திருமண விழாவில் நேரம் இரவை நெருங்கிக் கொண்டிருக்க விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரும் உணவையும் முடித்து ஒவ்வொருவராக கிளம்பத் தொடங்கினர்.
வீட்டுப் பெரியவர்களோடு இளையவர்களும் இரவு உணவோடு தத்தம் இணையையும் பார்வையாலே பருகி முடித்த சமயம் பெண்களின் சோர்ந்த முகம் கண்ட பெற்றோர்கள் எஞ்சிய வேலையை தாங்கள் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி இரு ஜோடிகளையும் உறங்க அனுப்பி வைக்க
ஆதியும் ஆத்விக்கும் மனைவியரோடு தங்கள் அறை நோக்கி நடந்தனர்.
முன்னே சென்ற இரட்டையர் இருவரும் லேசாக கட்டி அணைத்து, “குட் நைட் டீ” என்று சொல்லி விட்டு அருகருகே இருந்த தங்கள் அறைகளுக்குள் நுழைய அவர்களைப் பின்தொடர்ந்த ஆண்களும் அறைக்குள் நுழைந்து ஆண்களுக்கே உரித்தான கதவைப் பூட்டும் வேலையையும் செவ்வனே செய்தனர்.
சாஹியைப் பின்தொடர்ந்து அவர்கள் அறைக்குள் நுழைந்த ஆத்விக்கோ, “சாஹி பேப் இந்த டிரஸ்ல நீ எவ்ளோ அழகாயிருக்க தெரியுமா” என்றபடியே
அவளோ, “போங்க ஆதுமாமா பேசாதீங்க கல்யாண நாளைக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கூட இல்ல. மேரேஜ்கு முன்னாடி உருகி உருகி வழிஞ்சிட்டு இப்போ கொஞ்ச மட்டும் தான் வர்றீங்க. ஆதி மாமாவப் பாத்திங்கள்ள” என்று தோள்பட்டையில் இடித்துக் கொண்டாலும் கணவன் பிடியில் இருந்து மட்டும் பெண்ணவள் விலகவே இல்லை.
மனைவியின் அந்தக் கோபத்தில் மந்தகாசமாய் சிரித்தவனும், “கிப்ட் இல்லன்னு யாரு சொன்னாங்க பேப்?” என்று கேட்க…
“அப்போ வாங்கிருக்கீங்களா ஆது மாமா? என்ன கிப்ட்?” என்று ஆவலாகத் திரும்பியவளின் இதழ்களோ இப்பொழுது ஆணின் இதழ்களுக்கு நூலளவு இடைவெளியில்.
மனைவியின் இந்த நெருக்கமும் இத்துணை அருகில் ஆவலாய் விரிந்த பெண்ணின் நயனங்களிலும் முற்றும் முழுதுமாய் தொலையத் துடித்தவன், “கிப்ட் இருக்கு பேப் ஆனா இவ்ளோ தூரத்துல இருந்தா அது கொடுக்க முடியாது” என்று ஜம்பமாய் சொன்னவனை குழப்பமாக ஏறிட்டவளும், “எங்க தூரமா இருக்கேன் ஆது மாமா. உங்க கைவளைவுக்குள்ள தானே” என்று இயல்பாகத் தொடங்கியவளின் பேச்சு ஆணின் குறுகுறுபார்வையில் தேய்ந்து ஒலித்தது.
அதில் அட்டகாசமாய் சிரித்து அவளை மேலும் இறுக்கிக் கொண்டவன், “நான் சொன்னது இந்த டிஸ்டன்ஸ் பேப்”
என்று சொல்லி இருவரின் இதழ்களுக்குமிடையில் சுட்டு விரலை வைத்துக் காட்டியவன், “சாஹி பேப் விஷ் பண்ணவங்களுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லியே தொண்டைலாம் வறண்டு போச்சு. உன்னோட லிப்ஸ கொஞ்சம் குடுத்தின்னா பொழைச்சுக்குவேன்” என்றும் சிணுங்களாய்க் கேட்க…
அதில் கணவனின் தேவை அறிந்து சட்டென்று முகம் சிவந்து போனவளும், “ம்ஹூம் கிப்ட் பஸ்ட். அப்றம் தான்…” என்று தலையாட்டிச் சொன்னாலும் அவள் இதழ்கள் என்னவோ நடக்கவிருப்பதை உணர்ந்து திறந்து மூடி ஆணவனின் இதழ்களை அழைக்காமல் அழைத்தது.
