“குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் மு.வ விளக்க உரை: ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.”
கல் பெஞ்சில் அமர்ந்திருந்தவளைப் போட்டு பாடாய் படுத்திக் கொண்டிருந்தாள் மாலா.
“ஐயோ எனக்கு கல்யாணம்னு சொன்னா கூட இவ்வளவு சந்தோஷப்பட மாட்டேன் டி. என் செல்லக்குட்டியையும் அண்ணனையும் பார்த்து பார்த்து ரசிச்சேன் தெரியுமா.
அதிலேயும் உங்கப்பாக்கு வைச்ச ஷாக் தான் ஹைலைட்டே.. நேத்து பூரா எங்கம்மா பைத்தியமா இவனு தான் பார்த்துட்டு இருந்தாங்க டி..”
“மாலா நீ கொஞ்சம் அமைதியா இரு. யாராவது பார்த்தா அவ்வளவு தான். மாட்டி விட்டுறாத டி..”
“எவன் என்ன சொல்லுவான்.. எங்க பக்கம் இருக்குறது பெரிய கை மா..”, என்றவளோடு நீணிதியுமே சிரித்திருந்தாள்.
“ஆனால் உன் அண்ணனுக்கு கல்யாணம்னு ஒண்ணை பண்ணி வைச்சு ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்சுராதீங்கடி. ஆளும் மூஞ்சியும்..”
“…”
“அடுத்து எங்க வாத்திட்ட போட்டு கொடுக்க வேண்டியது அந்த கருங்குரங்கை தான்.”, அத்தனைக்கும் நீணிதியின் முகத்தில் புன்னகை மட்டுமே.
“ம்ம் நானும் அவங்க பேசும் போது கேட்டேன். ஆரணி அக்கா கல்யாணத்துல உன்னை பார்த்தவுடனே பிடிச்சுருச்சாம். சார் கூட ஸ்டூடண்ட்னு கொஞ்சம் யோசிச்சாறாம். அப்பறம் ஓகே சொல்லிட்டாராம்.”
“என்ன டி மனசில் என்ன நினைக்குற? நானும் உன்னை எப்படியாவது பேச வைக்க பாக்குறேன்..”, என்றதில் மாலாவின் கரத்தை எடுத்து தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டாள்.
“தேங்க்ஸ் மாலா..”, என்றவள் அவளது தோளில் சாய்ந்து கொண்டாள்.
“ஊரில் என் ப்ரெண்ட்ஸை எல்லாம் விட்டுட்டு வரும் போது எவ்வளவு வருத்தமா இருந்தது தெரியுமா? ஆனால் நீ முதல் நாளிலிருந்து இப்போ வரை எனக்கு எவ்வளவு ஆறுதலா இருக்கனு உனக்கு தெரியாது.
அவங்க கூட சொன்னாங்களே நீ தான் எனக்கு பெரிய பலம்னு. வாழ்க்கை எப்படியிருந்தாலும் உன்னை மாதிரி ஒரு ப்ரெண்ட் இருந்தா போதும்.”
“என்ன டி.. என்னென்னவோ பேசிகிட்டு..”
“இந்த கல்யாணம் முதல்ல ரொம்ப பயமா இருந்தது. அறுவறுப்பா இருந்தது.
என்னோட எதிர்காலமா எங்கம்மா என் முன்னாடி நிக்குறாங்கனு கூட நினைச்சுப்பேன்.
ஆனால்.. அவங்க.. அவங்க நல்ல மாதிரினு தோணுது. என்னை புரிஞ்சுக்குவார், எனக்காக என்னைக்கும் கூட இருப்பார்னு தோணுது மாலா..”
“அட அட அப்படி வா வழிக்கு..”
“கிண்டல் பண்ணினா நான் பேச மாட்டேன் போ..”
“சரி சரி நீ சொல்லு செல்லக் குட்டி..”
“க்ளாசில் நாம பாக்குற அவருக்கும் என்கிட்ட பேசுறவருக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு. முக்கியமா அவரோட பேசும் போது எனக்கு பெருசா பயமாவே இல்ல டி.
இதெல்லாம் போதும் தான ஒரு கல்யாணத்துக்கு? நான் சரியா தான யோசிக்குறேன்?”
“சரியா மட்டும் தான் யோசிக்குற நீணு செல்லம். நேத்து பேசின அப்பறம் எனக்கும் அது தான் தோணிச்சு. இனி ஆல்வேஸ் நீணு ஹேப்பி மோட் தான்.”, என்றதில் நீணிதிக்கு நிம்மதியாய் இருந்தது.
