சர்வேஷ்வரன் மீண்டும் விசாரணை அறைக்குள் நுழைந்த போது ஏற்கனவே வாங்கிய அடியில் கிழிந்த நாராக கிடந்தவன் இப்போது தாய் தந்தை உடன் பிறந்தவர்கள் தன்னால் அனுபவித்த கொடுமையை எண்ணி மனமும் தேகமும் கூச யாரையும் பார்க்க முடியாது கூனி குறுகிப் போய் மரவட்டையாக சுருண்டு கிடந்தான்.
கவியுடனான அவன் வாழ்வு குறித்து எத்தனை எத்தனை கனவு கண்டான். தன் மனைவியாக அவளை வீட்டினுள் அழைத்து செல்லும் நாள் குறித்து எத்தனை கற்பனைகள் வைத்திருந்தான் அனைத்தையும் சர்வேசுவரன் நொடியில் தவிடு பொடியாக்கி அவன் வாழ்வையே மாற்றி அமைத்து விட்டானே என்ற ஆதங்கம் பெருகியது.
அதைவிட தன் உறவுகள் முன் கவிலயாவை தரம் இறக்கியதை எண்ணி பார்க்க கூட முடியவில்லை அவனால்!!
பெற்றோரின் முகத்தில் இனி எப்படி விழிப்பான்?! கவியை எப்படி மருமகளாக ஏற்றுகொள்வார்கள். அவன் ஆசையில் மண்ணள்ளி போட்டு இப்படி யாரையும் பார்க்க முடியாமல் செய்து விட்டதில் அவன் உள்ளம் கொந்தளித்து கொண்டிருந்தது.
இதை செய்ய முயன்ற அஞ்சுவை கட்டுபடுத்த முடிந்தவனால் இப்போது சர்வாவை எதையும் செய்ய முடியாத நிலையை அறவே வெறுத்தவன் மனமெங்கும் வேதனையும் வெறுமையும் மண்டிக்கிடந்தது.
“என்ன அண்ணாமலை இப்படி இருக்கான்? இன்னுமா உண்ட மயக்கம் தெளியலை?!”
“அதெல்லாம் அப்போவே ஜீரணமாகிடுச்சு ஸார்…”
“சரி அண்ணன் தம்பி பேசிகிட்டது ரெக்கார்டிங்ல இருக்கு தானே?”
“இருக்கு ஸார். அவன் தம்பியும் தன் பங்குக்கு முறை செஞ்சுட்டு போனதுல விழுந்து கிடக்கிறான் வேற ஒண்ணுமில்லை”
“டாக்டர் தேவைபடுவாரா?”
“தேவைப்படாது சார், ஒரே நிமிஷம் எப்படி எழுப்பி உட்கார வைக்கிறேன் பாருங்க” என்றவர் அவன் மீது தண்ணியை ஊற்ற பெரும் திணறலுடன் எழுந்து அமர முயற்சி செய்தான்.
“என்னடா போஸ் கொடுத்துட்டு இருக்க?! ஸார் வந்திருக்கிறது தெரியலை எந்திரிடா” என்று அதட்டல் போடவும் அருகே இருந்த மேஜையை பிடித்தபடி எழுந்து நின்றான்.
அவனை மேலிருந்து கீழ் பார்த்தவன், “சரி சீக்கிரம் கூட்டிட்டு வாங்க” என்றுவிட்டு பக்கத்து அறைக்கு சென்று விட அசோக்கிற்கு வேறு உடை கொடுத்து மாற்ற செய்து அழைத்து வந்தார்கள்.
சர்வாவின் முன் அவனை மண்டியிட வைக்க, “தப்பு பண்ணிட்டீங்க, ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க ஸார்..” என்று கண்ணீரோடு சர்வாவை பார்த்தான்.
“எதுடா தப்பு?!” என்று சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த சர்வேஷ்வரன் நொடியில் அவனருகே வந்து அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்க திகைத்து தலையை பின்னே சாய்த்தவன்,
“ஏன் சார் இப்படி பண்ணீங்க அவங்க என்னை பெத்தவங்க, நாங்க கௌரவமான குடும்பம் இதெல்லாம் வெளியே தெரிஞ்சா நாங்க எப்படி தலைகாட்ட முடியும்? அவங்க எல்லாம் பாவம் ஸார்” என்று கண்ணீர் வழிய சர்வாவை இறைஞ்சுதலாக பார்த்தான்.
