சாலையில் சக்கரங்கள் உராய வண்டி நின்றதுமே சிறிதும் தாமதியாது ராஹியின் புறம் திரும்பியவன், “நான் சொல்றது எதுவும் கேக்கவே கூடாதுங்கற முடிவுல தான் வில்லேஜ்லயிருந்து கிளம்பி வந்துருக்கியா? நான்தான் அந்த ஒயிட் ஸ்னேக்க ஹேர்ல இருந்து ரிமோவ் பண்ணிட்டு வரச்சொன்னேன்ல?” என்று
வழக்கம் போல் சீற…
திடீரென்று நிறுத்தப்பட்ட வாகனத்தால் பேனட்டில் மோதவிருந்த தலையை கை வைத்துக் காத்துக் கொண்டவள் சுதாரித்து அமரும் முன் காதடியில் கர்ஜித்த ஆணவனின் குரலில், அவனை ஆதங்கமாக நோக்கியவளும், “பூ வைக்கிறது என்னோட பர்சனல் சார்.
நா உங்க ஆபிஸ்ல வேலைக்கி தான் இருக்கேன் வேலை சம்மந்தமா என்ன வேணா சொல்லுங்க செய்யுறேன். என் பர்சனல்ல தலையிட உங்களுக்கு உரிமையில்ல” என்று அமைதியான குரலிலே அழுத்தம் திருத்தமாக அவனுக்கு உரைத்தாள் ராஹித்தியா.
பெண்ணவளின் குரல் அமைதியாக இருந்தாலும் அவள் வார்த்தைகள் அவனைச் சீண்ட, “உன்னோட பர்சனல்ங்கறது என்ன பாதிக்காத வரை தான் அது உனக்கு பர்சனல். சென்னைலயே நம்பர் ஒன் பிசினஸ்மேனா என்னோட ஆக்ட்டிவிட்டிஸ் மட்டும் இல்ல, என் கூட இருக்கவங்களும் மீடியா அண்ட் பப்ளிக்கால வாட்ச் பண்ணப்படுவாங்க. அப்டி இருக்கப்போ என்னோட பி ஏ ஒரு பிசினஸ் பார்ட்டிக்கு இப்டி கன்ட்ரி ப்ரூட்டா வந்து நின்னா எனக்குத்தான் இமேஜ் பாதிக்கும்” என்று நீளமாகப் பேசியவனை ‘ஏண்டா ஒரு மல்லிப்பூவுக்காடா இவ்ளோ அக்கப்போரு?’ என்பது போல் ராஹி பார்த்திருந்தாள்.
அவனோ மேலும் தொடர்ந்தவன்,
“நீ இப்போ அந்த ப்ளார ரிமூவ் பண்ணலேன்னா இப்டியே இறங்கி உன் வில்லேஜூக்கே ஓடிப் போயிரு. என் பேச்சை மதிக்காட்டி என் கம்பெனில இடம் இல்லை” என்றும் திமிரும் கர்வமுமாக மொழிந்தவனை முகம் கூம்பப் பார்த்தவளும்…
“ஆ ஊன்னா இத ஒன்னச் சொல்லிருவான்” என்று முனகியவாறே வேறு வழியின்றி மல்லிப்பூச் சரங்களை அவிழ்த்து கார் பானட்டில் வைத்தாள் ராஹி.
அவள் பூவை அவிழ்த்து வைத்தும் இன்னும் வண்டியைக் கிளப்பாமல் கார்க் கண்ணாடியை இறக்கியவன், “எனக்கு இந்த ஸ்மெல்லே பிடிக்கல. அத மொதோ கார்லயிருந்து தூக்கிப் போடு” என்றும் கட்டளையிட…
அதற்கு அவனோ, “இதுபோல சில்லி ரீசணுக்கெல்லாம் என் கார குப்பத்தொட்டியாக்க முடியாது” என்று சீறியவன் “ம்ம்ம்….” என்றும் உறுமினான்.
