Skip to content
Post Views: 2,713

முகுந்தன் வர்ணன் வருவதை பற்றி அனைவரிடமும் கூறி இருந்தான்… அவனை நினைத்து பயமாக தான் இருந்தது…. வாணனுக்கு ஒரு குற்றவுணர்ச்சி வர்ணன் வந்து கேட்டால் என்ன சொல்வது உன்னை நம்பி விட்டு சென்ற இருவரை இல்லாமல் செய்து விட்டாயே என்று கேட்டால் என்ன செய்வதில் என்று பயம் அவனுக்கு… உண்மையில் அது தான் நடக்க போகிறது….
முகுந்தன் கூறிக்கொண்டு இருக்கும் போதே சசி கர்ணன் இருவரும் தங்கள் குடும்பத்தை பேக் எடுத்து கொண்டு வெளியியோ வெளியில் வந்தனர்…
Advertisement
அனைவரும் அவர்களை ஏன் என்ற கேள்வியோடு பார்த்தனர்… சசி தான் “அண்ணாவும் சுபாவும் இல்லாத வீட்டுல எங்களால இருக்க முடியாது மாமா… அது தான் நாங்க கிளிம்பிட்டோம்…” என்று யாரையும் பார்க்காது கூறினான்….
Advertisement
Advertisement
வாணன் இடிந்து போய் விட்டான்… “நீங்களும் என்னை ஏன் டா கொல்றிங்க… அவன் போயிட்டான்… அவன் இல்லாம இருக்க மாட்டேன்னு அவளும் யாரும் தேட வேண்டாம்னு சொல்லாம எங்கயோ போயிட்டா… நீங்களும் என்னை ஏன்டா குற்றவுணர்ச்சில தள்ளுறீங்க…. உங்க எல்லாரையும் பாக்க பாக்க நான் கட்டுனவ உங்க எல்லாருக்கும் பண்ணது தான் டா ஞாபாகம் வருது… இங்கயே இருங்க” என்று கண் கலங்கி கூறினான்….
கர்ணன் வாணன் அருகில் சென்று “அத்தான் ப்ளீஸ் நீங்க கவலை படாதீங்க…. சுபா அண்ணி ஒரு நாள் கண்டிப்பா வருவாங்க … அன்னிக்கு இந்த வீட்டுக்கு வருவோம்…. அதுவரைக்கும் நாங்க அங்க வீட்டுல இருக்கோம்… இந்த வீடு எப்பயுமே சுபா அண்ணிக்கும் ஆரவுக்கு மட்டும் தான்…” என்று கூறினான்….
Advertisement
அவன் எதுவும் பேசவில்லை அதன்பின் அமைதியாக சென்று அமர்ந்து கொண்டான்…. மருதாயி பாட்டி தான் “ஒரு வாரம் கழிச்சு போங்க… அது வரைக்கும் இங்க இருங்க” என்று கூறி அவர்களை உள்ளே அனுப்பி வைக்க முயன்றார்…. அப்போதும் செல்கிறேன் என்று கூறியவர்களை மிரட்டி உள்ளே அனுப்பி வைத்தார்…..
மீண்டும் வர்ணன் அழைத்து “டேய் பிளைட் கிடைச்சிடுச்சு…. சோ சென்னைல இருந்து கோவை ஏர்போர்ட் ஒன் அவர்ல வந்துருவோம்… நீ அங்க வந்து பிக்கப் பண்ணிக்கோ… ” என்று கூறிவிட்டு “பாப்பா ரொம்ப அழுதுட்டு இருக்காளா டா… நல்லா இருக்கா தானு… போன் அவ கிட்ட குடு” என்று கூறினான்….
முகுந்தன் என்ன கூறுவது என்று தெரியாமல் “பாப்பா அழுது அழுது லேட்டா தான் தூங்குனா… இப்போ விடியகாலைல தான் தூங்குனா… நீ வரதுக்குள்ள எழுந்துடுவா…. நான் இப்போ கோவை கிளம்பி வந்தா கரெக்டா இருக்குமா…..” என்று கேட்டான்…
வர்ணனுக்கும் பிளைட் அனோன்ஸ்மென்ட் வந்ததால் “ஓகே டா நீ இப்ப கிளம்பு சரியா இருக்கும்….” என்று கூறி வைத்து விட்டான்….
