அவள் பார்வை பதிந்த இடத்தை வைத்தே அவள் தேவையை உணர்ந்தவனோ தானாக வருவதை தாலாட்டும் தாராள குணம் கொண்டவன், “ய்யா பேபி” என்று ஒரு கர்வம் பொதிந்த புன்னகையோடே அவள் கழுத்தை வளைத்து… சாயத்தில் முக்குளித்த பாவையின் இதழ்களை தன் உதடுகளால் நெருங்கிய வேளை…
“பாஸ், இந்தியாவுல இருந்து ஆத்விக் சார் கால்லிங் பாஸ்” என்று தயக்கத்தோடு அவனை நெருங்கிய அவன் பி ஏ ஆதியின் கைபேசியை அவனிடம் நீட்ட, ஆதியும் தம்பியின் பெயரைக் கேட்டவுடன் தன்னருகில் இருந்த யுவதியை விட்டு விலகி வேகமாக கைபேசியை வாங்கிக் கொண்டு எழுந்தான்.
ஆதி அவளை விட்டு எழவும் “ஹேய் டார்லிங்… வாட் ஆர் யூ கோயிங்.?” என்று அவன் கரத்தைப் பற்றிக் கொண்ட அந்த பால் வண்ணப் பாவையின் பார்வையோ அவனின் கட்டுடலையே மொய்த்திருக்க…
அவளைப் பாவமாகப் பார்த்த ஆதியோ “சாரி டார்லிங், லெட்ஸ் ஆன் எ ரியல் டேட் நெக்ஸ்ட் டைம்” என்று மட்டும் கூறி கண்ணடித்தவன் இன்னும் சிணுங்கிக் கொண்டிருந்த கைபேசியை உயிர்பித்து செவியில் பொருத்திய வண்ணம் அவ்விடம் விட்டு அகன்றான் ஆதித்யவர்மா.
உயிர்பித்த கைபேசியில் அந்தப் புறம் பேசிய ஆத்விக்கோ “சாரிண்ணா பார்ட்டி டைம்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்று தொடங்கியவன் ஆதியுடைய புதிய தொழில் ஒப்பந்தத்திற்காக தன் வாழ்த்துக்களை தெரிவித்தவன்… “சரிண்ணா வைக்கிறேன்” என்று கைபேசியை அணைக்கப் போக…
ஆதியோ, “ஹேய் ஆது… எதுக்கு போன் பண்ணியோ அந்த மேட்டர நீ இன்னும் சொல்லலியே.?” என்று வினவினான்.
அண்ணன் தன்னை கண்டு கொண்டதில் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியடைந்த ஆத்விக்கோ, “ண்ணா…” என்று தயங்க… ஆதியும், “வாட்ஸ் ஆர் ப்ரோப்லேம் ஆது… சொல்லு மேன்.?” என்று மேலும் வினவ ஆத்விக்கும் தங்களுடைய ஜவுளி உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை பற்றிக் கூறினான்.
தம்பி கூறியதை முறுவல் மாறாமலே கேட்டிருந்த ஆதியோ, “நோ வொர்ரி ஆது எனக்கும் இங்க வேலை எல்லாம் முடிஞ்சது டுமார்ரோ ஈவினிங் நா அங்க இருப்பேன் ஐ வில் மானேஜ் திஸ் பிராப்லம்” என்று கூறியவன் தம்பியிடம் கூறியது போலவே மறுநாள் மாலை தன் தாயகமான சென்னையில் வந்து இறங்கியவன் வீட்டிற்குக் கூடச் செல்லாமல் நேரே தங்கள் தொழில் கடலில் தான் போய் நின்றான்.
பிள்ளைகளின் படிப்பு, தன்னுடைய தொழில் போக்குவரத்து, பெற்றோரின் உடல்நிலை இப்படி பலவற்றையும் கருத்தில் கொண்டு ஆதியின் பதினைந்தாவது வயதிலேயே தங்கள் வசிப்பிடத்தை சென்னைக்கு மாற்றிக் கொண்ட அஸ்வின் பெற்றோடும் மனைவி மகன்களோடும் சென்னை நீலாங்கரைப் பகுதியில் மூன்றடுக்கு மாளிகை கட்டி குடியேறி இருந்தவன், தங்களின் வர்மா குழுமத்தின் முக்கிய கிளைகளையும் சென்னையில் தான் நிறுவி இருந்தான்.