அந்த உறுமலில் உடல் தூக்கிப் போட்ட ராஹியும், “இதுக்குலாம் நீ பின்னாடி அனுபவிப்படா” என்று உள்ளூறக் குமைந்தபடியே மனமே இன்றி அந்த மலர்ந்த பூக்களை சாலையோரம் வீசியவள் ஒரு பலத்த முறைப்பையும் ஆதியிடம் வீசிவிட்டு ஜன்னல் புறம் திரும்பிக் கொள்ள…
தான் நினைத்ததை பெண்ணவளை செய்ய வைத்த திருப்தியில் இதழோரம் தோன்றிய சிறு முறுவலோடு தோளை குலுக்கிக் கொண்டவன் காரின் ஆக்சிலேட்டரை உச்ச வேகத்தில் மிதிக்க, அவன் பஹாணி ஹூய்ராவும் அடுத்த பத்து நிமிடங்களில் பாண்டிச்சேரியில் அவர்கள் செல்ல வேண்டிய பார்ட்டி இடத்தையும் தொட்டிருந்தது.
பெண்ணவள் அலுவலகம் வந்த புதிதில் தன் பேச்சை அவமதித்தாள் என்ற ஆத்திரமோ. அல்லது அவள் எப்பொழுதும் தன் பேச்சைத்தான் கேட்க வேண்டும் என்கிற ஆசையோ இதுவரை அன்னையிடம் கூட அவர்களின் தனிப்பட்ட விசயத்தில் தலையிடாதவன், ஒவ்வொரு முறையும் ராஹியிடம் மட்டும் தன் அதிகாரத்தை நிலை நாட்டத் துடிப்பதன் விந்தை அவனுக்கே புரியாத புதிராகத்தான் இருந்தது.
கடந்த ஆறு மாதங்களில் ஆதியின் பரந்து விரிந்த தொழில் சாம்ராஜ்யங்களும், குறைந்த வருடங்களில் அவன் தொட்டிருக்கும் அசாத்திய உயரங்களும் பெண்ணவள் மேலோட்டமாக அறிந்தே இருந்தாலும், புரவி நடை போட்டு அந்த பார்ட்டி நடக்கும் இடத்திற்குள் நுழைந்தவனைப் பின்தொடர்ந்து ஓட்டமும் நடையுமாக அவ்விடத்தை அடைந்தவள் அந்த இடத்தின் பிரம்மாண்ட அழகை பார்த்து அப்படியே மலைத்துப் போய்தான் நின்று விட்டாள் ராஹித்தியா.
பாண்டிச்சேரியின் மிகப் பிரபலம் வாய்ந்த பெரிய ரிசார்டின் திறந்த வெளியில் நடந்து கொண்டிருந்த அந்தப் பார்ட்டியில் பரந்து விரிந்திருந்த வான மகளை அலங்கரித்திருந்த வெண்மதிக்கும் நட்சத்திரங்களுக்கும் போட்டியாக, இரவு வேலையையும் பகல் போல் மாற்றியிருந்த பல வண்ணத்தில் ஒளிகற்றைகளை வீசிய அலங்கார விளக்குகளும், ஆளுயர பைன் மரத்தில் செய்திருந்த காகிதப்பூக்களின் வேலைப்பாடுகளும், செவியை நிறைத்த மேற்கத்திய இசையும் என்று ஏதோ ஒரு வினோத உலகிற்குள் நுழைந்தது போன்ற பிரம்மையைத் தோற்றுவித்த அந்த இடத்திற்குள் நுழைந்தவள், விழிகளில் ரசனை பொங்க சுற்றி முற்றியும் பார்வையிட்டபடி ஆதியின் பின்னே செல்ல, ஆதி அங்கு நுழைந்த மறுகணமே, “வெல்கம் மிஸ்டர் ஆதித்யா. நாங்க உங்க பாதர் தான் வருவாருன்னு நினைச்சோம். வாட் எ சர்பிரைஸ் நீங்க வந்துருக்கீங்க!” என்று பெரும் கூட்டமே வந்து ஆர்ப்பாட்டத்துடன் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
அவனும், “டாட்கு கொஞ்சம் கோல்டு சிக்னஸ். சோ ஐ கேம் டூ தி பார்ட்டி” என்று பதில் கொடுத்த வண்ணம் தலையசைத்துப் புன்னகை புரிந்தவனை ஒரு நொடி, “எங்கடா வச்சிருந்த இந்த சிரிப்ப?” என்பது போல் தனை மறந்து பார்த்தவள், கூட்ட நெரிசலால் அல்லாடி அன்னிச்சையாகவே அவனை விட்டு வெகு தூரம் பின்னால் சென்று நின்றாள் ராஹித்தியா.
