காலை பொழுதை தாண்டி மதிய வேளை நெருங்கும் வேளையில் கவி, வேதா மற்றும் வடிவு மூவரும் ஆதியை பார்க்க அவனது வீட்டுக்கு வந்திருந்தனர்.இன்று கனகசபையின் நண்பரும் அவரது குடும்பமும் வருகிறார்கள்.மாப்பிள்ளை பார்க்கும் படலம் போலும்.
எதோ ஒரு விழாவில் நண்பனை சந்தித்து கனகசபை பேச.அவர் நண்பரது பெண்ணும் ஆதியின் துறை என்பதால் கனகசபை நண்பர் தனது விருப்பத்தை நண்பனிடம் சொல்ல.அவரும் பேசி பார்க்கட்டும் என்று நண்பனிடம் ஒப்புதல் குடுக்க, இதோ இன்று குடும்பமாக ஆதியை பார்க்க வருகிறார்கள்.
கவி தனது மகனுடன் முன்னே வந்திருக்க.விருந்தினர் வரும் போது வீட்டுக்கு மருமகனாக வினோத் அங்கு இருப்பது போல் மருமகனிடம் பேசி விட்டார் கனகசபை.கவி வேதாவிடம் சொல்லி அவளையும் அழைத்து வந்திருக்க.அவள் முரண்டி நின்ற வடிவையும் இழுத்துக் கொண்டு வந்திருந்தாள்.
மூவரும் ஆதியின் வீட்டுக்குள் நுழைந்தனர்,” என்னக்கா வீடு திறந்திருக்கு”என்றவாறு வேதா உள்ளே நுழைந்திருக்க.அங்கே அவள் கண்ட காட்சியில் ஒரு நொடி அதிர்ந்து மறு நொடி அலறி விட்டாள்.
வேதா அலற, வேதாவை கண்டு என்னது? ஏதென்று? தெரியாமல், புரியாமல் வடிவு அலற.இவர்கள் இருவரையும் கண்டு சின்ன வாண்டும் பயத்தில் கத்தி வைத்தது வீடே ஒரு கூச்சல்.சோபாவில் தலையைக் கீழே விட்டு கால்லை மேல வைத்துப் படித்திருந்த முரளி.இவர்களது அலறல் கேட்டு நச்சென்று தரையில் தலை மோதி விழுந்து வைத்தான்.அதற்குள் இவர்கள் அலறல் கேட்டு குளித்துக் கொண்டிருந்த ஆதியும் துண்டை கட்டி கொண்டு ஓடி வர.
அக்கம் பக்கம் பிளாட்டில் உள்ள அனைத்தும் ஆதியின் வீட்டின் முன் கூடி விட்டது.ஆதியை பற்றி நன்கு தெரியும். மூன்று வருடங்களுக்கு மேல் அங்கு இருக்கிறான்.அவனது குடும்பமும் நன்கு பரிச்சியம் இருந்தாலும் பெண்கள் அலறிய சத்தத்தில் அவர்களும் அடித்துப் பிடித்து வந்திருந்தனர்.
பக்கத்து பிளாட்டில் செயலாளர் போலும், “என்ன? என்ன ஆச்சு ? அம்மாடி கவி யாரு இந்தப் பொண்ணுங்க?” அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டு வைக்க.அதற்குள் தன்னைச் சமாளித்துக் கொண்ட கவி. பெண்கள் இருவரையும் முறைத்து விட்டு, “கொஞ்சம் விளையாட்டு பண்ணி பயம் காட்டி வச்சோம் அதான். எல்லாருக்கும் சாரி உங்களை ரொம்ப எரிச்சல் படுத்திட்டோம் மன்னிக்கணும் சார்”
“விளையாட்டா?” ஒரு மாதிரி தலையை உலுக்கி கொண்டவர்.
“இனி இது போல விளையாட்டுப் பண்ணா கொஞ்சம் கதவை சாத்திட்டு பண்ணுங்க கவி” என்றவர் சிறு புன்னகையுடன் விடைபெற.சிலர் சிறு முறைப்பாக அவர்களைப் பார்த்து விட்டு சென்றனர்.
