ஸ்கை புரொடக்சன் தயாரிக்கும் இரண்டு படங்கள் அடுத்தடுத்து பூஜை போட்டு தொடங்கப்பட்டது. முதல் படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் சென்றுவிட்ட திருப்தியில் தமயந்தி இருக்க,கல்யாண் கையில் காசு இல்லை என்று மிகப்பெரிய குண்டு தூக்கிப் போட்டார். தமயந்தி அதிர்ந்தாள் “சார் அடுத்த படம் ரிலீஸ் பண்ணனும் சார் இன்னொன்னு ஷூட்டிங் பாதி போய்கிட்டு இருக்கு அடுத்தகட்ட ஷூட்டிங்க்கே காசு வேணும். படம் வேற ரிலீஸ் பண்ணனும்” என்றாள்
ஆனால் கல்யாண் “ எனக்கு தெரியாது நீ என்னவோ செய்” என்று சொல்லி கொஞ்சமாக காசு கொடுத்துவிட்டு தமயந்தியின் கைபேசி அழைப்பை ஏற்க மறுத்தார்.
ஸ்கை புரொடெக்சன் ஆரம்பித்த காலத்தில் இருந்தே சம்பள பாக்கி என்று வைக்காமல் எல்லோருக்கும் சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தாள் தமயந்திக்கு ஆனால் அந்த மாதம் சம்பளம் கொடுக்க முடியாமல் போனது. அவளுக்குமே சம்பளம் வேண்டும். அவளுக்கும் வட்டி கட்டவேண்டுமே! திண்டாடி போனாள்.பேங்க் லோன் போகலாம், தனியார் பைனான்ஸ் போகலாம் என ஒவ்வொருவர் ஒவ்வொரு யோசனை சொல்ல தமயந்திக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிரஞ்சீவி தமயந்தியின் நிலை கேட்டறிந்து தனியார் பைனான்ஸ் போக சொன்னான். இன்னொரு பக்கம் அருணும் அவனும் சேர்ந்து ஏற்பாடு செய்த பைனான்ஸ் நிறுவனத்திற்கு போவாள் என்று எதிர்பார்த்தால் தமயந்தியோ வேறு பக்கம் பைனான்சியர் தேடி கண்டுபிடித்து சென்றிருந்தாள்.
தமயந்தி ஸ்டார் ஹோட்டல் பார் ஒன்றுக்கு சென்றாள். அவளை அழைத்துச் சென்றவர் “சார் அங்க இருக்கிறார் பாருங்க போய் பேசிட்டு வாங்க” என்றார்.
ஆள் யாரென பார்த்ததும் ஐயோ! இந்த பைத்தியமா?! சலிப்பானது தமயந்திக்கு…
தமயந்தி “ஹலோ சார்” எனவும்
தேவா “ஹல்ல்லோ தமயந்தி… ஹவ் ஆர் யூ…. வா வா வா எப்படி இருக்க”
என்று உற்சாகமாக வரவழைத்து “குடிக்கிறியா” என்று கேட்டு உபசரித்தான்
தமயந்தி “இல்ல சார் அதெல்லாம் வேண்டாம்”
தேவா “குட்… என்ன விஷயம்”
தமயந்தி தயங்கி தயங்கி “அதான் சார் படம் புரொடக்ஷன் காசு இல்லாம பாதியில நிக்குது… ரிலீஸ் பண்ணா கண்டிப்பாக ஹிட் ஆகும்.. பணம் தேவைப்படுது”
தேவா “எவ்வளவு எதிர்பார்க்கறீங்க”