முகுந்தன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்…. அவன் அப்படி அமர்ந்ததை பார்த்த கண்மணி பதறி போய் அவனிடம் வந்து “மாமா என்ன ஆச்சு…” என்று அவன் முன் மண்டியிட்டு கேட்டாள்…
அவனும் தலையை குனிந்தவாறே “அவன் சுபாவை தான் கேட்டுட்டே இருக்கான்… இப்பயே போன் குடு பேசனும்னு கேட்டான்… நானா தான் தூங்குறானு சொல்லிட்டேன்…. அவ இல்லனு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியல எனக்கு….” என்று வருத்தமாக கூறினான்….
அனைவருக்கும் பயமாக இருந்தது…. வர்ணனுக்கு அதிகமாக கோவம் வராது… ஆனால் வந்துவிட்டால் அது சீக்கிரம் போகாது… ஒரு ஆட்டம் ஆடி விடுவான்… எதிரில் யார் இருக்கிறார்கள் என்று கூட பாராமல் கை நீட்டி விடுவான்… இல்லை என்றால் மனம் நோக பேசிவிடுவான்…. அது தான் அனைவருக்கும் பயம்….
கண்மணி தான் அவனை சமாதானம் செய்து கோவை அனுப்பி வைத்தாள்… முகுந்தன் தெரிந்தே சுபாவை கேரளா அனுப்பி வைத்தாலும் வர்ணனை நினைத்து பயன்தான்… இருந்தும் சுபாவிற்காக அனுப்பி வைதான்…
அரை மணி நேரத்தில் கோவை ஏர்போர்ட் சென்று சேர்ந்து இருந்தான்… அவன் அங்கு சென்று சேர்ந்த அரை மணி நேரத்தில் வர்ணனும் ஜனனியும் கோவை வந்து சேர்ந்து இருந்தனர்…
வர்ணன் வேகமாக வந்து முகுந்தனை அணைத்து கொண்டான்… “எப்படிடா அவனை விட்டீங்க…. அவன் தான் நம்ம எல்லாருக்குமே ஆணி வேர்னு தெரிஞ்சும் ஏன்டா விட்டீங்க அவனை… அவன் இல்லாம நாம யாருமே இருக்க மாட்டோம்… பாப்பா எப்படிடா இருப்பா…. ரொம்ப அழுதாளா டா…. ஆரவ் நிரவி எல்லாம் எப்படி இருகாங்க” என்று கேள்வி கேட்டு கொண்டே போனான்….
“வர்ணா அமைதி… வீட்டுக்கு போய் பேசிக்கலாம்… வா போலாம்” என்று வர்ணனை பேச விடாமல் முகுந்தன் காருக்கு அழைத்து சென்றான்….
அடுத்த அரை மணி நேரத்தில் காரை வீட்டின் முன் நிறுத்தி இருந்தான் முகுந்தன்… நடுவில் வர்ணன் ஜனனி கேட்ட எந்த கேள்விக்கும் முகுந்தன் பதில் அளிக்கவில்லை..
வீட்டுக்கு போய் பேசிக்கலாம் என்று ஒரே வரியில் பதிலை முடித்துவிட்டான்… அவன் முகத்தில் தெரிந்த சோகம் அவனின் இந்த பதில் அனைத்தும் வர்ணனுக்கும் ஜனனிக்கும் பதட்டத்தை தான் கொடுத்தது….
அவனின் பதிலில் அமைதியாகி விட்டனர் இருவரும்….முகுந்தன் அனைத்தும் தெரிந்தும் தெரியாமல் இருப்பது போல் இருப்பது அவனுக்கு கஷ்டமாக இருந்தது…
வீட்டை அடைந்ததும் அவர்கள் கண்டது நந்தினியை அறையும் வாணனை தான்… சசியும் கர்ணனும் இறுகிய முகத்துடன் நின்று இருந்தனர்…. அனைவரும் கோவமாக நந்தினியை முறைத்து நின்று இருந்தனர்….
