பிருந்தா பேசிய அனைத்தையும் அலைபேசி வழியாக கேட்ட கிருஷ்ணாவிற்கு மனதே பாரமாகி போனது….
உனக்கு என் மேல நம்பிக்கையே இல்லையா பிருந்தா … இல்ல என்னை பத்தி இவ்வளவு தான் தெரிஞ்சி வைச்சிருக்கியா… உன் கண்ணுக்கு அப்படி தான் நான் இதுவரை தெரிஞ்சி இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு பிருந்தா … மானதோடு அவளிடம் வருத்தமாக பேசியவன் அப்படியே சோர்ந்து தலையை பிடித்துக்கொண்டான்.
“என்னடா கிளம்பளையா..” என கிருஷ்ணாவின் அறைக்குள் நுழைந்தான் கிரி.
“கிளம்பனும்” என்றவனுக்கு முகம் சோர்ந்து போய் இருக்க… “என்ன கிருஷ்ணா உடம்பு சரியில்லையா…? கிரி கிருஷ்ணாவின் நெற்றியை தொட்டு பார்த்தான்.
“பச் அதெல்லாம் ஒன்னும் இல்ல நல்லாதான் இருக்கேன்” அவன் கரங்களை தட்டி விட்ட கிருஷ்ணா “நீ கிளம்பளையா இன்னும் நீ இங்க என பண்ற…?” என்றான் கேள்வியாய். ஏனோ இதை கிரியிடம் கூற அவனுக்கு சற்றும் விருப்பமில்லை எப்போதும் போலவே முகத்தை சாதரணமாகவே வைத்துக்கொண்டான்.
“இதோ கிளம்பிட்டேன் டா ஒரு டெலிவரி கேஸ் பேபிய செக் பண்ணிட்டு அப்சர்வேஷன்ல வைக்க சொல்லிட்டு வந்தேன் அதான் லேட் சரி வா போகலாம்” என்றிட இருவரும் அறையை விட்டுவெளியே வந்தனர். கிருஷ்ணாவிற்கு மட்டும் பிருந்தாவின் யோசனையே அவளுடைய குழப்பங்களையும் மனக்காயங்களையும் எப்படியாவது அகற்றி விட வேண்டும் என்று மனது பரபரத்தது. அதற்குள் கிரிக்கு அழைப்பு வர “நீ போயிட்டு இரு மாப்ள இதோ வந்துடுறேன்” என்றவன் திரும்பி குழந்தைகள் வார்டை நோக்கி நடந்தான்.
“இது அக்ஸிடென்ட் மாதிரி தெரியல… சூசைட் அட்டம்ட்டு மாதிரி தெரியுது” தங்களுக்குள் பேசிக்கொண்ட மருத்துவர்கள் வெளியே நின்றிருந்த பிருந்தாவிடம் “ஹெவி பிளட் லாஸ் ஆகியிருக்கு…எங்க கிட்ட இந்த பிளட் குருப் ஸ்டாக் இல்ல..
பிளட் பாங்குல இன்பார்ம் பண்ணி இருக்கோம்… ஆனா பேஷண்டுக்கு உடனே பிளட் தேவைப்படுது… உங்கள்ள யாருக்காவது A1 B+ பிளட் குருப் இருக்கா?” என வினவியதும்
“என்னோடது அந்த குருப் தான் டாக்டர் எடுத்துக்கோங்க” தம்பியிடம் கூட கேட்காது முன்னால் வந்தாள் பிருந்தா…
“அக்கா….” அவளை அழைக்க
“விஷ்ணு… இது யோசிக்க வேண்டிய விஷயம் இல்லை… பெரியப்பாவுக்கு கால் பண்ணி தினேஷை பத்தி இன்பார்ம் பண்ணிடு… நான் இப்போ வந்துடுறேன்…” தம்பியிடம் கூறியவள் டாக்டருடன் சென்றிட வாசனுக்கு அழைத்து விஷயத்தை கூறிய விஷ்ணு வெளியில் இருந்த சேரில் சோர்ந்து அமர்ந்தான்.
மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு செல்ல வெளியே வந்த கிருஷ்ணா ரிசப்ஷனில் சோர்ந்த நிலையில் இருந்த விஷ்ணுவை பார்த்தவுடன் என்னவோ ஏதோ என்ற எண்ணத்துடன் வேகமாக அவன் அருகில் சென்றான்.