தமயந்தி “பண்ணெண்டு கோடி எதிர்பார்க்கிறேன் சார்”
தேவா “எவ்வளவு வட்டி விகிதம் கேக்குறீங்க எப்ப தருவீங்க கால்குலேட் பண்ணி பார்த்தீங்களா இவ்வளவு பெரிய காசு சும்மா இல்ல” என்றான்
தமயந்தி “கால்குலேட் எல்லாம் நானே பண்ணி பார்த்தேன்.., ஒரு வருஷம் டைம் கொடுங்க திருப்பித் தரும்போது 15 கோடியா திருப்பி கொடுத்துடுறேன் சார்” என்றாள்
அதன் பின் தேவா நிறைய ஸ்போர்ட்ஸ் பற்றியும் மற்ற விஷயங்களை பற்றியும் ஒரு மணி நேரம் அறுத்து தள்ளிவிட்டு பாண்டு ஒன்றை நீட்டி ஒரு வருடத்தில் 15 கோடி தந்து விடுவதாக அவர்களை எழுத சொல்லி கையெழுத்திட்டு எடுத்துக்கொண்டு அவள் எதிர்பார்த்த பணம் கையில் கொடுத்தான் கூடவே “பயப்படாம பண்ணுங்க யாராவது ஏதாவது கஷ்டப்படுத்தினால் எனக்கு சொல்லுங்க என்னால முடிஞ்ச உதவியை நான் செய்வேன் உங்களுக்கு சரியா” என்றான். இவள் நன்றி கூறவும் “வேறு ஏதும் உதவி வேணுமா “என்றும் கேட்டான்
தமயந்தி “அப்படி எல்லாம் எதுவும் இல்ல சார் இந்த பணம் கொடுத்தீங்களே இதுவே போதும் நான் பிஸ்னஸ் முடிச்சுட்டு வந்து உங்க காசோடு உங்களை திரும்பிப் பார்க்கிறேன் சார்” என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் வெளியே வந்தாள்.
அருணுக்கு ஸ்கை புரொடக்ஷன் படங்கள் திரும்பவும் தொடங்கியது என்ற செய்தி வரும்போது தான் தெரிந்தது தமயந்தி வேறு யாரிடமோ பணம் வாங்கி இருக்கிறாள் என. விசாரித்ததில் படம் கொடுத்தது தேவ் என தெரிந்ததும் கொந்தளித்தான். தேவா தெரிந்து தெரிந்தே இந்த வேலை செய்திருக்கிறான் என்று உள்ளனர்வு சொல்ல நேராக தேவ்வை சந்திக்க சென்றான்.
தேவ் அதே பாரில் அதே மேஜையில் உட்கார்ந்து கொண்டு கையில் கோப்பையுடன் சத்தாமக ஒலிக்கும் பாடலை ரசித்து கொண்டிருந்தான்
சுஷ்மா காணாமல் போனதிலிருந்து அசுர வளர்ச்சியில் இருந்தான். ரியல் எஸ்டேட் ஒரு பக்கம் வளர்ந்துக் கொண்டிருக்கு மைனிங் ஒன்றை குத்தகைக்கு எடுத்து அதில் பயங்கரமாய் லாபம் பார்த்து அந்த காசை எடுத்துக் கொண்டு வந்து சினிமாவில் பைனான்ஸ் செய்து கொண்டிருந்தான். பண விஷயத்தில் அசுர வளர்ச்சி என்றாலும் மனநிலையிலும் உடல் நிலையிலும் பின்னோக்கி சென்று கொண்டிருந்தான். போதை மயக்கம் இல்லாமல் நிதானமாய் இருப்பது அரிதானது.