அஸ்வினின் நகலாக இருக்கும் ஆதித்யா அமெரிக்காவில் படிப்பை முடித்திருந்தாலும் மதியின் மென்மை கொண்டு பிறந்து வளர்ந்திருந்த ஆத்விக்கோ முழுக்க முழுக்க சென்னையிலேயே இளங்களை முதுகலைப் படிப்புகளை முடித்து, கடந்த ஆறு மாதங்களாக மட்டுமே தங்கள் தொழில் கடலில் கத்துக்குடியாக கால் வைத்திருப்பவன், அவ்வப்பொழுது ஏதாவது தொழில் சிக்கலில் மாட்டி அண்ணன் முன்னால் வந்து நிற்க அவனை தங்கள் தந்தை கூட அறியா வண்ணம் கைதூக்கி விடுவான் நம் நாயகன் ஆதி.
இப்பொழுதும் தங்கள் ஜவுளி ஏற்றுமதியில் குறித்த நேரத்தில் ஒரு ஆர்டரை அனுப்ப முடியாத நிலையில் இருக்க அந்த ஆடர் கொடுத்த கம்பெனியின் உரிமையாளரோ அதை ரத்து செய்கிறேன் என்று குதித்துக் கொண்டிருந்தார்.
கொரோனா கால கட்டம் முடிந்து அவர்கள் கம்பெனிக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆர்டர் அது, ஆதியும் புதிய ரேஸ் கார்கள் தயாரிப்பு விஷயமாக ஆஸ்திரேலியா சென்று விட்டதால் பத்து நாட்கள் முன் கிடைத்த அந்த ஆர்டரை முன்னிட்டு அஸ்வினும் மும்பை செல்லும் வேலையை ஒத்திப் போட்டவனிடம்….
“இந்த ஆர்டர நா பாத்து அனுப்பி வைக்கறேன்பா” என்று நம்பிக்கையாகக் கூறி தந்தையை மும்பைக்கு அனுப்பி வைத்த ஆத்விக்கும் அந்த ஆர்டர் விசயத்தில் மிகக் கவனமாக துரிதமாக தான் இருந்தான். ஆனால் ஆடைத் தயாரிப்பிற்குத் தேவையான மூலப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்து வந்து சேர இரண்டு நாள் தாமதமாகிவிட உற்பத்தியும் இரண்டு நாள் நின்று போக அந்த ஆர்டரை சொன்ன நேரத்தில் ஆத்விக்கால் அனுப்ப முடியாத நிலையில் இருக்க, அவனோ கன்னத்தை தாங்கியபடி தங்கள் அலுவலகத்தில் அமர்ந்திருக்க, அந்த நேரத்தில் புயலென உள் நுழைந்தான் ஆதி.
ஆதியைப் பார்த்ததும் ஏதோ ஆபத்பாந்தவனைப் பார்த்தது போல் தோன்றியது போலும் அவன் தம்பிக்கு.
ஆத்விக்கோ, “ண்ணா” என்று அவனைக் கட்டிக் கொண்டவன்…
அவனை நலம் விசாரித்து விட்டு, “அப்பாகிட்ட நா இந்த டீல பாத்துக்கறேன்னு வீராப்பா பேசி அவர மும்பைக்கு அனுப்பி வச்சேன், ஆனா இத அனுப்ப முடியாம போனா எனக்கு ரொம்ப ஷேமா போகும்ணா” என்று சிறு பிள்ளை போல் உதட்டை பிதுக்கியவன்…
“அதுமட்டுமில்லாம இந்த ஆர்டர் மட்டும் கேன்சல் ஆச்சுன்னா நம்ம கம்பெனிக்கு ஹெவி லாசும் வரும்” என்று தமையனிடம் புலம்பத் தொடங்கியவனை “ஹேய் கூல் ஆது” என்று கை அமர்த்தித் தடுத்து…
“டேக் இட் ஈஸி ஆது, நீ மொதோ அந்த பெங்கலூர் பார்ட்டிக்கு கால் பண்ணி சொன்ன டைம்கு டெக்ஸ்டைல்ஸ் எல்லாம் டெலிவரி ஆகிடும்னு சொல்லு” என்று கூற…
அவனோ, “அது எப்டிண்ணா.? இன்னும் டூ டேஸ் தான் இருக்கு ஆனா கிளாத்ஸ் ரெடியாக மினிமம் போர் டேஸ் வேணும், நம்ம வேணா அந்த பார்ட்டிக்கு 20 பர்சண்ட் டிஸ்கோண்ட் கொடுத்து இன்னும் டூ டேஸ் டைம் கேக்கலாமா.?” என்று மூச்சு விடாது பேசியவன் முதல் முறை இப்படி ஒரு பிரச்சனையை சந்தித்திருப்பதால் மிகவும் பதற்றமாகவே காணப்பட்டான் ஆத்விக்வர்மா.