பெண்ணின் அந்தச் செயலில் மேலும் மேலும் பித்தம் கூடிப் போனவனும், “ம்ஹூம்… கிஸ் பஸ்ட்… கிப்ட் நெக்ஸ்ட்” என்று அவளைப் போலவே தலையாட்டியவன், “பேபீ ஐம் நாட் கண்ட்ரோல் மை செல்ப்டா யூ லுக்ஸ் கில்லிங் மீ பேபி. கிவ் மீ டா” என்றும் முணுமுணுப்பாய் அவள் உதடுகளோடு தன் அதரங்களை உராய விட்டுச் சொல்ல, அதில் தொற்றிக் கொண்ட காதல் தீயில் சாஹியின் உதடுகளோ மறுப்பேச்சின்றி கணவனின் உதடுகளை பற்றிக் கொண்டு சுவைக்க, அடுத்த அரை மணி நேரத்தில் பெண்ணின் இதழ்கள் மட்டுமல்லாது அவளது அடி முதல் நுனி வரை ஆணவனின் ஆறடி மேனியின் கட்டுப்பாட்டில்.
மணநாள் பரிசு கொடுக்கவில்லை
என்று முத்தம் கொடுக்கவே முறுக்கிக் கொண்டவளை அவளவனோ மொத்தமாகவே கொள்ளையிட்டு முடிக்க, கணவனின் கைவண்ணத்தில் கிறங்கி அவன் மார்பில் விழுந்த பெண்ணிற்கோ இக்கணம் தான் கேட்ட மணநாள் பரிசு கூட அவள் சிந்தையில் இல்லவே இல்லை.
பெண்ணின் அந்தக் கிறக்கத்தில் கணவனாய் கர்வம் கூடிப் போனவன், “சாஹி பேப் கிப்ட் வேணாமா?” என்று அவள் காதோரம் கிசுகிசுக்க…
அதில் மெல்ல தலை உயர்த்திப் பார்த்தவள், “அதான் போதும் போதும் மட்டும் குடுத்துட்டீங்களே. லிப்ஸ் எல்லாம் ஒரே வலி. நீங்க ரொம்ப மோசம் ஆதுமாமா” என்று அவன் மார்பில் குத்தியவளின் குரலிலோ வார்த்தைக்கு மாறாக மகிழ்ச்சியும் குழைவும் போட்டி போட்டு வழிந்தது.
பெண்ணின் அந்த குழைவில், “சாஹி பேப்… இது நீ எனக்கு கொடுத்த கிப்ட்டி. நான் இனிமேல் தான் கொடுக்கப் போறேன்” என்று அவள் நெற்றியோடு நெற்றி முட்டிச் சிரித்தவன் படுத்த வாக்கிலே மேஜையில் இருந்த ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து நீட்டி, “இதான் என்னோட கிப்ட் பேபி” என்றும் சொல்ல…
அதை வாங்கிப் படித்தவளோ “ஆதூ மாமா” என்றதற்கு மேல் வார்த்தை வராது உறைந்து அமர்ந்து விட்டாள் சாஹி.
