“பாலைத் திணை – இளவேனிற் பத்து இளவேனில் காலத்தில் திரும்பிவிடுவேன் என்று உறுதி கூறிவிட்டுத் தலைவன் பொருளீட்டச் செல்கிறான்.இளவேனில் பருவம் வந்தும் தலைவன் திரும்பவில்லை.எனவே தலைவி தன் தோழியிடம் சொல்லித் தலைவி கலங்குகிறாள்.இதில் உள்ள பத்துப் பாடல்களும் தலைமகன்பிரிந்துழிக் குறித்த பருவம் வரக்கண்டதலைமகள் சொல்லியது. அவரோ வாரார்; தான் வந்தன்றே குயில் பெடை இன் குரல் அகவ, அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே! –341 பெண் குயில் தன் இனிய குரலில் பாடுகிறது.ஆற்றில் வரும் தெளிந்த நீரில் நுண்ணிய மணல் படிகிறது.அவர் வரவில்லை.இளவேனில் வந்துவிட்டது.”
அன்று நடந்த சம்பவங்கள் எதுவும் மதகுருவின் காதுகளை எட்டியிருக்கவில்லை.மறுநாள் வழக்கம்போல் அரசவைக்கு வந்தவரை எதிர்கொண்டு நின்றான் நஸீம்.
“உசூர்!!”
“தங்களிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை மதகுரு அவர்களே!”
“என்ன!!என்ன சொல்கிறீர்கள் எதைப் பற்றி??”
“காசிம் இப்போது சிறையில் இருக்கிறான்.”
“காசிம்??!?!!!!”
“ஆம் நீங்கள் வளர்த்த உங்களின் காசிம் தான்.”
“…..”
“ஏன் இவ்வாறு செய்தீர்கள் அவன் வாழ்வையே அழித்து விட்டீர்களே!எதற்காக என் மீது இப்படி ஒரு குரோதத்தை வளர்த்துவிட்டீர்கள்?”
“அவனுக்கு எப்போதுமே தங்கள் மீது நல்லதொரு எண்ணம் இருந்ததில்லை. அவனிடத்தை தட்டிப் பறித்த எதிரியாகவே தங்களை எண்ணியிருந்தான்.
அவனைப் பற்றிய விவரம் எனக்குத் தெரிய வந்ததே காலதாமதமாக தான்.
அந்த நேரத்தில் தான் தாங்கள் நம் ராஜ்ஜியத்தை கைப்பற்றியிருந்தீர்கள்.
அப்போது வந்து இவனைப் பற்றி கூறி மீண்டும் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் ராஜ்ஜியத்தின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்ற காரணத்தினால் தான் அமைதி காத்தேன்.
அவனுக்கு நம் மதத்தின் அத்துனை போதனைகளையும் பயிற்றுவித்து எனக்கடுத்த அரச மதகுருவாக அவனை ஆக்க வேண்டும் என்பதே என் அவா.
அவனும் நான் கற்றுத் தரும் அனைத்தையும் சித்தையாகவே கற்றுத் தேர்ந்தான்.உங்கள் மீதான கோபம் கூட குறைந்துவிட்டது என்றே எண்ணியிருந்தேன்.
அப்போது நடந்ததுதான் தங்களின் நிக்காஹ்.அதை என்னால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடிவில்லைஅவனை சந்தித்தபோது அதைப் பற்றியும் தாங்கள் என்னை அவமதித்ததைப் பற்றியும் அவனிடம் கூறினேன்.
அப்போதுதான் உங்கள் மீதான அவன் வன்மம் பலமடங்கு இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன்.
அன்றைய மனநிலையில் அவன் கூறிய அனைத்தும் சரியாகவே பட்டது எனக்கு.
தங்கள் மனைவியை உங்களிடமிருந்து பிரிப்பதற்காக வீரர்கள் இருவரை வைத்து அவர் கேட்கும்படி உங்களைப் பற்றி தவறான கருத்துக்களை தெரிவிக்க வைத்தேன்.