அருண் அவன் எதிரே இருக்கும் இருக்கையில் சென்று கம்பீரமாய் உட்கார்ந்து அவனை பார்க்க
தேவ் “பட்ட பகல்ல உனக்கு என்னடா பார்ல வேலை எடத்த காலி பண்ணு” என்றும் மிரட்டினான்
அருண் கோபமாய் “இப்ப எதுக்கு தமயந்திக்கு காசு கொடுத்த” என்று கேட்டான்
தேவ் திமிராக “என்கிட்ட காசு இருந்தது அவங்க கம்பெனிக்கு காசு தேவைப்பட்டது நான் கொடுத்தேன்… நீ என்னடா வந்து என்ன கேக்குற? நான் எதுக்கு உனக்கு எல்லாம் பதில் சொல்லணும்”
அருண் “நீ என்னமோ வேணும்ன்னே அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ண மாதிரிதான் எனக்கு தோணுது”
தேவ் “ச்ச்சே அருண்ணு உனக்கு தெரியுது அந்த புள்ளைக்கு தெரியல பாரு… காசு வாங்கிட்டு தேங்க்யூ சொல்லிட்டு வேற எதுவுமே சொல்லாம படபடபடன்னு நடந்து ஓடிட்டாங்க”
அருண் கோப சீற்றமாய் “தேவ்” என்று கத்தினான்
தேவ் “என்னடா எரியுதா? எனக்கும் தான் எனக்கும் தான் தினம் தினம் நெஞ்செல்லாம் எரியுது”
அருண் “தமயந்தி விசயத்துல தள்ளி நில்லு”
தேவ் “என் பொண்டாட்டி எங்க இருக்கான்னு சொல்லு”
அருண் “எனக்கு தெரியாது” என்று சொல்லி நடந்து வெளியே வந்தான்.
தமயந்தியின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. இரண்டு படங்களையும் முறையே ரிலீஸ் செய்தாள். படம் வெளிவந்து லாபம் ஈட்டி தந்ததுடன் அவர்கள் பெயரும் வெளியே தெரிய தொடங்கியது.கல்யாண் அடுத்த நாளே அவள் ஆபீஸ்க்கு வந்தவர் அங்கே வேலை பார்க்கும் எல்லோரையும் அழைத்து வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்தார். பாராட்டியவர் தமயந்தியிடம் உனக்கு சம்பள உயர்வு தருகிறேன் என்று சொல்ல தமயந்தியோ ‘சார் நான் மட்டும் கஷ்டப்படல இங்கே எல்லாருமே கஷ்டப்பட்டுருக்கோம் எல்லாருக்கும் சம்பளத்தில் இருபது சதவீதம் சம்பள உயர்வு கொடுங்க’ என்று கேட்டாள்
கல்யாண் “உடனே ஏற்பாடு செய்மா செஞ்சிடலாம்” என்றார்.
தொடர்ந்து இரவு பகல் பாராமல் வேலை பார்த்த அனைவருக்கும் லாபத்தில் இருந்து ஊக்கத்தொகையும் பெற்று கொடுத்தாள். இப்படியான சம்பள உயர்வும் ஊக்கத்தொகையும் அங்கே சுற்றுவட்டாரத்தில் தமயந்திக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது.
வடக்கில் இருந்து வந்திருக்கும் நிறுவனம் சம்பளமே தருவார்களா என்கிற சந்தேகத்தில் இருக்கும்போது தமயந்தியின் இந்த யுக்தி அந்த நிறுவனத்தின் மீது நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது.
சம்பள உயர்வு, ஹிட்டான படங்கள், நல்லபெயரென உருவாக்கியும் வெறுத்துப் போனாள் தமயந்தி. கல்யாண் முட்டாள்தனமாக பணம் இல்லை என்று தொடங்கிய நிறுவனத்தை பாதியில் கண்டுக்கொள்ளாமல் சென்றதும் இல்லாமல் அதுவே அவர்கள் ஜெய்த்தும் வந்து சிரித்து பேசுகிறார். ஒருவேளை அவள் எங்கேனும் இடறி இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணும்போது கோபம் வந்தது.
நிறுவனத்தை நடத்த பணத்திற்காக அவள் போராடிய காலத்தில் சாப்பாடு தூக்கம் நிம்மதி என்று எதுவும் இல்லாமல் அலைந்து ஓய்ந்து போனாள். அதற்கு யார் ஈடு கட்டுவார் என் கேள்வி அவளுக்குள் எழுந்தது. இந்த கோபத்தில் கல்யாண் பரிந்துரை செய்த படத்தை வாங்காமல் தமயந்தி போக…
கல்யாண் சட்டென “இது என் கம்பனி நான் சொல்றது தான் நடக்கும்” என்று ஆக்ரோஷமாக பேசினார்.
