“வெண்பா உண்மையில் ரொம்ப நல்ல பொண்ணு. அவ நல்ல மனசுக்கு தான் வெற்றி கிடைச்சு இருக்கான்” என கூட்டத்தில் ஒருவர் சொல்ல,
“வெற்றி மட்டும் என்ன? அவனும் தங்கமான பிள்ளை தான். அதனால் தான் கடவுள் ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு இருக்கார்” என மற்றவர் சொல்ல, அனைவரும் அதை ஆமோதித்தனர்.
இத்தனை களோபரம் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் வெண்பா ஒருவித மோன நிலையிலேயே இருந்தாள்.
வெற்றி அவள் கழுத்தில் மூன்று முடிசிட்டே போதே! அவள் உலகம் இயக்கத்தை நிறுத்தி இருந்தது.
இந்தனை நேரம் இளங்கோ கோபப்பட்டது, நாச்சியார் ஆதங்கப்பட்டது, கனகவல்லி வேதனைப்பட்டது, திருநாவுக்கரசு சமதானப்படுத்தியது எதுவுமே அவள் புத்தியில் உறைக்கவில்லை.
வெற்றி அவளை தான் பிடித்திருக்கிறது என்று சொல்வான் என்பது அவளுக்கே அதிர்ச்சி தான். எள்ளவும் வெற்றி மனதில் தான் இருப்போம் என்று அவள் நினைத்து கூட பார்த்ததில்லை. அதுபோல் அவன் நடந்து கொண்டதும் இல்லை.
தற்பொழுது பார்த்தால், பிடித்திருக்கிறது என்று சொன்னதோடு மட்டுமில்லாது திருமணமே செய்து விட்டான்.
மனதில் பல வித கேள்விகள், பல வித குழப்பங்கள் எதற்கு? ஏன்? எப்படி என்று ஏகப்பட்டது வரிசை கட்டி நிற்க, சுற்றம் அவளுக்கு சுத்தமாக உரைக்கவில்லை.
வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் வாழ்த்தி, உணவுண்டு ஒவ்வொருவராக விடைபெற்று கொண்டிருந்தனர்.
அனைவரும் சென்ற பின் எஞ்சி இருந்தது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் தான்.
அனைவரும் இல்லத்திற்கு கிளம்ப, அப்பொழுது வரை கூட வெண்பா எதுவும் பேசவில்லை.
“வாங்க கிளம்பலாம்,” என திருநாவுக்கரசு அழைக்க, வெண்பாவின் கைப்பிடித்த வெற்றி,
“வா தமிழ் கிளம்பலாம்” என அழைத்து வர, அப்பொழுது தான் அவளுக்கு சுய நினைவே வந்தது.
அவனை கலக்கத்துடன் நிமிர்ந்து பார்க்க, அவனோ ‘நான் இருக்கிறேன்’ என கண் மூடி அவளை தேற்றினான்.
அனைவரும் பெரிய வீட்டின் முன் வந்து இறங்கியதும், வெற்றி அவளை அழைத்து கொண்டு வாசலில் வந்து நிற்க, விசாலட்சியோ,
“இருங்க இருங்க, கல்யாணம் முடிஞ்சு முதன் முதல்ல வீட்டுக்கு வரீங்க, ஆரத்தி எடுக்கணும்ல,” என அவர்களை தடுத்து நிறுத்தியவர்,
“வள்ளி, போய் ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வா” என வேலைகார பெண்மணியை ஏவினார்.
அவர் வந்து கொடுத்ததும், ஆரத்தி எடுத்தவர், புன்னகையுடன் அவர்களை உள்ளே அழைத்தார்.
உள்ள வந்தவர்களை நேராக பூஜை அறைக்கு அழைத்து சென்றவர்,
“வெண்பா, விளக்கேத்தி சாமியை நல்ல கும்பிட்டுக்கோ” என்றதும்
அவளும் கீ கொடுத்த பொம்மை போல செய்ய ஆரம்பித்தாள்.
நாச்சியாருக்கு இதெல்லாம் பார்க்க பொறுக்க முடியவில்லை.
“விசாலாட்சி, என்ன பண்ணிட்டு இருக்க நீ? அவ என்ன முறையாவா கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்கா? அவளை சீராட்டிட்டு இருக்க?” என கோபமாய் கத்த,
அவரின் கத்தலில் வெண்பா செய்ய வேண்டியதை சட்டென்று நிறுத்தி கொண்டாள். வெற்றிக்கோ சுர்ரென்று ஏறியது.