ஆனால் நானே எதிர்பாராதது தங்கள் மனைவியை அவன் கொல்லத் திட்டமிட்டது.அது நிறைவேறாமல் போனபோதே நான் அவனை முடிந்தளவு எச்சரித்தேன்.
அதையும் கடந்து தங்களிடம் சிக்கிவிட்டான்.”,என்றவர் தலை குனிந்து நின்றார்.
“மதகுரு அவர்களே வார்த்தைக்கு வார்த்தை அவளை என் மனைவி என்கிறீர்களே அதையும் கடந்து அவள் இந்த ராஜ்ஜியத்தின் அரசி அதை மறக்க வேண்டாம்.
தங்களின் வயதிற்கு ஏற்ற காரியமா இவையெல்லாம். வயதில் சிறியவனான என் முன் இவ்வாறு தலைகுனீந்து நிற்கும் நிலைமையை தங்களுக்குத் தாங்களே ஏற்டுத்திக் கொண்டீர்களே!
மனம் மிகுந்த வேதனை அடைந்திருக்கிறது.அல்லாஹ்வின் அத்தனை அருளையும் ஆசியும் பெற்றிருக்கும் தாங்கள் இத்துனை கீழ்த்தரமாய் செயல்பட்டிருக்க வேண்டியதில்லை.
எது எப்படியோ சற்று நாட்களுக்கு ஹஜ் யாத்திரை சென்று வாருங்கள். இறைவனைத் தேடிய பயணம் உங்களுக்கு நிச்சயமாய் மன அமைதியை கொடுக்கட்டும்.
அதன் பிறகாவது நல் எண்ணங்களை மட்டும் மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள்.சென்று வாருங்கள்”
“காசிம்!!!”
“அவன் என் சகோதரன் அவனை எவ்வாறு கவனிக்க வேண்டுமென்று யாம் அறிவோம். தாங்கள் செல்லலாம்.”, என்றவன் அங்கிருந்து சென்றுவிட அவருக்கோ தன் தவறு முதன் முறையாய் புரிந்தது.
அன்று இரவு நஸீம் சிவகங்காவதியை சந்திப்பதற்காக அவளிடத்திற்கு வந்தான். மிகவும் களைத்திருந்தவனைப் பார்த்தவளுக்கு மனம் இளகிவிட்டது.
“ஏன் இத்துனை சோர்வாய் இருக்கிறீர்கள்.உணவு ஏதேனும் எடுத்து வரவா?”
“அதெல்லாம் வேண்டாம் கங்கா எப்போதுமே உடற் சோர்வை விட மனச் சோர்வு மனிதனை எளிதில் பலகீனமாக்கி விடுகிறது.”
“என்னவாயிற்று மதகுருவிடம் பேசினீர்களா?”
“ஆம் மனதிலிருப்பதை கொட்டிவிட்டாலும் பாரம் மட்டும் இன்னும் அழுத்திக் கொண்டு தான் இருக்கிறது. அவரை சற்று நாட்கள் என் கண்களில் படவேண்டாம் எனக் கூறியிருக்கிறேன்.”
“புரிகிறது.. ஆனாலும் தங்கள் தமையனை.. மன்னித்து விடுங்கள் அப்படிச் சொல்லலாம் அல்லவா?”
“நீ சொல்லாமல் இருப்பதனால் அது உண்மையில்லை என்று ஆகிவிடாதே கங்கா..”
“அவரை என்ன செய்யப் போகிறீர்கள்?”
“இன்னும் சிந்தித்ததுக் கொண்டு தான் இருக்கிறேன். மதகுரு அவர்களின் விருப்பப்படி அவரின் இடத்திற்கே அவனை அமர்த்தலாம் என்று தோன்றுகிறது.”
“நல்ல முடிவுதான் ஆனால் அவர் அரியணைக்கல்லவா ஆசைடுகிறார்?”