தமயந்தி “இல்ல சார் இங்க கம்பனிக்கு எது நல்லதோ அதுதான் நடக்கும்” என்று பதில் சொல்லிவிட்டு அடுத்த வேலைகளை பார்க்க சென்றாள்.
கல்யாண் “என்ன தொடர்ந்து ஹிட் கொடுக்கவும் தலைக்கு ஏறிருச்சு போல. எப்ப வேணாலும் இங்க தோற்றுப்போக இடம் இருக்கு. தெரியும்ல…”
தமயந்தி “தெரியுது சார் நல்லாவே தெரியுது. ஆனா எனக்கு ஜெயிக்கிறது தோற்கிறத விட இங்க வேலை செய்ய சகஜமான சூழல் வேணும். ஒர்க் ஓவர்லோட் ஆனாலும் மாசம் சரியான தேதிக்கு சம்பளம் கொடுக்கணும். அதுக்கு உத்தரவாதம் கொடுங்க சார்”
கல்யாண் “இங்க ஆபிஸ் நடத்துறது நீ. நீதான் அதெல்லாம் பார்த்துக்கணும்” என்றார் முதலாளிக்கே உரிய திமிரில்
இம்முறை தமயந்திக்கு கோபத்தை காட்டிலும் நிரூபித்து காட்டும் உத்வேகம் பிறக்க “அப்போ லாப நஷ்ட கணக்கையும் நானே பார்த்துக்கறேன். நீங்க நான் செய்றத எதையும் கேள்வி கேட்காம விடுங்க” என்றாள்
கல்யாண் “ஓ தாராளமா கேட்காம விடறேன். ஆனா எங்க அருந்ததீ ஃபிலிம் கார்பரேஷன் போல ஸ்கை பிரடக்ஷன்ன மாத்தி காட்டு பார்க்கலாம் அப்போ” சவாலாக கேட்டார்
தமயந்தி உழைக்க அஞ்சாதவள் ” அவங்க முப்பது வருஷத்துல பண்ணத என்னால மூணு வருஷத்துல பண்ண முடியும் பாருங்க” என்று பதில் சொல்லிவிட்டு வேலைகளை தொடர்ந்தாள்.
கல்யாண் “அப்படி ஆகாம மட்டும் இருக்கட்டும்…” என்று மிரட்டியவர் தமயந்தி கொஞ்சம் இடறினாலும் கிண்டல் செய்வதையும் அவள் முன்னேற்றத்தை சிறுமை படுத்துவதையும் நிறுத்தாமல் தொடர்ந்தார்.
பூமிகாவுக்கு தமயந்தியை சந்திக்க கிடைக்கும் காலம் வெகுவாக குறைந்து போனது.அப்படியே சந்தித்தாலும் இருவருக்கும் புலம்பவே நேரம் போதவில்லை.தமயந்திக்கும் பூமிக்கும் யார் சோகத்தை முதலில் சொல்வதென போட்டியே வந்தது. நான்கு பேர் சேர்ந்திருக்கும் கும்பலுக்கு நடுவே செல்வதே தமயந்திக்கு சங்கடமாக இருக்கும் ஆனால் இப்போது சூழ்நிலையே வேறு. ஒவ்வொரு பட பூஜையிலும், ஆடியோ ரிலீஸிலும், வெற்றி விழாவிலும் அவள் பேசியே ஆகவேண்டும். அவள் அணியும் புடவைகள், பிளவுஸ் டிசைன்கள் ட்ரெண்ட் ஆகின… நீள்கூந்தலை கத்திரிக்காமல் அணியும் புடவைக்கு ஏற்ற சிகை அலங்காரம் பேசப்பட்டது. விருது வழங்கும் விழாக்களில் ஸ்கை ப்ரொடக்ஷனில் வெளிவந்த