“ஓஒ உனக்கு சென்டிமென்ட்ஸ் வேற இருக்கா?!” என்று எள்ளலாக பார்த்தவன்,
“ஏன்டா உன்னை பெத்தவங்க இதை பார்த்ததுக்கு இவ்வளவு துடிக்கிறியே அன்னைக்கு கட்டின புருஷனை இந்த நிலையில் பார்த்த பொண்டாட்டி மனசு எப்படி துடிச்சிருக்கும்?! ஆனா அதை நீ மதிச்ச மாதிரியே தெரியலையே டா.. பொண்டாட்டின்னா அவ்ளோ இளப்பமா?!” என்று கண்கள் இடுங்க கேட்டவன் இருகரங்களையும் தலையின் பின்னே கோர்த்தபடி,
“அன்னைக்கே நீ அஞ்சுவோட உணர்வுக்கு மதிப்பு கொடுத்திருந்தா இன்னிக்கு உனக்கு இந்த நிலைமை கிடையாது.. அப்புறம் என்ன சொன்ன கௌரவமான குடும்பமா?!” என்று நக்கலாக சிரித்தவன்,
“இதையெல்லாம் நீ செகேன்ட் சேனல் ஆரம்பிக்கும் முன்னாடி யோசிச்சிருக்கணும் இல்லையா இந்த கருமத்தையெல்லாம் வீடியோ எடுக்கும் முன்னாடி யோசிச்சிருக்கணும் பட் நவ் இட்ஸ் டூ லேட்!!” என்று கைகளை விரித்தான்.
“ஸார் இதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. அவங்க என் அண்ணன் தம்பி, அவங்களையும் இதெயெல்லாம் பார்க்க வைக்க எப்படி சார் உங்களால முடிஞ்சது?! இனி நான் எப்படி அவங்க முகத்தை பார்த்து பேசுவேன் உங்களுக்கு மனசாட்சி இருக்கா? இதுக்கு பதிலா நீங்க என்னை கொன்னு போட்டு இருக்கலாம்”
“ஏன்டா பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிட்டு இந்த கருமத்தை எல்லாம் ஃபோட்டோ வீடியோ எடுத்து வச்ச உனக்கே மனசாட்சி இருக்குறப்போ எனக்கு இருக்க கூடாதா?! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ன்னு கேள்வி பட்டதில்லை. நீ விதைச்சதை தான் இப்போ அறுவடை பண்ற” என்று பற்கள் நெறிபட அவனை பார்க்க எங்கே மீண்டும் அடிப்பார்களோ என்று பயத்தோடு பின்னே நகர்ந்தான்.
“இப்போ நீ செத்த பாம்புடா இனியும் உன்னை அடிக்கிறதுல யூஸ் இல்லை பயப்படாம இரு..” என்றதும் “ஒழுங்கா முட்டி போடுடா” என்றார் குமரன்.
“இல்ல எனக்கு இதுதான் புரியல..” என்று வெற்றியை நீவி விட்டவன், “அது எப்படிடா பொண்டாட்டி கிட்ட கையும் களவுமா மாட்டிக்கிட்ட பிறகும் உன்னால தப்பே பண்ணலைன்னு சாதிக்க முடிஞ்சது?! அதைவிட எதையும் அழிக்காம வச்சிருந்த பாத்தியா அங்க நிற்கிற மேன் நீ?! உன்னோட அந்த தைரியத்தை பார்த்து எனக்கு புல்லரிச்சு போச்சு தெரியுமா?!” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு சொன்னவன்,
“பொறுக்கி நாயே!! கண்ட இடத்துல மேஞ்சதும் இல்லாம அதை பாதுகாத்தும் வச்சிருக்க. மத்தவனா இருந்தா எந்த நிமிஷம் மாட்டிப்போமோன்னு முதல்ல இதை எல்லாம் அழிச்சிட்டு தான் மறு வேலை பார்த்திருப்பான் ஆனா நீ செய்யலை. ஹ்ம்ம் அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு!!” என்றவனின் கர்ஜனையில் தூக்கி வாரி போட நிமிர்ந்தான் அசோக்.
“பெத்தவங்க கை காட்டின ஒரே காரணத்துக்காக யாரு என்னன்னே தெரியாத உன்னை நம்பி உன்கிட்ட தன் வாழ்க்கையை ஒப்படைச்ச பொண்ணுக்கு துரோகம் பண்ணும் முன்னாடி இது அசிங்கம்னு தெரியலையா? உங்க குடும்ப கௌரவம் அப்போ நினைப்புல வரலையா?!” என்றவனின் கூர்மையான பார்வையில் அசோக்கிற்கு உடல் தன்னையறியாமல் உதறல் எடுத்தது.