முன்பு ஆத்விக்கின் நண்பனிடம் சாஹி பெயருக்கு வாங்கியிருந்த அலுவகப் பங்குகளில் மீதம் இருந்த பங்கையும் இப்பொழுது சாஹியின் பெயருக்கு மொத்தமாக வாங்கியிருந்ததற்கான படிவத்தைத்தான் மனைவியிடம் நீட்டிய ஆத்விக்கோ, “சாஹி பேப் நீ பிராக்டிஸ் முடிச்சி வந்து மெனி டேஸ் ஆச்சு. ஆனாலும் கம்பெனிய டேக் ஓவர் பண்ண கொஞ்சம் தயங்குற. அந்தத் தயக்கம் நம்மாள ஜான் ஏதும் நஷ்டம் அடஞ்சிடக் கூடாதுங்கறது தானே?” என்று கேட்டு அவள் தலையாட்டலைப் பெற்றுக் கொண்டவன், “ஐ ந்நோ பேபி. ஆனா இனிமேல் அந்தத் தயக்கம் உனக்கு வேண்டாம்.” என்று சொல்லி முடிக்கும் முன்…
“ஆது மாமா ஐ லவ் யூ ஆது மாமா.” என்ற கூவலோடு அவன் மார்பில் விழுந்து கதறத் தொடங்கி விட்டாள் சாஹி.
தன் மேல் விழுந்தவளை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டவன், “சாஹி பேப் இது அழ வேண்டிய நேரம் இல்லடி. இனிமேல் முழுக்க முழுக்க அது உன்னோட கம்பெனி. அங்க நீ தைரியமா உன் தடத்தப் பதிக்கணும் பேபி. நான் அதப் பாக்கணும்” என்றும் சொல்லி அவள் கண்களைத் துடைத்து விட…
கணவனின் இத்துணை புரிதலான அன்பில் அவன் தனக்காக எடுக்கும் மெனக்கெடலில் புல்லரித்துப் போனவளும், “ஆது மாமா… நிச்சயம் உங்க ஆசைய நான் நெரவேத்துவேன் மாமா” என்று உறுதி கொடுத்தவள்…
“உங்களப் போல ஒரு கணவன் கிடைக்க நான் பெரிய புண்ணியம் பண்ணிருக்கணும். எவ்ளோ பிறவி இருந்தாலும் நானே உங்களுக்கு மனைவியா வர ஆசைப்படுறேன் ஆதுமாமா” என்றும் குரல் நெகிழச் சொல்லி அவன் முகம் முழுதும் தன் இதழ்களைப் பதித்தாள் சாஹி.
அதில் கிறக்கம் கூடிப் போனவனும், “நானும் தான் பேபி” என்று பதில் பரிசுகளை வழங்கியவன், “ஆனா மத்த பிறவிலயாவது மேரேஜ் அன்னிக்கே நமக்குள்ள அது நடக்குமாடி?” என்று முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு கேட்க…
முதலில், “எது?” என்று புரியாது விழித்தவள் புரிந்த நொடி, “ச்சீ” என்று அவன் மார்பில் குத்தி விட்டு, “அது நீங்க நடந்துக்கிறதப் பொறுத்து இருக்கு” என்றும் உதட்டைச் சுழித்துச் சொல்ல…
அவனோ, “அப்போ எப்டி நடந்துக்கணும்னு இப்போவே நிறைய பிராக்டிஸ் கொடுத்துடு பேபி” என்று சொன்னவன் அவளுக்கு பதில் கூறக் கூட அவகாசம் கொடாது அவள் மேல் படர்ந்து பெண்ணின் பேரெழிலோடு, தங்களின் பேரானந்த வாழ்வையும் தன் வசப்படுத்தத் தொடங்கியிருந்தான் ஆத்விக்வர்மா.
நேரே நடந்து சென்று அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடியின் முன்னே நின்றவள் சற்று முன் கணவன் தன் கழுத்தில் அணிவித்து விட்ட பிளாட்டினம் செயினில் கோர்க்கப்பட்டிருந்த இதய வடிவ டாலருக்குள் வைரக் கற்கள் கொண்டு எழுதிய A என்ற ஆங்கில எழுத்தை மென்மையாக வருடிக் கொண்டிருந்த சமயம் “தியா” என்ற அழைப்போடு அறைக்குள் நுழைந்தான் ஆதி.
