அறைக்குள் நுழைந்த மறுகணமே ராஹியின் படுக்கையில் போய் தொம்மென்று விழுந்தவன், அங்கிருந்த தங்களின் பெரியளவில் கண்ணாடிச் சட்டம் அடைக்கப்பட்ட திருமணப் புகைப்படத்தையும் எடுத்து அதில் தெரிந்த ராஹியின் பிம்பத்தை மென்மையாக வருடிக் கொடுத்தவன்,
“ஊரே என்ன அறிவாளி, புத்திசாலி, தொழில்ல புலி, ஜெயிக்க மட்டுமே பிறந்தவன் எல்லாம் சொன்னாங்க. ஆனா உன் விஷயத்துல நான் முட்டாள் தியா. ஒண்ணுத்துக்கும் உதவாத ஜீரோ. நான் தேடாமையே என் கைல வலிய கிடைச்ச பொக்கிஷத்தை என்னோட ஈகோவால, திமிரால, அலட்சியத்தால இழந்துட்டு நிக்கிற லூசர் தியா நான். ஆனா லவ் இவ்ளோ பெயினா இருக்கும்னு நான் நினச்சுக்கூட பாக்கலடி. ஹார்ட் ரொம்ப வலிக்குது ஹனி. என்கிட்ட வந்துடுடி. உன் ஆதித்தான மன்னிச்சுடுடி” என்று புகைப்படத்தை நெஞ்சோடு அழுத்திக் கொண்ட ஆதி அப்படியே மட்ட மல்லாந்து படுக்கையில் சாய்ந்து விழுந்த வேளை அவன் அறைக் கதவை மென்மையாகத் தட்டி விட்டு உள் நுழைந்தான் அவன் தந்தை.
அலுவலகத்தில் மகன் தலைவலி என்று கூறி கலந்துரையாடலை ரத்து செய்து விட்டு கிளம்பிய பொழுதே அவனுக்கு வலி தலையில் அல்ல மனதில். அதிலும் அது சாதாரண வலி அல்ல எப்பேர்ப்பட்டவரையும் அடியோடு வீழ்த்தும் காதல் வலி என்று நன்கு புரிந்து தான் இருந்தது அவன் தந்தைக்கு. அவனும் மகனின் வயது சூழல் அனைத்தும் கடந்து வந்தவன் அல்லவோ.
அத்தோடு ராஹி தங்கள் ஊருக்குச் சென்ற நாளில் இருந்தே மகனது நடவடிக்கையை கவனித்து வந்தவனுக்கு நேற்றிரவு மதி தன்னிடம், “ராஹி ஊருக்கு போய் பிப்ட்ன்டீன் டேஸ் ஆச்சு அஸ்வி இன்னும் வரலை கேட்டா ஏதேதோ சொல்லி மழுப்பறா. இந்த ஆதியும் ராஹியப் போய் கூட்டிட்டு வான்னு சொன்னா இன்னிக்கு நாளைக்குன்னு இழுக்கறான். ஆதி இப்போல்லாம் நேரத்துக்கு சாப்பிடக் கூட வர்றதில்ல. எனக்கு எதுவும் சரியாப்படலை அஸ்வி.” என்று கவலை கொண்டு பேசியதும் அவன் நெற்றியைச் சுருங்கச் செய்திருக்க, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததுமே சிறிதும் தாமதியாது மகனின் அறைக்குள் நுழைந்திருந்தான் அஸ்வின்.
சிறிதான கதவு தட்டலுக்குப் பின் அறைக்குள் நுழைந்த தந்தையை கண்டதும் சட்டென்று எழுந்தமர்ந்த ஆதி கையிலிருந்த புகைப்படத்தை மெல்ல போர்வைக்கு அடியில் வைத்து விட்டு, “டாட் வாஹ்ட் ஹாப்பண்ட் டாட்?” என்று வரவழைக்கப்பட்ட கீற்றுப் புன்னகையோடு கேட்டு தன்னை இயல்பாக காட்டிக்கொள்ள பெரும் முயற்சி செய்தான்.