“ஒவ்வொரு பெண்ணும் பலவித கனவோடு கணவன் தனக்கு எப்பவுமே துணை இருப்பான் என்ற நம்பிக்கையோடு அவனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அந்த வீட்டுக்குள்ள வாழ வருவா. அவளுக்கு இப்படி துரோகம் பண்ணலாமா? பெண்களோட கண்ணீர் எவ்வளவு விலைமதிப்பானது அப்படி இருந்தும் அஞ்சுவை அசிங்கபடுத்தி கதறவிட்டப்போ உனக்கு அசிங்கமா இல்லையா?!”
“ஸார் இவ்ளோ பேசறீங்களே அவ ஒன்னும் ஒழுங்கில்லை, நல்ல பொண்டாட்டியா என்னைக்குமே நடந்ததில்லை..” என்றதும் தான் தாமதம் அமர்ந்திருந்த நாற்காலியை எட்டி உதைத்தபடி எழுந்து நின்ற சர்வா அவனை ஓங்கி அறைந்தான்.
“எவ்ளோ தைரியம் இருந்தா என் எதிர்லயே தப்பா பேசுவ?!” என்று அவன் வாயிலேயே ஓங்கி மிதிக்க ரத்தம் வழிந்தது. “ஒழுங்கில்லையா? அதை நீ சொல்றியா? இன்னொரு வார்த்தை தப்பா பேசின கொன்னு பொதைச்சிடுவேன் நாயே..” என்று வரைமுறை இல்லாமல் அவனை அடித்து உதைத்தவன் இறுதியாக அசோக்கின் சட்டை காலரை இழுத்து பிடித்து,
“செந்தில்” என்று ஆக்ரோஷமாக குரல் கொடுக்க அவர் உடனே அசோக் கவியின் காணொளியை ஒளிபரப்பினார். அதை கண்டதுமே, “ஸார் ப்ளீஸ் ஆஃப் பண்ணுங்க” என்ற கதறல் அவனிடம்.
“நீ தானே அஞ்சு நல்ல பொண்டாட்டியா இல்லைன்னு சொன்ன?! உன் அகராதியில இதோ இப்படி இருக்கிறவ தான் நல்ல பொண்டாட்டியா?! சொல்லுடா.. சொல்லு..” என்று கேட்டு கேட்டு அவனை விளாசி தள்ளினான்.
மிரண்டு போன கண்ணன், “பொறுமையா இருந்த ஸாரையே கோபபடுத்திட்டான். லாக்கப் டெத் ஆகிட போகுது போய் காப்பாத்துங்க ஸார்” என்றான் குமரனிடம் பதட்டத்தோடு.
“அட! இவன் யாருடா இவன்… ஸார் எவ்ளோ கோபத்துல இருந்தாலும் நிதானம் தவற மாட்டார், நீ சும்மா வேடிக்கை பாரு” என்று சொல்ல, “இனி இப்படி பேச மாட்டேன் ஸார் விட்டுடுங்க” என்று கையெடுத்து கும்பிடவும் தான் ஓங்கி மிதித்துவிட்டு சென்று அமர்ந்தான்.
“ஸார் உங்க கையில ப்ளட்” என்ற குமரனின் வார்த்தை சர்வாவின் பார்வையில் அடங்கி போனது.
குறையாத ஆவேசத்தோடு மேஜையில் தாளமிட்டபடி அசோக்கிற்கு தண்ணீர் கொடுத்து முகத்தை துடிப்பதை பார்த்திருந்தவன் மீண்டும் தன் முன் கொண்டு வந்து அவனை மண்டியிட வைத்த மறுநொடியே ஆத்திரம் தீர அவனை ஓங்கி அறைந்தான்.
கைகள் பின்புறம் கட்டபட்டிருந்த நிலையில் அசோக்கிற்கு தலை கிறுகிறுத்து போனது.
“பத்து பொண்ணுகளோட இருக்கிறது ஆண்மை கிடையாது உன்னை நம்பி வந்தவ முகத்துல கைபிடிச்ச நாளில் இருந்த சிரிப்பையும் சந்தோஷத்தையும் பூரிப்பையும் ஆயுசு முழுக்க குறையாம நிறைவான வாழ்வை கொடுக்கிறது தான் ஆண்மை..”