ஆதி அவர்களை கண்டு “சாரி” மன்னிப்பு வேண்டி கொண்டே அவர்கள் சென்றவுடன் கதவை சாத்திவிட்டு மூன்று பெண்களையும் முறைத்தவன்.
“எதுக்குடி கத்தி வைக்கிறீங்க” பொத்தாம் பொதுவில் கேட்டவன்,அவர்களைத் தாண்டி மாட்டிருந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டவனைப் பார்த்து.
“கதவு திறந்து வச்சுட்டு இவர் தலைகீழே படித்திருந்தா நாங்க என்னானு எண்ணி வைக்கிறது” இன்னும் படப்படப்பு அடங்காமல் பேசினாள் வேதா.அதுவரை முரளியுமே கொஞ்சம் அதிர்ந்திருந்து தான் இருந்தான்.
“எரும! எரும!” முரளி நன்கு பழக்கம் என்பதால் உரிமையாகக் கடிந்து கொண்டாள் கவி. ஆதியின் மூலம் அவனது நிலையும் தற்போது அவன் தன்னுடன் தான் இருக்கிறான் என்பதையும் கவியிடம் முன்பே சொல்லி விட்டான் ஆதி.அதனால் அவனது இருப்பை எண்ணியே வந்திருந்தால் கவி
“அக்கா!”
“போடா என்றவள் இன்னும் அழுது கொண்டிருந்த தனது மகனை அனைத்துக் கொண்டு.ஒன்னும் இல்லடி செல்லம் லூசு மாமனுங்க” என்றவள் ஆதியிடம் சென்று அவன் கையில் மகனை திணிக்க.அவனும் பிள்ளையை வாங்கிக் கொண்டு சமாதானம் செய்ய தொடங்கி விட்டான்.
ஆதி சென்றதும் சோபாவில் அமர்ந்தவள் தனது அருகில் நிற்கும் முரளியின் கையைப் பிடித்துத் தன்னுடன் அமர்த்திக் கொண்டு, “சாப்பிட்டியா நீ?”
“இல்லக்கா இப்போ தான் முழிச்சுப் பிரெஷ் பண்ணுனேன் கொஞ்சம் சோம்பேறியா இருந்துச்சு அதான் படுத்திருந்தேன்”
“நல்ல படுத்திருந்தீங்க போங்க” கேலி போல் வேதா சொல்லிவிட்டு கவிக்கு அந்தப் பக்க அமர்ந்து கொள்ள. வடிவு திருத் திருவென விழித்து நின்றாள். ஆதியை எண்ணி பயமிருந்தாலும் கவி, வேதா துணையிருக்கக் கொஞ்சம் தெம்பாக இருந்தாள்.
“முரளி அவங்கெல்லாம் நைட் டின்னர் சாப்பிடுற மாதிரி வர்ரதா அப்பா சொன்னார். நான் என்ன சாமான் இருக்குன்னு இல்லனு பார்த்து லிஸ்ட் தரேன். நீயும், ஆதியும் கொஞ்சம் வாங்கிட்டு வாங்கடா” என்றதும் சிறு புன்னகையுடன், சரிக்கா! என்றான் முரளி.
அதற்குள் சிறியவனைச் சமாதானம் செய்திருந்த ஆதி அவனைக் கீழே இறக்கி விட்டு இவர்களிடம் வர, “என்ன பிளான் டா?”
“ஐடியா இல்ல கவி வரேன்னு சொல்லிட்டாங்க அப்பா பேசி பார்க்க சொன்னார் பார்ப்போம்”
“ஹ்ம்ம்! நான் சண்முகம் அங்கிள் வீட்டுல வச்சு ஒருதரம் அந்தப் பொண்ணைப் பார்த்திருக்கேன் நல்லா இருப்பா உன் அளவுக்கு உயரம்” என்றதும் ஆதியும்,
“சேம்பர்ல வச்சு நானும் பார்த்திருக்கேன் அவளே வந்து பேசியிருக்கா”
“ஓ! அப்போ ஓகேவா” சிறு ஆர்வம் மின்ன கேட்ட கவியைச் சிறு புன்னகையுடன் பார்த்தவன்.