வழக்கம் போல் அறைக்குள் நுழையும் போதே மனைவியின் பெயரை உச்சரித்தபடியே வந்தவன் கண்ணாடியின் முன்னே நின்ற மனைவியைப் பார்த்து விட்டு அவளிடம் விரைந்து, “மேடம் இங்க என்ன செய்றீங்க?” என்றபடியே அவள் தோள் வளைவில் தன் முகத்தைப் புதைத்தான்.
அதில் அவனை கண்ணாடியூடே பார்த்தவளும், “ஆதித்தான் இது இது இந்தச் செயின்?” என்று திணறியவள் கேட்க வருவதைப் புரிந்து கொண்டவன்,
“ஆமடா அன்னிக்கு நீ ஆசைப்பட்டு தொட்டுப் பாத்துட்டு வேணாம்னு ஒதுக்கி வச்ச செயின் தான்டா” என்று சொன்னவன் தொடர்ந்து, “அன்னிக்கு நீ இத தொட்டுப் பாத்துட்டு கூடவே சாஹியையும் பாத்தப்போவே இத நான் சாஹிக்கும் சேத்தே வாங்கிட்டேன் ஹனி. பிடிச்சிருக்கா?” என்று கேட்டு அவள் காதுமடலை வலிக்காது கடிக்க…
கணவனின் அந்தப் பதிலில், “ஆதித்தான்” என்று தொண்டை அடைத்து நின்றாள் ராஹி.
ஆறு மாதங்களுக்கு முன் அவன் காதலை உரைத்து பெண்ணவளின் நேசத்தோடு அவளையும் அவனுக்கு உரிமையாக்கிக் கொண்ட போதிலும் தற்சமயம் கணவனின் நேசத்தைப் பெண்ணவள் அளவில்லாது பெற்றிருந்தாலும் நிற்கக் கூட நேரமில்லாது காற்றாற்று வெள்ளமாய் அனைத்தையும் கட்டி ஆள்பவன் தன் கண் பார்த்து நடப்பான் என்றெல்லாம் ராஹி எந்த ஆசையும் வளர்த்துக் கொள்ளவில்லை.
இன்பமும் துன்பமும் சரிவிகிதத்தில் கலந்தது தான் வாழ்க்கை என்னும் நிதர்சனத்தையும் நன்றாகவே உணர்ந்திருந்தவளுக்கு ஆதியுடன் வாழ்க்கையைத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் தங்கள் எதிர்கால வாழ்வை எண்ணி உள்ளூற சிறு கலக்கம் கூட இருக்கத்தான் செய்தது. அது அவர்களின் சிறு வயது ஊடல்களையும், கருத்து வேறுபாடுகளையும் எண்ணி வந்த குழப்பமாகக் கூட இருக்கலாம்.
ஆத்விக் போல் பொறுமையான குணம் இல்லாது முன் கோபியான கணவன் ஆரம்ப கால மோகங்கள் முடிந்து இயல்பு குணத்திற்குத் திரும்பினால் தங்களுக்குள் பெரிதான சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புள்ளதோ என்ற சிறிதான குழப்பத்தில் இருந்தவளின் அச்சத்தை எல்லாம் துச்சமாக்கி நாளுக்கு நாள் அவளைக் காதலில் கரைய வைத்துக் கொண்டிருந்தான் ஆதி.