“ஆனா அதை செய்யாத நீயெல்லாம் ஆம்பளைன்னு சொல்லவே கூடாது.. அப்படியும் சொல்லிட்டு திரிஞ்சேன்னா மொத்தமா வெட்டி போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்” என்றவனின் ஆக்ரோஷத்தில் அசோக் மிரட்சியோடு பார்க்க,
“என்ன செய்ய மாட்டேன்னு பார்க்கிறியா?!” என்று தலைசாய்த்து பார்த்தவன், “எப்படி ஆதாரமே இல்லாம சம்பவத்தை செய்வேன் அதை எப்படி ரிப்போர்ட் எழுதுவேன் அதுக்கு எப்படி சாட்சியை நிறுத்துவேன்னு சொல்லட்டா?!” என்றவனின் பார்வையே சொன்னதை செய்வேன் என்று அடித்து சொல்ல அசோக்கிற்கு வியர்த்து வழிந்தது.
“ப்ளீஸ் ஸார் அப்படி எதுவும் செய்துடாதீங்க” என்றான் கண்ணீர் மல்க.
“கட்டின மனைவியை எந்த இடத்திலயும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டு கொடுத்திருக்க கூடாது ஆனா அஞ்சுவை அவ்ளோ மோசமா நடத்தி தற்கொலை செய்துக்கும் அளவுக்கு தூண்டி விட்டிருக்கியே உன்னை என்ன பண்ணலாம்?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி அவனை பார்த்த தொனியே அவனுள் பயபந்தை உருள வைத்தது.
“ஸார் Section 498A ல தொடங்கி 306, 509, 375 ன்னு இன்னும் பல செக்ஷன்ல கேஸ் ஃபைல் பண்ணலாம்..” என்று ஆறுமுகம் சொல்ல,
“பண்ணலாம் ஆறுமுகம் ஆனா அதனால என்ன யூஸ்?! இவ்ளோ பட்டும் திருந்தாத இந்த ஜந்து உள்ள போனா மட்டும் திருந்திடுமா?!”
“ஸார் வேண்டாம் ஸார், இதுல நான் மட்டுமில்ல இன்னொரு பெண்ணோட கௌரவமும் அடங்கி இருக்கு. என்னை தண்டிக்க அவளை இன்னமும் அசிங்கபடுத்திடாதீங்க, ப்ளீஸ் ஸார் கவி ரொம்ப சென்சிடிவ்!! இதையெல்லாம் அவ தாங்கமாட்டா” என்று சொல்ல சுற்றியிருந்தவர்களிடம் அட்டகாசமான சிரிப்பு.
“ஷ்ஷ்!! ஸார் இவ்ளோ ஃபீல் பண்ணி பேசறப்போ என்னயா சிரிப்பு வேண்டி கிடக்கு உங்களுக்கு?! ஷட்டப்!!” என்று அதட்டல் போட அவர்களின் சிரிப்பு இரட்டிப்பாகி போனது.
சர்வாவின் முகத்திலும் இளநகை படர்ந்திட, “ஏன்டா இவ்ளோ தூரம் நடந்தும் கட்டின பொண்டாட்டிக்காக துடிக்காம கண்டவளுக்காக துடிக்கிறியே?! ஓ இதுக்கு பேர் தான் மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக்காதல் இல்லைன்னு சொல்றதோ?!”
“ஏன் குமரன் ஒருவேளை இது அதையும் தாண்டி புனிதமானதோ?! எனக்கு தான் அதை புரிஞ்சுக்க முடியலையோ!! சரி திரும்ப இன்னொரு ஷோ போடறேன் பார்த்துட்டு உங்களுக்கு அப்படி தோணுதான்னு சொல்லுங்க?!” என்று நக்கலாக அசோக்கை பார்க்க,
“ஸார் போதும்!! நிறுத்துங்க, இது ரொம்ப தப்பு!!”
“தப்பு தான்டா!! உன் குடும்பத்துல இருக்கிற நாலு பேருக்கு மட்டும் ஷோ போட்டேன் பாரு அது பெரிய தப்பு தான்! நான் அப்படி செஞ்சிருக்க கூடாது ஸோ இப்போ செய்த தப்பை உடனே திருத்திடுறேன்” என்றவன் தொனியே அவனை கலவரபடுத்த,
“என்ன ஸார் பண்ண போறீங்க?” என்றான் உடல் உதற…
“உங்களோட புனித போர் அரங்கேற்றத்தை நாலு பேரோடு நிறுத்திடாம நாட்டு மக்கள் எல்லாருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கிற விதமா எல்லா சேனலுக்கும் சோஷியல் மீடியாவுக்கும் கொடுத்துடறேன். எங்களுக்கு புரியாத உங்க மனித காதலும் புனித போரும் மத்தவங்களுக்கு புரிய வாய்ப்பு இருக்கு தானே! என்ன செந்தில் நான் சொல்றது?!”