“வரட்டும்டி பார்த்துட்டு சொல்றேன்” கொஞ்சம் உல்லாசமாக இருந்தால் ஆதி, கவியைச் செல்லமாக டி சொல்லி அழைப்பான்.அக்கா என்றாலும் அவனுக்கு முதல் பெண் தோழி கவி தான்.அவனது தாயிடம் செல்லம் கொஞ்சினாலும் கவியிடம் தான் சலுகை கேட்பான் ஆதி.
தமக்கையுடன் பேசி கொண்டே அப்போது தான் வடிவை பார்ப்பது போல் பார்த்தவன், “ஏய்! இங்க என்ன பண்ணுற நீ?” என்றதும் அவன் போட்ட ஏய்யில் அதிர்ந்தவன் அடுத்து அவன் கேட்ட கேள்வியில் மீண்டும் கண்ணில் நீர் வர நின்றாள்.
“ஆதி! சிறு கண்டிப்பாகக் கவி அழைத்து என்ன இது பேச்சு? இப்படி தான் வீடு தேடி வந்தவங்க கிட்ட பேசுவியா நீ?.அதுவும் நாங்க மூணு பேர் இருக்கும் போது.அவ சின்னப் பொண்ணு ஆதி”
“சின்ன செய்…” என்ன சொல்லி இப்போனோ மீண்டும் கொஞ்சம் அழுத்தமாக அழைத்தாள் கவி.
“ஆதி!.”
“வேதாக்கா நான் போறேன் என்னைக் கொண்டு போயி விடுங்கக்கா” என்றவள் ஓவென்று அழுக.
“அய்யயோ என்னது இது” சலிப்பாக வேதா அவளை நெருங்கி அனைத்து கொண்டு ஆதியை முறைத்து வைக்க. அவன் எந்த உணர்வும் இல்லாமல் அவர்களைப் பார்த்து வைத்தான்.
முரளி, “ஏன் ஆதி?”
“ப்ச் நீ முதல போயி குளிச்சிட்டு வாடா கிளம்பலாம் என்றவன் கவியிடம் திரும்பி நீ லிஸ்ட் குடு வாங்கிட்டு வரேன் மதியத்துக்குச் சாம்பார் சாதம் வெங்காய வடகம் பண்ணிடு.
அப்புறம் ராத்திரிக்கு மெனு கொஞ்சம் ஈஸியா இருக்கிற மாதிரி பார்த்துக்கோ. வேலையை இழுத்து வைக்காத. உன்னால முடியுமா? இல்லனா கடையில ஆர்டர் பண்ணிடலாமா?” தமக்கையின் நலன் கருதி கேட்க.ஆதியின் இந்த அக்கறை தான் அவனது குணத்தைத் தூக்கி காட்டும்.
தாய் முதல் தமக்கை தோழி வரை அத்தனை அக்கறையாகப் பார்த்துக் கொள்வான்.கோபம் கொள்ளும் போதும் வார்த்தைகள் வீசும் போது மட்டும் நிதானம் இருக்காது.அது சரி அனைத்திலும் சரியாக இருக்க முடியுமா என்ன?,ஆனாலும் தாயை பெருமை கொள்ள வைக்கும் நல்ல ஆண் மகன் இந்த ஆதி கேசவன்.
“இல்லடா அதுக்குத் தான் வேதா, வடிவு வந்திருக்காங்க பார்த்துக்கலாம் நீ வாங்கிட்டு வந்துரு என்றவள் அடுத்தச் சில நொடிகளில் வாங்க வேண்டிய சிட்டையை குடுக்க அதற்குள் இரு ஆண்களும் கிளம்பி வந்து விட்டார்கள்.