முந்தைய தினம் விருந்தினர்கள் கிளம்பவே நேரமாகியிருக்க மகளோடு பேசவே வாய்ப்பு கிடைக்கவில்லை சாந்தாவிற்கு.
அதை உணர்ந்தவளும் கல்லூரி முடிந்து வந்தவுடன் தாயின் கைப்பற்றிய படி அமர்ந்து விட்டாள்.
“ம்ம் ஆமா மா.. அவங்க வீட்டு ஆளுங்க உங்ககிட்ட ஒழுங்கா பேசினாங்களா?”
“அதை ஏன் கேட்குற உன் மாமியாரும் பெரிய மாமியாரும் என் கையைப் பிடிச்சுகிட்டு பக்கத்திலேயே உட்கார வைச்சுகிட்டாங்க.
நீணிதி இனி எங்களுக்கும் பொண்ணு தான் சீக்கிரமே கட்டி கொடுக்குறோமேனு பயப்பபடாதீங்கனு எல்லாம் சொன்னாங்க டி”
“..”
“மாப்பிள்ளை கூட நல்ல மரியாதையா இருக்கார். நான் கும்பிட்ட சாமி எல்லாம் என்னை கை விடலை நீணு மா..”, என்றதைக் கேட்டவளுக்குமே தாயின் நிம்மதி மனதை குளிர்விப்பதாய்.
அங்கு இளனின் வீட்டிலோ ஜானகிக்கும் ரங்கமணிக்கும் முகமெல்லாம் பூரிப்பு.
பிள்ளைகளை மணக்கோலத்தில் பார்க்க எந்த தாய்க்கு தான் மகிழ்ச்சியில்லாமல் போகும்.
ஸ்ரீதருக்கோ பத்து வயது குறைந்ததைப் போன்ற எண்ணம் இளனின் திருமண வேலைகளுக்கு அத்தனை சுறுசுறுப்பாய் தயாராகி விட்டார்.
“பொண்ணு நல்ல குணமா தான் தெரியுது ஜானு. அதிர்ந்து கூட பேசாது போல.”
“ஆமாக்கா பயந்த சுபாவம் தான். க்ளாசிலேயும் அப்படி தான் இருக்குமாம். கேட்டா கேட்டதுக்கு பதில் தான் பேசுமாம். படிப்புல கெட்டி போல.”
“என்னவோ மனசே நிறைஞ்சுருக்கு ஜானு. எல்லாம் நல்லதாவே நடக்குது.”, என்றிருக்க கோபாலன் இளனருகில் வந்து அமர்ந்தார்.
“சொல்லுங்க பெரியப்பா..”
“உன் மாமனார் கொஞ்சம் குணம் காணாதோனு தோணுது இளா..”
“..”
“நம்மகிட்ட சாதாரணம் போல இருந்தாலும் என்னவோ ஒண்ணு அவர்ட்ட உறுத்தல் தான்.”
“ஆமா பெரியப்பா எனக்கும் வேலனுக்குமே அந்த எண்ணம் இருக்கு. இவளும் அவருக்கு தான் ரொம்ப பயப்படுறா.”
“ம்ம் இங்கே வந்தப்பறம் பிள்ளை நம்ம பொறுப்பு. பார்த்து நல்லபடியா நடந்துக்கோ டா. உனக்கு எல்லாம் ஓகே தான?”
“நீங்க பண்ற ஏற்பாடு எப்படி ஓகே இல்லாம போகும்.”, என்றதில் மகனின் தோள் தட்டிச் சென்றார்.
வாசலில் கோபாலோடு எதோ கிசுகிசுத்த வண்ணம் நின்றிருந்தான் மகிழ் வேலன்.
“என்ன ரகசியம் பேசிகிட்டு இருக்கீங்க?”
“ரகசியம்னு தெரியுதுல அப்பறம் ஏன் கேட்க வர்ற நீ? எனக்கும் சித்தப்பூக்கும் ஆயிரம் இருக்கும். உனக்கெதுக்கு?”
“ம்ம் கல்யாண மாப்பிள்ளை உன்னை வேலை பாக்க வைச்சுட்டு.. டேய் அதெல்லாம் நான் பார்த்துக்குவேன். சித்தப்பாக்கும் அப்பாவுக்கும் ரெஸ்ட் தான்.”
“அதை தான் பண்ணாதனு சொல்றேன். எல்லாத்தையும் உன் தலையில போட்டுகிட்டு ஸ்டேஷன் வேலையும் பார்த்துட்டு இதையும் பண்ணுவியா. சொன்னா கேளு வேலா..”
“இதெல்லாம் ஒரு விஷயமா என் தம்பி கல்யாணம்.. நான் வேலை செய்யாம..”, என்றவனைப் பார்த்து இளனும் கோபாலனும் புன்னகைத்தனர்.