அவன் ராஹியின் கண் பார்த்து அந்த செயினை வாங்கியதையும் விட தன் மனம் அறிந்து தன் இரட்டைக்கும் சேர்த்து ஒரே போல் இரண்டு செயினை வாங்கி பரிசளித்ததில் மென்மேலும் பொங்கிப் பெறுகிய நேசத்தோடு, “ஆதித்தான்” என்று அவனை இறுக அணைத்திருந்தவள், “என்னோட சின்ன சின்ன ஆசையைக் கூட நான் சொல்லாமலே புரிஞ்சுக்கக் கூடிய அளவு என்ன என்ன நீங்க நீங்க அவ்ளோ நேசிக்கிறீங்களா ஆதித்தான்?” என்று கண்ணில் நீர் துளிர்க்கக் கேட்க…
தன் மார்பில் புதைந்திருந்தவளை மெல்ல விலக்கி அவள் முகத்தை தன் கரத்தில் ஏந்தியவன், “என் கண்மணிக்கு இப்போ என்ன சந்தேகம்? நான் அவள எவ்ளோ நேசிக்கிறேன்னா? இல்ல நேசிக்கிறனான்னா?” என்று புருவத்தை ஏற்றி இறக்கியவன் குரலும் லேசாக கரகரத்து வெளி வந்தது.
கணவனின் அந்தக் குரலில் விலுக்கென்று நிமிர்ந்து அவன் கண்களைச் சந்தித்தவள், “அய்யோ சந்தேகமெல்லாம் இல்ல ஆதித்தான். சின்னப்புள்ளயிலிருந்து வெறுப்பை மட்டும் காட்டுன என்மேல நம்ம வாழ்க்கைய தொடங்கின இந்த ஆறு மாசத்துல நீங்க நீங்க காட்டுற அன்பு ரொம்ப ரொம்ப…” என்று அதற்கு மேல் சொல்ல முடியாது நிறுத்தியவளை…
“ரொம்ப ரொம்ப நம்ப முடியாதளவு அதிகமா இருக்கா ஹனி?” என்று இடையிட்டுக் கேட்க…
தன் மனதில் உள்ளதை அப்பட்டமாய் உரைத்தவனின் வார்த்தையில் அவள் தலை ஆமாம், இல்லை என்பது போல் அனைத்து புறமும் ஆடியது.
அதைப் பார்த்து அவள் நெற்றியோடு நெற்றி முட்டிச் சிரித்தவன், “உனக்கு மட்டும் இல்ல ஹனி எனக்கே இந்த மாற்றம் நம்ப முடியாம தான் இருக்கு. அஞ்சரடி உயரம் மட்டுமே இருக்க இந்த சிக்ஸ்ட்டி கேஜி பொண்ணுக்காக நான் இப்டி உருகி வழியிறதும் உன்னோட இந்தச் சின்னூண்டு கோழிக்குண்டு கண்ணு என்ன ஆட்டிப் படைக்கிறதும் எனக்கே ஆச்சரியம் தான் பேபி. ஆனா இதுதான் உண்மையும் கூட. மொட்டு பூவா பூக்குறதும், மேகம் மழையா பெய்யுறதும் எப்டி எந்த காரண காரியமும் இல்லாம, யாருக்கும் தெரியாம நடக்குதோ அதுபோலத்தான் தியா, நான் உனக்குள்ள வந்ததும், நீ எனக்குள்ள உண்டு பண்ணிருக்க மாற்றமும் இயல்பா நடந்தது. சின்னப்புள்ளயிலிருந்து நமக்குள்ள எவ்ளவோ மனக்கசப்புகள் வந்துருக்கலாம் போயிருக்கலாம். ஆனா இன்னிக்கு இப்போ உன் முன்னாடி நிக்குற இந்த ஆதிதான் நிஜம் பேபி. இவனோட நீ வாழப் போற வாழ்க்கை நிச்சயம் நீ நினைச்சிக் கூட பாக்காத சந்தோசத்தை மட்டுமே கொடுக்கும் பேபி. நம்புடா” என்று அவள் முகத்தை நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டவன், “அத்தோட உன்னோட ஆசைகளோ, தேவைகளோ, வெளிப்படுற இடமும், முடிவடையிற இடமும் என்கிட்ட மட்டுமே இருக்க ஆசைப்படுறேன் ஹனி” என்றும் புல்லாங்குழலின் கீதமாய் கூறி முடித்தவனின் விளக்கவுரையில் ராஹியின் பேதை மனதில் பானகத் துரும்பாய் ஒட்டியிருந்த சிறு குழப்பமும் துணி வைத்துத் துடைத்தார் போல் அகன்று போக, அவனது இறுதி வார்த்தைகள் எதனால் என்றும் உணர்ந்து கொண்டவளோ, “இல்ல ஆதித்தான் ட்ரஸ்ட் ஆரம்பிக்கிறது பத்தி நான் உங்ககிட்ட தான் பஸ்ட் கேக்கணும் நினைச்சேன். ஆனா அத்தை அதுக்குள்ள மாமாகிட்ட சொல்லிட்டாங்க. அவங்களும் உடனே தாம்பரம்ல இருக்க இடத்த எடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டாங்கத்தான்” என்று தவறு செய்தவளாய் உதட்டை கடித்தாள் ராஹி.
