“அவன் இன்டர்வியூவே இல்லாம சேர்ந்து இருக்கான். அவனுக்கு நாம ரெக்கமெண்ட் பண்ணனுமா? உன் அண்ணா இன்டர்வியூ எடுக்காம உன்ன சேத்துக்க மாட்டாங்க. அப்புறம் எப்படி நீ சேர்ந்த அத பஸ்ட் சொல்லு?” அஞ்சு யோசனையுடன்.
“அது..” என்று ஆரம்பிக்கும் போதே,
“சாப்பிட வராம இங்க என்ன பண்ணுறீங்க?” என்றபடி அர்வி வந்தான்.
“கிளம்பிட்டோம்” என்றனர் பெண்கள் நால்வரும்.
“சரி! வாங்க போலாம். விஷ்வா! நீ வரலயா? உன் அண்ணனுக்காக வெய்ட் பண்ணுறீயா?”.
“இல்லண்ணா. ஹெச்.ஆர் கூப்பிட்டாங்க. ஜாயினிங் ஃபார்மாலிட்டி எல்லாம் முடிச்சுட்டு வந்ததும், சுந்தர் அண்ணா கூப்பிட்டாங்க இப்பதான் விட்டாங்க” சலிப்புடன்.
“அதானே உன் அண்ணாக்காக நீ வெய்ட் பண்ணுறதாவது” என்று கிண்டலுடன் அழைத்துச் சென்றான்.இவர்களுடன் மற்றவர்களும் சென்றனர்.
“அஞ்சு! அவனுக்கு க்ளையண்ட் கால் இருக்குடா. அத முடிச்சுட்டு வந்து சாப்பிடுவான். நீ உன் ஒர்க்க பாருடா. நீ பண்ணலனா அதுக்கும் ஏதாச்சும் சொல்லுவான்” என்று சமாதானம் செய்தான்.
“ம்ம்…”.
“ருத்ரா! நா கொடுத்த ஒர்க்க முடிச்சுட்டியா?”.
“இன்னும் கொஞ்சம் இருக்கு. முடிச்சுட்டு அனுப்புறேன்”.
“சரி! அத முடிச்சுட்டு என் கேபினுக்கு வா. போலாம் அஞ்சு” என்று எழுந்தான்.
அஞ்சு கீழே வந்ததும் விதுரன் அறையை அடிக்கடி பார்த்தபடி வேலையைப் பார்த்தாள். சிறிது நேரத்தில் வெளியே வந்தவன் இவள் இடத்தைப் பார்த்தான். அஞ்சு அவனைப் பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் வேலை பார்ப்பது போல் நடித்தாள். விதுரன் நேராக இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான். அஞ்சு முழித்தபடி இவனைப் பார்த்தாள்.
“சாப்டியா?” என்றான் பக்கத்தில் வந்து.
“சாப்டேண்ணா. இன்னைக்கி நம்ம அம்மா நா வேலைக்குப் போறேன்னு ஒரு முட்டை எக்ஸ்ட்ராவே வச்சாங்க” என்றான் விஷ்வா சிரித்துக் கொண்டே.
“நீதான் நல்ல சாப்டுருப்பான்னு எனக்கு தெரியுமே! நா அஞ்சுவையும் ருத்ராவையும் கேட்டேன். நீ உக்காந்து வேலையப் பாரு. இவங்க கேபின் கிட்ட உனக்கு என்ன வேலை?” முறைப்புடன்.
“நீ இளிக்கிறதுலயே தெரியுது டா எரும! கொஞ்சம் வேலையை பார்க்கலாம் வா” என்று வேலை சம்பந்தமாகப் பேசிவிட்டு அவன் இடத்திற்குச் சென்றான்.
சிறிது நேரத்தில், “அஞ்சு! சார் கூப்பிட்டாங்க, வா” என்று அவள் டீமெட் அழைத்துச் சென்றான்.
“டெஸ்ட் எப்படி இருந்தது?” என்று அனைவரையும் பார்த்துக் கேட்டான்.
“நாட் பேட், குட்” என்றனர்.
“ம்ம்… லாஸ்ட் டெஸ்ட்டுக்கு இந்த டெஸ்ட் எல்லாருமே நல்லா பண்ணிருக்கீங்க கைஸ், குட்!” என்று சிரிப்புடன் கையைத் தட்டினான்.