அது பொதுப்படையான தொழில் கொண்டாட்டம் தான் என்றாலும், அங்கு ஆதி தான் முக்கிய விருந்தினன் போல் ஒரு சிலரைத் தவிர ஆதியை வந்து சூழ்ந்து கொண்டு அளவளாவிய அனைவரின் நடை உடை பாவனைகளை வைத்தே அனைவரும் மேல்தட்டு மக்கள் என்றும் கண்டு கொண்டவள்…
“பெரிய பெரிய ஆளுங்களே இவனுக்கு இவ்ளோ ரெஸ்பெக்ட் கொடுக்கறதாலதான் அவன் யாரையும் மதிக்க மாட்டைக்குறான்” என்றும் புலம்பிக் கொண்டபடியே திருவிழாவில் தொலைந்த சிறு பிள்ளையாய் திருதிருத்திருந்த ராஹிக்கு அரை குறை ஆடையில் அலங்கார பொம்மைகளாய் வலம் வந்த நவீன யுவதி யுவதன்களையும், அவர்களின் பார்வை வட்டம் தன் மேல் ஒருவித ஒவ்வாமையோடு படிவதையும் பார்க்க பார்க்க, தான் இந்த இடத்திற்கு சிறிதும் பொருத்தமில்லையோ என்றும் வெகுவாகத் தோன்றியது.
“என் பி ஏ வாக நீயும் கவனிக்கப்படுவாய்” என்று சற்று முன்னர் ஆதி கூறியது எத்துணை உண்மையான வார்த்தைகள் என்றும் அவள் உள்ளமே அவனுக்கு வக்காலத்து வாங்க, அச்சூழலில் பொருந்த முடியாமல் புடவை நுனியைத் திருகிக் கொண்டு, அவஸ்தையாக நெளிந்தபடி அவ்விடத்தில் நின்ற ராஹியின் தோற்றம் அவளை விட்டு பல அடிகள் தள்ளி நின்று கரத்தில் தவழும் சோமபாணத்தோடு அளவளாவிக் கொண்டிருந்த ஆதியின் கண்களில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லையானாலும், ஆதி வந்த சிறிது நேரத்தில் அவ்விடம் நுழைந்த சர்வாவின் விழிகளோ அங்கு தனியாகத் தவித்திருந்த ராஹியைச் சுற்றியே வட்டமிடும் கழுகாய் சுற்றி வர…
மெல்ல மெல்ல முன்னேறி அவளை நெருங்கினான் சர்வா.
‘யாரு இந்தப் பொண்ணு?’ என்று ராஹியின் துரு துரு விழிகளை ரசித்தபடியே அவளை நெருங்கியவன், “ஹாய் பியூட்டி ஏஞ்சல் ஐம் சர்வா. நீங்க?” என்று அவளிடம் வலக்கரத்தை நீட்ட…
யாரோ ஒரு அந்நிய ஆணின் அறிமுகத்தில் ஒரு நிமிடம் திணறிய ராஹியும், “ஐம் ஐம் ராஹித்தியா” என்று கரங்களிரண்டும் கூப்பி மரியாதை நிமித்தம் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
ராஹியின் அந்தச் செயல் அவனை ஓங்கி அறைந்தது போல் இருந்தும், பல்லைக் கடித்து அவளைத் தலையூடு பாதம் மோகப் பார்வை பார்த்தவன், அவளைப் போலவே கை எடுத்துக் கும்பிட்டு “நீங்க திருநெல்வேலி பக்கமா?” என்று ஆர்வமாகக் கேட்க…
சட்டென்று அவளைப் புரிந்துக் கொண்டு அவன் கை கூப்பியதும், அவன் உதிர்த்த திருநெல்வேலி என்ற பெயரிலும் துள்ளிக் குதிக்காத குறையாக ஒரு அடி அவனை நெருங்கியவள், “ஆமா சார் நான் திருநெல்வேலி சைடுதான் பூஞ்சோலை கிராமம்.” என்றவள் “நீங்களும் திருநெல்வேலியா?” என்று கண்கள் மின்னக் கேட்டாள்.
