எ..என்னை ஞாபகம் இல்லையா..?நான் உன்னோட நிலவன்…
நி.நிலவனா..?
டேய் முதல்ல நீ இங்கிருந்து கிளம்பு..சும்மா பைத்தியக்காரன் மாதிரி உலறாத என்று அவனது கையை பிடித்து இழுத்தார் பிரகாஷ்..
சார் என்னை விடுங்க சார்.. இவளுக்கு இப்படி நடக்க நீங்க தான் காரணம்..நீங்க ஒரு நல்ல அப்பாவா சொன்ன சொல்லை காப்பாத்தி இருந்தா இவளுக்கு இப்படி ஒரு நிலை வந்துருக்காது.. எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் என்று அவர் மீது பாய்ந்தான்..
டேய் யார்கிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்க.முதல்ல இங்கிருந்து போ என்று அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளினான் மித்ரன்…
மித்ரா வேணாம்..எங்க லைஃப்ல குறுக்க வராதே..? எச்சரித்தான் நிலவன்…
டேய் நீதாண்டா தேவை இல்லாம எங்க லைஃப்ல குறுக்க வர..?அவ என்னை தான் காதலிச்சா..
ஹாஹாஹா என்று சிரித்த நிலவன் அவ உன்னை காதலிச்சாலா..?நல்ல ஜோக் பண்ற..என்ன நீயும் இந்த பெரிய மனுஷனோட சேர்ந்து எனக்கு துரோகம் பண்றியா..? பாவமாய் கேட்டான்..
போதும் நிறுத்துங்க.. டாக்டர் கத்தினார்..
அவுங்களே இப்போ தான் குணமாகி வந்திருக்காங்க..இந்த நேரத்தில் நீங்க இப்படி சண்டை போட்டா அவுங்க பழைய நிலைமைக்கு போக கூட வாய்ப்பிருக்கு என்று எச்சரித்தார்…
அவர் கூறியதை கேட்டு மூவரும் அமைதியாகினர்..
மிஸ்டர் பிரகாஷ் உங்க பொண்ணை இனிமே கவனமா பார்த்துக்கோங்க.
அவுங்களை ரொம்ப டென்ஷன் ஆக்காதீங்க என்று இன்னும் சிலபல அட்வைஸ் களை கொடுத்துவிட்டு கிளம்பினார்…
விதுனா நடப்பது ஒன்றும் புரியாமல் குழம்பி போய் அமர்ந்திருக்க,
விது என்று அழைத்து கொண்டே நிலவன் அவளை நெருங்க போக,சட்டென அவனது கையை பிடித்து தடுத்த பிரகாஷ்,முதல்ல இங்கிருந்து கிளம்பு என்றார்..
அவன் அவர் கூறியதை காதில் வாங்காமல் அவளை நெருங்க போக,மித்ரா இவனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளு என்று ஆணையிட,அடுத்த நிமிடம் அவர் கூறியதை செய்து முடித்தான் மித்ரன்..
பிரகாஷ் விதுனாவை நெருங்கி அவளது பக்கத்தில் அமர்ந்தவர்,அப்பாவை மன்னிச்சிடுடா..அப்பாவால தான் எல்லாம் என்று கூறி அவளது கையை எடுத்து தனது முகத்தில் அறைந்து கொண்டு அழுதார்..
ப்பா என்ன பண்றீங்க என்று கையை இழுத்து கொண்டவள்,அழாதீங்க ப்ளீஸ்..
மித்ரா நீயாவது சொல்லு…
அங்கிள் ப்ளீஸ் பீல் பண்ணாதீங்க..அதான் விதுனா நமக்கு கிடச்சிட்டாலே என்று கூறி சமாதானம் செய்தான்…
அவரும் தனது அழுகையை நிறுத்த,ப்பா இப்போ இங்க வந்தானே அவன் யாரு..? இதுக்கு முன்னாடி அவனை எனக்கு தெரியுமா…?
அவள் கேட்ட கேள்வியில் சிறிது தடுமாறியவர்,அ. அவன் ஒரு பைத்தியம் டா..அவன் ஆளையும் டிரைஸையும் பாத்தியா..?அவனை போய் நீ காதலிச்சிருப்பியா..?
ஆனா..அவனை உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கே..?
அது..அது வந்து அவன் கொஞ்ச வருஷம் முன்னாடி உன் பின்னால் சுத்துனான்..நீ அவனை கண்டுக்கவே இல்ல.. ஒருநாள் நீ அவனை அடிச்சிட்ட..உன்னை பழிவாங்க இப்போ வந்திருக்கான்…
ஆனா இது எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லையே ப்பா..?