நொடியில் வாடிய மலராய் தோற்றம் கொண்ட மனைவியின் முகத்தை மீண்டும் கரத்தில் ஏந்தியவன், “ஹேய் தியா… நீயே டாட்கிட்ட சொல்லிருந்தாலும் அது தப்பே இல்லடி… என்கிட்ட கேக்க தயங்கிட்டு டாடிகிட்ட கேட்டியோன்னு தான் கொஞ்சம் பீலாகிட்டேன். அன்னிக்கு செயினும் வேணாம்னு சொல்லிட்டியா அதனால இன்னும் பழசெல்லாம் மறக்கலியோன்னு நினைச்சு…” என்று உள்ளே போன குரலில் சொல்லியவனிடம்…
“அச்சோ அப்டிலாம் இல்லங்க. பழசெல்லாம் மனசுல வச்சு நான் செயின் வேணாம்னு சொல்லலை. அத்தை வேற நிறைய நகை வாங்கிருக்கப்போ, இவ்ளோ காஸ்ட்லியா எதுக்கு இன்னொன்னுனு நினைச்சுதான்” என்று இழுவையாக சொன்னவள், “ட்ரஸ்ட் விஷயமும் அப்டிதாங்க எதர்ச்சையா நடந்தது. நான் உங்ககிட்ட பஸ்ட் சொல்லலைன்னு ரொம்ப பீல் பண்ணீங்களா ஆதித்தான்? சாரி ஆதித்தான்” என்று அவன் தலை கோதிச் சொன்னாள் ராஹி.
தனக்காகவே ஆனாலும் மனைவி வருந்துவது தாளாது, “இல்ல தியா… அப்டீலாம் இல்ல. உன்னோட சுகமோ துக்கமோ, பிடிச்சதோ பிடிக்காததோ, தேவையோ மறுப்போ எதுவா இருந்தாலும் நீ பகிர நினைக்கிற முதல் ஆள் நானா இருக்கணும்னு. எதிர்ப்பாக்கிறேன். அதனால சின்ன பொசிசிவ்னஸ்தான். நீ பீல் பண்ணாத ஹனீ” என்று அவள் கையைப் பற்றி முத்தமிட்டுச் சொல்ல…
அப்பொழுதும் சமாதானம் அடையாமல், “இல்ல ஆதித்தான்… நான் செஞ்சது தப்புத்தான். நீங்க எனக்காக எவ்ளோ மாறிருக்கீங்க. என்னென்னவோ செய்றீங்க ஆனா நான்தான் உங்கள அப்பவும் இப்பவும் சரியாவே புரிஞ்சுக்காம எல்லாம் தப்பு தப்பா பண்றேன்ல” என்று புலம்பத் தொடங்கியவளை, “இல்ல ஹனி. இல்ல தியாமா இதெல்லாம் ஒரு தப்பே இல்லடி” என்று சமாதானம் செய்தான் ஆதி.
அவளோ அதையும் கவனியாது புலம்பிக் கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவன், “திருந்தமாட்டிங்கடி. நீங்கள்ளாம் திருந்தவே மாட்டிங்க” என்று சலித்துக் கொண்டபடியே சட்டென்று அவள் கரத்தையும் விட்டு விட்டு அங்கிருந்த படுக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.