தங்கள் ஊரைப் பற்றிய பேச்சில் பெண்ணவளின் முகம் காட்டிய பாவங்களில் விழிகள் கிறங்க அவளைப் பார்த்தவனும், “நான் திருநெல்வேலி இல்லீங்க ஆனா என் தாத்தா பிறந்து வளர்ந்தது எல்லாமே திருநெல்வேலி தான். நா எப்பவாச்சும் அங்க போவேன்” என்றும் கூறியவனிடம் அவன் பி ஏ வந்து “சார் டின்னர் ரெடி ஆகிருச்சு” என்று சொல்ல…
அவனும், “கியூட்டி வாங்களேன் சேந்து சாப்பிடலாம். நாமதான் இப்போ ஒரே ஊருக்காரவங்களாகிட்டமே” என்று சொல்லி அவளையும் அழைத்தான்.
சர்வா சாப்பிட அழைக்கவும் தான் அதீத பசியை உணர்ந்தவள் ஆதியைப் பார்க்க, அவனோ தன்னுடைய அலுவலக கைபேசியை கண்காணிக்கும் பொறுப்பு தவிர்த்து, அவள் தன் பி ஏ என்ற எந்த நினைப்பும் இல்லாது, தன் போக்கில் மதுவும் கையுமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.
‘பி ஏ ன்னு ஒரு பொண்ணக் கூட்டிட்டு வந்தோமே அவ என்ன ஆனான்னு இந்த ஆதிக்கு கொஞ்சமாச்சும் நினைப்பு இருக்கா?’ என்று காந்தியபடி தன்னைப் பற்றிய சிந்தைனையே இல்லாது நின்ற ஆதியையும், தனக்காக காத்து நின்ற சர்வாவையும் மாறிமாறிப் பார்த்தவள் பூனைக்குட்டியாய் பிராண்டும் வயிரையும் கையில் பிடித்துக் கொண்டு நெளிந்த கணம், “வாட் ஆர் யூ டூயிங் ராஹித்தியா?” என்ற ஆதியின் குரல் அவள் காதோரம் இடி இடித்தது போன்று ஒலித்தது.
ஆதியின் குரலில் உடல் தூக்கிப் போட்டுத் திரும்பியவளை, “இங்க என்ன செய்யுற ராஹித்தியா? கண்டவங்க கூட எல்லாம் உனக்கு என்ன பேச்சு?” என்று சர்வாவைப் பார்த்தபடி சீறியவன் “நேரமாச்சு வா போகலாம்” என்றும் அவள் கையைப் பற்றி அழைத்துச் செல்ல முனைய…
அவளோ, ‘இத்துணை நேரம் அவன் தன்னைக் கண்காணித்திருந்தானா,?அத்துணை தூரத்தில் நின்றவன் எப்படி நொடியில் அருகில் வந்தான்?’ என்றெல்லாம் சிந்தித்திருந்தாள்.
ஆதியின் பேச்சில் சினம் கொண்ட சர்வாவும், “ஹேய் ஆதி அவ எங்க ஊருக்காரப் பொண்ணு. நாங்க தான் பேசிட்டிருக்கோம்ல. நீ யாரு மேன் குறுக்க வர?” என்று அவன் வழியை மறித்து நிற்க…
சர்வாவின் செயலில் ராஹியை நோக்கி ஒரு உஷ்ணப் பார்வை வீசி விட்டுத் திரும்பியவன், “அவ உனக்கு ஊருக்காரப் பொண்ணு தான். ஆனா எனக்கு மாமா பொண்ணு.” என்று நக்கல் குரலில் கூறியவன், “கம் ராஹித்தியா” என்றும் சொல்லி அவளைக் கையோடு இழுத்துக் கொண்டும் சென்று விட்டான்.
