல் ஓட
“ஏய்! ஏய் வடிவு ” வேதா கத்த.
“ப்ச் அவளை விடு” என்ற ஆதியை முறைத்தவள்
“ரொம்பப் பயம் காட்டுற ஆதி உன்னைக் கண்டாலே ஓடுறா”வேதாவின் பேச்சுக்கு எதிர்வினை புரியாமல்.
“கதவை கொஞ்சம் லாக் பண்ணு கொஞ்சம் பேசனும்” என்ற ஆதியை முரளி அறியாமல் முறைத்தவள்.
“வாங்க முரளி!” என்று அழைத்தவாறு இருவருக்கும் நடுவில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள்.மூவரும் முக்கோணமாக அமர்ந்திருந்தனர்.
“கற்பகம் அக்கா என்ன சொன்னாங்க?” நேராக விஷயத்தை தொடங்க சில நொடிகள் மௌனம் கொண்டாள் வேதா.ஒரு வாரத்திற்கு முன் கற்பகத்தை அழைத்துப் பேசியதெல்லாம் சிறு சிறு துண்டாக வெட்டி எடுத்து வார்த்தைகளைக் கோர்க்க எண்ணினாள் போலும்.
“என்ன வேதா?”
“நான் பேசிய வரைக்கும் அவங்க மனநிலை என்னான்னா அவங்க செய்றது சரி” என்றதும் நொறுங்கி போனான் முரளி. தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது அவனுக்கு.
“முரளி!” வேதா அழைக்க.
அவளது கண்களைப் பார்க்க முடியாமல் கண்ணீர் கலங்கி நின்றது,”ப்ச் நான் பேசவா இல்ல அப்புறம் இதைப் பத்தி பேசலாமா?” என்றதும் தலையை மறுப்பாக ஆட்டியவன் கலங்கிய குரலில் “பேசிடலாம்”
“அவங்க உடல் ரீதியா பழக்கத்தைத் தொடங்கியாச்சு முரளி” இன்னும் ஓர் இடி முரளி அதிருவுடன் வேதாவை பார்க்க.
“ஆமா முரளி நான் அவங்க கிட்ட அந்த ஆளை பத்தி எத்தனை நெகடிவ் எடுத்து வச்சாலும் அவங்க நம்ப மறுக்குறாங்க. அவர் வேணும் ஆடாம இருக்காங்க சூடு கண்டா மட்டுந்தான் இதுக்கு வழி” பட்டென போட்டு உடைத்து விட்டாள்.
“இன்னொரு தரம் பேசி பாரேன்” நண்பனது நிலை பொறுக்காமல் ஆதி வேதாவிடம் கெஞ்சுவது போல் சொல்ல.
“நம்ப பேசி எந்தப் போராஜனமும் இல்லை ஆதி.அவங்க தெளிவா தப்பை சரினு நிக்கிறாங்க. அதுவும் போக அந்த ஆள் அவங்க மனைவி கிட்ட பேசி அந்தப் பொண்ணைச் சரி கட்டி இவங்க கிட்ட பேச வச்சிருக்கான்”என்றதும் இன்னும் நொந்து போனான் முரளி.
” இது எப்போ? அப்போ இவ..” மேலும் பேச முடியாமல் தொண்டை அடைக்க.
“மறைவா இருந்தாலும் அவர் கூட வாழ்ந்துட்டு போறேன்னு தெளிவா சொல்றாங்க ஆதி”சிறு சங்கடமாகச் சொன்னாள் வேதா. வேதா கல்லூரி படிக்கும் காலத்திலே முரளியை தெரியும்.முரளி விடுமுறைக்குப் பல முறை ஆதியின் வீட்டுக்கு வந்ததுண்டு.
ஆனால் பேச்சுக்கள் அத்தனை தூரம் இருந்ததில்லை.இன்று தான் இவர்கள் கொஞ்சம் பேசி கொள்வது.செவி வழியாக முரளின் குணம் கேட்டதுண்டு, ஆனால் இன்று தனது தமைக்காக அவன் துடிப்பதை பார்த்தே அவனது குணத்தைக் கண்டு கொண்டாள் வேதா.
“என்ன பண்ணலாம் வேதா? நான் அம்மாவ பேச சொல்லவா” அடுத்த கட்டத்தை எண்ணி ஆதி கேட்க.
“வேணாம் ஆதி விடு என்னால எல்லாரு முன்னும் தலை குனிஞ்சு நிற்க முடியாது.அம்மாகிட்ட எனக்குன்னு ஒரு பெயர் இருக்கு.அதுவும் நான் வந்து போக எனக்கு இருக்குற ஒரே இடம் உங்க வீடு தான்.உன் நட்பும், உன் குடும்பம் தான் என் ஆறுதல் இதுலையாவது கொஞ்ச சுயநலமா இருக்கேன்டா ப்ளீஸ்” என்றவனைப் பார்த்து
“முரளி!” என்று அழைக்க.
“முடியலடா ஆதி அசிங்கமா இருக்கு” என்றவன் ஓவென்று கதறி அழுக.ஆதியும் சரண்யாவும் பதறி எழுந்தனர்.வேதா சிறு தயக்கத்துடன் அவனது தோளை பற்ற.மறுபுறம் ஆதி பற்றிக் கொண்டான்.
சில நிமிடங்கள் அவனது கதறல் மட்டுமே கேட்க ஆளுக்கு ஒரு புறம் அவனது முதுகை நீவி விட்டனர்.வாழ்க்கையில் கடினமான பகுதியில் துணை இருப்பவனே உற்ற நண்பன் என்ற கூற்றை மெய்ப்பித்தான் ஆதி.நேரம் செல்ல செல்ல சிறு தேம்பலுடன் அழுது ஓய்ந்தவன்.தனது முகத்தை இரு கைகளாலும் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர.