ஆனால் அவன் என்ன முயன்றும் அவன் விழிகள் வெளிப்படுத்திய வலியை தன் இதயத்தில் உணர்ந்தவனுக்கு ‘உன்ன இப்படி ஒரு கோலத்தில் பார்த்து விடக் கூடாது என்று தானேடா கொஞ்சம் பொறுமையாக இருக்கச் சொன்னேன்’ என்று மிகப்பெரிய ஆற்றாமையே பெருமூச்சாய் வெளிவர…
மகனின் அருகில் அமர்ந்து, “சார்ம்” என்று அவன் தலையைக் கோதி விட்டவனோ, “வாட்ஸ் ஆர் பிராப்லம் ஆதி? ஏன் ரூம்குள்ளவே அடஞ்சு கிடக்குற? இன்னிக்கு மீட்டிங் கூட கேன்சல் பண்ணிட்டு வந்துட்ட? என்ன பிரச்சனை?” என்று கேட்டான் அஸ்வின்.
அதற்கு அவனோ, “நத்திங் டாட்” என்று சொல்லியபடியே தந்தைக்கு முதுகு காட்டி நின்று கொள்ள…
மகனின் அந்தப் புறம் வந்து நின்ற அஸ்வினோ, “நத்திங்னா உன் முகம் ஏன் இவ்ளோ டல்லா இருக்கு ஆதி? ராஹி ஏன் இவ்ளோ நாளா ஊர்ல இருக்கா? நீதான் அவள போகச் சொன்னியா? நான் அன்னிக்கு அவ்ளோ தூரம் சொல்லியும் பெரிய தப்பு ஏதும் பண்ணிட்டியா ஆதி?” என்றும் தொடர் கேள்விக்கணைகளை வீசி மகனை மேலும் நிலை குலையச் செய்தான்.
மனைவியின் இந்த திடீர் பிரிவில் ஏற்கனவே வேறருந்த கொடிபோல் துவண்டு போய் இருப்பவன் தந்தையின் கேள்வியில் மேலும் மேலும் கலங்கி தன்னிலை இழந்தவனாய், “எஸ் டாட்…
நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். கைல கிடைச்ச வைரத்த கூலாங்கல்லா நினைச்சு நான்தான் பெரிய தப்பு பண்ணிட்டேன். ஆனா அது அது அதெல்லாம் முன்னாடி டாட். இஸ் பாஸ்ட். நான் பண்ண தப்ப நானே சரி பண்ணி முழுசா ஒரு மாசம் ஆகுது டாட். ஆனா அதனால எந்த யூசும் இல்ல. தியா தியா என்னோட தியா என்ன விட்டு போய்ட்டா டாட். நமக்குள்ள எல்லாம் முடிச்சிதுன்னு எழுதி வச்சுட்டு என்கிட்ட சொல்லாமக் கூட என்ன விட்டுப் போய்ட்டா” என்று குரல் கரகரக்கக் கூறி, அவள் விபத்தாகி கிடந்த அன்று போலவே இன்றும் தந்தையை தாவி அணைத்துக் கொண்டான் அந்த ஆறடிப் பாலகன்.
அன்று போலவே மகனின் குரலில் இருந்தே அவன் நிலையை உணர்ந்து அவன் முதுகைத் தடவிய அஸ்வினுக்கு ராஹியைப் பற்றி ஆதி கூறியதை இம்மியும் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. அவன் அறிந்த அவன் மருமகள் மாசில்லா மாணிக்கத்திற்கு இணையானவளல்லவா. குடும்பத்தின் நலனுக்காக தன்னையே உருக்கிக் கொள்ளக் கூடிய மெழுகின் குணம் கொண்டவளல்லவா தன் மருமகள். அத்தோடு தன்னைக் காணும் பொழுது மதியிடம் தோன்றும் மையலை சமீபநாட்களில் பெண்ணவளின் பேராழி விழிகளில் அவள் ஆதியைக் காணும் பொழுது அவனே பலமுறை கண்டிருக்க ஆதி சொல்வது போல் நடக்க வாய்ப்பே இல்லை என்று ஆதியிடமே அடித்துக் கூறியவன்,
“இல்ல சார்ம் எங்கையோ தப்பு நடந்துருக்கு. ராஹி என் மருமக. யுவாவோட பொண்ணு. அவ ஒருநாளும் இப்டி ஒரு முடிவு எடுக்க மாட்டா. அவ கிராமத்துல வளந்தவ. அவ உன்னப் பிரியணும்னு நினச்சுருந்தா இந்த மேரேஜ்ஜே பண்ணிருக்க மாட்டா. அத்தோட ஷி இஸ் இன் லவ் வித் யூ” என்று துளியும் சந்தேகமின்றிக் கூறிய தந்தையின் கூற்றிலே ஆதிக்கு நாடி நரம்பெங்கும் புது ரத்தம் பாய்ந்தது.