‘உனக்கு சிரிக்கலாம் தெரியுமா?’ என்று அஞ்சு மனதிலே நினைத்தபடி பார்த்தாள்.
“தேங்க்ஸ் சார்” என்றனர்.
“இந்த டெஸ்ட்ல சால்வ் பண்ண முடியாதபடி ஒரு புரோகிராம் கொடுத்தேன். அத சால்வ் பண்ணுனது ஒரு ஆள்தான்” என்று நிறுத்தினான். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நீங்க யாருமே அந்த புரோகிராம்கு அன்ஸர் பண்ணல. அஞ்சனா மட்டும் தான் பண்ணிருக்காங்க. அஞ்சனா பண்ணுனத உங்க எல்லாருக்கும் மெயில் பண்ணிருக்கேன். அத பாருங்க. புரியலனா கேளுங்க. அப்றம் நெக்ஸ்ட் ஃபைல் அனுப்பிருக்கேன். அத படிங்க. புரியலனா எப்ப வேணும்னாலும் கேக்கலாம். நீங்க போலாம்” என்று வேலையைப் பார்த்தான்.
அஞ்சு சந்தோஷமாக வந்து விதுரன் சொன்னதைச் சொன்னாள். “சூப்பர்டி!” என்று மூன்று பெண்களும் சிரித்தனர். சிறிது நேரத்தில், “ருத்து! எனக்கு இதுல டவுட் இருக்கு. நா போய் சார்கிட்ட கேட்டுட்டு வரேன்” என்று நோட்டுடன் எழப் போனாள்.
“இரு, நா பாக்குறேன். எனக்கு புரியலனா அப்றம் போய் கேளு” என்று அவள் சிஸ்டமைப் பார்த்தாள். சிறிது நேரத்தில் முழித்தபடி அஞ்சுவைப் பார்த்தாள்.
“புரியலதானே லூசு! நமக்கு இது தெரியாதுடி. இரு, நா போய் கேட்டுட்டு வரேன்” என்று எழுந்து சென்று கதவைத் தட்டினாள்.
“சரி! நா போய் எங்க அண்ணா கிட்டயே கேட்டுக்குறேன்” என்று திரும்பினாள்.
“ஏய்! நில்லு நில்லு! சொல்லி தரேன்” அவசரமாக.
“ஒன்னும் வேணா” திரும்பி நின்றபடி.
“அஞ்சு குட்டி! வா! நீ என் டீம்ல? சமாதானம் சமாதானம்!”.
“ம்ம்… இனிமே இப்படி வம்பு பண்ணாம சொல்லிக் கொடுங்க சார். இல்லனா நா அண்ணாகிட்ட போயிடுவேன்” என்று பேரம் பேசினாள்.
“சரி சரி! வந்து உக்காரு தாயே! எதும் பண்ணமாட்டேன். எனக்கு நீ இவ்ளோ பயப்புடுவன்னு தெரிஞ்சுருந்தா போனா போகுதேன்னு விட்டுருப்பேன்” என்றான் மீண்டும் கிண்டலாக. முறைத்தபடி திரும்பிப் போகப் போனவளை வேகமாக வந்து அவள் கையைப் பிடித்து இழுத்தான். இழுத்த வேகத்தில் அவன் மார்பில் முட்டி நின்றபடி அவனைப் பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். போனின் சத்தத்தில் இருவரும் வேகமாகப் பிரிந்தனர்.
“சாரி” என்று போனை எடுத்துப் பார்த்தவன் யோசனையுடன் பேசாமல் சைலண்ட்டில் போட்டுவிட்டு, “வா அஞ்சு! உக்காரு. சொல்லி தரேன்”.
மீண்டும் போன் அடித்தது, “நீங்க பேசுங்க சார். நா அப்பறம் வரேன்”.
“வேணா, நீ வா” என்று மீண்டும் சைலண்டில் போட்டான்.
“ம்ம்… சரி” என்று உட்கார்ந்தாள். அவள் பக்கத்தில் அவனும் அமர்ந்து சிஸ்டமை திருப்பினான்.
“இந்தா, இதுல எது டவுட்னு சொல்லு. நா சொல்லி தரேன்” என்று சிஸ்டமை காட்டினான். மீண்டும் போன் அடித்தது.