படங்கள் வெகுவாக விருதுகள் குவிக்கவும் தமயந்திக்கு தனி மரியாதை பெருகியது. நாள் முழுதும் அணிந்திருக்கும் முகமூடி பூமியை பார்த்தால் உடனே அவிழ்ந்து விழும். “எனக்கு மேடை ஏறி பேசவே புடிக்கல, எந்நேரமும் நகைக்கடை பொம்மைபோல சிரிச்சிட்டே வணக்கம் சொல்ல பிடிக்கல, ட்ரான்ஸ்பரென்ட் சாரீ கட்ட புடிக்கவே புடிக்கல மீபூ” என்று ஆரம்பிப்பாள் கல்யாணை திட்டி தீர்த்து ஆறி கொஞ்சமாக எங்கு திரும்பினாலும் போட்டிக்கு வந்து நிற்கும் அருணை திட்டி பொறாமை படும் தயாரிப்பாளர் சங்க தலைவரை வசைபாடி முடிப்பதற்குள் ஞாயிறு முடிந்துவிடும். பதிலுக்கு பூமி “உன்னால முடியும் தம்மு கமான் தம்மு அவனுங்க கெடக்குறானுங்க” என்று நான்கு முறை சொல்லிவிட்டு தூங்கிவிடுவாள். தமயந்திக்கு தூக்கம் என்பது மறந்தே போனது. ஒரு நாளுக்கு அதிகப்பட்சமே நான்கு மணிநேரமே தூங்குவாள். கடகடவென அடுத்த வாரத்திற்கு தேவையானதை எல்லாம் சேகரித்து வேலை செய்வாள்.
பூமி “நடுராத்திரி ரெண்டு மணிக்கு துணி அயர்ன் பண்றவ நீயா தான் இருப்ப தம்மு” என்பாள்
புவன் அவனுக்கு கிடைக்கும் நேரமெல்லாம் பூமியுடன் செலவழித்தான். தமயந்தியின் இன்மையில் புவனுடன் பழக இளகி இருந்தாள் பூமிகா.
பூமியும் இன்டர்ன்ஷிப் செய்வதற்கு வேறொரு ஆடிட்டர் ஆபிஸில் சேர்ந்திருக்க அவரும் அவளை வறுத்து எடுத்துக்கொண்டிருந்தார். பூமிக்கும் அவள் கோபத்தை எல்லாம் யாரிடமாவது திட்டி தீர்த்தால் குறைந்து போகும். அப்படி பகல் எல்லாம் முதுகு தேய வேலை பார்ப்பவள் இரவு புவனிடம் திட்டி தீர்ப்பாள். ‘பல்லி மாதிரி இருந்துட்டு என்னை அந்த பேச்சு பேசுறான் தெரியுமா. விட்டா கால்ல போட்டு நசுக்கிடுவேன் வேணாம்ன்னு பார்க்குறேன்.எக்ஸெல் ஷீட்ல வேலை பார்க்க தெரியலயான்னு கேட்டு அசிங்க படுத்துறான் கிழவன். கைல மட்டும் கிடச்சா அந்த பொடப்பா நிக்குற மூக்க ஓங்கி ஒரே குத்து அப்படியே ஒடஞ்சி விழும் பார்த்துக்கோ ஆனா எனக்கு என் டிகிரி முக்கியம்” என்று கோபமெல்லாம் கொட்டுவாள்.
புவன் “உன் கோவத்த என்கிட்டே கொட்டிட்ட என் கோவத்த எங்க கொட்டுவேன்” கேட்பான்
பூமிகா “நோ நோ நான் கேட்கமாட்டேன் அப்பறம் நாளெல்லாம் என்ன ஆச்சோ அந்த விஷயம்ன்னு மண்டையில ஓடும்” என்பாள்.