“விஷ்ணு… விஷ்ணு…. நீயும் பிருந்தாவும் வீட்டுக்கு தானே போயிட்டு இருந்திங்க… இங்க எப்படா வந்த… அவ எங்க… அவ அவளுக்கு ஒன்னும் இல்லையே நீயேன் இப்படி உட்கார்ந்து இருக்க?”… கிருஷ்ணா சற்று பதட்டதுடன் கேட்கவும்
கிருஷ்ணாவின் பதட்டத்தை பார்த்த விஷ்ணு “அய்யோ மாம்ஸ் அவங்களுக்கு ஒன்னுமில்லை… பெரியப்பா பையன் தினேஷுக்காக தான் ஹாஸ்பிடல் வந்தோம்… அக்காவும் வந்துருக்கா” என்றான். அறிவிப்பாக
அப்போதுதான் சீராக மூச்சே வந்தது கிருஷ்ணாவிற்கு தன்னை சீராக்கியவன் “அப்படியா பிருந்தாவும் வந்துருக்காளா?… எங்கடா?… அவனுடைய தேவதையை சுற்றிலும் பார்வையால் தேடினான்.
“உசிரை பணயம் வைச்சி உங்க காதலுக்கு தூது போய் இருக்கேன் மாம்ஸ்…. நான் பண்ண கோல்மால் விஷயம் அவளுக்கு தெரிஞ்சி இருந்தா கட்டைய எடுத்து மண்டைய உடைச்சி இருப்பா… என்னை விட்டு அவளை கேக்குறிங்க எல்லாம் என் நேரம்…” சலிப்பாக கூறியவன் சிரிப்புடன் நிற்கும் கிருஷ்ணாவை மேலும் வம்பிழுக்கும் நோக்கில்
அதில் வாய்விட்டு நகைத்த கிருஷ்ணா… “போதும் டா புலம்பாத ஏற்கனவே உன்னையும் என்னையும் வைச்சி உங்க அக்காவே ஓட்டிட்டு இருக்காங்கடா… கொஞ்சம் அடக்கியே வை… உன் லவ்வ” அவனை வாரியவன்
“பிருந்தா எங்கடா?” என்றான் ஒரு டாக்டராக
“அவங்க பிளெட் கொடுக்க போயிருக்காங்க மாம்ஸ்…”
“ஓ அந்த அளவுக்கு பிளட் லாசா.. இப்போ எப்படி இருக்காங்க”.. அவன் உடல் நிலையை விசாரிக்க
“ஆமா மாம்ஸ் நிறைய பிளட் போயிடுச்சி… இன்னும் எப்படி இருக்கான்னு தெரியல… ஆனா அக்கா அவனுக்கு பிளட் கொடுக்கறதுல எனக்கு விருப்பமே இல்ல… சொல்ல சொல்ல கேட்காம போயிருக்காங்க” என்றான் வேண்டா வெறுப்பாக
“பச் ” என்று உச்சிக்கொட்டி அவன் தோளில் கையை போட்டுக்கொண்ட கிருஷ்ணா அவனுடன் நடந்தபடியே “கெட்டவனோ நல்லவனோ ரத்தம் கொடுக்கறதை தடுக்க கூடாது விஷ்ணு .. அஸ் எ டாக்டரா நான் பிருந்தாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்… அவ எடுத்த முடிவு சரியான முடிவு…” அவனை சமாதானம் செய்ய
“அதானே உங்க ஆளை விட்டுக்கொடுக்க மாட்டிங்களே!” அவனை வம்பிழுத்த விஷ்ணு ஓரிடத்தில் அமர்ந்துவிட்டான்
சிரித்தபடியே அவன் முதுகில் தட்டி கொடுத்த கிருஷ்ணா பிருந்தா இருக்கும் அறை எண்ணை விசாரித்து அங்கு சென்றான்.
கண்களை மூடி படுத்திருந்தவள் கதவு திறக்கும் சத்தத்தில் இமை திறக்க எதிரே நின்றிருந்தவனை பார்த்ததும் மூச்சடைத்ததை போல உணர்ந்தாள். உள்ளுக்குள் ஏதோ பிசைந்து இறுக்க கண்களை மூடிக்கொள்ளளாமா என்று யோசித்தவளின் அருகே வந்து நின்றவன். அவளை குறுகுறுப்பாய் பார்த்தான்.