அவனையும் அவன் பின்னேயே மந்திரித்து விட்ட ஆடு போல் சென்றவளையும் கண்ணெடுக்காது பார்த்து நின்ற சர்வாவும் அத்துணை நேரமும் ராஹியின் இயற்கை கொஞ்சும் எழில் தோற்றத்தில் ஈரக்கப்பட்டு, யாரோ தொழிலதிபர் வீட்டுப் பெண் என்று எண்ணிப் பேசிக்கொண்டிருந்தவன் தன் காரியதரசியை கேள்வியாகப் பார்க்க…
அவனும், “ஆமா சார். அந்தப் பொண்ணு ஆதியோட சொந்தக்காரப் பொண்ணு தான். அவன்கிட்ட பி ஏ வா வேலை பாக்குது” என்று சொல்லி அவன் கண்ணில் ஜூவாலையை எரிய வைத்தான்.
இதுவரை யாரிடமும் தன்னை பி ஏ என்று கூடக் கூறியிராதவன், திடும்மென்று மாமா பெண் என்று கூறி கையை வேறு பற்றி இழுத்து வந்தவனை அதிர்ச்சியாக நோக்கியபடி அவன் இழுத்த இழுப்பிற்கு வந்தவளை காரில் தள்ளி கதவை அடைத்தவனும் உள்ளே ஏறி காரை உயிர்பித்துக் கொண்டே, “ஹே ஃபூல் உனக்கு யார் கூட பேசணும், யார் கூட பேசக்கூடாதுன்னு கொஞ்சம் கூட அறிவே இல்லியா?. அவனுக்கும் எனக்கும் சுத்தமா ஆகாது அவன்கிட்டப் போய் சிரிச்சு சிரிச்சு பேசிட்டிருக்க” என்று சீற…
அவன் சீறலில் தன்னிலை அடைந்தவளும், ‘ஆமா உனக்கு நல்லவங்கல்லாம் ஆகாதே’ என்று எண்ணிக் கொண்டவள், “நானா ஒன்னும் அவர்கிட்டப் பேசல. அவரா வந்து பேசுனாரு எங்க ஊருன்னு வேற சொன்னாரு. அதான்” என்று விளக்கம் போல் சொன்னவள் “உங்களுக்கும் எனக்கும் கூடத்தான் ஆகாது ஆனா உங்க கூடவே நான் பேசிட்டுத் தானே இருக்கேன்” என்று தான் செய்தது அத்துணை ஒன்றும் தவறில்லை என்று அவனுக்கு உணர்த்த முயன்றாள் பெண்.
சர்வாவிடம் அவள் சிரித்துப் பேசியதிலே அதீத எரிச்சலில் இருந்தவன் அவளின் இப்போதைய பேச்சில் மேலும் சீற்றம் கொண்டு, ‘நானும் அவனும் உனக்கு ஒன்னாடி?’ என்று அவளை அடிக்க முடியாமல் மகிழுந்தை தாறுமாறாய்ச் செலுத்த… அதுவோ சற்றே போதையில் இருந்த காளையின் கைகளில் கட்டுப்பாடின்றிச் சீறியது, ஒரு கட்டத்தில் சாலை வளைவில் இருந்த மரத்தில் மோதி செயலற்று நின்று விட, பெரும் சப்தத்தோடு மகிழுந்து குலுங்கி நிற்கவும் தான் நடப்பை உணர்ந்தவன் “ச்சைக்” என்று கையை உதறியபடி வண்டியை விட்டு கிழிறங்கினான் ஆதித்யவர்மா.
அந்த ஆள் அரவமற்ற சாலை வளைவில் “டொம்” என்ற சப்தத்தோடு மகிழுந்து மரத்தில் மோதி நிற்கவும் வேகமாக கீழே இறங்கி வண்டியை சோதித்தவனுக்கு மகிழுந்துப் பொறிமுறையாளர் (கார் மெக்கானிக்) இல்லாது காரை எடுக்க முடியாது என்றும் நொடியில் புரிந்து விட்டது.
திடீரென்று வண்டி நின்று விட்டதில், “என்னாச்சு சார்?” என்று காரை விட்டு பதட்டமாக இறங்கிய ராஹியை அறைவது போல் கை ஓங்கிக் கொண்டு வந்தவனோ, “எல்லாம் உன்னாலதான்டி. உன்ன வண்டில ஏத்துனதாலதான் டி இப்போ இப்டி ஆகிடுச்சு” என்று ஆத்திரத்தில் கத்த…
அவன் கோபத்தில் பயந்து இரண்டடி பின்னே சென்று நின்றவளும், “நான் என்ன பண்ணேன் ஆதி. நானா உங்க கூட வர்றேன்னு சொன்னேன். நீங்க தான என்ன வம்பா கூட்டிட்டு வந்தீங்க” என்று ஆற்றாமையாகக் கேட்டவளுக்கு அவனின் சுருக்கென்ற பேச்சில் அழுகையும் முட்டிக் கொண்டு நின்றது.