தந்தை கூறியது உண்மையா என்று கூட அவனுக்கு உறுதியாகத் தெரியவில்லை ஆனாலும் தன் மனைவி தன்னைப் பிரிந்து செல்ல விரும்பி இருக்க மாட்டாள் என்ற செய்தி ஆதியின் நெஞ்சில் தேனை வார்த்திருக்க அவனோ, “டாட்…” என்று அளவில்லா ஆவலில் தந்தையின் கையைப் பற்றிக் கொண்டவனை அவனும் தீர்க்கமாக நோக்கியவன்…
“எஸ் சார்ம்… சம்திங்க் ராங்க். கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். நிதானமா யோசிச்சன்னா எங்க தப்பு நடந்துருக்குன்னு தெரிஞ்சிடும்” என்றும் மகனின் தோளில் தட்டிக் கொடுத்தவன், “நம்மையே நம்பி வந்த மனைவி விஷயத்துல தப்பு பண்றப்போ ஈஸியா வேகமாக பண்ற நாம அது தப்புனு உணந்தாலும் உடனே அத ஏத்துக்கறது இல்லை. அதுக்கு மன்னிப்பும் கேக்கறதில்ல. ஏன்னா அவ நம்மள நம்பி இருக்கவ நம்ம விட்டு எங்க போய்டுவான்னு ஒரு மிதப்பு. ஆனா ஒரு கபில்ஸ்கிடையில் காதல் எவ்ளோ வேணாலும் இருக்கலாம். ஆனா கர்வம் துளியளவும் இருக்கக் கூடாது சார்ம். அப்டி இருந்தா அது காதல சுத்தமா அழிச்சிடும்” என்றும் தன் உரையை முடித்து வெளியேறிச் சென்றவனையே வைத்த கண் வாங்காது பார்த்திருந்தான் அவன் மகன்.
புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைத்ததைப் போல் தந்தையின் உரையில் சிந்தனை தெளிவாகியவன், ஆரம்பத்தில் இருந்து ராஹியுடனான ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் அசை போட்டவனுக்கு தந்தை கூறியது தான் உண்மை என்பது போல் அவன் கோணமே வேறாகி இருந்தது.
அவனும் தன்னருகில் உருகிக் கரைந்த மனையாளின் நாண முகத்தை எத்துணையோ தரம் கண்டிருக்கிறானே. சொல்லப்போனால் தன்னை தலைகுப்புற விழத் தட்டியதில் பெரும் பங்கு பெண்ணவளின் அந்த செம்மை பூத்த பாவனைகளுக்குத் தானே.
மனைவி தன்னை பிரிய விரும்பவில்லை என்றால் கடிதம் எழுதி வைத்து விட்டுச் செல்லும் அளவிற்கு அப்படி என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் இப்பொழுது சரியான பாதையில் மூளையை விரட்டியவனின் கால்கள் அன்னிச்சையாக ராஹியின் பொருள்கள் இருந்த அலமாரியை நோக்கிச் சென்று அவள் வேறு ஏதேனும் எழுதி வைத்துச் சென்றிருக்கிறாளா என்றெல்லாம் ஆராயத் தொடங்கியது.
மர அலமாரி முழுதும் அங்குலம் அங்குலமாகத் துலாவியவனுக்கு பெரிதும் வேலை வைக்காமலே ராஹியின் புடவையை இழுத்த நொடி அவன் காலடியில் வந்து விழுந்தது அவள் அன்று வைத்து விட்டுப் போன வெள்ளை உரையும் அதனோடு இணைந்த அவனது புகைப்படமும்.
