“அட பதறாதப்பா, நான் தான் சீக்கிரமே வந்துட்டேன்” எனமெதுவாக கூறினாள்.
“அதானபாத்தேன். எங்க நான் தான் லேட்டா வந்திட்டனோனு?.. போன தடவைஅஞ்சு நிமிஷம்லேட்டா வந்ததுக்கு, அஞ்சு நாள் வெச்சுசெஞ்சத, அதுக்குள்ளநான் மறந்திடுவனா என்ன?…. இன்னிக்குஅரை மணி நேரம்னா முப்பதுநிமிஷம். அப்ப முப்பதுநாள்… ஐயோ!” என மயங்கி விழுவது போல் நடிக்க,
“உங்கள”, என அவனை இரண்டுஅடி அடித்தவள், அவனை பார்த்துபுன்னகைக்க,
அவனும் புன்னகைத்துக்கொண்டே எழுந்துஅமர்ந்தவன், தன் கைகளைஅவள் கைகளுடன்கோர்த்துக்கொண்டான்.
அவன் அருகில்அமர்ந்துஅவன் தோளில்சாய்ந்துகொண்டாள்யாழினி….
இருவருக்கும்பழைய நினைவுகள்நெஞ்சினில்..
கல்லூரியில்முதுகலைவணிகவியல், இரண்டாம் ஆண்டுபடித்துக்கொண்டிருந்தான்ப்ரணவ்.
அதே கல்லூரியில்முதல் ஆண்டு இளங்கலைவணிகவியலில்படித்துக்கொண்டிருந்தாள் யாழினி.
கிட்டத்தட்டமுதல் ஆறு மாதங்களில் , இருவரும்ஒரு முறைகூடசந்தித்துகொண்டதில்லை…. அன்று அனைவருக்கும்முதல் வருட செமஸ்டர்தேர்வு முதல் நாள். . . .
தன்னுடையரூம்எது?என தேடி அலைந்து கொண்டிருந்தவள் வேகமாகபடியில்ஏறும்போது, எதிரே வந்தவனைகவனிக்காமல் அவன் மீது மோத,தீடீரென இந்த மோதலை எதிர்பார்க்காதவன் தடுமாறி கீழே விழ, அவனோடு சேர்ந்துஇவளும்கீழே விழுந்து,இருவரும் படிகளில்உருண்டனர்.
சுதாரித்து முதலில் சுவற்றை பிடித்து எழுந்து நின்றவன், அவளுக்கு கை கொடுத்து எழுப்பி விட,அவன் கையை தட்டி விட்டபடி தானே எழுந்தவள்,
“அறிவுகெட்டமுண்டம், கண்ணில்லை உனக்குபாத்து வர மாட்டியா?,.. என் கையேஉடைஞ்சிருச்சு, எப்படி நான்போய்பரிட்சைஎழுதுவேன்” என பேசி கொண்டேபோனவள்,
“ எக்ஜாம்னா,நேரங்காலமேவரணும்னுதெரியாதா.ஆடி அசைஞ்சு பெல் அடிச்ச அப்புறம் வந்தா, இப்படி தான் எதிர்ல யாரு வர்றாங்கனு கூட தெரியாமமோதி நீ விழுகறதும்இல்லாம, அவங்களையும்விழுக்காட்டவேண்டியது,அப்பறம்லப்போதிப்போனு கத்த வேண்டியது,யூஸ்லெஸ்”
“ஹலோ, மைன்ட்யுவர்வேர்ட்ஸ்”
“ அடுத்தவங்களைபாத்து பேசும் போது, நீ உன் வேர்ட்ஸமைன்ட்பண்ணுணியா” என கேட்க,
பதிலின்றிமவுனமாக நின்றாள்.
“இட்ஸ்ஓகேவிடு, ஹால் நம்பர்என்ன?”