கணவனின் இந்த திடீர் செயலில் மலங்க மலங்க விழித்தவளும் அனைத்தும் மறந்து விட்டு அவனருகில் ஓடியவள், “ஆதித்தான் என்னாச்சு?” என்று அவன் கையைப் பற்றிக் கொண்டு கவலையாகப் பார்க்க…
அவனோ, “போடீ… கல்யாணம் நடந்த அன்னிக்குத்தான் ஒன்னும் நடக்காமப் போச்சு. கல்யாணநாள் அன்னிக்காச்சும் கிரேண்டா ரிகர்சல் கொண்டாட ஆசையா வந்தா நீ மூக்க உறிஞ்சிட்டிருக்க. போடீ போ… நீலாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட” என்று வரவழைக்கப்பட்ட கோபக் குரலில் கூறி மீண்டும் அவள் கரத்தை தட்டிவிட்டான் ஆதி.
ஆணின் கோப வார்த்தையில் முதலில் புரியாது விழித்தவள் அப்பொழுதுதான் கட்டிலில் செய்யப்பட்டிருந்த அலங்காரத்தையும் பார்த்து அவன் எதைச் சொல்கிறான் என்று உணர்ந்து உதட்டை மடித்து கடித்துக் கொண்டவளின் மஞ்சள் மின்னும் முகம் நொடியில் செவ்வறளியாய் சிவந்து போனாலும் தங்கள் திருமண நாளான இன்று கணவனின் ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றும் உத்வேகமும் பெண்ணின் உள்ளமெங்கும் வியாபித்துப் பரவியது.
செம்மையுற்ற வதனம் முழுதும் வெட்கமும் எதிர்பார்ப்பும் தயக்கமும் போட்டி போட்டுக் கிளம்ப, மீண்டும் அவனை நோக்கிக் கையை நீட்டியவள், “ஆதித்தான்… கோச்சிக்காதீங்க ஆதித்தான்… இன்னிக்கு நீங்க நீங்க சொல்றபடி எல்லாம் கேக்குறேன்” என்று காற்றுக்குக் கூடக் கேளாது சொல்ல…
மனைவியின் அந்த வார்த்தையிலே நாடி நரம்பெங்கும் வீறு கொண்டு எழுந்தது ஆதிக்கு.
இருந்தும் இழுத்துப் பிடித்த பொறுமையோடு அசையாது அமர்ந்திருந்தவன், “ம்ஹும் ஒன்னும் வேணாம் போடி. ஆனா ஊன்னா எமோஷனல் ஆகி மனுஷனுக்கு மூடெல்லாம் போச்சு” என்று சொன்னவனின் கரம் அவளுக்கேத் தெரியாமல் அவள் கரத்திலிருந்த வளையல்களை மெல்ல களையத் தொடங்கியது.
ஆனால் அதைக்கூட உணராது அவனருகில் அமர்ந்து அவன் முகத்தைப் பற்றித் தன்னைப் பார்க்கச் செய்தவள், “ஆதித்தான்… ஆதிமாமா… ஆதி” என்று அவஸ்தையாக அழைத்து, “நான் நான் இனிமேல் கண்டதையும் நினைச்சு எமோஷனல் ஆக மாட்டேன். என் செல்லம்ல கோபம் வேணாண்டா ப்ளீஸ். வா வா வாடா” என்று அதற்குமேல் வெளிப்படையாக அழைக்க முடியாது இமைகளை படபடத்துக் கொண்டவளை அழுங்காது மடியில் தூக்கி வைத்திருந்தவன், “வா… வான்னா… எங்கடி கூப்பிடுற? எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை போடி” என்று மீசையோரம் ஒளிக்கப்பட்ட சிரிப்புடன் கூறியவனின் வலக்கரமோ அவன் வார்த்தைக்கு மாறாக அவள் கழுத்தணியும் களைந்து விட்டு அதன் இடத்தை தான் நிரப்பிக் கொண்டது.