சட்டென்று அதை எடுத்துப் பார்த்தவனுக்கு புகைப்படத்தில் இன்ச் அளவிற்குக் கூட இடமில்லாமல் பதிந்திருந்த பெண்ணவளின் இதழ்களின் அச்சிலே அவள் நேசம் தன் மீது தான் என்று உணர்ந்து கொண்டவனுக்கு ஏற்பட்ட பரவசத்தை விடவும் புகைப்படத்தில் அங்கங்கே பட்டுத் தெரித்திருந்த கண்ணீர்த் துளிகளே அவன் நெற்றியை பலமாகச் சுருங்க வைக்க, “என் போட்டோவப் பாத்து என் ஹனி அழுதாளா? ஆனா ஏன்? என்ன விட்டுப் போகணும்னு நினைச்சவ என் போட்டோவப் பாத்து ஏன் அழணும்” என்று மூளையைக் கசக்கியபடி இருந்தவன் அப்பொழுது தான் புகைப்படத்தோடு இணைந்திருந்த உரையையும் பிரித்துப் பார்த்தவனுக்கு, “டிவோர்ஸ் நோட்டிசா?” என்று இமாலய அதிர்ச்சியில் உறைந்து நின்றான் ஆதி.
“ஆனா இதுக்கு சான்ஸே இல்லியே? நான்தான் டிவோர்ஸ் கேஸ வாப்பஸ் வாங்கிட்டனே” என்று மீண்டும் மீண்டும் அதைத் திருப்பி திருப்பிப் பார்த்தவன் அதில் அனுப்புநர் பகுதியில் அரசு முத்திரை மட்டுமல்லாது வேறு எந்த ஒரு சாதாரண முகவரி கூட இல்லாததைக் கண்டு இது யாரோ வேண்டுமென்று செய்த காரியம் என்றும் உணர்ந்து கொண்டவனுக்கு ஆத்திரம் எல்லையை கடக்கத் தொடங்கியது.
“இந்த ஆதிகிட்டயே விளையாடிப் பாக்க எவ்ளோ தைரியம் இருக்கணும். எனக்கே தெரியாம பேக் நோட்டீஸ் அனுப்பி என் ஹனிய என்கிட்ட இருந்து பிரிக்க நெனைச்சவன் நிச்சயம் எனக்குத் தெரிஞ்சவனாத்தான் இருக்கும். ஆனா இது சர்வா செஞ்சிருக்க வாய்ப்பே இல்லயே?” என்று அவன் மூளையை கசக்கிக் கொண்டிருந்த நேரம் அவன் கைபேசி மெல்ல சிணுங்கி பியூலாவின் அழைப்பைக் காட்டியது.
அவனும் சில முறை துண்டித்துப் பார்த்தவன் அவளின் தொடர் அழைப்பில் பெரும் எரிச்சலோடே அலைபேசியை செவியில் வைக்க…
அந்தப்புறம் அவளோ, “ஹாய் ஆதி டார்லிங். எப்டி இருக்கீங்க? இன்னிக்கு ஈவ்னிங் நம்ம மீட் பண்லாமா?” என்று குழைவின் தலைவியாய்க் கேட்க…
ஏற்கனவே அதீத குழப்பத்தில் இருந்தவனோ பியூலாவின் குழைவில் மேலும் கடுப்பாகி, “நான்தான் அன்னிக்கே உன் மேல எந்த பீலும் இல்ல இனிமேல் போன் பண்ணாதன்னு சொன்னேன்ல. உனக்குலாம் கொஞ்சமும் அறிவே இல்லியா சும்மா சும்மா மெசேஜ் கால்னு பண்ணிட்டே இருக்க” என்று சீறினான்.
அன்று பார்ட்டி நாளுக்குப் பிறகு ஆதியையும் ராஹியையும் கண்காணித்து வந்த பியூலா ராஹியை விரட்டி விட்டாலாவது ஆதி தன்னுடன் நெருக்கம் காட்டுவான் என்று எண்ணி, அவர்களுக்குள் இருக்கும் விவாகரத்து ஒத்திகையை வைத்து அவளாகவே ஒரு பொய்யான படிவத்தை அனுப்பி ஆதி இல்லாத நேரம் ராஹியை ஆதியை விட்டு செல்ல வைத்தவளுக்கு அவள் சென்றப் பின்னும் கூட ஆதி தன்னை சிறிதும் மதியாது உதாசீனமாகப் பேசவும் அவளுக்கும் சினம் எல்லையைக் கடந்தது.