“இல்ல நானே பாத்துக்கிறேன்”
“எனக்குஒன்னும்பிரச்சினைஇல்லை.ஆனாடைம்இப்பவேஒன்பது ஐம்பத்தியஞ்சு, இன்னும் அஞ்சு நிமிஷத்துலரூமும்லஇல்லைனா, எக்ஜாம் எழுத முடியாது.ரூம் நம்பர் சொன்னா நான் வழி சொல்லுவேன், நீ சீக்கிரம் ஹாலுக்குபோகலாம்”… என்றவன் மேலும்,
“ஏன் சொல்றேன்னா, இந்த வீணாபோனசன்டையாலஆல்ரெடி பத்து நிமிஷம் வீணாயிடுச்சு. நான் கவனிச்சுவிலகறதுக்குள்ள நீ மோதிட்ட. அதான் ஒரு சின்ன உதவி.வேண்டாம்னாஒன்னும்பிரச்சினை இல்லை, நீ மெதுவா தேடி கண்டுபிடிச்சுகிளாஸ்க்குபோய்,நாளைக்கானஎக்ஜாம்எழுதிக்கோபை” என்றவன் முன்னே நடக்க ஆரம்பிக்க,
“அது, ஜேபிளாக் 143”,
ஒரு நொடி ஜெர்காகிநின்றவன், திரும்பி பார்த்து “எது?” என்க,
“ரூம் நம்பர் 143” என கூற,
“இங்கவா, இதே புளோர்ல,செகன்ட்கிளாஸ்”
“தேங்ஸ்” என்றவள் முன்னே செல்ல,பின்வந்தவனை திரும்பி பார்த்து விட்டு, “இல்லநானே போயிடுவேன்” என கூற,
ஒரு புன்சிரிப்புடன்அவளைகடந்துமுன்னே சென்றுஅதே வகுப்பில்நுழைய,
“ஆத்தி!… என்னநம்மகிளாஸ்க்குபோறாங்க, ஒருவேளைவாத்தியாஇருப்பாங்களோ?.. செத்தேன்இன்னிக்கு.…. ஆனாலும்உனக்குவாய் கொஞ்சம் அதிகம்தான்யாழு”… என தன்னையேநொந்தபடிவகுப்பறையில்நுழைந்தாள்.
உள்ளே அனைவரும்அமர்ந்திருக்க,இவளும்தன் வரிசைஎண் தேடி அமர செல்ல,இருவர்மட்டும்அமரவேண்டியபெஞ்சில் ஏற்கனவேஅமர்ந்திருந்தான் அவன்.
மீண்டும்மீண்டுமா, அதே எண்ணம் இருவருக்கும்.
“அப்ப வாத்திஇல்லியாசந்தோஷம்” என நிம்மதிபெருமூச்சுவிட்டபடிஅமர,பேராசிரியர்உள்ளே வர சரியாகஇருந்தது.
அன்றைய தேர்வை நல்ல முறையில்எழுதியிருந்தாள்யாழினி. இடையிடையேப்ரணவைகாண,அவனோ வெகு சிரத்தையாகஎழுதி கொண்டிருந்தான். அடேங்கப்பாபெரியபடிப்ஸ் தான்போல என நினைத்தபடி, தன் வேலையைதொடர்ந்தாள்.
கிட்டத்தட்டஆறு தேர்வுகளும்அதே ஹாலில்தான்நடந்தது. அன்றையநாளுக்குபிறகுஇருவரும்ஏதும்பேசிக்கொள்ளவில்லை. எப்போதாவது பார்த்தால்ஒரு புன்சிரிப்புஅவ்வளவு தான்.
அந்த வருட இறுதியில்ஆண்டுவிழாவில்இருவரும்மீண்டும்சந்தித்துக்கொள்ள,
“ஹாய்சூப்பர்சீனியர்^2” என்றால்யாழினி.
