என் ஜீவன் உன்னை சேருமா
பார்த்திபன் மாயாவிடம் வந்து “என்ன ஆச்சுமா அடி,எதுவும் உனக்கு பலமா பட்டு இருக்கா”?.. என்று கேட்க..
” இல்லை அண்ணா அவங்களுக்குத்தான் தலையில் ரத்தம் வருது,, அவங்களை முதல்ல ஹாஸ்பெட்டல் கூட்டிட்டு போங்க” என்றாள் மாயா …
“ரொம்ப அக்கரை தான் என் மேல உனக்கு” என்றான் அக்னி நடந்து கொண்டே கோபமாக..
“உங்களுக்கு இருக்கிற அக்கரை எனக்கு இருக்காதா”” என்றாள்..
Advertisement
“ஆமாண்டி அக்கரை இருக்க போய்தான் உன்னை பார்க்க ஓடி வந்தேன் இல்லேன்னா அப்படியே ஒழிஞ்சு போன்னு போயிருப்பேன்” என்றவன் தன் கையை அங்கே உள்ள டேபிளின் மேலே அடிக்க..
மாயாவுக்கு இவனை எப்படி சமாளிக்க என்றே தெரியவில்லை… அவன் இன்று சரியான நேரத்துக்கு வரவில்லை என்றால்,,
என் நிலைமை என்னவாக இருக்கும்,, எப்படியோ சரியான நேரத்துக்கு வந்து விட்டார்.. அவர் எப்படி என்னை தேடி சரியான நேரத்துக்கு வந்த உண்மையை தெரிந்து கொள்ள அவன் அருகில் சென்றாள்..
Advertisement
மாயா தன்னை நோக்கி வருவதை பார்த்து அக்னி..
Advertisement
” பார்த்திபா உன் தங்கச்சியை கூட்டிட்டு நீ கிளம்பு” என்றான்..
” வா மாயா போகலாம்” என்று பார்த்திபன் அழைக்க..
“அண்ணா நான் அவர்கிட்ட பேசணும் அண்ணா பேசிட்டு வந்துடுறேன்” என்றாள் மாயா..
Advertisement
“மாயா பக்கத்தில் வராத நான் கோபமா இருக்கேன் அடிச்சிடுவேன” என்றான் அக்னி..
மாயா பயப்படாமல் அவன் அருகில் வர..
“பார்த்திபா” என்றான் அக்னி..
” மாயா நீ வா மாயா,, அப்புறம் பேசிக்கலாம் அக்னி கோபமாக இருக்கான்” என்றான் பார்த்திபன்..
மாயா அக்னியின் அருகில் வர.. அவளின் முகத்தை பார்க்காது, அந்த பக்கம் அக்னி முகத்தை திருப்பிக் கொண்டான்..
அவன் திரும்பிய திசை பக்கம் வந்து அவன் முன் நின்றாள் மாயா..
” மாயா போ பக்கத்துல வராத, அடிச்சிடுவேன்”.. என்றான்.
“அடிங்க பார்க்கலாம் அடிச்சாலும் போக மாட்டேன்”.. என்று
அவனை இடுப்போடு அணைத்துக்கொள்ள..
“போடி” என்றான் கமறிய குரலில்..
“நான் போகட்டுமா என் கண்ணை பார்த்து சொல்லுங்க” என்றவள்,
அக்னியை தன் முகத்தை பார்க்க வைத்தாள்..
அவளின் சிவந்து போன முகத்தையும், இதழ் வீங்கி இருந்ததையும் பார்த்தவன்,, .. அவனுங்களை என்று மீண்டும் கோபப்பட….
“இங்கே பாருங்க எனக்கு ஒன்னும் இல்லை, நான் நல்லா தான் இருக்கேன் அதான் நீ வந்து என்னை காப்பாத்திட்டீங்கல்ல”..
“ஏண்டி இங்க வந்த? அறிவுயில்லைய உனக்கு.. எவனாவது சும்மா 150 கோடி தூக்கி குடுப்பானா? யோசிக்க மாட்டியா மாயா,, அதுவும் தனியா வந்து இருக்க முட்டாள் முட்டாள்” என்றான்…
“நான் முட்டாளாகவே இருந்துட்டு போறேன்,,நீங்க எப்படி சரியான நேரத்துக்கு வந்தீங்க” என்றாள் மாயா அவனை அணைத்துக்கொண்டே.