அதற்குள் இளனிற்கு திருமணம் என்ற செய்தி கல்லூரியில் லேசாய் பரவ ஆரம்பித்திருந்தது. அவனது பிரிவு ஆசிரியர்களுக்கு மட்டும் நிச்சயம் முடிந்தது எனக் கூறியிருந்தான்.
பெரிதாய் அவன் யாரோடும் நெருக்கமில்லாததால் யாரும் எதையும் தோண்டி துருவாமல் விட்டிருந்தனர்.
மனதளவில் இளனோடு நெருக்கமாய் உணர்ந்து விட்டாலும் நீணிதி அவனோடு பேசவோ பழகவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தந்தை மீதான பயம் அத்தனை சீக்கிரம் போய்விடுமா என்ன! ஆனால் இதற்கு முன் சாதாரணமாய் இருந்த அவனின் பார்வை இப்போது தன்னைத் தீண்டும் போது உரிமையாய் இருப்பதை நன்றாக கண்டு கொண்டாள்.
இருந்தும் சிறிது பயம் இன்னமும் இருக்கத்தான் செய்தது.
அன்றைய தினம் மாலா விடுமுறை எடுத்திருக்க வகுப்பில் இருக்கவே பிடிக்கவில்லை நீணிதிக்கு.
ஏனோ தானோவென பொழுதை கடத்திக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து அமர்ந்தான் கவின்.
“நீணிதி..”
“சொல்லு கவின்”
“மாலா இன்னைக்கு லீவுனு சொன்னா..”, என்று உளறியதில் அவனை கேள்வியாய் பார்த்தாள்.
“உளர்றேன்னு எனக்கே தெரியுது.. சாரி.. அது எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் நீணிதி. ஐ திங்க.. ஐ..”, என்றதில் அத்தனை நாட்களின் பயமெல்லாம் மொத்தமாய் அவளை அப்பிக் கொண்டன.
“கவின் ஏன் என்னென்னவோ பேசுற.. முதல்ல எழுந்து போ..”
“நீணிதி நான் சொல்றதை..”
“ப்ளீஸ் இங்கேயிருந்து போ.. எனக்கு.. எனக்கு சீக்கிரமே கல்யாணம்..”, என்றதில் அதிர்ந்தவனாய் எதையோ கூற வர அந்நேரம் தற்செயலாய் அவளது வகுப்பைக் கடந்து சென்ற இளன் எப்போதும் போல் ஜன்னல் வழி நீணிதியை பார்க்க நினைக்க அவனைப் பார்த்தவள் பயந்து எழுந்தே விட்டிருந்தாள்.
என்ன ஏதென புரியாமல் அவளிடம் கேட்டகவும் முடியாதே என்ற எண்ணத்தோடு தனதிடத்திற்குச் சென்றவன் யோசனையில் இருந்தான்.
நீணிதியோ விறுவிறுவென வெளியே சென்றிருந்தாள். ஒரு மரத்தடியில் அமர்ந்தவளுக்கு அன்றைய தினம் தந்தை அடித்த அடி தான் நினைவிற்கு வந்தது.
இளன் பார்த்து விட்டான் என்னவென கேட்டால் என்னவென்று சொல்ல முடியும்.
அடுத்ததாய் தந்தையிடம் கூறிவிடுவான் அவர்.. அவர் என்ன செய்வார் இப்படி ஏதேதோ எண்ணங்களில் தவித்தவளுக்கு அப்படி ஒரு பயம்.
அந்த நேரம் அவளது கைப்பேசி அழைக்க திரையில் தெரிந்த இளனின் எண்ணில் சர்வமும் ஒடுங்கிப் போனது அவளுக்கு.
அழைப்பை ஏற்று காதில் வைத்த நொடி,
“க்ளாசில் இருந்தா எதுவும் பேசாம வெளியே எங்கேயாவது தனியா வா நீணிதி..”, என்றவனின் குரலில் சில்லிட்டு போனது.
“ஹலோ?”
“நான் க்ரவுண்ட்ல…”, என்றதும் சாதாரணம் போல் வெளியே வந்தவன் எட்டிப் பார்த்து விட்டு மீண்டுமாய் உள்ளே சென்றிருந்தான்.
“என்ன குரலே..”
“நான் நான் சத்தியமா எதுவும் பண்ணலைங்க. நான் யாரோடவும் பேசலை..”
“நீணிதி..”
“நிஜமாவே அவனா தான் வந்து பேசினான். நான் அவனை போக தான் சொன்னேன்.”, என்றவள் விசும்ப ஆரம்பித்திருந்தாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.