ஆணவனின் மடியிலும் அவன் கரங்களின் பிடியிலும் கூசிச் சிலிர்த்தபடி அமர்ந்திருந்தாலும் அவன் முகத்தை மட்டுமே பார்த்து அவன் கோபத்தை உண்மையாக எண்ணிக் கொண்டவள்,
“அய்யோ முசுட்டு மேங்கோ அப்டிலாம் சொல்லாதடா. நீதான எதோ செலிப்ரேசன் சொன்ன இப்போ இப்டி சொன்னா எப்டி? நான் நான் நா வேணா உனக்கு இன்ட்ரெஸ்ட் வரவைக்கிறேன்டா” என்று அவன் சட்டை பட்டனைத் திருகியபடி முணுமுணுப்பாய் சொன்னவளை…
சிரிப்பில் இதழ்கள் துடிக்கப் பார்த்தவனும், “நீயா?… உனக்கு என்னடி தெரியும்? நீ என்ன பண்ணுவ?” என்று அலட்டாது கேட்க…
“எனக்கு எனக்கு… நான் நான் நான்… உங்களுக்கு பிடிச்ச மாறி ரிகர்சல் பண்றேன் ஆதி” என்று பட்டென்று சொல்லி ஆணவனின் ஆறடி மேனியையே ஆட்டம் காண வைத்தாள் பெண்.
இத்துணை நேரமும் வெறுமனே மனைவியை சீண்டிக் கொண்டிருந்தவன் அவளிடமிருந்து இப்படி ஒரு கூற்றை எதிர்பாராது ஸ்தம்பித்து அமர்ந்திருக்க, அவளோ அவன் பதிலைக் கூட எதிர்பாராது, “இப்போ கிஸ் ரிகர்சல் சரியா?” என்று முன்பு அவன் சொன்னது போலவே சொல்லி விட்டு கட்டிலில் அமர்ந்திருந்தவனின் இருபுறமும் கால் போட்டு நெஞ்சமிரண்டும் மோத அமர்ந்து கொண்டவள், “முதல்ல முத்தம் எத்துணை வகைப்படும்னு பாக்கலாமா?” என்றும் சொல்லியவாறே ஆணவனின் சொரசொரத்த மோவாயை பூவாய் ஏந்தினாள் ராஹித்தியா.
பட்டும் படாத உரசலோடு விரலளவு இடைவெளியில் மடியில் அமர்ந்திருந்தவளின் நெருக்கமே ஆதிக்கு உடலெங்கும் மின்சாரத்தைப் பாய்ச்ச மனைவியின் தற்போதய வார்த்தையில், தன் முகம் தாங்கியவளின் மென்மையான ஸ்பரிசத்தில் முகம் விகசித்து அமர்ந்திருந்தவனின் பரந்த நுதலில் சிகை ஒதுக்கி தன் இதழைப் புதைத்தவள், “நெத்தில குடுக்குற முத்தம் கரையில்லாக் காதலால கொடுக்குறது. உன்ன நான் அளவே இல்லாம நேசிக்கிறேன்டான்னு சொல்லாம சொல்றது தான் இந்த நெத்தி முத்தம்” என்று அங்கேயே மீண்டும் ஒரு முத்தமிட்டு இதழைக் கீழே நகர்த்தினாள்.
பின்பு அவன் கன்னத்தோடும் கன்னம் இழைத்து கன்னக்குழியிலும் சிறு முத்தம் பதித்தவள், “கன்னங்குழி முத்தத்துக்கு உங்கள விட இந்த உலகத்தில வேற எதுவுமே முக்கியமில்லன்னு அர்த்தம் ஆதித்தான்” என்று அவனைப் போலவே விளக்கம் கொடுத்து, “புரிஞ்சிதா?” என்றும் பனிப்பொழிவின் குளுமையோடு கேட்க…
அவளுக்கு பதில் கூறும் நிலையை எல்லாம் நெற்றி முத்தத்திலே கடந்திருந்தான் அவள் கணவன்
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.