இந்த ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டால் தங்கள் கம்பெனிக்கு பெரிய பண நஷ்டம் வருவதோடு, இத்தனை வருடங்களாக தந்தை சம்பாதித்து வைத்திருந்த நல்ல பெயரும் கூட கேள்விக்குறியாகும் என்றும் அறிந்திருந்தவனின் பதட்டத்தில் ஒரு துளி கூட அவன் அண்ணன் ஆதிக்கு இல்லை போல…
வெற்றிகளின் ஏணிப் படிகளை தன் விரல் நுனியில் வைத்திருப்பவனோ தம்பியின் பதட்டத்தைக் கண்டு கன்னம் குழிய நகைத்தவன்…
“டோன்ட் வொர்றி ஆது, நமக்கு எக்ஸ்ட்ரா டைம்லா தேவையே இல்ல” என்று கூற
அவன் தம்பியோ,”எப்டிண்ணா 2 டேஸ் தானே இருக்கு.?” என்று சோர்வாகக் கேட்டான்.
ஆதியோ “ம்ம்ஹும் 48 ஹவர்ஸ் இருக்கு” என்று உரைத்தவன்…
“இப்போ நம்மகிட்ட எவ்ளோ ஒர்க்கர்ஸ் இருக்காங்க.?” என்று வினவ
அண்ணனை புரியாமல் பார்த்த ஆத்விக்கோ, “மொத்தம் நாலாயிரம் பேர் ஒர்க் பண்றாங்க மார்னிங் ஷிப்ட் ரெண்டாயிரம் பேர் ஈவ்னிங் ஷிப்ட் ரெண்டாயிரம் பேர்” என்று கூறினான்.
ஆதியோ, “ம்ம்ம் கரெக்ட் நெக்ஸ்ட் டூ டேஸ்கு மட்டும் நம்ம கிட்ட இருக்க லேபர்ச நைட் டூட்டியும் சேத்து பாக்க சொல்லு, மார்னிங் ஷிப்ட் முடிஞ்சு போனவங்கள நைட் 8 ஓ க்ளாக் இருந்து ட்வெல்வோ க்ளாக் வரை, அப்றம் ஈவ்னிங் ஷிப்ட் லேபர்ஸ மிட்நைட் ட்வெல்வோ கிளாக்ல இருந்து மார்னிங் 8 ஓ கிளாக் வரைக்கும் எக்ஸ்ட்ரா டூட்டி பாக்க சொல்லு, அதுக்குண்டான சேலரிய கொஞ்சம் அதிகமாவே அவங்களுக்கு கொடுத்தோம்னா சந்தோசமாவே வேல பாப்பாங்க, பணம் பத்தும் செய்யும் ஆது.” என்று சற்று திமிராகவே கூறியவன் தொடர்ந்து….