சிலநேரம் நடுராத்திரி “எனக்கு ஆணியன் சமோசா சாப்பிடணும் போல இருக்கு, பூரி கூட உருளை கிழங்கு பொடிமாஸ் போட்டு சாப்பிடணும் போல இருக்கு புவன் ” என்று ராகமாக சொல்லி அழுவாள். திரும்ப அவளே “இல்ல நான் கொஞ்சம் இளைக்கணும் அதெல்லாம் வேணாம். சீரக தண்ணி குடிக்கறேன்” என்பாள்.சிலநேரம் ” இன்னுமாடா உங்க வீட்ல உனக்கு பொண்ணு பார்த்து கூட்டிட்டு வரல” என்று கேட்பாள்
பூவன் “என் பொண்டாட்டி நீ தான் இருக்கியே” என்றால் அடுத்த நான்கு நாள் பேசமட்டாள்…
புவனுக்கு பூமியின் என்றுமே மாறாத அன்பும் பாசமும் சிலநேரம் இனிப்பாக இருக்கும். சிலநேரம் வேண்டுமெனவே காயப்படுத்த அவள் முற்படும்போது அவளை அந்த இனிப்பான அன்பை எப்போதும் காட்ட தடுப்பது எது என்று யோசிப்பான்.
பூமிகா கேட்பது போல அவன் சித்தப்பா அவனுக்கு பெண் பார்க்கிறார்தான். ‘எங்கப்பா அம்மா போல இஷ்டமில்லாத கல்யாணம் எல்லாம் செய்துக்க இஷ்டமில்லை சித்தப்பா’ என்பவன் எதுவும் பேசவிடாமல் தொழில் பற்றி பேசிவிட்டு விலகிக்கொள்வான். சிறுவயதிலேயே அப்பா அம்மா அவனை தாத்தா பாட்டியிடம் விட்டு விலகிக்கொள்ள, சித்தப்பாவிடம் நெருக்கமாக இருந்தான். அவரும் அவர் திருமணத்திற்கு பிறகு அவர் பிள்ளைகள், அவர் தொழிலென போக அவரிடமிருந்து இவனே விலகிக்கொண்டான். அதனால் சித்தப்பாவால் அழுத்தமாக திருமணத்தை பற்றி பேசமுடியாமல் போனது. அதுவரை அவன் தப்பித்து கொள்கிறான். சிலநேரம் பூமிகாவுடன் ஒட்டியும் ஒட்டாமல் இருப்பது பிடிக்கும் சிலநேரம் இழுத்தணைத்து இதழணைக்க தோன்றும்… அவன் காதல், திருமணம் என்று கொஞ்சமாக வார்த்தையை விட்டாலே கூட்டுக்குள் அடைத்துக்கொள்பவளை பெரிதாக சண்டைக்கு இழுத்து மனதில் உள்ளதை வெளிவர வைப்போமா என்று தோன்றும் ஆனால் இப்போதிருக்கும் நட்பும் கெட்டுப்போனால் என்ன ஆவது?
ஞாயிற்று கிழமையும் தமயந்தி வேலையென சென்றுவிட தமயந்தி வீடுவரை வந்தவள் புவனை காண சென்றாள். புவன் பூமிகாவை “நான் ஒரு இடத்துக்கு போகணும் வரியா கூட” என்று கேட்கவும் பூமிகாவும் அவனுடன் செல்ல ஒத்துக்கொண்டாள். இருவரும் சேர்ந்து அவன் தாத்தா பாட்டி வீட்டிற்கு செல்லவும் பூமிக்கு உள்ளம் தடுமாறியது.
பூமி அந்த வீட்டுக்குள் நுழைந்ததும் எப்போதும் போல பிரம்மாண்டம் அவளை ஈர்த்ததும் பழசெல்லாம் நினைவுக்கு வந்தது.
பறந்து விரிந்த வீட்டின் மேல் எழுந்த ஆசையில் “இந்த வீடு அழகா இருக்கு புவன்” என்று எப்போதும் போல சொன்னவளிடம் “என்னை கல்யாணம் பண்ணிக்கோ இந்த வீட்ல நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம்” என்றான்.
பூமி கண்களை விரித்து அதிசயமாக பார்த்தவள் “அது நான் பெரியவளாகி தனியா ஜீப் ஓட்டிக்கிட்டு ஊரெல்லாம் சுத்திப்பார்த்த அப்பறம் தான் உன்ன கல்யாணம் பண்ணிப்பேன் ஓகேவா”
புவன் “ம்ம் சரி அதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்லை”
“அப்ப சரி.. ஆனா நீ இந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் போட்டி எல்லாம் தொடர்ந்து விளையாடு அப்போதான் என்னை எல்லாரும் எதிர்காலத்துல மிஸ்ஸஸ் கிராண்ட் மாஸ்டர் சொல்லுவாங்க ” என்றாள்.