“என் தலையெழுத்து உன் அண்ணனுக்கு தான் போன் பண்ணி,, மாயா காசு ரெடி பண்ணிட்டாளா இல்லைன்னா நான்பணம் தரவா என்று போன் பண்ணி கேட்டேன்,, அவன் தான் உன் பிரிண்ட் காசு தர்றதா சொன்னான்,, அப்பறம் நீ அவன்கிட்ட காசு வாங்க போறதா சொன்னான்,, சரி யாருடா அந்த பிரண்டு கேட்ட உடனே 150 கோடி தருவது என்று கேட்டேன்,, அவன் தான் கிஷோரை பத்தி சொன்னான்”..
எனக்கு மனசு ஏதோ தப்பா பட்டுச்சு.. மாயா போற லொகேஷனை ஷேர் பண்ண சொன்னேன்,, அவனும் ஷேர் பண்ணான். நான் அந்த லொகேஷனை பார்த்தேன் அது பாண்டிச்சேரி போற வழியில உள்ள ஒரு பீச் ரெசார்ட்டுனு தெரிஞ்சது,, உடனே கிளம்பி வந்தேன்,, அந்த வாச்மேன் கதவை திறக்க மாட்டேன்னு சொன்னான்,,
அவனை ஒரு போடு போட்டுட்டு தான் உள்ளே வந்தேன்..
“ஏன்டி இப்படி தனியா வந்தே,, உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்னடி பண்ணுவேன் யோசிக்க மாட்டியா மாயா” என்றான்..
“நீங்க தான சார் என்னை வேண்டாம்னு சொல்லி அனுப்புன ஆளு.. இப்ப என்ன பாசம் பொத்துக்கிட்டு வந்து இருக்கு என் மேல” என்றாள்..
“நான் வேண்டாம்னு சொன்னா நீ என்னை விட்டு போயிடுவியா மாயா” என்றதும்.
“போக மாட்டேன்” என்றவள் அக்னியை அப்படியே இறுக்கமாக அணைத்து கொள்ள…
“உனக்கு ஒன்னும் ஆகலையே மாயா” என்றான் அவளின் தோளின் கை வைத்து தடவியபடியே,,.
“இல்ல சரியான நேரத்தில் வந்துட்டீங்க நீங்க வரலைன்னா என்று விம்பியவளை,, அணைத்துக் கொண்டவன் “வராமல் எங்கடி போவேன், உன்னை விட்டா எனக்கு யாரடி இருக்கா” என்றான் அவளை அணைத்தபடியே..
“வாங்க முதலில் ஹாஸ்பெட்டல் போலாம் உங்க தலையில இருந்துதான் ரத்தம் வருது வாங்க போலாம்” என்றாள்..
“ரெண்டு பேரும் சமாதானமா ஆகிட்டீங்களா”? என்று வந்தான் பார்த்திபன்..
“யாரு சமாதானம் ஆனா! எனக்கு அவரை பிடிக்காது” என்றாள் மாயா..
“எனக்கும் தான்” என்றான் அக்னி..
“எது நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுறீங்க அதை நாங்க நம்பனும் “என்று பார்த்திபன் சிரிக்க..
பார்த்திபன் போன் ஒலித்தது யார் என்று பார்க்க,, உலகநாதனுக்கு நினைவு திரும்பி விட்டதாக ஹாஸ்பெட்டலில் இருந்து தகவல் வர..
மாயாவின் போன் எடுக்க வில்லை என்றதும்,, பார்த்திபனுக்கு தகவல் வந்திருந்தது..
“மாயா உங்க அப்பாவுக்கு நினைவு வந்துருச்சாம்’ என்று பார்த்திபன் கூற..
மாயா அக்னியை அணைத்திருந்த கையை எடுத்து இருந்தாள்,, இவ்வளவு நேரம் அக்னி தன்னை காப்பாற்றி விட்டான் தன்னை அவனுக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என்று உணர்ந்து அவனை அணைத்திருக்க,,
இப்போது தந்தை இப்படி இருக்க காரணமானவனை அணைந்து நின்றதை எண்ணி வருந்தினாள்.. அவனை அணைக்கவும் முடியவில்லை,, வெறுக்கவும் முடியவில்லை என்ன மாதிரியான சூழ்நிலை என்று அவளை அவளே வெறுத்துக் கொண்டாள்..
அவளுக்கு அக்னியை விடவும் முடியவில்லை, அவன் பண்ணியதை மறக்கவும் முடியவில்லை, தந்தையே ஹாஸ்பெட்டலில் இருக்க காரணமானவனை என்று மனதில் தோன்ற அவனை விட்டு விலகி நிற்க..