“ஷிப்ட் மாத்தி மாத்தி வேலை பாக்கறதால லேப்ர்சுக்கு ரெஸ்ட் எடுக்கவும் டைம் கிடைக்கும்… கிளாத்ஸ் ஸ்டிச்சிங் வேலையும் டே அண்ட் நைட் ஸ்டாப் ஆகாம நடக்கும் அவங்களுக்கு கொடுக்கற சேலரி அந்த பார்ட்டிக்கு நீ கொடுக்கறேன்னு சொன்ன 20 பர்சண்டேஜ்ல 2 பர்சண் கூட வராது…” என்று நீண்ட விளக்கம் கொடுத்த ஆதித்யா… “சோ” என்று முடிக்க…
தமையனின் கூற்றில் விழிகளை விரித்தவன், “சோ இப்பவே அந்த பெங்கலூர் பார்ட்டிக்கு போன போட்டு சரக்க டெலிவரி எடுக்க ரெடியா இருடான்னு சொல்லிர்றேன்… பிரில்லியண்ட் ஐடியாண்ணா, செம்ம, செம்ம தேங்க்ஸ் ஆதி, தேங்க்ஸ்ணா” என்று ஆர்ப்பரித்து அண்ணனை கட்டித் தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் அவன் தம்பி ஆத்விக்வர்மா.
ஆதி கூறியது போலவே செய்துவிட்டு அண்ணன் தம்பி இருவரும் வீட்டிற்கு வர அடுத்த இரண்டு தினங்களில் மும்பை சென்றிருந்த அஸ்வினும் சென்னை வந்து சேர ஆதியின் வீட்டினர் அனைவரும் பல நாட்களுக்குப் பிறகு இரவு உணவுக்கு மேஜையில் கூடினர்.
உணவு மேஜையில் இருந்த அஸ்வினோ தனக்குப் பரிமாறிக் கொண்டிருந்த மதியிடம் “போதும் பேபி எவ்ளோதான் வச்சுட்டே இருப்ப” என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே
அவர்கள் தவப்புதல்வர்களும், “ஹாய் டாட், ஹௌ ஆர் யூ.?” என்று வினவிய வண்ணம் வந்து இருக்கையில் அமரந்தனர்.
மகன்களிடம் தலையசைத்த அஸ்வினும், “பைன் ஆதி, ஐ ஹெர்ட் யூ டிட் வெல் இன் ஆஸ்திரேலியன் ப்ராஜெக்ட் குட்?” என்று அவனுடைய ஆஸ்திரேலியப் பயணத்தைப் பற்றி விசாரித்தவன்…
அப்படியே இளைய மகனிடம், “வெல்டன் ஆது, இட்ஸ் எ கிரேட் ஒர்க்” என்று அந்த ஜவுளி ஆர்டரை திறம்பட ஏற்றுமதி செய்ததற்கு ஆத்விக்கையும் பாராட்ட…
அவனோ, “இல்ல டாட்” என்று ஆதி தனக்கு உதவியதைப் பற்றிக் கூற வர…
அவனை விழியாலே தடுத்த ஆதியும் “ஆமா ஆது இட்ஸ் எ கிரேட் ஜாப், கீப் இட் அப் மேன்” என்று கூறி அழகாகக் கண்ணடித்துச் சிரித்தான்.
அஸ்வினின் பெற்றோரும் “செம்ம பட்டுப் பையா” என்று ஆத்விக்கிடம் சிலாகிக்க, மதியும் “சூப்பர் ஆதுக் கண்ணா” என்று இளைய மகனின் தலையைத் தடவ…
ஆத்விக்கோ சற்று நெளிந்தவாறே அனைவரிடமும் “தேங்க்ஸ் மம்மிமா, தாங்க்ஸ் டாட், தேங்க்ஸ் மாம்,” என்று சொல்லிக் கொண்டவன்… தமையனையும் பெருமை பொங்க பார்த்து, “தேங்க்ஸ்ண்ணா” என்றும் விழி மூடித் திறந்தான்.
ஆதி, ஆத்விக், அஸ்வின் என்று அனைவரும் சந்தோசமாகப் பேசிச் சிரித்த வண்ணம் உணவருந்திக் கொண்டிருந்த வேளை அஸ்வினின் கைபேசியோ அவனுடைய மாமன் மகன் யுவராஜின் அழைப்பைக் காட்டியது…
அதில் ஆதியின் முகமோ சிறிதான அதிருப்தியைத் தத்தெடுக்க, அதற்கு நேர்மாறாக தந்தையின் உரையாடலைக் கேட்டிருந்த ஆத்விக்கின் விழிகளோ தௌசண்ட் வாட்ஸாக ஒளிர்ந்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.