என்னவெல்லாம் பேசி வைத்திருக்கிறாள். புவன் நிலையை கணிக்க அவனை ஓர கண்ணில் பார்த்தாள். அவன் முழு கவனமும் அவள் மீதே!
பூமிகா “என்ன எதுக்கு இங்க வந்திருக்கோம் இப்போ”
புவன் “எனக்கு எப்பவும் யாரேனும் என்னை பார்த்துக்கணும்ன்னு ஏக்கமா இருக்கும் பூமி ஆனா எப்பவும் உன் விசயத்துல உன்னை நான் பார்த்துக்கணும்ன்னு எனக்குள்ள தோணும்.எனக்கு ன்னைக்குமே எல்லாமாகவுமே நீதான் இருந்திருக்க… பலருக்கு அவங்க லைஃப் பார்ட்னர அவங்களோட கால்வாசி லைஃப் கழிச்சுதான் பார்க்கற சான்ஸே கிடைக்கும். எனக்கு என்னோட ஆதியும் நீதான் அந்தமும் நீதான். நீ இல்லன்னு சொன்னா எனக்கு அந்த கல்யாண வாழ்க்கையே இல்லை” தீவிரமாக பேச உறைந்து நின்றாள் பூமிகா.
சிலைபோல நிற்கும் பூமிகாவை புவன் “என்னடா” என்று கேட்டு நெருங்கவும்
பூமிகா “தொடாத… இது செட் ஆகாது”
புவன் “ஏன் ஆகாது”
பூமிகா “ஏன்னா நீ புவன் நான் பூமிகா அம்பிகா கமலநாதன் பொண்ணு. என் அப்பா இறந்து போயிட்டாரு”
புவன் “சோ வாட்”
பூமிகா “இல்ல உனக்கு புரியாது.நீ வேற யாரையாச்சும் கல்யாணம் செய்துக்கோ”
புவன் “அது முடியாது” என்று கோபமாக சீற
பூமிகா சுதாரித்தவள் திடீரென சகஜமாக “என்ன புவன் வேணும்ன்னா ஒரு நாள் டேட் போவோமா” என்று கேட்டுவிட்டு “இதெல்லாம் ஜஸ்ட் கிடைக்காத விஷயம் மேல இருக்கிற லஸ்ட்,மோகம்.அது தீர்ந்துட்டா கடந்து போயிருவோம். ஏன் சும்மா எனர்ஜி வேஸ்ட் பண்ணிக்கிட்டு சொல்லு”
பூமிகா பேச்சில் கொந்தளித்தவன் சட்டென அவள் முன்னே நெருங்கி “எனக்கென்னமோ இந்த லஸ்ட் ஜஸ்ட் ஒரு நாள்ல போகும் தோணல அது ஆயுசுக்கும் வேணும்ன்னு சொல்லுது” என்றான்
நெருக்கத்தில் அவன் மோகப்பார்வை தாளாமல் “ ட்ரஸ்ட் மீ அதெல்லாம் ஒரு மயக்கம் கிறக்கம். ஒருநாள் காணாம போயிடும்”
இந்த ஓவரா பொய் பேசுற வாய்க்கு நான் பனிஷ்மென்ட் கொடுத்தா போகுதா பார்ப்போமா என்றவன் அவள் உதட்டை நோக்கி குனிய பூமியும் அவனை நெருங்கி வந்து அழுத்தி முத்தமிட்டுவிட்டு விலகி வீட்டை விட்டு வெளியே நோக்கி ஓடினாள்.
பூவன் “நில்லு பூமி”
பூமிகா “வேணாம் நான் உனக்கு வேணாம் நீ எனக்கு வேணாம்” என்றவள் நடந்தே அவள் வீட்டை அடைந்தாள்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.