விது உனக்கு என்னவெல்லாம் ஞாபகம் இருக்கு என்று மித்ரன் கேட்க…,
அது அது அன்னைக்கு ஸ்கூல்ல அந்த ரேகாவை அடிச்சிட்டேனு அப்பா என்னை மன்னிப்பு கேட்க சொல்லி,நான் முடியாதுனு மறுத்துட்டு காரை எடுத்து வேகமாய் ஓட்டிட்டி வரும் போது ஆக்ஸிடென்ட் ஆனது வரைக்கும் தான் ஞாபகம் இருக்கு…
ஓ..தாங் காட்.. உனக்கு அப்போ எங்களை எல்லாம் ஞாபகம் இருக்கு தானே..?
ம்ம் தலையாட்டினாள்…
அங்கிள் நீங்க இனிமே எதுக்கும் கவலை படாதீங்க..நடந்த எல்லாத்தையும் நான் அவளுக்கு புரிய வைக்கிறேன் என்று கூற,பிரகாஷ் நிமிர்ந்து அவனை பார்த்தார்..அவனோ கண்களால்,நான் பார்த்து கொள்கிறேன் என்று சைகை செய்தான்…
பிரகாஷ் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு,சரி மித்ரா நீ விதுனா கூட இரு..எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு..நான் போய்ட்டு வந்துடுறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்…
மித்ரன் விதுனாவை நெருங்கி அமர்ந்து அவளது கையை எடுத்து தனது கைக்குள் புகுத்தி கொண்டவன்,ரொம்ப சந்தோஷமா இருக்கு விது உன்னை இப்படி பார்க்க என்றவன் அவளை அணைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டான்…
விதுனாவால் நடப்பது எதையும் நம்ப முடியவில்லை..ஆனால் என்னோடு பேசு பேசு என்று நான் துரத்திய ஒருவன் இப்போது அவளின் கண்முண்ணே அமர்ந்திருப்பதை நம்பாமலும் இருக்க முடியவில்லை…
மி.த்ரா நான் ஒன்னு கேட்கலாமா…?
ஒன்னு என்ன நீ பத்து கூட கேளு..உனக்கு பதில் சொல்ல வேண்டியது இந்த அடியேனின் கடமை என்று கூறி சிரிக்க, அவனின் இந்த புதிய பரிமாணம் அவளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது…
நீ என்ன பார்த்தாலே முகத்தை திருப்பிட்டு போவ..அப்பறம் எப்போ என் மீது உனக்கு லவ் வந்தது..
அது..அது வந்து ஒரு பெரிய கதை..
பரவாயில்லை சொல்லு…
அதுவா அன்னைக்கு நீ உங்க அப்பாகிட்ட கோப பட்டு போனதுக்கு அப்பறம் நிகிதா என்ன வெளுத்து வாங்கிட்டா..
ஆங் முட்டகண்ணி இப்போ எங்க இருக்கா..?தோழியின் நினைவில் சிரித்து கொண்டே கேட்டாள்..
ஓ..அவளா அவ கல்யாணம் ஆகி புருஷன் கூட அமெரிக்கால இருக்கா..
கல்யாணம் ஆச்சா..?
ம்ம் ஒரு பேபி கூட இருக்கு..
கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.உண்மையான மகிழ்ச்சியுடன் கூறினாள்..
இப்போ நான் நம்மளை பத்தி சொல்லவா,வேணாமா..?
ம்ம் சொல்லு..
நிகிதா அன்னைக்கு எப்படி பேசுனா தெரியுமா..?
என்ன பேசுனா..
டேய் சோடாபுட்டி உன் மனசுல என்ன பெரிய ஹீரோனு நினைப்பா..?அவ உன்மேல் எவ்வளவு அன்பு வச்சிருந்தா இப்படியெல்லாம் நடந்துப்பா..அதுகூட புரியாம அவள் பார்த்தா எரிஞ்சு எரிஞ்சு விழுற..நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா..?உனக்கு ஒன்னு தெரியுமா ..! அவளுக்கு ஆம்பளைங்கள கண்டாலே புடிக்காது..ஆனா உன்ன தவிர..அவ உன்கிட்ட அதிகபட்சமாக என்ன எதிர்பாக்குறா.மத்தவுங்க கூட நீ பேசுற மாதிரி அவளோடையும் சிரிச்சு பேசனும் இதானே..சின்ன வயசுலேருந்து பாசம்னா என்னனென்னே தெரியாம வளர்ந்த பொண்ணு..அவள போய் இப்படி கஷ்டபடுத்துற.நீ மட்டும் அவ கூட ஒழுங்கா பேசியிருந்தா அவ உன்கூட பேசுற யாரையாவது அடிப்பாளா..?