“உண்மைதான்ஆனால் அதற்கான பக்குவம் அவனிடம் இல்லை.எனை பழிதீர்ப்பதாய் நினைத்து தேவையற்ற செயல்கள் ஏதேனும் செய்துவிடுவானோ என்று அஞ்சுகிறேன்.
எனவே சிறிதுகாலம் அவன் இந்த பதவியில் இருக்கட்டும் அதன் பின்னும் அவனுக்கு நாடாளும் ஆசையிருந்தால் நிச்சயம் நான் தடுக்க மாட்டேன்.”
காலத்தின் கட்டாயத்தால் யாருக்கு எந்த முகத்தை காட்ட வேண்டும் என்பதை கடவுளே நிர்ணயிக்கிறார்.
அதையும் கடந்து வெகு சிலரிடமே சிலர் என்பதை விட யாரோ ஒருவரிடம் மட்டுமே நாம் நாமாய் இருக்க முடியும்.
அவர்களிடம் எவ்வித தயக்கமுமின்றி நம் கெட்டதையும் நல்லதையும் வெளிக் கொணரலாம்.
உங்களின் வாழ்வில் அப்படிப்பட்ட ஒருத்தியாய் நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியே. இதில் எப்படி உங்களைப் பிரித்து பார்த்துக் கூற முடியும்.
உலகமே அறிந்த இஷானும் என் மனம் கவர்ந்தவர் தான்.நான் மட்டுமே அறிந்த இஷானும் என் மனம் கவர்ந்தவர் தான்.”
அவள் கூறியதைக் கேட்டவனுக்கு அப்போதே அவளைத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் பெருகியது. அவனின் பார்வை ஆயிரம் அர்த்தங்களைத் தாங்கி நிற்க முகம் செம்மையுற்றவளாய் தலை குனிந்தவாறே அவனைவிட்டு சற்று தள்ளி நின்றாள்.
அவளின் எலும்புகள் முறிந்து மூர்ச்சையாகி விடுவாளோ எனும் அளவிற்கு அவனின் இறுக்கம் இருந்தது.
“இஷான்..”,அவள் குரல் அவளுக்கே கேட்டிருக்கவில்லை அப்படியாய் ஒருநடுக்கம் அவளிடத்தில்.
அவளின் ஒவ்வொரு அசைவிற்குமான அர்த்தங்களைப் படிக்க முயன்றிருந்தவனுக்கு அவள் உடல் மொழி ஏதோ செய்தி கூற மெதுவாய் தன்புறம் திருப்பினான்.
மென்மையாய் அவள் கன்னம் பற்றி நிமிர்த்தியவனின் அழுத்தத்தில் விழி நிமிர்த்தியவள் அவனை ஏறிட என்னவென்பதாய் இருந்தது அவனின் பார்வையின் கேள்வி.
“அ..து..நாம்..அங்கு..”,என்றவள் நந்தவனம் இருந்த இடத்தை நோக்கி கைக்காட்ட முகம் மலர்ந்தவனாய் அவளை அப்படியே கைகளில் ஏந்தியிருந்தான் நஸீம்.
அவனின் உயரத்திற்கும் எடைக்கும் சிறு பதுமை போல் அவன் கைகளில் காட்சியளித்தாள் சிவகங்காவதி.
நந்தவன அறைக்குள் நுழைந்தவன் அவள் வரைந்த ஓவியத்தின் முன் சென்று அவளை இறக்கிவிட்டு நொடியும் தாமதியாது அவளது அதரங்களை தன்னுடையது கொண்டு சிறை செய்திருந்தான்.
தன் மீதான தன்னவனின் காதலை அந்த ஒற்றை முத்தத்திலேயே உணர்ந்திருந்தாள் சிவகங்காவதி.
நிமிடங்கள் கடந்து விடுவித்தவனின் முகம் நோக்க முடியாது தவித்தவள் அவனை அப்படியே அணைத்துக் கொண்டாள்.