அவன் பார்வை ஊசியாய் துளைக்க இங்கிருந்து அப்படியே மாயாமாகி விட மாட்டோமா என்று நினைத்தவளின் எண்ணங்களை படித்தவன் போல
“என்ன மூச்சு அடைக்குதா…? நாக்கு வறண்டு போயிடுச்சி போல… ஐஸ் வாட்டர் கொண்டு வர சொல்லட்டுமா??” கேள்விகளால் அவளை படுத்தி எடுத்தான்…
இங்கும் அங்கும் ஓடும் கோலிக்குண்டு கண்களை உருட்டிக்கொண்டு அவனை பார்த்தாள்.
“மேடம் ரொம்ப பிஸி… போன் பண்ணா எடுக்க மாட்டுறிங்க!! மேசேஜ் பண்ணா பாக்கமாட்டுறிங்க!! நேர்ல வரலாம்னா எங்கேயாது மாயமா மறைஞ்சிடுவிங்களோன்னு பயப்பட வேண்டியதா இருக்கு…!!” வரிசையாய் அவளை போட்டு தாக்கிட பேயைக் கண்டது போல் அரண்டு போயிருந்தாள் பிருந்தா.
அவள் முகத்துக்கு வெகு அருகில் தன் முகத்தை கொண்டு சென்றவன் கிசுகிசுப்பான குரலில் “கண்ணு ரெண்டும் நல்லா கோலி குண்டு மாதிரி பெருசாகுறதுலேயே தெரியுது என்னை இப்போ நீ எதிர்பார்க்கலைன்னு… என்ன செய்யறது எல்லாம் விதி…” நெற்றியில் கை வைத்து இழுத்து காட்டினான்.
இதயம் வெளியே எகிறி குதித்துவிடும் அளவிற்கு படபடப்புடன் இருக்க வார்த்தை என்பதையே மறந்தவளாய் ஆணியடித்தார் போல அவனையே பார்த்திருந்தாள்.
“நீ தான் என்கிட்ட பேச மாட்ட… எதையோ மனசில் வச்சுகிட்டு உன்னை நீயே குழப்பிக்குற… எனக்கு அந்த குழப்பம்லாம் இல்லைம்மா… உன்னை கல்யாணம் பண்ணிகறதுல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்…. நீ என்னை அவாய்டு பண்ணாலும் உன்னை எப்போதுமே லவ்ஸ் விட்டுகிட்டு தான் இருப்பேன்… கண்ணடிக்க அவளுக்குத்தான் இதயம் படபடக்கும் சத்தம் காதுக்கு கேட்டது…
அவள் நிலையை உணர்ந்தவன் சரி சரி உனக்கு ஹார்ட் பீட் ஏறுதுனு எனக்கு புரியுது… உன்னை பாக்கனும்னு தான் வந்தேன் பார்த்துட்டேன்… ரெஸ்ட் எடு டேக் கேர் .. என்றவன் அவள் காது மடலில் உசியபடி ஐ லவ் யூ ஏஞ்சல் ” எனக் கூலாக கூறி பறக்கும் ஒரு இதழ் முத்தத்தை அவளை நோக்கி வீசிவிட்டு வெளியேறினான்.
அவளுக்குத்தான் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது.. வந்தது முதல் அவன் தான் பேசினான்… ஆனால் அவளுக்கு வியர்த்து, தாகமெடுத்தது. எழ முடியாது படுத்திருந்தவள் மனம் அவன் இதழ் முத்தத்தில் வேகமெடுத்து ஓடும் ரயிலை போல தடதடத்துக் ஓடிக்கொண்டிருந்தது.
‘இவர் என்ன நான் மனசுல நினைக்குறது எல்லாம் பொசுக்கு.. பொசுக்குன்னு… சொல்றாரு!! காதலை சொல்ற வரையும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு நல்லா தானே இருந்தாரு… காதலை சொன்ன பிறகு அவரோட பார்வையும் பேச்சும் டீ ஏஜ் பசங்களை போலவே இருக்கே… கடவுளே இது நல்லதுக்கா… கெட்டதுக்கா… எப்படி இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து தப்புவது” சிந்தித்தபடியே அவன் சென்ற திசையையே பார்த்து கொண்டிருந்தாள் பிருந்தா.
நேரம் ஆக ஆக தன் அக்கா இருக்கும் அறைக்கு வெளியே அங்கும் இங்கும் நடந்தபடி கைகளை பிசைந்து கொண்டிருந்த விஷ்ணுவின் தோளை ஒரு கரம் பற்ற யார் என திரும்பி பார்த்தவன் அங்கு கிரியை காணவும் ” ஹாய் சார் ” என முழுவதும் தெளியாத முகத்தோடு அரை குறை சிரிப்போடு கூறினான்.