“ஸாரி ஸார் மன்னிச்சிடுங்க நான் தெரியாம பேசிட்டேன். தயவுசெய்து அப்படி எதுவும் பண்ணிடாதீங்க” என்று அசோக் மன்றாட அவனை ஒற்றை காலால் எத்தி தள்ளிய சர்வா,
“யார் முன்னாடி என்ன பேசறோம்னு யோசிச்சு பேசு இல்ல நாலு சுவத்துக்குள்ள உன்னை பெத்தவங்களுக்கு போட்டு காட்டினதை மத்தவங்களுக்கு ஷேர் பண்ண நாலு செக்கேன்ட் ஆகாது” என்று எச்சரித்தவன்,
“ஏன்டா பொண்டாட்டி பிள்ளையை வச்சுகிட்டு நீ பண்ணினதே ஒரு எச்ச வேலை.. அதையும் கூச்சமே இல்லாம வீடியோ எடுத்து வச்சிருக்கியே என்ன ஈனப்பிறவிடா நீ?!”
“….”
“சரி உனக்கு ஏதோ காரணத்தால உன் மனைவியை பிடிக்காம போயிடுச்சு அதை வெளிப்படையா சொல்லி புரிய வச்சு இனியும் இந்த வாழ்க்கையை தொடர்வதால் மனகசப்பும் விரிசலும் தான் அதிகமாகும். அப்படி இல்லாம நல்லபடியா பிரிஞ்சுடலாம்ன்னு சொல்லி விலகி இருந்தா நானே உன் நேர்மையை பாராட்டி அண்ணா அரங்கத்துல விழா ஏற்பாடு பண்ணி இருப்பேன். ஆனா நீ செய்த எச்ச வேலைக்கு உன்னை இவ்ளோ தூரம் விட்டு வச்சிருக்கிறதே பெருசு”
“பொண்டாட்டின்னா அவ்ளோ கேவலமா? அதுவும் கருவை கலைக்க சொல்லி ப்ரெஷர் கொடுத்து உரு தெரியாம அழிச்சிட்டு திரும்ப குழந்தை வேணும்னு கேட்டியே அதுவும் கவிக்காக தானே?! என்று புருவம் உயர்த்த அசோக் கலவரமானான்.
“தப்பு தான் ஸார்!! இப்போ ஒத்துக்கிறேன் ஆனா நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?!” என்றான் மெல்லிய குரலில்.
“ச்சே ச்சே!! நீ என்ன கேட்கணுமோ கேளு தப்பாவே எடுக்க மாட்டோம்”
“ஸார் கவி.. கவிக்கு ஒன்னுமில்லையே! அவளை இதுல இழுக்காதீங்க., இந்த விஷயமெல்லாம் அவளுக்கு தெரிய வேண்டாம் அவளால அவமானம் தாங்க முடியாது” என்று நடுக்கத்தோடு சொல்ல சர்வாவின் விழிகள் சிவந்து போனது.
“நீ சொல்லு கண்ணன் இவனை மாதிரி ஆளையெல்லாம் என்ன பண்ணலாம்?!”
“ஸார் இவனை அந்நியன் படத்துல வரமாதிரி எண்ணெய் சட்டியில பொறிக்கிறதுன்னு விதவிதமா நரகத்துல கொடுக்கிற தண்டனையை கொடுக்கணும். அதுவும் குழந்தையை தன்னோட சந்தோஷத்துக்கு தடையா நினைச்சு அதையும் துச்சமா நடத்தின இவனை எல்லாம் சாகுற வரை கல்லால் அடிக்கணும்”
“அப்புறம் ஏன் சும்மா இருக்கீங்க” என்று அவன் கண் காட்டவும் மீண்டும் அசோக்கை துகிலுரித்து தங்கள் பாணியில் மரியாதை செலுத்த தொடங்கினர்.
“ஸார் இனி இப்படி பேச மாட்டேன் ஸார், ப்ளீஸ் நிறுத்த சொல்லுங்க” என்றவனின் கதறலை பொருட்படுத்தாமல் சர்வா அவனிடம் கொடுக்கப்பட்ட ஃபைலை பொறுமையாக சரிபார்த்து கையெழுத்திடும் வரையிலும் அவன் கதறல் நிற்கவில்லை.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.