“அது என்னசூப்பர்சீனியர்^2”
“அதுவாசீனியர், நீங்க பிஜிசெகன்ட்இயர். எங்க சூப்பர்சீனியர்க்கு சூப்பர்சீனியர்நீங்கஅதான் அந்தஸ்கொயர், எப்படிஎன் கண்டுபிடிப்பு” என இல்லாத காலரைதூக்கிவிட்டுக்கொள்ள,
“சகிக்கல”…
“ஏன் சூப்பர்சீனியர்^2? இதுக்கென்னநல்லாதானஇருக்கு”
“அம்மாதாயே நீ என்ன போடா வாடா னு கூடகூப்பிட்டுக்கோ. ஆனா தயவு செஞ்சு இப்படிமட்டும்கூப்டாத”..
“அப்பிடியாடா, சரிடா இனிமே நான்அப்படியே கூப்பிடுறேன்டா, என்னடா” என வார்த்தைக்குவார்த்தைடா போட,
அவளை தீவிரமாக முறைத்தான் “உன்கிட்டபோய் பேசினேன்பாரு என்ன சொல்லனும்” என கூறி விட்டுசெல்ல,
“சீனியர்சீனியர், நில்லுங்கபிளீஸ்இனி சொல்ல மாட்டேன்” என்க,
“என்ன வேணும்உனக்கு”?
“என் பேருயாழினி”
“ஓ ஓகே அதுக்குநான்என்ன செய்யனும்”
“நீங்கஒன்னும்செய்யவேண்டாம். என் பிரன்ட்ஸ் கிட்ட ஒருஹாய் சொல்லிட்டுவரலாம் வாங்க” என அழைக்க,
“ஏய்இரு இரு, யார்நீ?நீயே யாருனு எனக்கு தெரியாது. உன் பேரே இப்ப நீ சொல்லி தான்எனக்குதெரியும். இதுலநான்எதுக்குஉன் ப்ரண்ட்ஸ்கிட்ட வந்துஹாய்சொல்லனும்?”
“சீனியர்பிரெண்ட்ங்கிறது, எவ்ளோ பெரியகெத்துதெரியுமா?, என் பிரெண்ட்ஸ்க்கு எல்லாம்இரண்டுமூணு சீனியர்ஃப்ரெண்ட்ஸ்இருக்காங்க. எனக்குதெரிஞ்சஒரே சீனியர்நீங்கதான்.அதான்சீனியர்உங்க கிட்டஹெல்ப் கேட்கிறேன்”.. என கூறினாள்.
“இப்பிடியெல்லாம்யாரு கதை கட்டி விடுறது. என்னைபத்தி உனக்குஎன்னதெரியும்?”…
“ஏன் தெரியாது?உங்கபேருப்ரணவ், இப்ப பிஜிஃபைனல்படிக்கிறீங்க. சார்ட்டுஅக்கௌன்ட்ஸ்ல, பிரிலிம்ஸ் எழுதி போர்த்பிளேஸ்ல பாசாயிருக்கீங்க, இனி மெயின்எக்சாம்க்குமும்முரமாபிரிபேர்பண்ணிட்டுஇருக்கீங்க. ஆடிட்டர்ஆகனும்னுங்கறதுஉங்ககனவு.ஒரு அக்கா, ஒரு அண்ணா.உங்கஅக்காவுக்குஇப்ப தான்கல்யாணம்முடிஞ்சிருக்கு. எல்லா பசங்களும்மாதிரிஉங்கஅம்மா னா உங்களுக்குஉசிரு. போதுமா,இல்ல இன்னும்வேற ஏதாவதுடீடெய்ல்வேணுமாசீனியர்? என் மூச்சுவிடாமல்பேசி நிறுத்த,
அவளை இரண்டுநிமிடம்பார்த்தவன், “எதுக்குஎன்டீடெயில்ஸ்எல்லாம்கலெக்ட்பண்ணி வெச்சிருக்க?” என் கோபமாய்கேட்க,
“அது வந்துஎனக்கு”…… என் ஏதோ கூற வந்தவளை எதுவும்கூற விடாமல்தடுத்து,
அவளை பார்த்துதலையசைத்துகொண்டவன், “நீ என்ன டிரைபண்றேன்னுஎனக்குபுரியுது. ஆனா எனக்குஅதுக்கெல்லாம்நேரமில்லை. இந்த கல்யாணம்,கமிட்மெண்ட்இதெல்லாம்எனக்குஆகாது.இதுக்கு நான்செட் ஆக மாட்டேன்.சாரி”
இவன் என்ன சொல்றான் என புரியாமல்பார்த்தவள்,அவனின்கடைசிவரியில்விழுந்துவிழுந்துசிரித்தாள்.