என்னடா பண்றிங்க இங்க என்று கிரியின் கேள்வியில் நடந்ததை விளக்கமாக கூறியிருந்தான் விஷ்ணு.
விஷ்ணுவை யோசனையாக பார்த்த கிரி ” ஆமாம் உங்க அக்கா ரத்தம் தானே கொடுத்துட்டு இருக்காங்க, நீ என்னமோ அவங்கள பிரசவத்துக்கு அட்மிட் பண்ணி இருக்குற ரேஞ்சுக்கு டென்ஷனா குறுக்க மறுக்க நடந்துட்டு இருக்க பழைய படம் நிறைய பார்ப்பியா ” கிரி வழக்கமான தன் காமெடியில் அவனை வாரவும்
அறையிலிருந்து வெளியே வந்த கிருஷ்ணா ” என்னடா… என் மச்சானை வம்பு பண்ணுறியா ? ” கிரியிடம் மிரட்டலாக
“வந்துட்டார் டா மச்சானுக்கு சப்போர்ட் பண்ணுற வள்ளல்…” என கலாய்த்த படியே கிரி நடந்ததை கூறினான்
உள்ளே என்ன நடந்ததோ என்ற தவிப்புடன் இருந்த விஷ்ணு “ஹலோ மாம்ஸ் அவரை விடுங்க அக்கா என்ன சொன்னா ?… உங்கள பாத்து கத்தினாளா??… என்ன ரியாக்ஷன் கொடுத்தா??? ” என பரபரப்போடு கேட்டதும்,.
விஷ்ணுவின் பேச்சில் சட்டென திரும்பிய கிரி “ஏதே என்னை நீயும் மதிக்க மாட்டியா ? ஊகூம் எல்லாம் உன் மச்சான் கொடுக்குற இடம் ” என புலம்ப அவனை கண்டுக்கெள்ளாது
கிருஷ்ணா நடந்ததை விஷ்ணுவிடம் கூறிட அவனது கரம் பற்றி குலுக்கி அவனை அணைத்து கொண்டவன்
“சூப்பர் மாம்ஸ்… இப்படிதான் அவங்களுக்கு அடிக்கடி ஷாக் டீரிட்மெண்ட் கொடுக்கனும் அப்போதான் அவங்களும் மாறுவாங்க… சூப்பர் அடி தூள் மாம்ஸ்… நீங்க செம்ம ஸ்மார்ட் ஐ லவ் யூ ஹேண்ட்சம் ” சந்தோஷத்தில் குதுகலித்த விஷ்ணுவை விசித்திரமாக பார்த்த கிரி
” டேய் டேய் இங்கே என்ன டா நடக்குது… இவன் என்ன உனக்கு ஐ லவ் யூ சொல்றான்.. ஹேண்ட்சம்ங்குறான்…. நீ அக்காவை தானே லவ் பண்ண ?… இவன் தங்கச்சியா இருந்தா கூட சரி ஒரு அழகான மச்சினி கிடைச்சிருப்பா ஆனா இவனை வச்சு நீ …. ” என விஷ்ணுவை ஏற இறங்க பார்த்தவன் ” என்னமோ பண்ணு…. மச்சானோ , மச்சினியோ அக்கா தம்பி ரெண்டு பேரையும் கரெக்ட் பண்ணிட்ட” என்றான் கிரி கேலியாக
கிரியின் கேலிப்பேச்சில் முதலில் விழித்த விஷ்ணு பின் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட கிரியின் முதுகில் ஒன்றை வைத்த கிருஷ்ணா “டேய் நீயெல்லாம் திருந்தவே மாட்டியா…? டாக்டருக்கு படிச்சி இன்னும் மூளை வளராமலேயே இருக்குடா…!! முதல்ல வீட்டுக்கு கிளம்பு இல்ல யாத்ராவுக்கு நானே போன் பண்ணி இங்க நீ வெட்டியா நின்னு ஒரு லேடி டாக்டர் கூட கடலை போடுறன்னு போட்டுக் கொடுத்துடுவேன்” மிரட்டல் விட்டான்
“அய்யோ தெய்வமே இதோ கிளம்பிட்டே இருக்கேன்… இனி மாமனாச்சி மச்சானாச்சி எக்கேடோ கெட்டு ஒழிங்க கட்டி புடிங்க கன்னத்துல முத்தம் கூட கொடுங்க யார் கேக்க போறா!!” அவர்களை கலாய்த்தபடியே கிருஷ்ணாவின் அடியிலிருந்து தப்பிய கிரி அங்கிருந்து ஓட்டமும் நடையுமாய் வெளியேறினான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.