இருந்தும் ஆதியின் அழகு, அந்தஸ்தை மனதில் கொண்டு பல்லைக் கடித்தவள், “அதான் அந்த வில்லேஜ் கேர்ளும் உங்கள விட்டுப் போய்ட்டாள்ள இனியும் நாம லிவ்விங் பண்றதுக்கு என்ன ப்ரோப்லம் டார்லிங்?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் வினவ…
அப்பொழுது தான் ஆதியின் மூளையிலோ சட்டென்று மின்னல் வெட்டியது.
அவள் பேசாமல் இருந்திருந்தாலாவது அவனுக்கு ஒன்றும் தோன்றி இருக்காதோ என்னவோ??? பியூலாவின் வார்த்தையில் “ராஹி ஊருக்கு போய்ட்டான்னு இவளுக்கு எப்டி?” என்று யோசிக்கத் தொடங்கியவன் கையிலிருந்த வெள்ளை உரையிலும் பார்வை பதித்தபடியே…
“நான் டென் மினிட்ஸ்ல உங்க வீட்ல இருப்பேன். எங்கயும் போய்டாத” என்று சொல்லி விட்டு வைத்தவன், சொன்னது போல பியூலாவைச் சந்தித்த கால்மணி நேரத்தில் அவளை உண்மை எல்லாம் கக்க வைப்பதற்கு ஆதி அவள் கன்னத்தில் ஓங்கி விட்ட ஒரே ஒரு அறை மட்டுமே போதுமானதாக இருந்தது.
இதுவரை ஆதியை ஆணழகனாய், காதல் ரோமியோவாய் மட்டுமே பார்த்து வந்த பியூலா அவன் விட்ட ஒரே அறையில் வீட்டின் மூலையில் சுருண்டு கொண்டவள் அவன் காலைப் பிடித்துக் கதறி அன்று பார்ட்டியில் தொடங்கி தான் செய்தது அனைத்தும் ஒப்பித்து முடிக்க அதையெல்லாம் கைகளை இறுக்க மூடியபடியே கேட்டு முடித்த ஆதியோ,
“என்னோட இந்தக் கை…. காலம் முழுதும் என் தியாவ மட்டுமே தீண்ட வேண்டிய கை. அந்தக் கையால உன்னப் போல ஒருத்திய சாவடிக்கிறதுக்குக் கூட தொடக் கூடாதுங்கற ஒரே காரணத்துக்காக மட்டுமே உன்ன இப்போ உயிரோட விடுறேன். இல்லன்னா” என்று அங்கிருந்த பெரிய தேக்கு மேஜையில் ஓங்கி ஒரு குத்து விட்டு, “ஜாக்கிரதை” என்று அவளை ஒட்டி நின்று கை எடுத்துக் கும்மிட்ட அவளின் பெற்றோருக்கும் சேர்த்து சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவனின் உறுமலில் பியூலாவின் குடும்பமே ஆதியைக் கையெடுத்து கும்மிட்டு ஊரை விட்டே போய் விடவதாய்க் கூறி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.
அதைக் கேட்டப் பின்னரே புயல் போல அங்கிருந்து வெளியேறியவன், “ஹனி நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் டி. உன்ன ரொம்ப கஷ்டப்பட விட்டுட்டேன். கண்ட நாயெல்லாம் உன்ன கடிச்சுக் குதற நானே காரணமா ஆகிட்டேனே தியா. இங்கிருந்து போகும் போது எவ்ளோ வேதனைப் பட்டாளோ என் தியா ஹோ காட்.” என்று மகிழுந்தின் ஸ்டியரிங்கை ஓங்கி ஓங்கி குத்தி தன் கையையே புண்ணாக்கிக் கொண்டவன்,
“ஹனி நான் நான் செஞ்ச தப்ப உணந்துட்டேன் டி. நான் உன்ன உயிருக்கும் மேல நேசிக்கிறேன் ஹனி. என்ன மன்னிப்பியா கண்மணி?. என் லவ்வ ஏத்துப்பியா தியாமா?” என்றும் உள்ளூற உருகித் தவித்தபடியே மகிழுந்தின் செலுத்து விசையை உச்ச வேகத்தில் அழுத்தினான் ஆதி. மனைவியின் சொந்த ஊரான பூஞ்சோலை கிராமத்தை நோக்கி.
ஆதியின் காதலை ஏற்பாளா அவனது தியா???
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.