அதற்கு அவனும் “பேசாதடி” என்று பதிலுக்கு சீறியவன் கைபேசியிலும் யாருக்கோ அழைப்பு விடுத்துப் பார்த்து விட்டு “சிட்” என்று கால்களை உதைத்துக் கொண்டவனோ, “மெக்கானிக் வந்தா தான் வண்டிய எடுக்க முடியும். இந்த நைட் நேரத்தில வேற வண்டியும் கிடைக்காது” என்று தன் போல சொல்லிக் கொண்டவன் காரை ரிமோட் மூலம் லாக் செய்து விட்டு “வா” என்று சொல்லியபடி சாலையைக் கடந்து செல்ல…
அவளும் “எங்க…?” என்று கேட்டாலும் அந்த கருமை நிறைந்த சூழலில் நிற்கப் பயந்து அவன் பின்னோடே ஓட்டமும் நடையுமாகச் சென்றாள் ராஹித்தியா.
மகிழுந்து மோதிய இடத்தில் இருந்து சிறிது தூரம் சாலையை விட்டு இறங்கி நடந்து சென்றவன், அங்கிருந்த ஒரு கட்டிடத்தைப் பார்த்து விட்டு அதனுள்ளே விரைந்தவன், ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்து, “இன்னிக்கு நைட் இங்க தான் தங்கணும். காலைல வண்டி சரியானதும் போகலாம்” என்றவன் “இந்த பக்கம் வேற பைவ் ஸ்டார் ஹோட்டல் கூட இல்லை” என்றும் உரத்தக் குரலிலே சலித்துக் கொள்ள…
அவன் வார்த்தையில் அதிர்ச்சியாகி நிமிர்ந்தவளோ, “என்னது ஹோட்டல்ல தங்கணுமா?” என்று படபடப்பாக வினவினாள்.
அவள் கேள்வியில் அவளை அசட்டையாகப் பார்த்தவனும், “ஹோட்டல்ல தங்காட்டி நைட் புல்லா இப்டி பிளாட்பாம்ல வேணா படுத்துக்கோ” என்று இன்னமும் குறையாத கோபத்தோடு கூறியவன் அவள் பதிலைக் கூட எதிர்பாராது அந்த விடுதிக்குள் நுழைந்து அவன் சற்று முன்னர் பதிவு செய்த அறை நோக்கிச் செல்ல…
அவளும் சூழ்நிலை உணர்ந்து வேறு வழியில்லாது அவன் பின்னோடு ஓடியவள், “சரி என்னோட ரூம் கீயக் குடுங்க” என்று கேட்டாள்.
அதில் அவளை நோக்கித் திரும்பி தீ விழி விழித்தவனும், “என்னது உன்னோட ரூமா? நம்ம பொண்ணு இங்க வருவான்னு உன்னோட யுவிப்பா முன்னமே ரூம் ரிசர்வ் பண்ணி வச்சிருக்காராமா?” என்று காட்டமாகக் கேட்டவன்…
“இங்க ஒரு ரூம்தான் வெக்கேட்டா இருக்கு. அதுல தான் நம்ம ஸ்டே பண்ணனும். வேற வழியில்லை” என்றும் கூலாகச் சொல்லியவன் அலட்டிக் கொள்ளாது அறைக்குள் நுழைந்தான்.
இதுவரை முழுக்க முழுக்க கிராமத்துச் சூழலில் அன்னை தந்தையின் அரவணைப்பிலே வளர்ந்தவளுக்கு, அவனுடனான இரவு நேர மகிழுந்துப் பயணமே வயிற்றில் புளியைக் கரைத்திருக்க, இப்பொழுது அன்னிய ஆணுடன் தனியாகத் தங்க வேண்டும் என்ற ஆதியின் வார்த்தையோ அவளை அச்சத்தின் உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியதில் அவளோ, “அய்யோ என்னால உங்க கூடல்லாம் ஒரே ரூம்ல தங்க முடியாது” என்று உள்ளம் படபடக்கக் கூறியவள் அறை வாசலிலே நின்றாள்.