அதன் பின் பெண்களுக்கு நேரம் சரியாக இருந்தது.என்னதான் வீடு சுத்தமாக இருந்தாலும் சில இடங்களில் தூசி இருக்க அதனைச் சரி செய்து. ஆறு பேர் உண்ணும் அளவிற்கு உணவை மேஜையை தாயார் செய்து அலங்கரித்து வைத்தால் வடிவு.
மதிய வேளை உணவை செய்து பரிமாறி கொஞ்சமே கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு இரவு வேளைக்கு தாயார் செய்யத் தொடங்கி விட்டனர் பெண்கள்.அனைத்தும் முடிய வேதா தான் கொண்டு வந்த உடுப்பை உடுத்தி கொண்டு வர,கவியும் தனது மகனுடன் கிளப்பி வந்தாள்.
வடிவு அதே உடையுடன் தான் இருந்தாள்.வேதா அவளுக்கு ஒரு உடையை எடுத்துக் கொண்டு வர.அதனை மறுத்துவிட்டாள் கவி கூட, “ஏய் ஆதியை பத்தி தெரியாத உனக்கு அவன் அப்படிதான் விடு வடிவு ஆளுங்க வர நேரம் இப்படியே நிற்பியா? இந்த சுடியை போடு”
“இல்லக்கா எனக்கு இதுவே போதும்”
“ரொம்பாத் தாண்டி ரோசம்”நொடித்துக் கொண்டாள் வேதா. இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே கவியின் கணவனும் வர அடுத்து சில மணி துளிகளில் பெண் வீட்டார் வந்தனர்.ஆதி பர்பில் நிற முழுப் பார்மலில் இருந்தான் அவனது உயரத்திற்கும் அவனது நிறத்திற்கும் அந்த நிற சட்டை கொஞ்சம் அவனைத் தூக்கி காட்ட சொக்கி தான் போனாள் அந்தப் பெண்.
“ஹாய்! ஆதி
“ஹாய்! வர்ஷி வாங்க” மரியாதையாக அழைக்க அந்தப் பெண்ணின் தந்தை அவனைத் தோளோடு அணைத்துக் கொண்டு.
“உங்க அப்பா மாதிரி வளர்த்தி நிறம் உங்க அம்மா மாதிரி போலக் குட் பாய்” என்று தோள்களை அழுத்தி விட பளிச்செனச் சிரித்தான் ஆதி.
“கவி எப்படிமா இருக்க?”
“நல்லா இருக்கேன் அங்கிள்” என்றதும் கவியின் கணவனது கையைப் பற்றிக் குலுக்க வினோத்தும் அவரை வரவேற்று அமர வைத்தான்.பொதுவாக அனைவரும் பேசி கொண்டிருக்க அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் வடிவு. கவனமாக ஆதியின் பக்கம் செல்லாமல் மீண்டும் காபி கொண்டு வந்து குடுக்க.அனைவரும் வெகு தீவீரமாகத் தங்களது தொழில்,வீடு,குடும்பம் என்று பேசி கொண்டிருந்தனர்.
“அம்மாடி ஆதிக்கு” பெண்ணின் தாய் வடிவை நிறுத்தி கேட்க கொஞ்சம் தடுமாறி விட்டாள் வடிவு.அவளது பயத்தை உணர்ந்து வேதா உதவிக்கு வந்தாள்.
“இதோ நான் கொண்டு வரேன்” என்றதும் அந்தப் பெண் இவங்கெல்லாம் யாரு உங்க சொந்தமா என்ன?”ஆதியிடம் பேசி வேண்டி கேட்க.
“ஆமா அது போல தான் முரளி ஆதியோட நெருங்கிய நண்பன்.வேதா ஜெயா அங்கிள் பொண்ணு.அப்பா நெருங்கிய நண்பர் பொண்ணு. இவ வடிவு எங்க வீடு பொண்ணு” என்றதோடு முடித்துக் கொண்டாள் கவி.ஆதியிடம் கேட்டதிற்கு கவி பதில் சொல்ல புருவத்தை உயர்த்திக் கொண்டாள் அந்தப் பெண்.