அவனை விட்டு விலகி வந்து மீண்டும் அமர்ந்து கொண்டனர் ஆதியும்,வேதாவும்.
“முரளி என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் பல நாள் திருடன் அவன். ஒரு நாள் வசமா மாட்டுவான்”
“அதுக்குள்ள அவ வாழ்கை முடிஞ்சு போயிடும் ஆதி. விடு அவ தலையழுத்து அம்மாவை எண்ணி வச்சா தான் பயமா இருக்கு. இப்பவே எனக்குப் பார்த்த வரன் நின்னு போச்சு அந்தக் கவலை வேற அவங்களுக்கு” என்றதும் இருவரும் அதிர்ந்து முரளியை பார்க்க
“என்னடா சொல்ற”
“அவங்க எல்லாம் உறவு தானடா அக்காக்கு பார்த்த பையனோடு சித்தி பொண்ணைத் தான் எனக்கு முடிகிறதா இருந்தாங்க. அப்போ தான் இவ எல்லாத்தையும் சொன்னா என்றவன் நிறுத்தி ஆதியின் முகம் பார்த்து அவளுக்குப் பார்த்த மாப்பிள்ளை கிட்டையும் அவ அமரர் காதலை பத்தி சொல்லி வச்சிருக்கா டா”
“ப்ச்! என்ன வேலை இது?”
“கூட்டி குடுக்குற வீட்டுல பொண்ணு எடுக்கவும் கொடுக்கவும் நாங்க தயாரா இல்லனு போன் போட்டு கத்திட்டு வச்சுட்டான்.இன்னும் அசிங்கமா பேசுனான் என்னால எதிர்த்து கூடப் பேச முடியல”
“ஐயோ!” தலையில் கை வைத்து கொண்டாள் வேதா.ஒரு பெண் தடம் மாறி நின்று அவளது குடும்பத்தையே பதம் பார்த்து நிற்க என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
“முரளி விடு நீ அம்மாகிட்ட கொஞ்சம் பேசு”
“இனி பேச ஒன்னுமே இல்லை ஆதி அவங்க கிட்ட உண்மையச் சொல்ல போறேன். மூணாவது மனுஷாள் பேசி தெரிய வந்து அவங்க கலங்குறதை விட நானே சொல்லிட்டா அதிர்ச்சி குறைவாகி போகும்”
“அவங்க ஹெல்த் பார்த்து பேசுங்க முரளி” வேதா.
“என்ன நடந்தாலும் சரிதான் வேதா அவங்க போனா கூட நானும் போயிடுவேன்”
“ப்ச்! லூசு மாதிரி பேசாத முரளி” என்ற ஆதி எழுந்து அவனருகில் வந்து அவனை எழுப்பிக் கொண்டு.
“வேதா நாங்க கிளம்புறோம் நான் அப்புறம் உன் கிட்ட போனுல பேசுறேன் என்ன?”
“சரி என்றவள் முரளியிடம் திரும்பி அவனது கைகளைப் பிடித்துச் சலனம், தற்கொலை என்னைப் பொறுத்து வரைக்கும் இந்த இரண்டு உணர்வுக்கும் ஐந்து நொடி தான் ஆயுள் காலம் அந்த ஐந்து நொடியை கடந்துடுங்க முரளி.” என்றவள் பிடித்திருந்த கைகளில் மேலும் ஒரு அழுத்தத்தைக் குடுத்து விட்டு செல்ல.
போகும் வேதாவை பார்த்தவாறு இருந்தவனை ஆதி அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்குச் சென்றான்.இடையில் அவனே கற்பகத்திற்கு அழைத்துத் தன்னுடன் முரளியை வைத்துக் கொள்கிறேன் அம்மாவிடமும் சொல்லி விடுங்கள் என்ற தகவலை குடுத்து விட்டு.
தனது வீட்டை நோக்கி வண்டியை செலுத்த. அவனது அலைபேசி தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருந்தது.விடாமல் ஒழிக்கும் சத்தம் கேட்க, “முக்கியமான கால் போல ஆதி பேசிட்டு வா”
“அதெல்லாம் இல்ல” என்றதும் மீண்டும் போன் ஒலிக்க.
“ஏய்! எடுடா” முரளி கொஞ்சம் குரலை உயர்த்த
” ப்ச்! சலித்து கொண்டே எடுத்தவன் ஏய்~ எதுக்குடி விடாம அடிக்கிற…”
“….”
“பேச முடியாதுடி”
“…”
“ஆமா நாளைக்கு மறுநாள் மாப்பிள்ளை பார்க்க வராங்க அதுக்கு என்ன இப்போ?”
“…”
“நான் ஏன் உங்கிட்ட சொல்லனும்? எனக்கு நீ யாரு? வை”ஆதி கடித்து குதறி வைக்க.புருவம் சுருக்கி முரளி பார்க்க. அவனது பார்வை உணர்ந்தாலும் எதுவும் பேசாமல் வண்டியை செலுத்தினான் ஆதி.அதற்கு மேல் அதனைப் பற்றி யோசிக்காமல் எதிர்காலம் எக்காளமிட கண்களை மூடி கொண்டான் முரளி.
ஆதியிடம் பேசிய பெண்ணோ அவனது திருமணம் உறுதி கேட்டு அழுது கரைந்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.