அவ ஏன் என்கூட பேசுற பொண்ணுங்களை அடிக்கனும்.. அவுங்க என்ன தப்பு பண்ணாங்க..?
தப்பு பண்ணது நீ..
நானா..?
ஆமா,அவளை தவிர மத்த எல்லா பொண்ணுகிட்டையும் சிரிச்சு பேசுறது பார்த்து அவளுக்கு கோபம் வந்து உன்னை அடிக்கிறதுக்கு பதில் அவுங்களை அடிக்கிறா..?
என்ன..?
டேய் உனக்கு விழ வேண்டிய அடியை தான் அந்த பொண்ணுங்க வாங்குறாளுங்க..அத மறந்துடாத.. டேய் அண்ணா இதுக்கு மேலையும் அவள கஷ்டபடுத்தாதடா..
உனக்கும் அவளை பிடிக்கும்னு அவள்ட சொல்லேன் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே நிகிதா வின் போன் ஒலித்தது..
ஒரு நிமிஷம் என்றவள் போனை எடுத்து, அவதான் என்று கூறிக்கொண்டே ஆன் செய்து காதில் வைத்து,சொல்லு விது என்றாள்…
அடுத்த நிமிடம் என்ன ஆக்ஸிடென்ட் ஆ..எந்த ஹாஸ்பிடல் நான் உடனே வரேன் என்றவள்,
விதுக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சாம்..நீ நம்ம சேர்மன் கிட்ட சொல்லிடு என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடினாள்…
அந்த முட்டகண்ணிக்கு எப்போதும் என்மேல் பாசம் தான் என்று கூறி சிரித்தாள் விதுனா..
ஆமா..ஆமா ரொம்ம்ப பாசம்.. அவனும் சிரித்தான்..
அப்பறம் என்னாச்சு..?
நாங்க எல்லாம் ஹாஸ்பிடல் வந்து பார்க்கும் போது உனக்கு ட்ரீட்மெண்ட் முடிஞ்சு மயக்கமா இருந்த..அந்த நிலைமையில் உன்னை பார்க்கும் போது நான் செத்துட்டேன் டி..அன்று நடந்த சம்பவத்தை நினைத்து இன்று வருந்தினான்..
அவன் உரிமையாக “டி” போட்டு அழைத்தது அவளது மனதில் சில்லென்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது…
நிஜமா எனக்கு அப்போ தான் ஒரு விசயம் புரிஞ்சுது..உன்மேல எனக்கு காதல் இருக்குனு..அப்பறம் நீ கண் விழிக்கும் வரைக்கும் உன்கூடவே இருந்தேன்..அப்பறம் நீ கண் முழிச்ச.என்ன அங்க பார்த்து ஷாக் ஆகி இது உண்மையா,பொய்யானு கிள்ளி பார்த்த..
நான் உடனே ரொம்ப ஷாக் ஆகாத..இது நான்தானு சொல்லி உன் அதிர்ச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்..அப்பறம் இரண்டு பேரும் நல்லா பேசிகிட்டோம்.. நீயும் குணமாகி காலேஜ் வர ஆரம்பிச்ச..உன்ன டெய்லி வீட்ல டிராப் பண்ணுவேன்..அப்பறம் நீ,நான்,நிகிதா முன்பு பேரும் சேர்ந்து நல்லா ஊரு சுத்துனோம்.இப்படி நம்ப லைஃப் நல்லா போச்சு..
ஏய் ஒரு நிமிஷம் என்று அவனை தடுத்தவள்,எனக்கு எப்படி பழைய நினைவு இல்லாம போனது..அப்போ அகைன் எனக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சா..?
ஆமா..
எப்படி..?
ஏய் ஒரேநாளில் எல்லாம் தெரிஞ்சிக்கணுமா..?கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சிக்கோ என்றவன் இப்போ நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு..
ம்ம்..
சரி படுத்துக்கோ என்றவன் மெத்தையை சரிசெய்ய..,
மித்ரா…
ம்..
நான் உன் மடில தலை வச்சி படுக்கவா..?
அதுக்கென்ன வா என்றவன்,அவளை அழைத்து தனது மடியில் படுக்க வைத்தவன், அவளது முடியை கோதி விட்டான்..
அவனது மனமோ”நீ தப்பு பண்ற மித்ரா”என்று கூறி எச்சரித்தது..
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.