அதன் பின் மீண்டும் பேச்சு தொடர்ந்தது.ஆதியும் அந்த பெண்ணும் சில மணி நேரங்கள் தனியாகப் பேசி கொண்டு இருந்து விட்டு வந்தனர்.சரியாக இரவு உணவை அழகாக அடிக்கி வைத்து விட்டு வடிவு அறைக்குள் நுழைந்து கொள்ள.வேதாவும் கவியும் பரிமாறினர். ஆதி அந்தப் பெண்ணோடு சிரித்துப் பேசி உண்ண.வினோத் அந்தப் பெண்ணின் அப்பாவிடம் பேசி கொண்டிருந்தான்.
அனைத்தும் முடிந்து விடைபெறும் பொருட்டு எழுந்து கொண்ட ஆதியின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டவர் “எங்களுக்கு ஆதியை பிடிச்சிருக்கு. இனி உங்க முடிவு தான். பார்க்கலாம்?” என்றவர் ஆதியின் தோள் தட்டி விட்டு செல்ல.அழகாகப் புன்னகைத்துக் கொண்டான் ஆதி.
அவனது புன்னகையில் மீண்டும் மீண்டும் மயக்கம் கொண்ட பெண் தந்தையைத் தொடர்ந்து ஆதியின் கையைப் பற்றிக் குலுக்கியவள், “மீட் சூன் ஆதி” சிறு கண் சிமிட்டலோடு சொல்ல அதற்கும் புன்னகைத்து வைத்தான்.ஒரு வழியாக அனைவருக்கும் மரியாதையாக விடை குடுத்த அனுப்பிய ஆதி வீட்டுக்குள் நுழைய. அவனைப் பிடித்துக் கொண்டான் வினோத்,
“டேய் ஆதி விழுந்துட்டா போல என்ன ஒரு சிரிப்பு” அவர் கேலியில் சிறு புன்னகையுடன்,
“அட ஏன் மாமா நீங்க வேற?”
“கவி உன் தம்பி வெட்க படுறாண்டி” மேலும் கிண்டல் செய்ய முரளிக்கு புன்னகை. அதன் பின் பெரும் கேலியில் வினோத் இறங்க அவனுடன் வேதாவும் முரளியும் கவியும் இனைந்து கொண்டனர். வடிவு தனித்து நின்று பார்த்து கொண்டிருந்தாள்.வெகு நாட்கள் சென்று கொஞ்சம் ஓய்வான நேரம் என்பதால் வெகு நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு மணியைப் பார்க்க அது நள்ளிரவு பன்னிரெண்டு என்று காட்டி நின்றது.
அப்போது தான் எதார்த்தமாக வேதாவும் மணியைப் பார்த்தாள் போலும், “ஐயோ! அக்கா மணி பாருங்க” என்றதும் அப்போது தான் கவியும் வினோத்தும் கூடப் பார்த்தனர்.
பின்பு வேதாவிடம் திரும்பிய கவி நீயும் வடிவும் இங்கையே இருங்க
“சரிக்கா!”
“சரி ஆதி ரொம்ப நேரமாச்சு நாங்க அம்மா அப்பா ரூம்ல படுத்துக்குறோம்”
“ஹ்ம்ம்! வா என்றவன் முரளி?”
“நான் சோபாடா” என்றவனைத் திரும்பி பார்த்த கவி.
“வௌவால் மாதிரி தலைகீழே தொங்கமா ஒழுங்கா படுடா” என்றுவிட்டு செல்ல சிரித்துக் கொண்டான் முரளி.வேதாவுக்கும் வடிவுக்கும் ஒரு அறையைக் காட்டியவன்.மாடிக்கு சென்று காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டு வந்தவன்.தனது அறைக்குள் புகுந்து கொள்ள. அவனைப் பின்னிருந்து இறுக்கமாகக் கட்டி கொண்ட பெண் “ஆதி மாமா!” என்று அழுக உதடு மடித்து புன்னகையை ஒழித்து நின்றான் ஆதி.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.