ஆதரவாய் அவளை ஆரத் தழுவியவனுக்கு மனம் எல்லையில்லா நிம்மதியை அடைந்திருந்தது.
தானாகவே அவனிடமிருந்து பிரிந்தவள் அவன் விழி நோக்கியவாறே மெதுவாய் அவனிடம், ”மேனுஷு ஹேஷு மாகாஷ்ட்டம்”. என்று கூறி அவன் விழி நோக்கி நிற்க நஸீமோ விழிகளில் மின்னிய குறுஞ்சிரிப்போடு அவளை இன்னுமாய் தன்புறம் இழுத்து அவள் காது மடல்களில் தன் இதழ்உரச,
“நா..ன்..உன்..ஐ..காத..லிக்கி..றென்….”,என்று முடித்து காது மடல்களில் அழுத்தமாய் இதழ்பதித்தான்.
“இஷான்!!!”
“உன்னளவு மொழிப் புலமை எனக்கில்லை இருந்தும் இந்த ஒரு வார்த்தையாவது உன் மொழியில் உன்னிடம் கூற வேண்டும் என்று வெகு நாட்களாய் பயிற்சி செய்து வைத்திருந்தேன்.நான் கூறியது சரிதானா?”
ஆம் என்பதாய் அவள் நாணத்தோடு தலையசைக்க , ”இதற்கான பரிசாய் என் கங்கா எனக்கு என்ன தரப் போகிறாள்?”
இதுவரை கண்டிறாத உணர்வுகளும்,விடைத்தெறியா பல கேள்விகளுக்கான விடைகளுமாய் ஒன்றிருக்கு ஒன்று போட்டியிட ஒவ்வொரு நொடியும் அழகிய கனவாய் நகரத் தொடங்கியிருந்தது இருவருக்கும்.
அதிகாலையில் கண்ணயர்ந்தவளை அப்போதும் அணைப்பிலிருந்து விடுவிக்காது தன் தோள் சாய்த்திருந்தவனுக்கு மனம் இறகுபோல் இருப்பதாய் தோன்றியது.
எத்தனையோ போர்களில் வெற்றியடைந்து ராஜ்ஜியத்தை கைப்பற்றிய போது வந்திருக்காத ஒரு ஆழ்மன அமைதி தன் காதலைக் கண்டுகொண்ட நொடி அவனுக்கு கிடைத்திருந்தது.
எத்துனை உயர்வான காதல் எனினும் அதில் காமமும் அடக்கமே.அதே நேரம் ஒருவர் மீதான மற்றவரின் நம்பிக்கையும் அக்கறையும் அந்த நேரத்தின் ஒவ்வொரு நொடியிலும் மற்றவருக்கு வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
உடலின் தேவைக்கான திருப்தி என்பதை விட உண்மையான காதலின் கூடலில் மனங்களின் தேவைகளுக்கும் திருப்தி கிடைத்திருக்கும்.
இஷானும் இப்போது அந்த திருப்தியை உணர்ந்திருந்தான்.தன்னவளையும் உணர வைத்திருந்தான்.
அழகிய கவிதையாய் ஒரு இல்லறம் அங்கு நடந்தேறியிருந்தது.
நாட்கள் எவ்வித குழப்பங்களும் இன்றி நகர்ந்து கொண்டிருக்க அன்று நஸீமோடு அமர்ந்திருந்தவள் அவனிடம் தன்னுடைய வெகுநாளைய சந்தேகத்தை கேட்க விழைந்தாள்.
“நான் இதை தங்களிடம் எப்போதோ கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.இப்போது கேட்கட்டுமா?”
“என்ன கங்கா எதுவாயினும் கூறு?”
“இல்லை இத்துனை நாட்களில் ஒரு முறைக்கூட என்னை தங்களின் வழக்கத்தைப் பின்பற்றுமாறு கூறியதேயில்லையே! அதன் காரணம் என்னவென தெரிந்து கொள்ளலாமா?”
“இதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது. நீ யாரென தெரிந்துதான் உன்மேல் காதல் கொண்டேன். அப்படியேதான் நிக்காஹ்கும் செய்து கொண்டேன்.
அப்படியிருக்க வாழ்வு முழுமைக்கும் உனை அப்படியே ஏற்றுக் கொள்வது தானே முறை.
அதுமட்டுமன்றி உன் ஈசனின் மீதான உன்னுடைய தீரா காதலை அறிந்தபின்பும் நான் அதை மாற்றிக் கொள்ளுமாறு கூறினால் உன் உணர்வுகள் அவ்விடத்தில் மடிந்து போகும்.
உணர்வுகள் மடிந்து உறவுகள் வாழ்வதில் எப்போதுமே அர்த்தமில்லை கங்கா.” ,என்றவனை எப்போதும் போல் அதிசயித்துப் பார்த்திருந்தாள் சிவகங்காவதி.
மறுநாள் காலையிலேயே அரசவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான் நஸீம். யாத்திரைக்குச் சென்றிருந்த சமீராவும் அன்று ராஜ்ஜியத்திற்கு திரும்பியிருந்தார்.
இருவரையும் மனமொத்த தம்பதிகளாய் கண்ட அவருக்கு மனம் நிறைந்து போனது.
அவரோடு இருவருமாய் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருக்க சிவகங்காவதி எதிர்பாராமல் மயங்கியிருந்தாள்.
பதட்டமாய் இருவரும் அவளை சீர்படுத்தி எழுப்பி அமர வைக்க அவளின் நாடிபிடித்து பரிசோதித்த சமீராவின் முகத்தில் அத்துனை ஆனந்தம்.
“நஸீம் நம் நாட்டிற்கு அரச வாரிசு வரப்போகிறது .உன் மனைவி கருவுற்றிருக்கிறாள். யா அல்லாஹ் என் யாத்திரைக்கான பலனை உடனே அளித்ததற்கு எத்துனை நன்றிகள் கூறினாலும் பத்தாது.”
சிவகங்காவதிக்கோ அப்படி ஒரு மகிழ்ச்சி மனதை நிறைத்திருக்க நஸீமின் முகமும் அதையே பிரதிபலித்தது.
சிறிது நேரம் அவளோடு அமர்ந்திருந்தவன் அரசவைக்கு அவளையும் வருமாறு அழைத்தான்.
என்னவென்று புரியாத போதிலும் மறுப்பின்றி அவனோடு சென்றாள்.
அவனைக் கண்டதும் அரசவை மக்கள் அனைவருமாய் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க தன் தலையசைப்பால் அதை ஏற்றுக் கொண்டவனாய் அனைவரிடமும் பேச ஆரம்பித்தான்.
“அவையோருக்கு இந்த இஷான் நஸீமின் வணக்கங்கள். தங்களிடம் சில முக்கியமான விடயங்களைப் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கவே அழைப்பு விடுத்திருக்கிறேன்.
முதலாவதாய்..”, என்றவன் சற்று தள்ளி நின்றிருந்த காசிமை முன்னே வருமாறு அழைக்க அனைவரும் ஆச்சரியமாய் பார்த்திருந்தனர்.
“இவர் காசிம் என்னுடைய மூத்த சகோதரர். இன்று முதல் நம் ராஜ்ஜியத்தின் அரச மதகுருவாய் இவர் பொறுப்பேற்கவிருக்கிறார்.
எனக்கு அளிக்கும் அதே மரியாதையை அவருக்கும் இனி அனைவரும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்ததாய் அரசவை அதிகாரிகளின் பணியிடங்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்யவிருக்கிறேன். இன்று முதல் இஸ்லாமை சேர்ந்த அமைச்சர்களோடு மூன்று புது அமைச்சர்கள் பொறுப்பேற்க இருக்கிறார்கள்.