“அப்பத்தா..,” என அவன் ஓங்கி குரல் கொடுக்க, அதற்குள் விசாலாட்சியோ,
“இரு வெற்றி, நல்ல நாள் அதுவுமா கோபப்பட கூடாது. என்னை தானே கேட்டாங்க நான் பேசிக்கிறேன்” என்றவர், நாச்சியார் புறம் திரும்பி,
“இதோ பாருங்க அத்தே!! நான் உங்க மருமக, நீங்க என்னை எதுவேணும்னாலும் சொல்லலாம். ஆனால் என் மருமகளை பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.
அவளுக்கு நான் தான் மாமியார். அவளுக்கு எது சொல்றதா இருந்தாலும் நான் தான் சொல்லுவேன். அதனால் அவ விஷயத்தில் நீங்க தலையீடாமா இருங்க. அதான் உங்களுக்கு நல்லது” என நன்றாக பேசி விட, நாச்சியாருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அனைவருமே தனக்கெதிராய் திரும்பி விட்டது போல உணர்ந்தார். தன் பேச்சுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பு குறைந்து வருவதை போல தோன்றியது.
“யாருமே என் பேச்சை கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணிடீங்களா!! சந்தோஷம். நல்ல இருங்க” என கோபமாய் உரைத்தவர் எழுந்து அவரறைக்கு சென்று விட்டார்.
“அவங்களுக்கு வேற வேலை இல்ல. எப்போ பாரு ஏதாச்சும் சொல்லிட்டு தான் இருப்பாங்க. வெண்பா நீ விளக்கேத்து” என விசாலாட்சி கூற, அவளோ தயக்கத்தோடு தான் நின்றிருந்தாள்.
“இப்போ ஏத்த போறீயா? இல்லையா? மாமியார் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கணும் தெரியாது” என அவர் அதட்ட, உடனே வேகமாக அவள் விளக்கேற்றினாள்.
“ம்மா, என்ன மாமியார் கெத்தா?!! கலக்கிறீங்க போங்க!” என மீனாட்சி அவர் காதில் சிரித்து கொண்டே கூற, விசாலாட்சிக்கும் சிரிப்பு தான் வந்தது.
“வாங்க வந்து இப்படி உட்காருங்க” என அவர்களை அழைத்து உட்கார வைத்தவள், கனகவல்லியையும், சண்மூகத்தையும் அழைத்து அமர சொன்னாள்.
மணமக்கள் இருவருக்கும் பாலும் பழமும் கொடுக்க, வெற்றி புன்னகையுடன் அனைத்தும் செய்ய, வெண்பா குழப்பதுடனே செய்தாள்.
அனைவருக்குமே உண்ண பலகாரம் கொடுத்துவிட்டு சபையில் அவரும் அமர்ந்து கொண்டார்.
திருநாவுகரசு தான் பேச்சை ஆரம்பித்தார்.
“கனகா, கல்யாணம் முடிஞ்சு போச்சு. வெண்பாவும் எங்க வீட்டில் வாழுறதுக்காக கூட்டிட்டு வந்தாச்சு. இப்பவும் உனக்கு சங்கடமா இருக்கா? அவளை நாங்க நல்லா பார்த்துப்போம்.வெண்பா ஒன்னும் நம்ம வீட்டுக்கு புதுசா வந்தவ இல்லையே! சின்ன வயசில் இருந்து நாங்க பார்த்து வளர்த்த பொண்ணு. அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.” என அவர் கூற,
“அண்ணே, சொல்றேன் தப்பா நினைக்காதே! எனக்கு இன்னமும் பயம் விட்டு போகல. இந்த வீட்டில் அவ சந்தோஷமா வாழுவானு எனக்கு துளி கூட நம்பிக்கை இல்ல.
அம்மாவை பார்த்தல, அவங்களுக்கு என்னையும் பிடிக்காது. என் குடும்பத்தையும் பிடிக்காது. இப்போ கூட மனசு சங்கடப்படுற மாதிரி தான் பேசிட்டு போறாங்க.
இவங்க மத்தியில் என் பொண்ணு எப்படி சந்தோஷமா வாழுவா. நீங்களே சொல்லுங்க.