“ம்ப்ச், இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீ இப்படி சிரிக்கிற” என எரிச்சலாக கேட்க,
தன் சிரிப்பை அடக்கியவள், “சீனியர், நான்உங்களபிரபோஸ்பண்ண டிரைபண்றேன்னுநினைச்சுட்டீங்களா? என்றவள். மீண்டும்சிரிக்க,
அவன் முறைக்க,
“ஐய்யோ, ஐயோ,சீனியர்நான் ***** இந்தபத்திரிகையிலஜூனியரா, பார்ட் டைம்ஜாப்ஜாயின் பண்ணியிருக்கேன். அங்கஎனக்கு தந்த முதல் அசைன்ட்மென்ட்தான் இது.அதாவது, எனக்கு தெரிஞ்சவங்களபத்தின, தெரியாத டீடெயில்ஸ்கலெக்ட்பண்ண சொன்னாங்க. அதுக்குதான்இப்படிஎன கூறினாள்.
“நிஜமாதான்சொல்றியா?”
“அய்யோசத்தியமா, நீங்க நம்பலையா? இங்கபாருங்க” என தன் டெம்ப்ரெரிஐடி கார்டுஎடுத்துநீட்ட,
“ஒருநிமிஷம்நான்பயந்தேபோயிட்டேன். ஆமா உனக்குஎதுக்குஇந்த ஜாப் எல்லாம்” என கேட்டவன்அவள் முறைப்பதை கண்டு, “ இல்ல நான்அப்படிசொல்ல வர்ல, ஜனர்லிசம் ல நிறைய டிபார்ட்மெண்ட்இருக்கே, நீ ஏன் மத்ததுஎடுக்கலனு கேட்டேன்” என்றான்.……
“எனக்குஇது தான்ரொம்பபிடிச்சிருக்கு, கொஞ்சநாள்என்ஆசைக்குஇந்த லைன். அப்புறம்உள்ள ஷிப்டாயிடலாம்” என கூற,
“எனிவே, ஆல்தபெஸ்ட் பார் யுவர்பூயூச்சர்” என கூறி கை கொடுக்க,
அவன் கையோடுதன் கை கொடுத்துவாழ்த்துவாங்கியவள், “தேங்ஸ்சீனியர்” என்றாள்.
“உங்களுக்கு காலேஜ் முடிஞ்சுதுதானசீனியர்”
“எங்களுக்குஅப்பவேமுடிஞ்சுது. இவ்ளோநாள்பிராஜெக்ட்தான் ஓடிட்டுஇருந்தது. இனி வைவா மட்டும்தான்”.
“ஓ,ஓகே,சீனியர் ஏதாவது டவுட்ஸ்இருந்தாஉங்களகாண்டாக்ட்பண்ணலாமா?”
“உங்களலவ்பண்றதபத்தி,நான் யோசிக்க கூட இல்ல. ஆனா உங்களை லவ்பண்ணாகூட,நல்ல இருக்கும் போலயே? ஷெல்வீடிரை அத்தான்?” என, சில பல 💘💘💘காதல் அம்புகளுடன்💘💘 இருந்தது யாழினியின்மெஸேஜ்.