ஏற்கனவே அவள் மேல் கடும் சினத்தில் இருந்தவன், “ஏய் ஸ்டுப்பிட் என்னடி திமிரா உனக்கு. மேடம் என் கூட தங்க மாட்டீங்கன்னா அந்த சர்வாவ வேணா வரச் சொல்லவா?” என்று வார்த்தைகளை வீச…
அதில் அவனை உறுத்து விழித்தவளும், “ஆதி திஸ் இஸ் எ லிமிட்” என்று எகிறினாள்.
அவன் திறந்திருந்த அறைக்கு உள்ளேயும் அவள் வெளியே வராண்டாவிலும் நின்று வார்த்தைப் போர் புரிய, அவர்களைக் கடந்து சென்றவர்கள் எல்லாம் ஒருமாதிரியாகப் பார்த்து விட்டுச் செல்ல அதில் அவமானமாய் உணர்ந்தவனும், “ஹேய் ராஹித்தியா எனக்கும் உன்னோட ஒரே ரூம்ல தங்க எரிச்சலா தான் இருக்கு. ஆனா இப்போ நமக்கு வேற ஆப்சனும் இல்ல. நான் அந்த காட்ல படுத்துக்கறேன் நீ வேணா இந்த சோபால படுத்துக்கோ. வெளிய நின்னு சீன் போடாம மரியாதையா உள்ள வா.” என்று பல்லைக் கடித்துக் கூறியவனைக் கண்டும் பயம் விலகாது தவித்தவள்…
“இல்ல நான் வரமாட்டேன். நான் ஒரு வயசுப் பொண்ணு. நீங்க ட்ரிங்க்ஸ் வேற பண்ணி இருக்கீங்க. நான் எப்டி உங்களோட தனியா தங்க முடியும். அது மட்டுமில்ல நீங்க கொஞ்சம்” என்று எச்சில் விழுங்கி நிறுத்தியவளுக்கு காரணமே இல்லாமல் அன்று அவன் ஆபிசில் வேறு பெண்ணோடு இருந்த நெருக்கம் வேறு கண் முன் வந்து செல்ல அவளோ அறையை விட்டு இன்னும் கொஞ்சம் தள்ளி வந்தும் நின்று கொண்டாள்.
பெண்ணவளின் செயலிலும் அவள் சொல்லாது விட்ட வார்த்தையைப் புரிந்து கொண்டதிலும் ரௌத்திரத்தின் உச்சியை எட்டியவன் மின்னலென வெளியே பாய்ந்து அவள் கரத்தைப் பற்றி உள்ளே இழுத்து அறைக்கதவை அரைந்து சாற்றினான் ஆதி.
அவன் செயலில் தடுமாறி நின்றவள் சுதாரித்து விலகுவதற்குள் மீண்டும் அவளை வளைத்துப் பிடித்து, உடல் நோக அணைத்து, அதிரடியாக அவள் இதழ்களையும் சிறை செய்து நொடி நேரம் கடந்து விடுவித்தவன்…
“என்னோட தங்குனா நான் இதுபோல உன் மேல பாஞ்சுருவேன்னு நினைச்சி தான உள்ள வரமாட்டேன்னு சொன்ன? இப்போ என்னடி பண்ணுவ?. என்னப் பாத்தா காஞ்ச மாடு மாறி இருக்கா உனக்கு? இப்ப உன்ன கிஸ் பண்ணியும் கூட எனக்கு உன் மேல எனக்கு எந்த பீலிங்கும் வரலை. என் கூட டேட்டிங் போகணும்னாக் கூட அதுக்கு ஒரு தகுதி வேணும் டி. நீலாம் அதுக்கு ஒர்த்தே இல்லை. வீணாக் கனவு காணாம ஒழுங்காப் போய் படுத்துத் தூங்குடி.” என்றும் அவளைப் பிடித்து சோபாவில் தள்ளி விட்டவன் சற்றுத் தள்ளாடிபடியே நடந்து சென்று படுக்கையில் விழுந்து உறங்கிப் போக…
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.