பாலா கோவமாக நந்தினியை அடித்து “ச்சே நீ எல்லாம் பொண்ணாடி… ஏன் இப்படி பணம் பணம்னு பேராசை பிடிச்சு அலையுற…. உன்னோட தம்பிங்க தானு இவனுங்க… உண்மை என்னனு உனக்கு தெரியும்…. அப்படி இருந்தும் சுபாவை தப்பா பேசுற… நீ எல்லாம் மனுஷியே இல்லடி… எங்கயோ போய் செத்துறு” என்று தன் ஆத்திரம் தீரும் வரை அடித்தார்….
அப்போதும் நந்தினி அடங்காமல் “என்ன உண்மை… அவ ஓடுகாலி தானு… அப்புறம் என் தம்பி சொத்தை இவனுங்க அனுபவிக்க தான் இன்னும் இங்க இருக்காங்க… நான் என்ன பொய்யா சொல்றேன்” என்று கோவமாக கத்தினாள்…..
அதை கேட்டு இன்னும் கோவமடைந்த வாணன் நந்தினியை நன்றாக அடித்துவிட்டான்… ஏற்கனவே நேற்று பட்ட காயம் இன்னும் ஆராமல் இருக்க தற்போது ஏற்பட்ட காயம் அவளை இன்னும் பலவீனமாக்கியது…
இன்று மருதாயி பாட்டி கூட அவளுக்கு பாவம் பாக்கவில்லை…. ஏன்னென்றால் நந்தினி பேசியது அவ்வாறு இருந்தது…
காலையில் முகுந்தன் ஏர்போர்ட் சென்ற பின் எழுந்த நந்தினி சசி கர்ணன் இங்கு இருந்தால் அவளுக்கு இந்த வீடு கிடைக்காது என நினைத்து அவர்களின் சுய மரியாதையை தூண்டி விட்டால் இங்கு இருந்து சென்று விடுவார்கள் என நினைத்து வெளியே சென்று சசி கர்ணனிடம் இங்கயே தங்கி என் தம்பியோட சொத்தை நீங்க அனுபவிக்கலாம்னு நினைக்குறிங்களா…. ஒழுங்கா இந்த வீட்டை விட்டு போங்க… என் தம்பியோட சொத்து ஒரு பைசா கூட உங்களுக்கு இல்ல…. என்று கோவமாக கத்தினாள்…
இதை கேட்டு தான் வாணன் நந்தினியை அறைந்து இருந்தான்… வர்ணன் பாலா நந்தினி பேசியதை வைத்து சுபா இங்கு இல்லை என்று மட்டும் தெரிந்து கொண்டான்…. முகுந்தனிடம் திரும்பி “முகி சுபா இங்க இல்லனா அப்போ வேற எங்க இருக்கா….. கேரளால என்ன நடந்தது… வீட்டுல என்ன நடந்தது எல்லாத்தையும் சொல்லு டா…. உண்மையை மட்டும் தான் சொல்லணும்…” என்று கோவமாக கேட்டான்…
முகுந்தனும் அனைத்தையும் கூறி இருந்தான்.. இதை கேட்டு கோவமடைந்த வர்ணன் வாணன் முன் நின்று “உன்னை நம்பி தானு அவங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு போனேன்… ஆனா நீ ரெண்டு பேரையும் தொலைச்சிட்டு வந்து நிக்குற.. அப்பயே உன் பொண்டாட்டியை அடக்கி இருந்தா இப்போ என் நண்பன் உயிரோட இருந்து இருப்பான்… என் தங்கை எங்கயும் போய் இருக்க மாட்டா….” என்று கோவமாக கத்தி வாணனின் சட்டையை பிடித்து இருந்தான்…. அவனின் கோவத்தில் அனைவரும் அதிர்ந்து நின்றுவிட்டனர்…
error: Content is protected !!