மாயாவை அவனுக்கு மிகவும் பிடிக்கும், உலகநாதன் மகளைத்தான் அவன் வெறுக்கிறான். மாயாவை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டான்,
அதே போல அவளை ஏற்று வாழும் மனநிலையிலும் அவன் இப்போது இல்லை,, ரதிதேவியை ஒரு நாளும் அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ரதிதேவியை நினைத்து மாயாவை காயப்படுத்தி விடுவோமோ என்ற பயம் வர..
மாயாவை விட்டு அவனும் விலகி வந்தவன்..
” பார்த்திபா உன் தங்கச்சியை அவங்க அப்பாவை பார்க்க கூட்டிட்டு போ “என்றான்.
” நீ வரலையா” அக்னி என்றான் பார்த்திபன்.
” அந்த ஏமாத்துக்காரன் முகத்தை நான் எதுக்குடா முழிக்க போறேன்” என்றான்..
மாயாக்கு கோபம் வர “அந்த ஏமாற்றுக்காரன் பொண்ணை தான் இவ்வளவு நேரம் கட்டிப்பிடிச்சு இருந்தீங்க” என்றாள் மாயா கோபமாக..
‘போடி உங்கப்பனுக்கு சப்போர்ட் பண்ண அடிச்சிடுவேன்” என்றான் அக்னி..
“உங்களுக்கு வேற என்ன தெரியும், இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தீங்க அதுக்குள்ள எந்த ஆவி புகுந்துச்சு உங்களுக்கு” என்றாள்..
” உன் அப்பன் பேரைக் கேட்டாலே எனக்கு உள்ளுக்குள்ள எல்லாம் எரியுது என்னை என்ன பண்ண சொல்லுற மாயா”..
“மறுபடியும் சண்டை போடாதீங்க இரண்டு பேரும்” என்றான் பார்த்திபன்.
“அண்ணா அவர் கிட்ட கேட்டு சொல்லுங்க, நான் அவருக்கு வேணுமா வேண்டாமா”?.. என்றாள் மாயா..
“சொல்லு அக்னி மாயா கேக்குறாங்கள” என்றான் பார்த்திபன்.
உடனே பதில் சொன்னான் அக்னி.. ” மாயா எனக்கு வேணும், ஆனா உலகநாதன் பெண்ணை எனக்கு பிடிக்காது” என்றான்..
“பாருங்க அண்ணா இவர் பேசுறது” என்றாள் மாயா..
” நீ பேசுற ஏதாவது லாஜிக் இருக்கா அக்னி? “.. என்றான் பார்த்திபன்,,
” அப்போ எதுக்கு அண்ணா என்னை பொண்டாட்டி பொண்டாட்டின்னு சொன்னாரு கேளுங்க அண்ணா” என்றாள் மாயா..
“அதுதானே உண்மை நீ என் பொண்டாட்டி தானே” என்றான் மாயாவை முறைத்தபடியே அக்னி..
“எங்களை குழப்பாதடா அக்னி” என்றான் பார்த்திபன்..
“சர்சில் மோதிரம் போட்டு, கல்யாணம் பண்ணது மறந்து போச்சா?, அப்பறம் இரண்டு பேரும் சர்சில் கையெழுத்து போட்டோமே அதையும் மறந்துட்டீயா மாயா”.. என்றான் அக்னி..
” அதெல்லாம் எங்களுக்கு ஞாபகம் இருக்கு மணமேடையில் என்னை தவிக்க விட்டுட்டு போன ஆளு தானே நீங்க” என்றாள்..
மாயா விடமிருந்து கொஞ்சம் தல்லி நின்றவன்,, “எனக்கு கொஞ்சம் டைம் குடு மாயா” என்றான்…
“எதற்கு?” என்றாள் மாயா..
” உன்னை உலகநாதனின் பொண்ணா ஏத்துக்கிறதுக்கு” என்றான்..
மாயாவுக்கு நன்றாக புரிந்து போனது ,, தன்னை அவருக்கு புடிக்கும் அப்பா செய்ததை எண்ணி தன்னை வெறுக்கிறார் என்று உணர்ந்து கொண்டவள்.
அக்னியின் பக்கத்தில் சென்றவள்.. ” நான் உலகநாதன் பொண்ணு மாயா உங்களுக்கு எப்போ என் அப்பாவையும் ஏத்துக்க முடியுதோ அப்போ வாங்க அதுவரைக்கும் நம்ம பார்த்துக்க வேண்டாம்” என்றவள் அவனின் முகத்தை ஒரு கையால் தொட்டு தடவி, “உடம்பை பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு பார்த்திபனோடு சென்று விட்டாள்..