“முதல்ல பேசுங்க சார். நா இதுல பாக்குறேன். என்ன அவசரமோ? கால் பண்ணிட்டே இருக்காங்க” என்று சிஸ்டமைப் பார்த்தாள்.
போனை எடுத்து, “ஹலோ! போன் அட்டென்ட் பண்ணலனா பிஸின்னு தெரியும்ல? அப்றம் ஏன் இத்தன டைம் கால் பண்ணுற?”.
“….”
“ம்ம்… சரி! அப்றம் பண்ணுறேன்” என்று வைத்தான். அஞ்சு அவனைப் பார்த்தாள், “எடுத்துட்டியா?”.
“ம்ம்.. இதான்” என்று காட்டினாள். அதில் இருந்து ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்திலே அவன் அனுப்பிய அனைத்தையும் முடித்தான். கதவு தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பினர். அர்வியும் ருத்ராவும் உள்ளே வந்தனர்.
“தெரியல. ஏதோ புலம்பிக்கிட்டே இருக்கான்” என்று சிரித்தாள்.
“இருங்க, ஒரு நிமிஷம்” என்று வேகமாக சிஸ்டமை நிறுத்திவிட்டு பக்கத்தில் வந்து, “வாங்க போலாம்” என்றான் மூவரிடமும்.
நான்குபேரும் சேர்ந்து கீழே இறங்கி வந்தனர். “அஞ்சு! போலாமா?” என்றான் விஷ்வா வேகமாக வந்து.
“மூணுபேர் எப்படி பைக்ல போக முடியும்? எங்க ஹாஸ்டல் பக்கத்தில தான்”.
“அதான் அர்வி அண்ணா எங்க அண்ணா இருக்காங்கள்ல! ருத்ரா கார்ல வருவா, நீ பைக்ல என்கூட வா” என்று கையைப் பிடித்து இழுத்தான்.
“டேய்! விடுடா” என்றனர் ஆண்கள் இருவரும்.
“நீங்களும் வாழமாட்டிங்க என்னையும் விடமாட்டிங்க” என்று எரிச்சலுடன் முணுமுணுத்தான்.
“அர்வி! நீ அவங்க ரெண்டு பேரையும் உன் கார்லயே கூட்டிட்டு வா. விஷ்வா! பைக் இங்கயே இருக்கட்டும். நாளைக்கு எடுத்துக்கலாம் என்கூட வா” என்று இழுத்துச் சென்றான். மற்றவர்கள் சிரிப்புடன் அர்வி காரில் ஏறினர்.
‘நீ யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும் டா. பைக்ல வந்தா நீ அவங்கள ஹாஸ்டல்குள்ள விடாம பேசிக்கிட்டே இருப்ப. இனி உன்ன வாச் பண்ணுற வேலையையும் சேர்த்து பாக்கணும் போல?’ என்று விதுரன் மனதிலே புலம்பினான்.
இப்படியே ஆறு மாதங்கள் சென்றது. விதுரன் அஞ்சு கேக்காமலேயே அவளுக்குப் பல விஷயங்கள் சொல்லிக் கொடுத்தான். விஷ்வாவை அஞ்சுவிடம் நெருங்கவிடாமல் சுந்தரை வைத்து அர்வியும் விதுரனும் தடுத்தனர். அர்வியும் ருத்ராவும் காதலை மட்டும் பகிராமல் கண்களால் கவிதை எழுதினர். அனைவரும் ட்ரைனிங் முடிந்து புராஜக்டில் இணைந்தனர்.
அன்று நேரமாகியும் கிளம்பாமல் அஞ்சு வேலைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். வெளியே வந்த விதுரன் இவள் மட்டும் இருப்பதைப் பார்த்து இவளிடம் வந்தான். “என்ன அஞ்சு! கிளம்பாம இருக்க?”.
“இங்க என்ன நடக்குது?” என்று குரல் கேட்டதும் இருவரும் பதறி நிமிர்ந்து பார்த்தனர்.
குரலுக்குச் சொந்தக்காரர் யார்?? அர்வி ருத்ராவிடம் என்ன சொன்னான்?? விதுரன் போனில் யாரிடம் பேசினான்?? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…..
?இம்சை தொடரும் ?
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.