நாளும் பொழுதும் இன்னைக்கு என்ன பிரச்சனை பண்றாங்களோ?! நாளைக்கு என்ன பண்ணுவாங்களோ? பிள்ளை சாப்பிட்டுச்சா? இல்லையா? னு தினமும் கவலைப்பட்டுட்டு இருக்க முடியாது.
என் பொண்ணை என் கூடவே அனுப்பி வச்சுருங்க. இந்த கல்யாணம் நடந்ததே மறந்துடுங்க.
நான் வேணும்னா தாலியை கழட்டி கொடுக்க சொல்லிறேன்” என்றதும் அனைவரும் அவரை அதிர்ந்து பார்த்தனர்.
அவர் அப்படி கூறியதும் வெண்பாவும் வெற்றியும், அவரை பார்த்து சட்டென்று திரும்பி ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.
வெண்பாவிற்கு கலக்கமாக இருந்தது. தாய் இது தான் முடிவு என்று கூறிவிட்டால், அவளால் அதை மறுக்க முடியாது. ஆனால் வெற்றியை பிரிந்து அவளால் எப்படி இருக்க முடியும்? நினைக்க நினைக்க அவளால் அங்கு உட்கார முடியவில்லை. கை கால்கள் நடுக்கம் எடுக்க, வெற்றிக்கு அவள் மனம் நன்றாக புரிந்தது. சட்டென்று அவள் நடுங்கும் கைகளின் மீது அவன் கை வைக்க, வெண்பாவோ அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
எதுக்கும் கலங்க கூடாது’ என தலையை லேசாக இட வலமாக ஆட்டியவன், நான் இருக்கேன்’ என தைரியமூட்டினான்.
“அத்தே!!” என வெற்றியும், “கனகா” என திருநாவுகரசும் ஒரே சேர குரல் கொடுத்தனர்.
“என்ன அத்தே!! என்ன பேசுறீங்க? என் பொண்டாட்டியை என்கிட்டயிருந்து பிரிக்கலாம் பார்த்தீங்க அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன். பார்த்து பேசுங்க” என்றவனுக்கு கோபம் தெரித்தது.
எத்தனை தடைகளை மீறி அவன் அவளை கரம் பிடித்து இருக்கிறான். சுலபமாக தாலியை கழட்ட சொல்கிறார்களே!! என அவனுக்கு ஆத்திரமாக வந்தது.
வெற்றியின் கோபத்தில் கனகவல்லி, சட்டென்று அமைதியாகி விட்டார். அவர் சொன்ன விஷயம் தவறு தான். ஆனால் அவருக்கு காலம் முழுக்க இங்கு எப்படி வாழுவாள் என்ற பயத்தில் தான் அப்படி கூறி விட்டார்.
என்ன பேசுற கனகா நீ? இப்படியெல்லாம் யோசிக்கலாமா நீ?” என திருநாவுகரசும் கண்டிக்க,
அண்ணே! நான் எதுக்காக சொல்றேன்னா?” என அவர் பதில் கூற ஆரம்பித்ததும்,
கனகா, திரும்ப திரும்ப அதையே பேசின, எனக்கு கோபம் வரும் பார்த்துக்கோ! இன்னைக்கு தான் கல்யாணம் நடந்து முடிஞ்சது. அதுக்குள் அபசகுணா, தாலியை கழட்டி கொடுக்கிறேன் சொல்ற?!!
என விசாலாட்சியும் கோபப்பட்டார்.
அண்ணி கோபப்படாதீங்க. என் நிலைமையில் இருந்து கொஞ்சம் யோசிச்சு பார்த்தீங்கன்னா, உங்களுக்கே புரியும்” என கனகவல்லி விளக்கம் கொடுக்க,
சரி உன் வழிக்கே வரேன். வெற்றி கட்டின தாலியை கழட்டி கொடுத்துட்டு நீ போயிர. வெற்றிக்கும் வேற பொண்ணோட கல்யாணம் பண்ணி வச்சுறோம்.
வெண்பவோட நிலைமை என்ன? ஏற்க்கனவே கல்யாணம் ஆன பொண்ணை யார் மறுபடியும் கல்யாணம் பண்ணுவா? அப்படியே பண்ணாலும் அந்த வாழ்க்கையில் மட்டும் அவ சந்தோஷமா வாழுவானு என்ன நிச்சயம்?