அவர்கள் மூவரும் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். அவர்களின் மக்களுக்கு தேவையானவற்றை என் பார்வைக்குக் கொண்டு வருவதற்காககவே இந்த ஏற்பாடு.
அத்தோடு இந்த நஸீமின் ஆட்சி எப்போதுமே மக்களுக்கு நிறைவை அளிப்பதாகவே இருக்க வேண்டும்.
மதத்தால் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துபவர்களுக்கு நிச்சயமாய் இந்த ராஜ்ஜியத்தில் இடமில்லை.
அல்லாஹ்ஹின் பிள்ளைகள் எப்போதும் எக்காரணம் கொண்டும் மற்றவர்களைத் துன்புறுத்த எண்ண மாட்டார்கள்.
அத்தோடு இவள் “சிவகங்காவதி” இந்த இஷான் நஸீமின் மனைவி. இந்த ராஜ்ஜியத்தின் அரசி. பிறப்பால் இவள் ஒரு இந்து. அதை அறிந்தே அவளைக் கரம் பற்றியிருக்கிறேன்.
எனவே அவளின் மதத்தையும் பழக்க வழக்கங்களையும் வாழ்வு முழுமைக்கும் பின்பற்றும் உரிமையை அவளுக்கு எப்போதும் அளிப்பேன்.
அதுமட்டுமன்றி எந்த ஒரு காலத்திலும் மதத்தை மட்டும் வைத்து தனி மனிதனின் மகிழ்ச்சியை நம்மால் நிர்ணயிக்க முடியாது.
மதங்களிடேயே சகிப்புத்தன்மையும் மக்களிடையே தியாக சிந்தனையும் இருந்துவிட்டால் நாட்டின் அமைதிக்கு ஒருபோதும் குறைவு ஏற்படாது.
மதங்கள் மனிதனை நெறிப்படுத்துவதற்கே அன்றி கடவுளின் பெயரைக் கூறி சக மனிதனை அழிப்பதற்கு அல்ல.
என் மக்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியும் நிம்மதியும் எந்த இடையூறுமின்றி கிடைக்கட்டும்.”, என்றவனோடு சிவகங்காவதியும் இரு கரம் கூப்பி நின்றாள்.
“உசூர் இஷான் நஸீம் வாழ்க வாழ்க!!!!
அரசி சிவகங்காவதி வாழ்க வாழ்க!!!”, என்ற கோஷங்களை கடந்து அரசவையிலிருந்து வெளியே வந்தபோது சிவகங்காவதி அவனையே பார்த்திருக்க என்ன என்பதாய் அவளைப் பார்த்து நின்றான் நஸீம்.
“யாரோ என் முழுப்பெயர் கூறி அழைத்ததாய் நியாபகம்!!”
“மக்களின் அரசியின் பெயர் சிவகங்காவதி தான். இந்த நஸீமின் மகாராணியின் பெயர் தான் கங்கா. அதை யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன். அது நம் வாரிசு என்றாலும் சரி”, என்று கூறியவனின் தோள்களில் காதலாய் சாய்ந்துகொண்டாள் சிவகங்காவதி.
அன்றைய தினம் பூஜையில் இருந்தவளுக்கு ஆனந்தத்தில் கண்கள் கண்ணீரால் நிறைந்துவிட்டிருந்தது.
அந்த ஈசனின் மீது அசைக்க முடியா நம்பிக்கை கொண்டிருந்தவளுக்கு அந்த ஈசன் அவள் மனம் போலே மாங்கல்யத்தை அளித்திருந்தார்.
எந்தமதம் எந்த கடவுளாக இருந்தாலும் உண்மையான பக்தி மட்டுமே என்றும் பிரதானமாய் இருக்க வேண்டும் என்பதை மனமாற உணர்ந்திருந்தாள் சிவகங்காவதி.
*******முற்றும்**********
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.