சௌபர்ணிகா அவனை முறைத்து பார்க்கவும் ஆரோன் ரிஷபன் எழுந்துகொண்டான்.
“இது அந்த ஷோவுக்கான இன்விடேஷன். நீங்க கண்டிப்பா வரனும்…” என்று சொல்லி அவளிடம் தான் நீட்டினான் அந்த பத்திரிக்கையை.
“வாங்கிக்கோ சௌபி…” என இஷாந்த் சொல்ல அதனை வாங்கிக்கொண்டாள்.
“சௌபி சந்தனா வந்தாச்சு போல. மெசேஜ் பண்ணிருக்கா….” என்று தங்கையிடம் சொல்லிய இஷாந்த்,
“ஆரோன், பேசிட்டிருங்க இப்ப வந்திடறேன்…” என வெளியேறினான்.
“ஓகே, நானும் கிளம்பறேன். அடுத்த செஷனுக்கு டைமாச்சு…” என்றவனும் நகர,
“ஹ்ம்ம்…” என்று சொல்லியவள் மீண்டும் காபி கப்பை எடுக்க,
“அது ஆறிடுச்சு. ஹாட் ப்யூட்டி ஜில்லுன்னு குடிச்சா சைட்-எஃபெக்ட் வந்திட போகுது. ஹாட்டும், ஹாட்டும் சேர்ந்தா தானே ப்ளஸ்….” என்று கதவினருகே நின்று கண் சிமிட்ட,
“யூ…” என்றவள் அவன் தந்த பத்திரிக்கையை அவன் மீதே விசிற போனவள் சட்டென இறுக்கி பிடித்தாள்.
“நான் நார்மலா சொல்றதெல்லாம் நீங்க வேற மீனிங்ல எடுக்கறீங்க போல? பட் ஐ லைக் இட்…” என மீண்டும் கண் சிமிட்டி சொல்ல பல்லை கடித்தபடி பார்த்தவள்,
“கெட் அவுட்…” என்றாள் அவனிடம்.
“எத்தனை தடவை சொல்லுவீங்க? வேஸ்ட். எப்படினாலும் நான் ஈவ்னிங் தான் கிளம்புவேன்…” என்றவன்,
“மறக்காம நான் குடுத்த மேக்கப் ப்ராடேக்ட்ஸ் யூஸ் பண்ணி பார்த்துட்டு ஷோவுக்கு வர அன்னைக்கு ரிவ்யூ சொல்லுங்க. ஐம் வெய்ட்டிங் பிரபஞ்ச ப்யூட்டி….” என சொல்லி பளிச்சிடும் புன்னகையுடன் தலையசைத்து செல்ல மழையடித்து ஓய்ந்ததை போலிருந்தது அவன் கிளம்பவும்.
அங்கிருந்து சட்டென கிளம்பிவிடவும் முடியவில்லை. அதைவிட அதற்கு மனமும் இல்லை.
அறையில் இருந்துகொண்டே மதிய வகுப்பை பார்த்துக்கொண்டிருந்தாள் சௌபர்ணிகா.
காலை போலவே அப்போதும் வகுப்பு சிறப்பாக நடந்து முடிய அனைவரும் இதோ கிளம்பிவிடுவார்கள் என்று நினைத்தவள் பார்வையில் அந்த ஆட்டம் விழ கண்களை சுருக்கி அந்த இடத்தை பெரிது படுத்தி பார்த்தாள்.
பெண்கள் நால்வரின் நடுவில் நின்று நடனமாடிக்கொண்டிருந்தான் ஆரோன் ரிஷபன்.
‘வாட் தி ஹெல்’ என்றபடி மேஜையை தட்டியவள் வேகமாய் எழுந்து புடவை சரசரக்க வெளியில் வர அவள் வந்த வேகத்தை மேடையில் இருந்தவன் பார்த்ததும் குறும்பை காட்டியது அவன் விழிகள்.
“எக்ஸ்க்யூஸ்மீ…” என உஷாவை அழைத்தவள்,
“செஷன் முடிஞ்சதுன்னா கிளம்பலாமே? அங்க என்ன பன்றாங்க?…” என்றாள் அவளிடம் சௌபர்ணிகா.
“மேம், கேர்ள்ஸ் எல்லாம் ஸாரோட ரீல்ஸ் பன்றாங்க இன்ஸ்டால அப்லோட் பண்ண…” என்று உஷா சொல்லவும் நறநறவென பல்லை கடித்தாள் சௌபர்ணிகா.
உஷாவை தாண்டிக்கொண்டு மேடைக்கு செல்ல எங்கே வந்த கோபத்தில் அந்த பெண்களை எதுவும் பேசிவிடுவாளோ என நினைத்த ஆரோன்,
“ஓகே ப்யூட்டீஸ், டைம் ஓவர்…” என்று இரு கைகளையும் ஆட்டியபடி சொல்ல,
“இன்னும் ஒரு ஸாங். ஒன்னே ஒன்னு…” என விடவில்லை அவர்கள்.
“உஷா…” என்றவன் அதற்கு மேல் அவர்களிடம் பேசாமல் கழன்று வேறு பக்கம் செல்ல அந்த பெண்களை உஷா தான் பேசி அனுப்பி வைத்தாள்.
“என்ன நடக்குது இங்க?…” என மூச்சு வாங்க சௌபர்ணிகா அவனிடம் கேட்க,
“ஜஸ்ட் மிஸ்ஸாகிடுச்சே பிபி. ப்ச், பிரபஞ்ச ப்யூட்டி…” என்று சொல்லவும் உலைகலன் தான் சௌபர்ணிகா.
“கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா நாம சேர்ந்து ரீல்ஸ் பண்ணியிருக்கலாம். ஆனா நான் ரொம்ப டயர்ட்…” என்று வம்பிழுக்க,
“ஓஹ் காட். சத்தியமா எனக்கு புரியலை. நீங்க எங்க ஷோரூம்க்கு வந்திருக்கீங்க தெரியுதா? என்ன தைரியத்துல என்கிட்ட இப்படி பேசறீங்க?…” என்றவள் கோபத்தில் அவளின் மூக்கு விடைத்து சிவந்து மின்னியது.
‘மூக்கா இது? கார்ஜியஸ்’ என்றான் ரசிகன். தப்பித்தவறி வெளியே சத்தமாய் சொல்லவில்லை அவன்.
“ஹலோ மிஸ்டர்…”
“ஆரோன் ரிஷபன்…” என அமர்த்தலாக சொல்லியவன்,
“உங்ககிட்ட என்ன பேசினேன் நான்? சொல்லுங்க…” என்று கேட்க சௌபர்ணிகா தான் திகைத்து போனாள்.
“கோபமா இருக்காதீங்கன்னு சொன்னேன். காபி குடிக்க சொன்னேன். தலை வலிக்கும் போது ஜில்லுன்னு குடிச்சா ஆகாது. அதான் சொன்னேன். இப்பவும் நீங்க வந்த வேகம் பார்த்து நீங்களும் ரீல்ஸ்க்கு டான்ஸ் பண்ண தான் வரீங்கன்னு நினைச்சேன். ஏதாச்சும் தப்பா?…” என அவளை குழப்ப,
“வெரி ஸ்மார்ட். ஆனா இந்த விளையாட்டை வேற யார்கிட்டையாச்சும் வச்சுக்கோங்க. என்கிட்ட வேண்டாம். இது ஒன்னும் நீங்க ரீல்ஸ் பண்ணி வ்யூவ்ஸ் வாங்கறதுக்கான இடம் இல்லை. அதை எல்லாம் உங்க இடத்துல வச்சுக்கோங்க. யார் கேட்பா?…” என்றவள்,
“இங்க எதுக்காக வந்தீங்களோ, அதை மட்டுமே பார்க்கனும். உங்க எக்ஸ்ட்ரா ஆக்ட்டிவிட்டீஸ் எல்லாம் இங்க வேண்டாம். புரியுதா?…” என்று மிரட்டல் போல சொல்ல,
“ஓகே, நீங்க வேணும்னா செலெக்ட் பண்ணுங்க. நான் என்னோட டேஸ்ட்க்கு ஒரு சேரி எடுக்கறேன்…” என்றான் அவனிடம்.
“கண்டிப்பா. ந்யூ டிஸைன்ஸ் இருக்குதே. அதுலயே பார்க்கலாம்…” இஷாந்த் அங்கே அழைத்து செல்ல சௌபர்ணிகா ஒரு புடவையும், ஆரோன் ஒரு புடவையும் தேர்வு செய்தனர் ஆராதனாவுக்கு.
“உஷா பில் பண்ணிடு…” என்று ஆரோன் சொல்ல,
“நோ நோ, இது எங்க கிப்ட்…” என இஷாந்த் மறுக்க,
“பிஸ்னஸ் வேற. இது வேற ப்ரோ. ரெண்டு சேரியும் சேர்ந்து ஹ்யூஜ் அமௌண்ட். கண்டிப்பா பில் பண்ணுவேன்….” என்று மறுத்தான் ஆரோன்.
“அண்ணா, அவங்க எடுத்த சேரிக்கு அவங்க பில் பண்ணட்டும். நம்மோடது நம்ம கடை சார்பா கிப்ட் பண்ணினதா இருக்கட்டும்…” என்ற சௌபர்ணிகா,
“அன்ட் ஒன் திங். இன்னைக்கு நடந்த செஷன் வீடியோ அவங்க டெலிகாஸ்ட் பன்ற அன்னைக்கு நம்மோட யூட்யூப் சேனலுக்கும் கிளிப்பிங் அனுப்பனும். நாமளும் போஸ்ட் பண்ண. அதையும் பேசிடுங்க…” என்றவள் பொதுவாய் கிளம்புவதாக சொல்லிக்கொண்டு கீழே சென்றுவிட்டாள்.
“அப்படியே பண்ணிடலாம் ப்ரோ. இதுல என்ன இருக்கு?…” என ஆரோன் சொல்லி கிளம்பிவிட்டான்.
அவ்வளவு தான் சௌபர்ணிகா பற்றிய அவனின் நினைவுகள். அவன் சந்தித்த பெண்களில் சற்றே காரம்.
அதுவே அவளிடம் வம்பிழுத்து பேச்சை வளர்க்க காரணியாகி இருக்க அதற்கு மேல் அவன் யோசிக்கவில்லை.
அவனின் அடுத்த வேலைகள் பற்றிய ஓட்டத்தில் கலந்துவிட்டான் ஆரோன் ரிஷபன்.
தான் அழைப்பு விடுத்திருக்க சௌபர்ணிகா அந்த விழாவுக்கு வருவாளா இல்லையா என்ற எந்தவித எதிர்பார்ப்போ, நினைவுகள் இன்றி வலம் வந்துகொண்டிருந்தான் ஆரோன் ரிஷபன்.
கண்ணில் படவில்லை. கருத்தை நிறைக்கவில்லை. ஆனால் அனைத்திலும் நிறைந்து கலந்தாட காலங்கள் காத்திருந்தது.