இல்ல, காலம் முழுக்க அவ வாழாவெட்டியா உன் கூடவே வச்சுக்க போறீயா?” என அவர் நிதர்சனம் எடுத்து கூற, கனகவல்லிக்கு தற்பொழுது தான் எல்லாம் புரிந்தது.
சரி அண்ணி, நீங்க சொல்றதை நான் ஏத்துகிறேன். ஆனால் அம்மா..,” என அவர் பயப்பட,
அதைப்பத்தி நீ கவலைப்படாதே! என் மருமகளை நான் பார்த்துக்கிறேன்” என்றதும் கனகவல்லி இன்னமும் குழப்பதுடனே தான் இருந்தார்.
அதான் இவ்வளவு சொல்றாங்கல கனகா. நம்ம வெண்பாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இனி அவ இந்த வீட்டில் தான் வாழ்ந்தாகனும். அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை கிடைச்சு இருக்கு. நாம ஏன் அதுக்கு குறுக்க நிற்கணும்”
என சண்முகம் மனைவியை சமாதானம் செய்ய,
வேணும்னா நீங்களும் இங்கேயே தங்கிடுங்க. இங்க இருந்தே பாருங்க” என திருநாவுகரசும் கூற,
அதெல்லாம் வேண்டாம் ண்ணா. நாங்க இங்க இருக்கிறது சரியா இருக்காது. உங்களை நம்பி விட்டுட்டு போறோம். அவளுக்கு ஏதாச்சும் சின்னதா கஷ்டம் வந்தாலும், உடனே அவளை கூட்டிட்டு போயிடுவோம்”
என கனகவல்லி உறுதியாக கூற, அனைவரும் சரியென்றனர்.
கனகவல்லியும், சண்முகமும் அனைவரிடமிருந்தும் விடைபெற்று கொண்டு, கடைசியாக மகளிடம் வந்தவர்,
“பார்த்துக்கோ வெண்பா. எதுனாலும் எனக்கு கூப்பிடு” என கண்ணீரோடு கூறி விடைபெற்று கொள்ள, சண்முகமும்,
“வரேன் டா. சந்தோஷமா இருக்கணும்” என அவரும் கண்ணீர் வடித்தப்படியே விடைபெற்று கொண்டார்.
வெண்பாவிற்கும் அழுகை முட்டி கொண்டு வந்தது. அம்மா, அப்பா” என்றாளே தவிர அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.
அவர்களும் கண்களை துடைத்தப்படியே அவளை திரும்பி திரும்பி பார்த்தப்படி வாசல்வரை சென்றவர்கள், மீண்டும் அவளை பார்க்க, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட வெற்றியோ, வெண்பாவை கைபிடித்து அவர்கள் அருகே கூட்டி வந்து நிறுத்தினான். அனைவரும் என்னவென்று கேள்வியாய் பார்க்க, அவனோ வெண்பாவின் தோள் மீது கைவைத்து அணைத்தபடி நின்றவன்,
“அத்தே, நீங்க சந்தோஷமா போய்ட்டு வாங்க. இவ தான் என் உயிர். இவளை சந்தோஷமா பார்த்துக்க வேண்டியது என்னோட கடமை. கண்டிப்பா பார்த்துப்பேன். அவளுக்கு எந்த குறையும் வர விட மாட்டேன். அடுத்த தடவை நீங்க வந்து பார்க்கும் பொழுது உங்களுக்கே தெரியும்” என உறுதியாக கூற, அவனது அந்த தோரணையே அவர்களுக்கு புது நம்பிக்கை தந்தது.
மகள் எந்த குறையும் இல்லாது வாழ்வாள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் விடைபெற்று கொண்டு செல்ல, அணைத்த கையை விடாமல் பிடித்திருந்தான் வெற்றி. அவனையும் அவன் பிடித்திருந்த கையையும் திரும்பி பார்த்த வெண்பாவோ நெகிழ்ந்து போய் நின்றிருந்தாள்.
யாரோ யாருக்கோ
எழுதிய கதைகள் இருந்தது!!!!
கவிதைகள் இருந்தது
படிக்க வேண்டும் என ஆசை இருந்தது!!
அத்தனையும் படித்தேன்!!
அதில் எல்லாம் எங்கு தெரிந்தது
ஒன்றே ஒன்று தான்,
அத்தனையிலும் என நாயகனே
கதாநாயகனாக இருந்தான்!!
கனவுகள் தொடரும்…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.